ஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்)
பூமியில் உள்ள ஒவ்வொரு அங்கியும் உயிர்வாழ சூரிய ஒளி மிகமிக அவசியம். பக்றீரியாக்கள், பாசித்தாவரங்கள், புற்பூண்டுகள் மகா விருட்சங்கள் என யாவும் சூரிய ஒளியைக்கொண்டே காபனீரொட்சைட்டையும் நீரையும் ஒக்ஸிஜனாகவும் உணவாகவும் மாற்றிக்கொள்கின்றன. இதிலிருந்துதான் உலக ஜீவிகளின் உணவுச் சங்கிலியே தொடர்கின்றது. இதுவல்லாமல் சூரியனிலிருந்து இன்னும் பல்வேறுபட்ட பயன்களை நாம் அன்றாடம் பெற்றுக்கொள்கின்றோம்.
விண்வெளியிலே பில்லியன் கணக்காண நட்சத்திரங்கள் காணப்படுகின்றன. அவை ஒவ்வொன்றும் அளவிலும் சக்திப் பிறப்பாக்கத்திலும் பிரம்மாண்டமானவை. பூமியின் விட்டத்தை விடவும் சூரியனின் விட்டம் 109 மடங்கு பெரியது. சூரியனின் விட்டம் 13,91,000 km (சுமாராக 1.4 மில்லியன்) களாகும். பூமிப் பந்தைவிடவும் சூரியன் 3,32,900 மடங்கு பெரிது. Rigal எனும் நட்சத்திரம் எமது சூரியனை விட 50,000 மடங்கு பெரியது. Hyper gaint cygnus எனும் நட்சத்திரம் சூரியனைவிட 810,000 மடங்கு பெரியது. இவ்வாறு இன்னும் பிரம்மாண்டமான நட்சத்திரங்கள் விண்வெளியில் உள்ளன. அவற்றில் சாதாரணமான ஒன்றுதான் எமது சூரியன். இது எமக்கு அண்மையில் அமைந்திருப்பதனால் அதனை சூரியன், பகலவன், ஞாயிறு என்றெல்லாம் பெயர்கூறி அழைக்கின்றோம். அல்குர்ஆனில் 32 இடங்களில் الشمس (சூரியன்) என்ற பதம் பிரயோகிக்கப்பட்டுள்ளது.
பூமியிலிருந்து சூரியன் 14,96,80,000 km தூரத்தில் அமைந்துள்ளது. பொதுவாக கணப்பொழுதில் 3000,000 km வேகத்தில் பயணிக்கும் ஒளி, சூரியனிலிருந்து பூமியை வந்தடைய 8 வினாடிகளும் 4 செக்கன்களும் செல்கின்றன. சூரியனின் ஈர்ப்பு விசை பூமியின் ஈர்ப்பு விசையைவிட 28 மடங்கு அதிகமாகும்.
சூரியனிலிருந்து மிகப் பாரியளவில் சக்தி பிறப்பிக்கப்படுகின்றது. பலநூறு ஹைட்ரஜன் குண்டுகள் வெடிப்பதால் உண்டாகும் சக்தியைவிட அதிகூடிய சக்தி சூரியனிலிருந்து வெளியிடப்படுகின்றது. சூரியனில் 74 % ஹைட்ரஜனும் 25 % ஹீலியமும் 1 % பிற எரி சக்திகளும் காணப்படுகின்றன. சூரியனின் மையத்தின் ஆழத்தில் உள்ள ஹைட்ரஜன் அணுக்கள் ஹீலியம் அணுக்களாக உருகித் தகணமடையும்போதுதான் பாரியளவு வெப்பச் சக்தி பிறப்பிக்கப்படுகின்றது.
