"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

15 May 2019

மைனா பேசும் பறவை

நாமனைவரும் அறிந்த எமக்குப் பழக்கமான பறவைதான் மைனா. எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் மைனாக்களின் சப்தங்களைக் கேட்கலாம். அவ்வளவு பிரபலமானவை. இவை ஸ்டார்லிங்  எனும் பறவைக் குடும்பத்தைச் சேர்ந்தவை. கிழக்காசிய நாடுகள்தான் அதுவும் இந்தியாஇலங்கை நாடுகள்தான்  இவற்றின் தாய் பூமி. ஒரு காலத்தில் இங்கிருந்து அமெரிக்க நாடுகளுக்கும் அவுஸ்ரேலியாவுக்கும் ஏற்றுமதிசெய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டன. தமிழ்சிங்களம்ஆங்கிளம்மலயாளம்ஹிந்தி போன்ற அனைத்து மொழிகளிலும் இது மைனா – Myna என்றே அழைக்கப்படுகின்றது. இதன் சரியான தமிழ்ப் பெயர் நாகணவாய்ப்புள் என்பதாகும். இலக்கியங்களில் ‘ சிறுபூவாய் ‘ என அழைக்கப்படுகிறது. சிறுவர் இலக்கியப் பாடல்களிலும் காதல் பாடல்களிலும் கூட மைனாக்கள் இடம்பிடித்திருப்பது இவற்றின் முக்கியத்துவத்தைக் காட்டுகின்றன.

புறத்தோற்றம்.

இலங்கை வாழ் மைனாக்கள் அனைத்துமே பொதுவாக உச்சந் தலை முதல் கழுத்துப் பகுதிவரை  கருமையாகவும் உடற் பகுதி பழுப்பு கலந்த மண் நிறத்திலும் காணப்படும். அவற்றின் அலகும்கண்களின் ஓரங்களும்கால்களும் மஞ்சள் நிறம் கொண்டது. அலகிலிருந்து ஆரம்பிக்கும் மஞ்சள் நிறம் அப்படியே நீண்டுவந்து கண்களையும் சுற்றிப் படர்ந்திருக்கும். வாலுக்கும் சிறகுக்கும் அடியில் வெண்மையாக இருக்கும். இந்த மஞ்சள் நிற அலங்காரம்தான் மைனாக்களின் தோற்றத்தை மெருகேற்றுகின்றன. அத்தோடு வாலிலும் சிறகிலும் இருக்கும் வெண்மையான பகுதிகள் மைனாக்கள் பரக்கும்போது அழகிய தோற்றத்தைத் தரும். உறுதியான கால்களையும் வலுவான சிறகுகளையும் இவை கொண்டுள்ளன. வளர்ந்த மைனா ஒன்று 25 சென்ரிமீட்டர் நீளம்கொண்டிருக்கும். புறத்தோற்றத்தை வைத்துப் பார்க்கும்போது மைனாக்களில் ஏழு வகை இனங்கள் இருப்பதாக்க் கண்ணறிந்துள்ளனர். அதில் பிரபலமானவை நம் நாட்டு மைனாக்கள்தான்.

வாழிடங்கள்.

மைனாக்கள் பொந்துகளிலேயே தங்களின் கூடுகளைக் அமைத்துக்கொள்கின்றன. மற்றப் பறவைகள் போன்று மரக் கிளைகளில் கூடுகட்ட அவற்றுக்குத் தெரியாது. பணைதெண்னை மரப்பொந்துகள்கட்டிடச் சுவர்களில் உள்ள துளைகள்பாறை இடுக்குகள்செங்குத்தான மண் மேடுகளில் உள்ள பொந்துகள் ஆகியவற்றில் கூடு கட்டும்.  பழைய காகிதத் தாள்வைக்கோல்துணி ஆகியவற்றை பொந்துக்குள் கொண்டு சென்று மெத்தைபோன்று அமைத்து அதில் முட்டையிட்டு அடைகாக்கும்.

வாழ்க்கை அமைப்பு.

