இலங்கை வரலாற்று நெடுகிலும் மேற்குலக நாடுகளின் காலனியாதிக்கத்திற்கு உட்பட்டே வந்துள்ளது. 1505 முதல் 1658 வரை போர்த்துக்கேயரும் 1658 முதல் 1796 வரை ஒல்லாந்தர்களும் 1796 முதல் 1948 பெப்ரவரி 04 ஆம் திகதி வரை ஆங்கிலேயர்களும் இலங்கை மண்ணை ஆண்டு வந்துள்ளனர். இவ்வாறு இலங்கை பல்வேறு ஆக்கிரமிப்புகற்கு உட்பட்டபோதிலும் அதில் இன்னபல அனுகூலங்களும் சேர்ந்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இம்மண்ணை ஆக்கிரமித்த ஆதிக்க நாடுகள் இங்கிருந்த கனியங்களையும் செல்வ வளங்களையும் கொள்ளையடித்து தமது நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததோடு அவர்கள் பின்பற்றிவந்த மத சிந்தனைகளையும் கலாச்சாரத்தையும் இந்நாட்டு மக்கள்மீது திணிக்கவும் முயன்றுள்ளனர். அதேபோன்று அவர்களது செயற்பாடுகளால் நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதாரத் துறைகளில் பாரிய மாற்றங்களும் அபிவிருத்திகளும் ஏற்பட்டுள்ளதை மறுக்கவும் முடியாது. இதில் ஆங்கிலேயரது செல்வாக்கு அலாதியானது.
வியாபார நோக்கில் இலங்கையை வந்தடைந்த அரேபிய முஸ்லிம்கள் இலங்கையின் கரையோரப் பிரதேசங்களில் குடியேரி தமது குடியிருப்புகளை அமைத்துக்கொண்டனர். ஏனெனில் அது அவர்களது வியாபார ஏற்றுமதி இறக்குமதிகளுக்கு ஏதுவாய் அமைந்ததனாலாகும். பிற்பட்ட காலங்களில் நாட்டில் உற்பிரவேசித்த அவர்கள் இலங்கைச் சமூகத்துடனும் நாட்டு மன்னர்களுடனும் நெருங்கிய ஆரோக்கியமான உறவை ஏற்படுத்திக் கொண்டனர். இதற்கு அம்முஸ்லிம்களிடம் இருந்த விசுவாச மனப்பான்மையும் நானயமுமே காரணமாகும்.
வியாபார நோக்கில் இலங்கையை வந்தடைந்த அரேபிய முஸ்லிம்கள் இலங்கையின் கரையோரப் பிரதேசங்களில் குடியேரி தமது குடியிருப்புகளை அமைத்துக்கொண்டனர். ஏனெனில் அது அவர்களது வியாபார ஏற்றுமதி இறக்குமதிகளுக்கு ஏதுவாய் அமைந்ததனாலாகும். பிற்பட்ட காலங்களில் நாட்டில் உற்பிரவேசித்த அவர்கள் இலங்கைச் சமூகத்துடனும் நாட்டு மன்னர்களுடனும் நெருங்கிய ஆரோக்கியமான உறவை ஏற்படுத்திக் கொண்டனர். இதற்கு அம்முஸ்லிம்களிடம் இருந்த விசுவாச மனப்பான்மையும் நானயமுமே காரணமாகும்.
இதனால் பல உயர்பதவிகளிலும் இருந்து நாட்டுக்காக பல சேவைகளையும் செய்திருக்கின்றார்கள். பிற நாடுகளுடன் இந்த அரேபிய முஸ்லிம்களுக்கிருந்த தொடர்பால் ஏற்றுமதி இறக்குமதியில் இலங்கை அபிவிருத்தியடைந்து வந்தது என்பது வரலாற்று உண்மை. இன,மத பேதங்கள் பாராது இலங்கை வாழ் மக்களுடன் சுமுகமான உறவைப் பேணிவந்தமை முக்கியமானதாகும்.
எனினும் ஆங்கிலேயர் இலங்கையை கையகப்படுத்தியதும் பல்கிப்பெருகியிருந்த முஸ்லிம்கள் பல்வேறு இன்னல்களுக்கும் முகம்கொடுக்க வேண்டி ஏற்பட்டனர். முஸ்லிம்களது உடமைகளும் செல்வங்களும் அவர்களால் சூரையாடப்பட்டன. அரச உயர்ப்பதவிகளில் இருந்த முஸ்லிம்கள் தூக்கி வீசப்பட்டனர். இதற்கெதிராக முஸ்லிம்கள் அன்றைய அரசர்களுடன் சேர்ந்து போரிட முயன்றபோது படுகொலை செய்யப்பட்டனர். முஸ்லிம்களோடு சிங்களவர்களும் தமிழர்களும் இந்த இன்னல்களை எதிர்கொண்டமையால் இயல்பாகவே அவர்களது உணர்வுகளில் சுதந்திரத்தாகம் ஏற்பட்டது. இதன்போது பல நாடுகள் பிரித்தானியாவின் ஆளுகைக்குட்பட்டிருந்தது. அங்கெல்லாம் ஆதிக்கவர்க்கத்திற்கெதிராக புரட்சிகள் வெடிக்கலாயின.