சூரியனின் மேற்பரப்பின் வெப்பநிலை 10,000 of ஆகும். இவ்வளவு பாரிய வெப்பத்தை சுமார் 1.4 மில்லியன் km தூரத்திலிருக்கும் எம்மால் சிலபோது தாங்க முடியாது செல்கின்றது. சில பகுதிகளில் வெப்பநிலை அதிகரிப்பினால் மக்கள் இறப்பதுமுண்டு. பாலைவனப் பகுதிகiளைப் பற்றிச் சொல்லத்தேவையில்லை.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் “மறுமையில் மஹ்ஷர் வெளியில் சூரியன் எமது உச்சந்தலையிலிருந்து ஒரு சான் உயரத்தில் கொண்டு வந்து வைக்கப்படும். ஒவ்வொருவரும் உடலிலிருந்து வெளியேறும் வியர்வையில் அவரவர் செய்த குற்றங்களுக்கேட்ப கணுக்காலளவுக்கும் முன்னங்கால் அளவுக்கும் இடுப்பளவுக்கும் கழுத்து, மூக்கு என்று மூழ்கியிருப்பார்கள்.” (புகாரி, முஸ்லிம்)
சற்று சிந்தித்துப் பாருங்கள் இத்துனை தூரத்திலிருந்து வரும் சூரிய வெப்பத்தையே எம்மால் தாங்க முடியாதென்றால் மஹ்ஷரில் சூரியன் உச்சந்தலை உயரத்தில் வைக்கப்பட்டால் எமது நிலை என்னவாகும்? அர்ஷின் கீழ் நிழல் பெறும் ஏழு கூட்டத்தாரில் ஒருவராக நாமும் இருக்க அல்லாஹ் அருள்பாளிக்கவேண்டும்.
விஞ்ஞான வளர்ச்சியின் ஆரம்ப கட்டத்தில் பூமி அப்படியே இருக்க சூரியனே பூமியைச் சுற்றி வருவதாக நம்பப்பட்டது. கிறிஸ்தவ மதம் கூட இவ்வாறே பிரச்சாரம் செய்து வந்தது. என்றாலும் கொப்பர்னிக்கஸ், கலிலியோ போன்ற விஞ்ஞானிகள் பூமியே சூரியனைச் சுற்றுகின்றது என்ற உண்மையை முன்வைத்தனர். இதனால் பல அறிஞர்கள் கிறிஸ்தவத் திருச்சபையினால் சிறையிலடைக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டனர். ஆனால் பிற்பட்ட காட நவீன விஞ்ஞானம் பூமியே சூரியனைச் சுற்றுகின்றது என்பதைனயும் சூரியனிலும் சுற்றுகை மற்றும் சுழட்சி என்பன நிகழ்கின்றன என்பதையும் விளக்கிக் கூறியது. ஆச்சரியம் என்னவென்றால் நவீன விஞ்ஞானம் கண்டுபிடிக்க 1400 வருடங்களுக்கு முன்பே சூரியனின் இயக்கங்கள் குறித்து அல்லாஹ் அல்குர்ஆனிலே கூறிவிட்டான்.
“சூரியனும் அதற்குரிய தங்குமிடத்தின்பால் சென்றுகொண்டிருக்கின்றது” (36:38)
பூமியைப் போன் சூரியனும் 82o 49.5 காலைக்கோணத்தில் சாய்ந்து கிழக்கு மேற்காகச் சுழன்றுகொண்டிருக்கின்றது. பூமி தனது நீள் வட்டப்பாதையில் சூரியனை ஒரு வருடத்தில் பூரணமாகச் சுற்றி வருவதுபோன்று சூரியன் அதனது நீள்வட்டப்பாதையில் மணிக்கு 8 இலட்சம் km வேகத்துடன் முழுமையாகச் சுற்றி முடிக்க 25 கோடி ஆண்டுகள் செல்கின்றன. அதேபோன்று தன்னைத் தானே ஒரு முறை சுற்றிவர 25 நாட்கள் செல்கின்றன.
சூரியன் படைக்கப்பட்டது முதல் பல்லாயிரக்கணக்கான வருடங்களாக அது இன்னும் எரிந்து ஒளிர்ந்துகொண்டுதான் இருக்கின்றது. ஆனால் முன்னரைவிட தற்போது சூரியனின் எரிசக்தி குறைந்து வருவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. அதாவது சூரியனின் எரிசக்திகள் தீர்ந்து சூரியன் அழிந்து விடப்போகின்றது என்பதையே இது சுட்டிக்காட்டுகின்றது. சூரியனின் எரி பொருளான ஹைட்ரஜன் தீர்ந்துள்ள இடங்களில் கரும்புள்ளிகள் (Black Spots) தோற்றியுள்ளதாகவும் அவ்விடங்களில் வெப்பநிலை 4000o செல்சியசாகக் குறைந்திருப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இவ்வாறு சூரியனின் எரிசக்தி யாவும் தீர்ந்து ஒளியழந்து கருந்துளையாகி அழிந்துபோவதை அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.
