"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."
Showing posts with label சிந்தனைக்கு சில. Show all posts
Showing posts with label சிந்தனைக்கு சில. Show all posts

25 July 2011

நான்கு : மனிதர்கள், விடயங்கள், பண்புகள்.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

நான்கு வகை மனிதர்கள்.

கலீல் இப்னு அஹ்மத் (ரஹ்) அவர்களிடம் ஒரு மனிதர், மனிதர்களின் வகை குறித்துக் கேட்டார். தற்கவர், மனிதர்கள் நான்கு வகைப்படுகின்றனர் அவர்கள்

1.     அறிவுள்ளவர் : தான் அறிவுள்ளவர் என்பதை அறிந்தவர். இவரிடம் நீங்கள் பலதையும் கற்றுக்கொள்ளுங்கள்.

2.     அறிவுள்ளவர் : தான் அறிவுள்ளவர் என்பதை அறியாதவர். இவர் மறதியிலிருக்கிறார். இவருக்கு நினைவூட்டுங்கள்.

3.     அறிவற்றவர் : தான் அறிவற்றவர் என்பதை அறிந்தவர். இவர் வழிகாட்டுதலை வேண்டி நிற்கிறார். எனவே இவருக்குக் கற்றுக்கொடுங்கள்.

4.     அறிவற்றவர் : தான் அறிவற்றவர் என்பதை அறியாதவர். முட்டாள். நிராகரித்துவிடுங்கள் என்று விளக்கிக் கூறினார்.

இதேபோன்றதொரு கருத்தை இமாம் கஸ்ஸாலி அவர்களும் கூறியுள்ளார்.

رَجُلٌ يَدرِي أنّهُ يَدرِي.
தான் அறிவுள்ளவன் என்பதை அறிந்த மனிதன்.
رَجُلٌ لا يَدرِي أنّهُ يَدرِي.
தான் அறிவுள்ளவன் என்பதை அறியாத மனிதன்.
رَجُلٌ يَدرِي أنّهُ لا يَدرِي.
தான் அறிவற்றவன் என்பதை அறிந்த மனிதன்.
رَجُلٌ لا يَدرِي أنّهُ لا يَدرِي.
தான் அறிவற்றவன் என்பதை அறியாத மனிதன்.

நான்கு விடயங்கள்.

நான்கு விடயங்கள் சிந்தனையை அதிகரிக்குமென இமாம் ஷாபஈ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

1)     குறைந்த பேச்சு.
2)     பற்சுத்தம்.
3)     நல்லோருடனான தோழமை.
4)     அறிஞர்களுடனான நட்பு.

நான்கு பண்புகள்

யாருடைய கவலையாக உலகம் இருக்குமோ அவனிடம் நான்கு பண்புகள் குடிகொள்ளும் என உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள்.

1.     போதுமென்ற மனமில்லத வறுமை.
2.     முடிவுறாத கவலை.
3.     ஓய்வற்ற சோலி.
4.     எல்லையில்;லா எதிர்பார்ப்பு.

உங்கள் கருத்து:

Related Posts Plugin for WordPress, Blogger...