"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

11 September 2015

முளைகளாக இருக்கும் மலைகள்

மலை, Mountain என்று ஆங்கிலத்திலும் ஜபலுன் (جَبَلٌ) என்று அரபு மொழியிலும் அழைக்கப்படுகின்றது. அல்குர்ஆனில் ஜபல் என்று ஒருமையில் 6 தடவைகளும் ஜிபால் என்று பண்மையில் 32 தடவைகளும் வந்துள்ளன. இத்துனை தடவைகள் மலையைப் பற்றி அல்குர்ஆனில் திரும்பத் திரும்ப சொல்லப்பட்டுள்ளதென்றால் அல்லாஹ் அதனை ஆராய்ந்து பார்க்கின்றவர்களுக்கு அதில் பல அத்தாட்சிகளையும் உயிரினங்களின் வாழ்க்கைக்குப் பல பயன்பாடுகளையும் வைத்திருக்கின்றான் என்பதனைப் புரிந்துகொள்ளலாம். உயிர் வாழ்க்கைக்கு எப்படியெல்லாம் மலைகள் உதவிசெய்கின்றன என்பது பற்றி பல ஆராய்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன. இதுபற்றிய கல்விக்கு மலையியல் கல்வி (Mountainology) என்று பெயர்.

மலை வரைவிலக்கணம்

சமதரைக்கு மேலால் உயந்திருக்கும் பாரிய நில அமைப்பு மலை எனப்படுகின்றது. ஒக்ஸ்போட் ஆங்கில அகராதியின் வரைவிலக்கணப்படி இவ்வாறு கூறலாம். பிரமிப்பூட்டத்தக்கதாக, அல்லது குறித்துச் சொல்லத்தக்க உயரத்துக்கு, சுற்றுப்புறப் பகுதிகளிலிருந்து ஏறத்தாழ சடுதியாக இயற்கையாகவே உயர்ந்திருக்கும் நில மேற்பரப்பு மலை எனப்படுகின்றது."  புவியின் நான்கில் ஒரு பகுதி நிலப்பரப்பை மலைகள் ஆக்கிரமித்துள்ளன. ஆசியாவின் 64% நிலப்பகுதியும்; ஐரோப்பாவின் 25% நிலப்பகுதியும்; தென்னமெரிக்காவின் 22% உம்; அவுஸ்த்ரேலியா, ஆப்பிரிக்காக் கண்டங்களில் முறையே 17%, 3% ஆகிய பகுதிகளும் மலைகளினால் மூடப்பட்டுள்ளன. மொத்தமாக உலகின் 25% நிலப்பகுதி மலைகளாக உள்ளன.

உலகின் 10% மக்கள் மலைப் பகுதிகளில் வாழ்கின்றனர். உலகின் பெரும்பாலான ஆறுகள் மலைப் பகுதிகளிலேயே உருவாகின்றன என்பதுடன் உலக மக்களில் அரைப் பகுதியினர் நீருக்காக மலைகளிலேயே தங்கியுள்ளனர். அத்தோடு எண்ணிலடங்கா ஜீவராசிகளும் தாவரவகைகளும் மலைகளில் தமது வாழ்க்கையைத் தொடர்கின்றன.

மலைகளின் வகைகள்

மலைகள் அவற்றின் உருவாக்கம், பண்பு, தோற்றம் என்பவற்றிற்கு ஏற்ப எரிமலை (Volcanoes), மடிப்பு மலை (Fold mountains), பகுதி மலை (Block mountains) என மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.

1.எரிமலை. (Volcanoes).

பூமிக்கு அடியில் 100 கி.மீ. தொலைவில் ஏற்படும் உயரழுத்த வெப்பநிலையால் மேலோட்டுக்கு அருகிலிருக்கும் பாறைகள் உருகி திரவம் போன்றாகிவிடும். திரவநிலையிலுள்ள பாறைக்குழம்பு, தனது உஷ்னத்தால் மேல்நோக்கித் தள்ளப்பட்டு பூமியின் மேற்பரப்பை அடைந்து அப்படியே படிந்து காலப்போக்கில் பெரும் எரிமலைகளாய் உருவாகிவிடும். இது எப்போதும் தனக்குள் நெருப்புக் குழம்புகளை கத கதவென்று வைத்திருப்பதாலும் திடீரென பொங்கி, வெடித்து எரி குழம்புகளை வெளியே கக்கிவிடுவதாலும் எரிமலை என அழைக்கப்படுகின்றது.