இந்திய சுதந்திரத்திற்கெதிராக மகாத்மாகாந்தியின் தலைமையில் திரண்ட மக்கள்கூட்டம் பெரும் போராட்டத்தையே நடாத்திக்கொண்டிருந்தனர். ஆனால் சொல்லும் தரத்திற்கு இலங்கையில் அப்படியொரு பெரும்போராட்டம் வெடிக்கவில்லை. 1815 இல் பிரித்தானியப்படை கண்டியையும் தமது முழு ஆதிக்கத்திற்குள் கொண்டுவந்தது. கிறிஸ்தவ மிஷநெறிகளுடாக மதப்பிரசாரத்தை முடுக்கிவிட்டது. எனவே முஸ்லிம், தமிழ், சிங்கள சமூகங்கள் தமது மதத்தையும் சமூகத்தையும் பாதுகாக்க வேண்டிய நிர்பந்த நிலைக்குள்ளாகின.
இதன் விளைவாக 1910 ஆம் ஆண்டளவில் மதப்புணருத்தாபன இயக்கங்கள் தோற்றம்பெற்றன. இதில் முஸ்லிம்கள் தமது தனித்துவத்தைப் பேணவேண்டுமென்பது மட்டுமன்றி இந்த நாட்டின் சுதந்திரத்தை நோக்காகக்கொண்டும் இயங்கத் துவங்கினர். பல்லாண்டுகளாக இலங்கையின் பூர்வ குடிகள் என்ற வகையில் முஸ்லிம்களுக்கும் இந்த சுதந்திரப் போராட்டத்தில் நாட்டம் வருவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லையே! எனவே ஆங்கிலேய ஆட்சியில் ஏற்பட்ட பொருளாதார சமூக மாற்றங்களால் முஸ்லிம்கள் மத்தியிலும் செல்வாக்குப்பெற்ற ஒரு குழு உருவானது. இவர்களில் வர்த்தகர்களும் கல்விமான்களும் செல்வந்தர்களும் அடங்கினர். இவர்கள் சமூகத்தின் இழிநிலைபற்றியும் இந்நாடு அடைந்திருக்கும் அவலநிலை பற்றியும் சிந்தித்து இந்நாட்டின் சுதந்திரத்தின்பால் ஏனைய சமூகங்களுடன் கைகோர்த்துச் செல்வதோடு தமது தனித்துவத்தைத் தற்காத்துக்கொள்ளவும் களத்தில் நின்று செயற்பட்டனர். இவர்களுள் அறிஞர் எம். சி. சித்திலெப்பை, வாப்புச்சி மரைக்கார் என்போர் முக்கியமானவர்கள்.
இவர்களது செயற்பாடுகளுக்கு உரமூட்டும் விதமாக எகிப்திலிருந்து ஆங்கிலேயரால் நாடுகடத்தப்பட்டு இலங்கை வந்துசேர்ந்த ஒராபி பாஷாவும் இந்தியாவிலிருந்து வந்த மாப்பிள்ளை லெப்பை ஆலிமும் மற்றும் யெமனைச் சேர்ந்த அப்துல்லாஹ் பின் உமர் அல்பரீப் அல்யமனீயும் இணைந்துகொண்டனர். இத்தலைவர்கள் முஸ்லிம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி நாட்டின் சுதந்திரத்தின்பால் அவர்களை வழிநடாத்தினர்.
இந்தியாவில் அஹ்மத்கான், எகிப்தில் ஜமாலுத்தீன் ஆப்கானி மற்றும் இதுபோன்று ஆசிய, ஆபிரிக்க நாடுகளில் முஸ்லிம்கள் ஆங்கிலேயருக்கு எதிராக எடுத்த முயற்சிகளும் போராட்டங்களும் பல்வேறு அரபு மற்றும் ஆங்கில பத்திரிகைகளிளும் சஞ்சிகைகளிளும் வெளிவரவே அறிஞர் சித்திலெப்பை அவற்றை இலங்கை முஸ்லிம்கள் படித்து உணர்வு பெறும் வகையில் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். இதற்காகவே அவர் “ஞான தீபம்”, “முஸ்லிம் நேசன்” போன்ற பத்திரிகைகளையும் ஆரம்பித்தார்.