மைனாக்கள் கூட்டமாக வாழும் இயல்பு படைத்தவை. காலையில் கூட்டமாக மரங்களிலிருந்து வெளியேறி மாலையிலும் கூட்டமாகவே கூடு வந்து சேரும். உணவுன்பதும்மரக்கிளைகளில் ஓய்வெடுப்பதும் நீர் தேக்கங்களில் குளிப்பதும் கூட்டமாகத்தான். விடியற் பொழுதிலும் சூரியன் அஸ்தமிக்கும் நேரத்திலும் இவை கூட்டமாக மரங்களில் கூடி கீச் கீச் என்று சப்தமெழுப்பிக்கொண்டே இருக்கும். சிலபோது இந்த இரைச்சல் சப்தம் காதுகளுக்குப் பெறும் தொந்தரவாக இருக்கும்.

சுமார் இருபது அங்கத்தவர்கள் வரை உள்ளடக்கிய கூட்டமாக வாழும் மைனாக்கள் இனப்பெருக்க காலத்தில் ஜோடி சேர்ந்து மற்ற மைனாக்களிலிருந்து ஒதுங்கி இருக்கும். இரண்டும் சேர்ந்து தமக்கான கூட்டைத் தெரிவுசெய்துகொள்ளும். பின்னர் அதில் முட்டையிட்டு அடைகாக்கும். பெண் பறவை அடைகாக்க ஆண் பறவை துணையாயிருக்கும். எந்தவொரு பறவையையும் கூட்டை அண்டவிடாது. காகங்களையும் பாம்புகளையும் மூர்க்கமாகத் தாக்கித் துறத்தி விடும். அப்படியான வலிமைமிக்கத் துணிவு இவற்றுக்கு உண்டு. குஞ்சு பிறந்ததும் இரண்டு பறவைகளும் சேர்ந்து குஞ்சுகளுக்கு உணவு கொடுக்கும். மைனாக்கள் புழுக்கள் பூச்சிகள் பழங்கள் சிறு தானிய மணிகள் தேன் என எல்லாவற்றையும் உண்பதால் இவை அனைத்துண்ணி வகையிலும் சேர்க்கப்படுகின்றன. பூச்சி புழுக்களை விரும்பி உண்பதால் இது விவசாயியின் தோழன்!

குஞ்சு மைனாக்கள்.

குஞ்சு மைனாக்கள் சுயமாகப் பறக்கும் காலத்தை அடையும் வரையில் அவை கூட்டுக்குள்ளேயே இருக்கும். பெற்றோரின் பராமறிப்பு அவற்றுக்கு மிக அவசியம். பறக்கும் வலிமையைப் பெற்றுவிட்டால் அதனை ஒரு விழாவாகவே எல்லா மைனாக்களும் சேர்ந்து கொண்டாடும். சிலபோது உங்கள் வீட்டுச் சூழலில் நீங்களும் இதனைப் பார்த்திருப்பீர்கள். குஞ்சு மைனாக்கள் தாமாக கூட்டுக்குள் இருந்து வெளியேறிப் பறக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் பெற்றோர் ஒவ்வொரு குஞ்சையும் எடுத்து வெளியே போட்டுவிடும். அப்போது சுற்றியுள்ள மற்ற மைனாக்கள் எல்லாம் சப்தம்போட்டு ஆராவாரம் செய்து குஞ்சு மைனாக்களைப் பறக்க உட்சாகமூட்டும். இது பார்க்க ஒரு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

