"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

16 June 2011

நாம் இன்னும் பிஸியாக இருக்கிறோம்...

ஆலிப் அலி (இஸ்லாஹி)

முதல் கிப்லாவே!
மஸ்ஜிதுல் அக்ஸாவே!
நபிமார்களின் தடம் சுமந்த புனித பூமியே!
ரத்த வெள்ளத்தில் மூச்சுத்தினறி
மூர்ச்சையாய்க் கிடக்கும் தாயே!
எம்மை மன்னித்துவிடு...
நாம் இன்னும் பிஸியாக இருக்கிறோம்...

காஸாப் பெருவெளியில்
திறந்த சிறைச்சாலையில்
சொந்த மண்ணிலே அகதிகளாய்
ஈமானியப் போராட்டம் நடாத்தும் சொந்தங்களே!
எம்மை மன்னித்துவிடுங்கள்...
நாம் இன்னும் பிஸியாக இருக்கிறோம்...

உண்ண ஊணின்றி
உடுத்த உடையின்றி
அருந்தப் பாணமுமின்றி
சொந்த உயிர்களையே அர்ப்பணம் செய்யும்
ஈமானிய மொட்டுக்களே!
எம்மை மன்னித்துவிடுங்கள்...
நாம் இன்னும் பிஸியாக இருக்கிறோம்...

கடைத் தெருக்களிலும்...
கலாசாலைகளிலும்...
உடல் சிதறுண்டு
ரத்தக் கரைகண்டு
சிதிலங்களாய் ஆங்காங்கு சிதறிக்கிடக்கும்
பிஞ்சுக் குழந்தைகளே!
எம்மை மன்னித்துவிடுங்கள்...
நாம் இன்னும் பிஸியாக இருக்கிறோம்...

தாய், தகப்பன் கண் முன்னே
கணவன் உன் முன்னே
பிள்ளைகளும் பார்த்திருக்க
உடல் வேர்த்திருக்க கதறக் கதறக் கற்பழித்து
கூட்டு பலாத்காரம் புரியப்பட்ட
இளம் சோதரிகளே!
எம்மை மன்னித்துவிடுங்கள்...
நாம் இன்னும் பிஸியாக இருக்கிறோம்...

பலஸ்தீனத் தாயே!
உன்னை மட்டுமல்ல
ஈராக்கையும் ஆப்கானையும் காஷ்மீரையும் மறந்துவிட்டு
எம் சமூகம் இன்று ரொம்பவே பிஸியாகிவிட்டது.

எதில் தெரியுமா? தாயே!
எதில் தெரியுமா?

2020 கிரிக்கட் சூதாட்டத்திலும்
சினிமாத் தியேட்டர்களிலும்
டே எண்ட் நய்ட் பிஸினஸிலும்
சல்லாப சபலங்களிலும்
சில்லரைப் பிரச்சினைகளிலும்
நாம் இன்னும் பிஸியாயிருக்கின்றோம்

கையில் சிகரட்டுடனும்
பெப்ஸி, கோலா பாட்டில்களுடனும்
கழுத்தில் சங்கிலியுடனும்
சிகை அலங்காரத்துடனும்
பெஷன் பெஷனான ஆடைகளிலும்
காதருகே மொபைல்களுடனும்
நடிகை நடிகரின் போட்டோக்களுடனும்
நாம் இன்னும் பிஸியாக இருக்கிறோம்

பள்ளிக்குள் கட்டுப்பட்டு
தஸ்பிஹ் மனியை உருட்டிவிட்டு
மந்திரம்போல் மாமறையை
மந்திரித்து முகர்ந்து மூடிவிட்டு
தானுண்டு தன் வேளையுண்டு என்று
நாம் இன்னும் பிஸியாக இருக்கின்றோம்

அறுபது வருட இறைதியானத்தைவிட
கணப் பொழுது போராட்டம்
இறைவனிடம் உவப்புக்குரியதல்லவோ?
போராட்ட சிந்தையே இன்றி மரணிப்பவர் முனாபிக் என்ற
நபி மொழி இன்னும் செவிப் பறைகளில் ஓங்கி ஒலிக்கவில்லையோ?
நானறியேன்.