“சூரியன் (ஒளி நீக்கப்பட்டு) சுருட்டப்பட்டு விடும்போது. நட்சத்திரங்களும் (ஒளியிழந்து) உதிர்ந்துவிடும்போது” (81:1,2)
இவ்வாறு சூரியன் காலவரையறையுடன் இயங்குவதாகவும் அதற்கென நிர்ணயிக்கப்பட்டதொரு தவனை இருப்பதாகவும் அல்லாஹ் கூறுகின்றான்.
“அவனே சூரியனையும் சந்திரனையும் வசப்படுத்தி வைத்துள்ளான். (இவை) ஒவ்வொன்றும் (அவற்றுக்கென) குறித்த தவனை வரை செல்கின்றன.” (35:13) மற்றுமொரு இடத்தில்
“சூரியனையும் சந்திரனையும் அவன் வசப்படுத்தி வைத்துள்ளான். (இவை) ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவனைவரை நடைபெறுகின்றன.” (39:5)
இவ்வசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ள சந்திரனின் தவனை எது என்பதை முன்பு ஒரு தொடரில் அவதானித்தோம் (அகரம்-பெப்ரவரி-2011) இங்கு சூரியனின் தவனை எது என்பது பற்றிப் பார்ப்போம். “சூரியனின் தவனை” என்பதன் கருத்து சூரியனின் எரிபொருள் தீர்ந்து எங்கும் கரும் புள்ளிகள் தோன்றி ஒளி நீங்கி கருந்துளையாக (Black Spots) மாறி அது சுருட்டப்படுவதைக் குறிக்கின்றது. கருந்துளை அதன் அருகிலுள்ள பொருட்களை உள்ளே ஈர்த்துக்கொண்டு உள்நோக்கி சுருளவும் ஆரம்பிக்கும். இதனையே அல்குர்ஆன் “சூரியன் (ஒளி நீக்கப்பட்டு) சுருட்டப்பட்டு விடும்போது” என்று கூறுகின்றது. இவ்வாறு எமது சூரியனுக்கு மாத்திரமன்றி விண்ணில் மினுக் மினுக்கென்று பிரகாசிக்கும் அனைத்து நட்சத்திரங்களுக்கும் இந்நிலைதான் ஏற்படும். இது மறுமை நிகழும்போது ஏற்படும் சம்பவங்களாகும். சூரியனின் அழிவு தொடர்பாக அமெரிக்க விஞ்ஞானி “கீமூ” தனது “The birth and death of the Sun” என்ற நூலில் விளக்கமாக எழுதியுள்ளார்.
நவீன விஞ்ஞானம் கூறும் சூரியனின் செயற்பாடுகள் பற்றி திருமறை என்றோ கூறிவிட்டது. அல்குர்ஆன் வெறுமனே ஓதிவிட்டு மூடிவைப்பதற்கோ, அல்லது பரகத் தேடி கையெட்டாத உயரத்தில் ஒட்டடை படிய வைப்பதற்கோ அல்லது மரணித்தவர்களுக்காக மந்திரிப்பதற்கோ இறக்கப்பட்டதல்ல. அதனை ஆராயவேண்டும் கற்கவேண்டும் அதிலுள்ள அற்புதங்களை, வாழ்க்கைத் தத்துவங்களை அறிவுபூர்வமாக எம் வாழ்வில் கொண்டுவரவேண்டும். இதனையே அல்லாஹ்வும் விரும்புகின்றான்.
“இந்தக் குர்ஆனை அவர்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டாமா?” (4:82)
“அவர்கள் இதனை ஆராய்ந்து பார்க்க மாட்டார்களா? அல்லது (அவர்களது) இதயங்கள் மீது பூட்டுகள் (போடப்பட்டுள்ளனவா?) (47:24)
“(நபியே) இது பாக்கியம் மிக்க வேதமாகும். இதன் வசனங்களை அவர்கள் சிந்திப்பதற்காகவும் (அதன் மூலம்) அறிவுடையோர் நல்லுபதேசம் பெறுவதற்காகவும் இதனை நாம் உம்மீது இறக்கிவைத்தோம்” (38:28)
ஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்)
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...