மனிதர்களுடனான சகவாசம்.
புறாகாகம் சிட்டுக்குருவி போல மைனாக்களும் மனிதர்கள் வாழும் பகுதிகளில்ஓரளவு திறந்த வெளியை அண்டித்தான் அதிகம் வாழ ஆசைப்படுகின்றன. காரணம் அப்போதுதான் அவற்றுக்கு இலகுவாக உணவும் பாதுகாப்பும் கிடைக்கும். நன்கு பறந்து திரிய முடியுமாக இருந்தாலும் எல்லாத் திசையிலும் இவை சுற்றித் திரிவதில்லை. தாம் பிறந்த இடத்திலிருந்து ஓரிரண்டு கிலோ மீட்டர் தூரத்தைச் சுற்றித்தான் இவை பரந்து திரியும். அந்தப் பரப்புக்குள் இருக்கும் வீட்டு முற்றங்களுக்கும் கொல்லைப் புறங்களுக்கும் இவை அடிக்கடி வந்து செல்லும். எனவே வீட்டு அங்கத்தவர்களை இவற்றால் நன்றாக அடையாளம் கண்டு ஞாபகம் வைத்துக்கொள்ளவும் முடிகின்றதாம். இவற்றுக்கு நாம் உணவும் நீரும் கொடுத்து அன்பாக நடந்துகொண்டால் நம்பிக்கையோடு எம் பக்கத்திலும் வந்து உலாவுகின்றன. உங்கள் வீட்டின் பின் புறத்தில் கட்டையொன்றின் மீது எஞ்சுகின்ற உணவுகளையும் ஒரு பாத்திரத்தில் நீரையும் வைத்து வாருங்கள். உங்களுடனும் மைனாக்கள் நேசம் கொள்வதைக் காணலாம்.

பேசும் பறவை.

மைனாக்கள் கிளிகளைப் போன்று நாம் கற்றுக் கொடுப்பவற்றை அப்படியே ஞாபகத்தில் வைத்து மீண்டும் பேசும் திறன் படைத்தவை. அப்படியான imitative skills இவற்றிடம் காணப்படுகின்றது. எனவே இவற்றை பேசும் பறவைகள் வரிசையிலும் உள்ளடக்குவர். இதற்காகவே பலரும் மைனாக்களை செல்லப் பிராணியாக வீடுகளில் வளர்ப்பதுண்டு. எனது நண்பர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றிருந்தபோது அங்கு அவர்கள் வளர்க்கும் மைனா அழகான முறையில் தெளிவாகப் பேசுவதை அவதானித்தேன். வீட்டு முற்றத்தில் இருக்கும் கூட்டிலிருந்து அந்த மைனா ஸலாம் சொல்வதும் நண்பரின் பெயரைக் கூறி அழைப்பதும் விசில் அடிப்பதும் பூனை போன்று சப்தமிடுவதுமாக அட்டகாசம் செய்தது அந்த மைனா. பார்க்க வியப்பாகவும் ஆசையாகவும் இருந்தது. உங்களுக்கும் இதுபோன்ற அனுபவம் இருக்கும். மனித ஒலிகளுடன் வீட்டு விலங்குகளின் குரல்களையும் அப்படியே திரும்பச் சொல்லும் ஆற்றல் இவற்றுக்கு உண்டு.

மைனாக்கள் தமக்குள் செய்திகளைப் பரிமாரிக்கொள்வதற்கு பல வித்தியாசமான சப்தங்களை வெளிப்படுத்துகின்றன. பலபோது சூழலின் நிசப்த்த்தைக் கிழித்துக்கொண்டு கணீரென்ற குரலில் மைனாக்கள் பாடத் துவங்கும். மைனாக்கள் தங்களுக்குள் மூன்று முதல் பதிமூன்று வகையான இசை வடிவங்களில் பேசிக்கொள்ளுமாம். மனிதக் குரலை உலகிலேயே மிக நெருக்கமாகத் திருப்பித் தரவல்ல பறவை என்ற பட்டத்தினையும்கூண்டிலடைத்து வைத்தாலும் சற்றும் மனம் தளராத பறவை என்ற பாராட்டையும் பெற்றுக்கொள்வது இந்த மைனாக்கள்தான்.

மைனாக்களால் அவுஸ்ரேலியாவுக்கு ஆபத்தாம்.