பலஸ்தீனத் தாயே!
மொத்தத்தில் இந்த உம்மத் சுவனத்தையே மறந்துவிட்டு
நரகின் பாதையில் பிஸியாயிருக்கிறது.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

ஆலிப் அலி (இஸ்லாஹி)

முதல் கிப்லாவே!
மஸ்ஜிதுல் அக்ஸாவே!
நபிமார்களின் தடம் சுமந்த புனித பூமியே!
ரத்த வெள்ளத்தில் மூச்சுத்தினறி
மூர்ச்சையாய்க் கிடக்கும் தாயே!
எம்மை மன்னித்துவிடு...
நாம் இன்னும் பிஸியாக இருக்கிறோம்...

காஸாப் பெருவெளியில்
திறந்த சிறைச்சாலையில்
சொந்த மண்ணிலே அகதிகளாய்
ஈமானியப் போராட்டம் நடாத்தும் சொந்தங்களே!
எம்மை மன்னித்துவிடுங்கள்...
நாம் இன்னும் பிஸியாக இருக்கிறோம்...

உண்ண ஊணின்றி
உடுத்த உடையின்றி
அருந்தப் பாணமுமின்றி
சொந்த உயிர்களையே அர்ப்பணம் செய்யும்
ஈமானிய மொட்டுக்களே!
எம்மை மன்னித்துவிடுங்கள்...
நாம் இன்னும் பிஸியாக இருக்கிறோம்...

கடைத் தெருக்களிலும்...
கலாசாலைகளிலும்...
உடல் சிதறுண்டு
ரத்தக் கரைகண்டு
சிதிலங்களாய் ஆங்காங்கு சிதறிக்கிடக்கும்
பிஞ்சுக் குழந்தைகளே!
எம்மை மன்னித்துவிடுங்கள்...
நாம் இன்னும் பிஸியாக இருக்கிறோம்...

தாய், தகப்பன் கண் முன்னே
கணவன் உன் முன்னே
பிள்ளைகளும் பார்த்திருக்க
உடல் வேர்த்திருக்க கதறக் கதறக் கற்பழித்து
கூட்டு பலாத்காரம் புரியப்பட்ட
இளம் சோதரிகளே!
எம்மை மன்னித்துவிடுங்கள்...
நாம் இன்னும் பிஸியாக இருக்கிறோம்...

பலஸ்தீனத் தாயே!
உன்னை மட்டுமல்ல
ஈராக்கையும் ஆப்கானையும் காஷ்மீரையும் மறந்துவிட்டு
எம் சமூகம் இன்று ரொம்பவே பிஸியாகிவிட்டது.

எதில் தெரியுமா? தாயே!
எதில் தெரியுமா?

2020 கிரிக்கட் சூதாட்டத்திலும்
சினிமாத் தியேட்டர்களிலும்
டே எண்ட் நய்ட் பிஸினஸிலும்
சல்லாப சபலங்களிலும்
சில்லரைப் பிரச்சினைகளிலும்
நாம் இன்னும் பிஸியாயிருக்கின்றோம்

கையில் சிகரட்டுடனும்
பெப்ஸி, கோலா பாட்டில்களுடனும்
கழுத்தில் சங்கிலியுடனும்
சிகை அலங்காரத்துடனும்
பெஷன் பெஷனான ஆடைகளிலும்
காதருகே மொபைல்களுடனும்
நடிகை நடிகரின் போட்டோக்களுடனும்
நாம் இன்னும் பிஸியாக இருக்கிறோம்

பள்ளிக்குள் கட்டுப்பட்டு
தஸ்பிஹ் மனியை உருட்டிவிட்டு
மந்திரம்போல் மாமறையை
மந்திரித்து முகர்ந்து மூடிவிட்டு
தானுண்டு தன் வேளையுண்டு என்று
நாம் இன்னும் பிஸியாக இருக்கின்றோம்

அறுபது வருட இறைதியானத்தைவிட
கணப் பொழுது போராட்டம்
இறைவனிடம் உவப்புக்குரியதல்லவோ?
போராட்ட சிந்தையே இன்றி மரணிப்பவர் முனாபிக் என்ற
நபி மொழி இன்னும் செவிப் பறைகளில் ஓங்கி ஒலிக்கவில்லையோ?
நானறியேன்.

பலஸ்தீனத் தாயே!
மொத்தத்தில் இந்த உம்மத் சுவனத்தையே மறந்துவிட்டு
நரகின் பாதையில் பிஸியாயிருக்கிறது.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

2 comments:

ஆலிப் அலி said...

கவிதையில் இது எனக்கு இரண்டாம் பிரசவம். தயவுசெய்து உங்கள் கருத்துக்களைப் பதியவும்.
ஆலிப் அலி

Unknown said...

very well said.

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...