இதன் பின்பகுதியில் முஸ்லிம்களின் கல்விச்சீர்த்திருத்தத்திலும் சிந்தனை மாற்றத்திலும் செல்வாக்குச் செலுத்தி அவர்களை சுதந்திர தேசத்தின்பால் வழிநடாத்தியதில் D.P.ஜாயா, Sir ராசிக் பரீத் மற்றும் டாக்டர் கலீல் ஆகியோர் முக்கியமானவர்கள். 1915 ஆண்டு கம்பளைக் கலவரத்தின் பின்னர் அரசியல் இயக்கங்கள் தோற்றம்பெற ஆரம்பித்தன. அந்த வகையில் 1922 இல் Sir ராசிக் பரீதின் தலைமையில் “இலங்கை சோனகர் சங்கம்” இஸ்தாபிக்கப்பட்டது. பின்னர் 1924 இல் “முஸ்லிம் இளைஞர் லீக்” நிறுவப்பட்டு இயங்கியது. இவ் இயக்கங்கள் இலங்கை மக்களால் ஆளப்படக்கூடிய ஒரு சுய ஆட்சியை உடைய சுதந்திர அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்பதனை நோக்காகக் கொண்டே அமைந்திருந்தன. 1927 இல் இவர்களோடு பதியுத்தீன் மஹ்மூத் அவர்கள் இணைந்து செயற்பட்டார்.
அதுமட்டுமன்றி “சுதந்திர இலங்கை” என்ற மசோதா முன்வைக்கப்பட்டபோது முஸ்லிம்கள் அதற்கு கூடுதல் ஆதரவு வழங்கியிருப்பது இங்கு ஈன்று குறிப்பிடத்தக்கது. இம்மசோதாவின் அறிமுக உரையில் D.S.சேனானாயகா கூறிய கருத்தை இங்கு ஞாபகிப்பது சாலச்சிறந்தது என நினைக்கின்றேன்.
“தமிழ் நண்பர்களாகிய உங்களிடம் ஒரே ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். நீங்கள் லன்டனிலிருந்து ஆட்சி செய்யப்பட விரும்புகிறீர்களா? அல்லது இலங்கை இலங்கையராலேயே ஆளப்படுவதற்கு உதவுவீர்களா? முஸ்லிம் சகோதரர்களைப் பற்றிக்கூறுவதாயின் அவர்களது நிதானமான போக்கைக் கண்டு நாம் அனைவரும் பாராட்டுகின்றோம்.சிங்கள அடக்குமுறை என்ற ஒரு கட்டுக்கதையை அவர்கள் கூறவில்லை. அவர்களது தேவையைப் பூர்த்தி செய்ய நாம் முனைகின்றோம்.” என்று முஸ்லிம்களை வழித்துப் பேசினார். அம்மசோதாவை சபையிலிருந்த D.P.ஜாயா, Sir ராசிக் பரீத் மற்றுமொருவரும் ஆதரவளித்தனர்.
“தமிழ் நண்பர்களாகிய உங்களிடம் ஒரே ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். நீங்கள் லன்டனிலிருந்து ஆட்சி செய்யப்பட விரும்புகிறீர்களா? அல்லது இலங்கை இலங்கையராலேயே ஆளப்படுவதற்கு உதவுவீர்களா? முஸ்லிம் சகோதரர்களைப் பற்றிக்கூறுவதாயின் அவர்களது நிதானமான போக்கைக் கண்டு நாம் அனைவரும் பாராட்டுகின்றோம்.சிங்கள அடக்குமுறை என்ற ஒரு கட்டுக்கதையை அவர்கள் கூறவில்லை. அவர்களது தேவையைப் பூர்த்தி செய்ய நாம் முனைகின்றோம்.” என்று முஸ்லிம்களை வழித்துப் பேசினார். அம்மசோதாவை சபையிலிருந்த D.P.ஜாயா, Sir ராசிக் பரீத் மற்றுமொருவரும் ஆதரவளித்தனர்.
இதுபற்றி D.P.ஜாயா அவர்கள் ஆற்றிய உரை முஸ்லிம்கள் எந்தளவு இந்நாட்டின் சுதந்திரத்திற்கு பங்காற்றி உள்ளார்கள் என்பதைப் படம்போட்டுக் காட்டுகின்றது. அவர் தனது உரையில் “நான் இங்கு சிறுபான்மை சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி பற்றியோ அல்லது பெரும்பான்மை இனத்தின் வெற்றிபற்றியோ கூற முன்வரவில்லை. இச்சபையிலுள்ள முஸ்லிம் அங்கத்தவர்கள் மசோதாவை ஆதரிப்பதற்கான ஒரே காரணத்தைக்கூற விரும்புகின்றேன். இந்த நாடு சுதந்திரமடைய எமது சமூகத்திற்குக் கிடைக்கவிருக்கும் அனுகூலங்களையும் பிரதிகூலங்களையும் நாம் தியாகம் செய்யத் தயாராயுள்ளோம். நான் இதனை முழு முஸ்லிம் சமூகத்தின் ஆதரவுடன் அவர்கள் சார்பாக நின்று கூறுகின்றேன்.”என்றார். பின்பு இதனையே ஆதரித்து Sir ராசிக் பரீதும் உரையாற்றினார்.
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...