1862 -ஆம் ஆண்டுகளில் மைனாக்களை அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் நோக்கோடு அறிமுகப்படுத்தியுள்ளார்கள். நோக்கம் ஆரம்பங்களில் வெற்றிகரமாக நடைபெற்றாலும் தற்போது வேறு வகையில் இது அந்நாட்டுக்கு தலையிடியாய் மாறியுள்ளதாம். மைனாக்களின் எண்ணிக்கை அசுர வேகத்தில் வளர்ந்து அங்குள்ள தேசியப் பறவையினங்களையெல்லாம் ஒடுக்கிவிட்டுகுறுகிய காலத்தில் பன்மடங்கு பெருகி ஆக்கிரமிப்பு நடத்தும் அழிவு சக்திகளில் மிக முக்கிய இடத்தை மைனாக்கள் பெற்றிருக்கின்றன. மரப்பொந்துகளை ஆக்கிரமித்து மண்ணின் சொந்தப் பறவைகளையும் விரட்டியடித்து அக்கிரமம் செய்கின்றனவாம். ஒரு மைனாவுக்கு முட்டையிட்டுக் குஞ்சுபொரிக்க ஒரு பொந்து மட்டுமே தேவை என்றபோதும் சுற்றுப்புறத்தில் உள்ள மற்றப்பொந்துகளையும் ஆக்கிரமித்துக்கொள்கின்றன. பின்னர் குப்பைகூழங்களைக்கொண்டு அப்பொந்துகளை அடைத்துவிடுகின்றனவாம். இவ்வளவும் போதாதென்று மரக்கிளைகளில் கூடு கட்டியிருக்கும் பறவைகளின் குஞ்சுகளையும் கீழே தள்ளிக் கொல்லுகின்றன என்று International Union for Conservation of Nature (IUCN) நிறுவனம் குறிப்பிடுகின்றது.

இப்படி மைனாக்களின்  புத்திசாலித்தனத்துக்கும் மூர்க்கத்தனத்துக்கும் ஈடுகொடுக்க முடியாமல் மண்ணின் சொந்தப்பறவைகள் கொஞ்சம் கொஞ்சமாய் தங்கள் இருப்பிடங்களை இவற்றுக்கு விட்டுக்கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டன. உலகிலுள்ள மிக மோசமான ஆக்கிரமிப்பு இனங்களில் முதல் நூறிடத்தில் இந்த மைனாவும் வருவதாக IUCN வின் ஆய்வுகள் கூறுகின்றன. அவுஸ்திரேலியாவின் தலைநகரில் 1970 இல் அறிமுகப்படுத்தப்பட்ட மைனாக்களின் எண்ணிக்கை 110. ஆனால் 2006 ஆம் ஆண்டின் கணக்கெடுப்புப்படி அங்கு அவற்றின் எண்ணிக்கை 93,000.

அவசரமாய் விழித்துக்கொண்ட சுற்றுச்சூழல் பாதுகாப்புத்துறை.

மைனாக்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டது. 
1300 க்கும் மேற்பட்டவர்கள் பொறிகளை அமைத்து மைனாக்களைப் பிடிக்கும் பணியில் அமர்த்தப்பட்டனர். ஆனால் ஆச்சரியம் அவற்றின் புத்திக் கூர்மையைப் பாருங்கள் இப்பறவைகளைப் பிடிக்கவோ கொல்லவோ வைக்கப்படும் பொறிகளை மிகச்சரியாக அடையாளங் கண்டுகொண்டு தவிர்த்து தப்பித்துவிடுகின்றனவாம். அப்படியே தவறிப்போய் ஒன்று இரண்டு சிக்கிக்கொண்டாலும் உடனடியாக மற்ற மைனாக்களை எச்சரித்து தப்பிக்கவைத்துவிடுகின்றனவாம். மைனாக்களைப் பிடிக்க எந்த மாதிரி பொறி தயாரிப்பதுஎப்படி பொறி வைப்பவர்களுக்குப் பயிற்சியளிப்பது என்று ஒரு பெரிய ஆராய்ச்சியே நடந்துகொண்டிருக்கிறது அவுஸ்திரேலியாவில். பார்த்தீர்களா அப்பாவிபோன்று இருந்கொண்டு என்ன வேலை செய்கின்றதென்று. ஒவ்வொரு படைப்பும் ஆச்சரியமானவைதான். சுப்ஹானல்லாஹ்!

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

2 comments:

Unknown said...

எங்கள் ஊர் பக்கம் மைனாவை நாவனத்தி என்பர்கள் ஒருவேளை இவை எப்பொழுதும் நாவை அனர்த்திகொண்டே இருப்பதால் அப்பெயரோ என்னவோ

Aalif Ali said...

நண்பரே மிக்க நன்றி...

புதியதொரு தகவலைத் தந்துள்ளீர்கள்.

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...