2.மடிப்பு மலை (Fold Mountains)

மடிப்பு மலைகளாவன பூமியின் மேலடுக்கில் உள்ள பாறைகள் ஒன்றோடு ஒன்று உராய்ந்து மடிவதினால் உருவாகின்றன.  பூமியின் மேற்பரப்பில், நிறை குறைந்து காணப்பட்ட பெரும் பாறைகள் ஆரம்பங்களில் நகர ஆரம்பித்து பின்னர் ஒன்று இன்னொன்றுடன் மோதியதால் ஏற்பட்ட செங்குத்தான மடிப்புகளே மடிப்பு மலைகள் எனப்படுகி்ன்றன.

3.பகுதி மலை (Block Mountains)

பூமியின் மேலடுக்கிலுள்ள பாறைகள் மேற்கூறியவாறு நகரும்போது பிழையாக நகர்ந்ததாலும் பிழையாக ஒன்றோடொன்று உராய்ந்ததாலும் பூமியின் மெல்லியதான மேலோடுகள் விரிவடையும் போது உருவான அரை குறை மலைகளே பகுதி மலைகள் எனப்படும்.

மலைகளின் உருவாக்கம்.

கோள வடிவிலான இந்த பூமியின் மேற்பரப்பிலிருந்து (Outer Crust Of The Earth) 1 முதல் 30 மைல்கள் வரையான பகுதி மட்டுமே உறுதியாகவும், கடினமானதாகவும் இருக்கிறது. ஆனால் இதற்கு அப்பால் மிக ஆழத்தில் அது அதிக வெப்பமுடையதாகவும், உருகிய திரவ நிலையில் நெருப்புக் குழம்பாகத்தான் காணப்படுகின்றது. இவ்வாறு பூமியின் மேற்பகுதி கடினமாகவும், உட்பகுதி இறுகாமல் உருகிய நிலையில் இருப்பதாலும், பூமியின் சுழற்சி மற்றும் சுற்றுகை காரணமாகவும் மையவிலக்கு விசையால் (Centrifugal Force) பூமியின் மேற்பரப்பு நகர்ந்து இடம் பெயர்ந்துள்ளது. இதனைக் கண்ட நகர்வு (Continental Drift)  என்போம். பூமியின் நிலப்பரப்புகளை ஒன்று சேர்த்தால் அவை கச்சிதமாகப் பொருந்திக் கொள்வது இதனால்தான்.

அதாவது ஒரு காலத்தில் ஒரே நிலப்பரப்பாக இருந்த பூமி பிரிந்துசென்று தனித்தனி துண்டுகளாகின. பூமியின் மேற்பகுதி கடினமானதாகவும், உட்பகுதி உருகிய நிலையிலும் இருப்பதால் தான் இது நடைபெற்றதாக புவியியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். இவ்வாறு இந்த நிலப்பரப்புகள் தொடர்ந்து நகர்ந்து கொண்டிருந்த வேளையில் புவித் தட்டுகளுக்கிடையே ஏற்பட்ட உராய்வினால் ‘Folding Phenomena’ என்ற முறையில் நிலப்பரப்புகளில் மலைகள் உருவாகின. இம் மலைகள் பூமியின் மேற்பரப்பில் மட்டுமல்லாமல் பூமிக்குள்ளும் ஆழமாகச் வேர்விட்டு உயர்ந்து நின்றன. இதனால்தான் வேகமாக நகர்ந்து கொண்டிருந்த கண்டங்களின் நிலப்பரப்புகள் நகராமல், அசையாமல் அப்படியே நின்றுவிட்டன. இதனைத்தான் திருமறையின் பல வசனங்கள் இவ்வாறு கூறுகின்றன.

இன்னும் இப்பூமி (மனிதர்களுடன்) ஆடி சாயாமலிருக்கும் பொருட்டு, நாம் அதில் நிலையான மலைகளை அமைத்தோம். (21:31) “உங்களுடன் பூமி அசையாதிருப்பதற்காக அவன் அதன் மேல் உறுதியான மலைகளை நிறுத்தினான்.” (16:15) உங்களுடன் பூமி அசையாதிருப்பதற்காக அதன்மேல் மலைகளை உறுதியாக நிறுத்தினான். (31:10)

மலைகள் பூமிக்குள் இவ்வாறு முளைகளாக அமைந்திருக்காவிட்டால், நாம் வசிக்க முடியாத அளவிற்கு இந்த பூமி ஆடி, அசையும் என்கின்றனர் புவியியல் வல்லுணர்கள்.

