"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."
Showing posts with label செருப்பின் வார் அருந்தாலும் அல்லாஹ்விடம் கூறுவார்கள்.. Show all posts

24 November 2011

செருப்பின் வார் அருந்தாலும் அல்லாஹ்விடம் கூறுவார்கள்.

ஒரு குழந்தை தன் தாயை எவ்வாறு சார்ந்திருக்குமோ அதனைவிடவும் ஒரு அடியான் தன்னைச் சார்ந்திருக்கவேண்டும் என்று அல்லாஹ் எதிர்பார்க்கின்றான். சிறு குழந்தைக்குத் தாய்தான் உலகம். தாய்க்குத்தான் எல்லாமே தெரியுமென்று அக்குழந்தை நம்புகின்றது. ஒரு பொருளை முன்னால் வைத்துக்கொண்டு தாயிடம் கேட்கும். அது என்ன? இது என்ன? அது ஏன் அப்படி? என்றெல்லாம் தாயைக் கேட்கும். தாய் போகுமிடமெல்லாம் சுற்றிச் சுற்றி வரும்.

எதுக்கெடுத்தாலும் உம்மா! உம்மா! என்று சொல்லும். பசியோ, பயமோ, தாகமோ, தாபமோ, மகிந்தாலும், அழுதாலும் தாயைத்தான் அழைக்கும். குழந்தை முற்றத்தில் வீழ்ந்துவிட்டு அப்படியே அழாமல் வரும். ஆனால் தாயைக் கண்டதும் கண்ணீர் மாலை மாலையாய் விழ அழுதுவிடும். காரணம் அக்குழந்தை மற்ற அனைவரை விடவும் தாயே அனைத்தையும் அறிந்தவள் என்று நினைக்கின்றது. (இதனை அறியாமல் போ சனியனே! என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள்).

இதுபோன்று ஒரு அடியான் என்றும் என்நேரமும் தன்னையே சார்ந்திருக்கவேண்டும் என்று அல்லாஹ் எதிர்பார்க்கின்றான். குழந்தை வளர வளர அதன் அறிவு வளர வளர தாயைவிட்டும் கொஞ்சம் கொஞ்மாகத் தூரமாகும். ஆனால் ஒரு அடியானின் அறிவு வளர வளர அவன் அல்லாஹ்வுடன் நெருக்கமாகின்றான். அல்லாஹ் கூறுகின்றான் “அடியார்களில் தன்னை அதிகம் பயப்படுபவர்கள் அறிவாளிகள்தாம்” என்கின்றான். இதற்கு சிறந்த உதாரணம் முஹம்மத் நபியவர்கள். தமது செருப்பின் வார் அருந்தாலும் அதனையும் அவர்கள் அல்லாஹ்விடமே முறையிட்டார்கள்.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

Related Posts Plugin for WordPress, Blogger...