பூமியின் ஆப்புகளாக மலைகள்.

பூமியின் மேலடுக்கு பருமனில் மிக மெல்லியதாகும். அதேநேரம் பூமி தனது அச்சில் மணிக்கு 1038 மைல் வேகத்தில் சுழன்று கொண்டு சூரியனையும் சுற்றி வலம் வந்துகொண்டிருக்கின்றது. இவ்வாறு பூமி மிக வேகமாகச் சுற்றும்போது அதன் மேலோடு களன்று தெரிக்காதிருக்கவும் அவ்வாறே நில நடுக்கங்கள், புவியதிர்ச்சிகள் ஏற்பட்டு அசைந்துவிடாதிருக்கவும் அல்லாஹ் பூமியின் மேலோட்டையும் கீலோட்டையும் சேர்த்து மலைகளைக்கொண்டு ஆணிகளாக அடித்வைத்துள்ளான். இதற்கு அல்குர்ஆன் அவ்தாத், ரவாஸிய என்ற பதங்களைப் பயன்படுத்தியுள்ளது. இச்சொற்களுக்கு முறையே ஆப்பு, நங்கூரம்என்று பொருள். அதாவது தரையில் கூடாரங்களை அமைக்கும்போது அது உறுதியாக இருக்க நிலத்துடன் சேர்த்து ஆப்புகளை அடிப்பார்கள். அதேபோன்று கப்பல் அசையாதிருக்க கடலில் நங்கூரமிடுவார்கள். இதே தோரணையில்தான் அல்லாஹ் பூமி நிலைத்திருக்கவேண்டும் என்பதற்காக ஆப்புகளாகவும், நங்கூரமாகவும் பூமியில் மலைகளை நட்டு வைத்துள்ளதாகக் கூறுகின்றான். இதனை மலையின் வேர்கள் (Mountain Buoyancy Roots) என்று அழைப்பர்.

நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா. இன்னும் மலைகளை முலைகளாக ஆக்கவில்லையா.” (78:6-7) “இன்னும் இப்பூமி மனிதர்களுடன் ஆடி அசையாமல் இருக்கும் பொருட்டு நாம் அதில் நிலையான மலைகளை அமைத்தோம்.” (21:31)

ஆப்பு எப்படியிருக்கும் என்றால் அதனை நிலத்தில் அடித்தால் நான்கில் ஒரு பகுதி வெளியே தெரியும். மற்றைய மூன்று பகுதிகளும் நிலத்திற்கு அடியில்தான் இருக்கும். இதுபோன்றுதான் மலைகளும். எவ்வாறு பனிப் பாறைகளின் சிறு பகுதி கடலுக்கு வெளியிலும் பெரும் பகுதி கடலுக்கடியிலும் இருக்கிறதோ அதுபோன்று மலைகளின் வெளியில் காணும் பகுதியைவிடவும்  75%  விகிதம்  பூமியினுள் ஆழ்ந்திருப்பதாக 1400 வருடங்களுக்கு முன்பு அல்குர்ஆன் கூறிய இந்த விஞ்ஞான உண்மையை 19ம் நூற்றாண்டில்தான் புவியிலாளர்கள் கண்டறிந்தனர்.

இன்று அதிகமான பல்கலைக்கழகங்களில் மண்ணியல் விஞ்ஞானப்  பாடத்திற்குப் பயன்படுத்தும் ஒரு புத்தகம்தான் “The Earth” . இதன் ஆசிரியர்களுள் ஒருவரும் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டரின்ஆலோசகராகவும் அமெரிக்க விஞ்ஞான ஆய்வுகூடத் தலைவராகவும் இருந்த Dr. ஃப்ரேங்க் பரஸ் அப்புத்தகத்தில் மலைகள் ஆப்பு வடிவத்தில் அமைந்தவை. ஆழமாக நிற்கும் அவற்றுக்கு வேர்களும் உண்டு. பூமியை நிலைப்படுத்துவதே அவற்றின் உறுதியான இயக்கம்என்று எழுதியுள்ளார்.

கப்பல்கள்போல் மிதக்கும் மலைகள்.

அன்றியும், மலைகளைப் போல் உயரமாகச் செல்லும் கப்பல்கள் அவனுக்கே உரியன” (55:24) “இன்னும் மலைகளைப் போல் கடலில் செல்பவையும் (கப்பல் மற்றும் பனிப் பாறை (Ice berg) அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும்.” (42:32)

இவ்விரு வசனங்களிலும், கடலில் செல்லும் கப்பல்களை நிலத்தில் உள்ள மலைகளோடு அல்லாஹ் ஒப்பிட்டுக் கூறுகிறான். சாதாரணமாக இவ்வசனங்களைப் பொருள் கொள்ளும் போது, கடலில் கப்பல் செல்வது பெரும் மலைகள் செல்வது போன்ற தோற்றத்தை பார்ப்பவர்களுக்கு ஏற்படுத்துகிறது என்றுதான் அனைவரும் அறிகிறோம். ஆனால் சற்று ஆழமாக, அறிவியல் கண்கொண்டு இவ்வசனங்களைப் பார்த்தால் ஒரு அற்புதத்தை இங்கு கண்டுகொள்ளலாம்.

பூமியின் பிரதானமான நான்கு தட்டுகள் காணப்படுகின்றன. அதில் மேல் அடுக்கு (Continental Crust) குளிர்ந்து கடினமாகக் காணப்படுகின்றது. அதில்தான் நாம் சஞ்சரிக்கின்றோம். இதற்கு கீழே உள்ள மெண்ட்ல் (Mantle) எனும் இடை அடுக்கு உருகிய திரவ (Viscous fluid) நிலையில் உள்ளது. அடுத்த மூன்றாவது அடுக்கு (Outer Core)  சற்று கெட்டியான நெருப்பாகவும் நடு உறை எனப்படும் core முற்றும் உருகிய இரும்புத் திரவ நிலையிலும் உள்ளது. இதுவே magma எனும் எரிமலைக் குழம்பாக வெளியேறுகிறது. மெண்ட்ல் எனும் நடு உறை திரவ நிலையில் கடல் போல் சூழ்ந்துள்ளது. கடலில் கப்பல், பனிப்பாறை மிதப்பது போன்ற இத்திரவக் குழம்பில் பூமியின் மேல் ஓட்டில் உள்ள மலைகள் (Continental mountain crust) மூழ்கி மிதக்கின்றன.

அடர்த்தி குறைவான பனிக்கட்டி அடர்த்தி அதிகமுள்ள கடலில் மிதப்பது போன்று அடர்த்தி குறைவான மலைகள் அடர்த்தி அதிகமுள்ள மெண்ட்ல் திரவக் கடலில் மிதக்கின்றன. இதைத் தான் அல்லாஹ், “மலைகளைப் போல் கடலில் செல்பவையும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். (42:32) என்று கூறுகிறான். நிலத்தில் உள்ள மலைகள், கடலில் மிதக்கும் கப்பல்கள், பனிப்பாறைகள் (Ice berg) அனைத்தும் ஒரே அறிவியல் விதியில் (Archimedes Principle) செயல்படும் விந்தையை அல்லாஹ் 1400 ஆண்டு களுக்கு முன்பே வெளிப்படுத்தி விட்டான்.

உயிருள்ள மலைகள்.

(நபியே!) நாம் ஒரு மலையின் மீது இந்த குர்ஆனை இறக்கியிருந்தோமானல், அல்லாஹ்வின் பயத்தால், அது நடுங்கிப் பிளந்து போவதாகக் கண்டிருப்பீர்; மேலும், மனிதர்கள் சிந்திக்கும் பொருட்டு இத்தகைய உதாரணங்களை நாம் அவர்களுக்கு விளக்குகிறோம். (59:21)

நிச்சயமாக வானங்களையும், பூமியையும், மலைகளையும் (நம் கட்டளைகளான) அமானிதத்தை சுமந்து கொள்ளுமாறு எடுத்துக்காட்டினோம், ஆனால் அதை சுமந்துக்கொள்ள அவை மறுத்தன, அதைப்பற்றி அவை அஞ்சின. (33:72)

நாம் தாவூதுக்கு நம்மிடமிருந்து பெரும் அருட்பேற்றினை வழங்கியிருந்தோம். (நாம் ஆணையிட்டோம்:) மலைகளே! அவருடன் சேர்ந்து நீங்களும் துதி பாடுங்கள். இவ்வாறே பறவைகளுக்கும் (நாம் கட்டளையிட்டிருந்தோம்.) (34:10)

மேற்குறிப்பிட்ட திருமறை வசனங்களைப்போன்று இன்னும் சில வசனங்களில் அல்லாஹ் உயிரினங்களுக்கு உத்தரவிடுவதுபோன்று உயிரற்றவை என நாம் கருதும் வானம், பூமி, மலைகளைப் பார்த்தும் உத்தரவிட்டுள்ளான். இதன் மூலம் இன்னும் அறிவியலுக்கு அகப்படாத ஒரு மர்மத்தை அல்லாஹ் இங்கு குறிப்பிடுகின்றான். அதுதான் மலைகளுக்கும் உயிருண்டு. அவற்றுக்கு உணர்ச்சி இருக்கின்றது, பயப்படும், நடு நடுங்கும் என்பதை முதலிரண்டு வசனங்களும் அவையும் துதிசெய்கின்றன என்பதை மூன்றாவது வசனமும் நேரடியாகவே கூறுகின்றன. அப்படியானால் மலைகளுக்கும் உயிர் உள்ளது என்பதை வஹியின் அறிவு சொல்லித் தருகின்றது. ஆனால் இது இன்றைய அறிவியலுக்கு எட்டாத அப்பாட்பட்ட ஒரு விடயம். அல்லாஹ்வே யாவற்றையும் அறிந்தவன்.

தூள் தூளாக ஆக்கப்படும் மலைகள்.

எம்மைக்கொண்டு அசைந்து, சாய்ந்துவிடாதிருக்க அல்லாஹ் மலைகளை மிக உறுதியாக, ஆப்புகளாக பூமியில் அரைந்திருக்கின்றான். அத்தகைய மலைகள் யுக முடிவு நாளின்போது வெடித்துச் சிதறி தூள் தூளாக ஆகிவிடும் என அல்குர்ஆனில் பல இடங்களில் அல்லாஹ் கூறுகிறான்.

இன்னும் நீர் மலைகளைப் பார்த்து அவை மிகவும் உறுதியாக இருப்பதாக எண்ணுகிறீர்; (எனினும் அந்நாளில்) அவை மேகங்களைப் போல் பறந்தோடும்” (27:88) “(நபியே!) இன்னும் உம்மிடம் மலைகளைப்பற்றி அவர்கள் கேட்கிறார்கள். "அவைகளை என் இறைவன் தூள் தூளாக்கி (மணல்களைப் போல் பரப்பி)விடுவான்" என்று நீர் கூறுவீராக. (20:105) “மேலும், மலைகள் கொட்டப்பட்ட பஞ்சைப் போன்று ஆகிவிடும்.“ (101:5) “இன்னும் மலைகள் தூள் தூளாக ஆக்கப்படும் போது, பின்னர், அது பரப்பப்பட்ட புழுதி ஆகிவிடும்.” (56:4-5)

இந்த வசனங்களை மேற்கோள் காட்டுவதைப்போல் New Scientist என்ற ஆங்கில விஞ்ஞான சஞ்சிகையில் The Doomsday Scenario (யுக முடிவு நாளின் காட்சிகள்) என்ற தலைப்பில் ஒரு ஆய்வாளன் பின்வருமாறு எழுதியிருந்தான். பூமி மிகப் பலமானதொரு அதிர்வுக்குள்ளாகும்போது இம்மலைகள் சுக்கு நூறாக சிதைவடைந்து பஞ்சுக்கூட்டம் போன்று பறந்துவிட முடியுமான உச்சகட்ட சாத்தியக்கூறுகள் இருக்கின்றன

ஆக மலைகள் அவை வெறும் மலைகள் அல்ல. அவற்றில் பல்வேறு அற்புதங்களை அல்லாஹ் வைத்திருக்கின்றான். பூமியின் நிலையான இறுப்புக்கு ஆதாரமே மலைகள் என்று சொன்னால் பிழையாகாது. மலை மட்டுமன்றி இன்னும் பல ஏற்பாடுகளைச் செய்து தந்தவன் யார்? அல்லாஹ் கேட்கின்றான்.

இந்தப் பூமியை வசிக்கத் தக்க இடமாக ஆக்கியவனும்அதனிடையே ஆறுகளை உண்டாக்கியவனும்; அதற்காக (அதன் மீது அசையா) மலைகளை உண்டாக்கியவனும் இரு கடல்களுக்கிடையே தடுப்பை உண்டாக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை! (எனினும்) அவர்களில் பெரும்பாலோர் அறியாதவர்களாக இருக்கின்றனர். (27:61)

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

Related Posts Plugin for WordPress, Blogger...