"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

31 May 2019

பாரம் சுமக்கும் கழுதைகள்

கழுதை, Donkey, பூBருவாஎன்று எந்தப் பாசையில் சொன்னாலும் யாரையாவது திட்டுவதுபோன்றுதான் தோன்றும். ஏனெனில் இன்றளவில்  அந்தச் சொல் கழுதைகளுக்குப் பயன்படுவதைவிட மனிதர்களுக்குத்தான் அதிகளவில் பயன்படுகின்றது. கழுதைகள் உண்மையிலேயே தோற்றத்திலும் குணவியல்புகளிலும் விசித்திரமான விலங்குதான். இத்தொடரில் கழுதைகளின் சுவாரஷ்யமான சில பக்கங்களைப் புரட்டிப் பார்ப்போம்.

அறிமுகம்.
விஞ்ஞான முறையில் விலங்கினங்கள் பல்வேறு அடிப்படையில் பிரிக்கப்படுவதுண்டு. அதில் கால் குளம்பின் எண்ணிக்கையை வைத்து ஒற்றைப்படை, இரட்டைப்படை என்று பிரிக்கும் வழக்கம் உண்டு. அதில் குதிரை, வரிக்குதிரை, போனி, கோவேறுக் கழுதை, கழுதை என்பன ஒற்றைப்படைக் குளம்பிகள் (Perissodactyla, odd-toed ungulates) வகையைச் சேர்ந்தவை. அவற்றின் பாதத்தில் ஒரு குளம்புதான் இருக்கும். அத்தோடு கழுதைகள் பாலூட்டி இனத்தைச் சேர்ந்தவையும்தான். இவை தாவர உண்ணி விலங்குகளாகும்.

உடற் தோற்றம்.
அகன்ற முகம், பெரிய காது, பானை வயிறு, அடர்த்தியான ரோமம், சுருண்ட கண், மூக்கைச் சுற்றி வெண்மை நிறம், தலை முதல் வால் வரை முதுகில் நீண்ட கோடு, குட்டையான கால்கள், கால் பாதங்களில் ஒற்றைக் குளம்பு, குறுகிய மயிர் நிறைந்த வால் இவைதான் வெளித்தோற்றத்தில் கழுதையின் அடையாளங்களாக இருக்கின்றன. பொதுவாக கழுதைகள் 100 முதல் 160 செ.மீ உயரம் வரை வளரக்கூடியன. அத்தோடு 80 முதல் 480 கி.கி. வரை நிறைகொள்ளக்கூடியன. பெரும்பாலும் கழுதைகள் 15 வருடங்கள் முதல் 50 வருடங்கள் வரை சூழல் வித்தியாசங்களுக்கு ஏற்ப ஆயுட்காலம் கொண்டவை. கழுதைகள் கருப்பு, வெள்ளை, பிறவுன் மற்றும் சாம்பல் நிறங்களில் காணப்படுகின்றன.

உலகளவில் கழுதைகள்.
கழுதைகளின் தாய் பூமி ஆப்ரிக்காதான். அங்கிருந்துதான் பிற்காலத்தில் ஏனைய நாடுகளுக்கும் அவை பரவின. இற்றைக்கு 5000 வருடங்களுக்கு முன்பிருந்தே கழுதைகள் மனிதனுக்காக உழைத்து, சேவகம் செய்து வருகின்றன. 2006 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒரு கணிப்பீட்டின்படி இன்று உலகளவில் 41 மில்லியன் கழுதைகள் இருக்கின்றன. அதிலும் அதிகப்படியானவை 11 மில்லியன்கள் சீனாவிலும் அதற்கு அடுத்தபடியாக எதியோப்பியா, ஆபிரிக்கா, மெக்ஸிக்கோ, மொரோக்கோ, சோமாலியா, பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகளிலும் அதிகளவில் காணப்படுகின்றன. மித வெப்ப பாலைநிலப் பிரதேசங்கள்தான் கழுதைளுக்கு உகந்த இடம்.

நம் நாட்டில் கழுதைகள்.

எமது நாட்டைப் பொறுத்தவரை மன்னார், புத்தளம், கற்பிட்டி, வவுனியா, யாழ்பானம் போன்ற சுற்றுவட்டாரப் பகுதிகளில்தான் கழுதைகள் காணப்படுகின்றன. அதிலும் மன்னார்தான் கழுதைகளின் சாம்ராஜ்யம். மன்னாரிலிருந்துதான் ஏனைய பகுதிகளுக்கு கழுதைகள் இடம் பெயர்ந்திருக்க வேண்டும் என நம்பப்படுகின்றது. மன்னாருக்கு செல்லும்போதெல்லாம் தவறாமல் கழுதைகளையும் தரிசித்துவிட்டுத்தான் வருவேன். மன்னாருக்கு யார் வந்தாலும் அங்கு காணப்படும் கழுதைகளை ஒருதடவை விநோதமாகப் பார்ப்பார்கள். வாகனங்களில் செல்பவர்கள்கூட கழுதைகளைக் கண்டதும் கழுதைகழுதை…” என்று யன்னல் வழியாக எட்டிப் பார்த்து மகிழ்வார்கள். பொதுவாக ஒரு நாட்டுக்கே உரித்தான விலங்கு என்றால் அது நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் இருக்கவேண்டும். ஆனால் கழுதைகளைப் பொருத்தவரை நம் நாட்டில் மேற்கூறிய இடங்களில்தான் வாழ்கின்றன. அப்படியாயின் அவை எமது நாட்டுக்குச் சொந்தமானவை அல்ல. கழுதைகள் இப்போதைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அரேபிய வியாபாரிகளால் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டவை என்பதுதான் உண்மை.

கழுதைகளின் வாழ்க்கை முறை.
கூட்டமாக வாழும் விலங்கினம்தான் கழுதைகள். தலைமை தாங்க ஒரு ஆண் கழுதை இருக்க அதற்குக் கீழ் இன்னும் சில ஆண் கழுதைகளும் சில பெண் கழுதைகளும் குட்டிகளும் சேர்ந்து கூட்டமாக வாழ்கின்றன. ஆண் கழுதை இணை சேரும் பருவத்தில் பெண் கழுதையுடன் கூட்டத்திலிருந்து தனித்துச் செல்லும். பெண் கழுதையுடன் இணை சேர்வதற்காக ஆண் கழுதைகளுக்கு மத்தியில் போட்டிகள்கூட நடக்கும். ஒரு பெண் கழுதைக்காக பல ஆண் கழுதைகள் சண்டைபோடும் சந்தர்ப்பங்களும் உண்டு. இந்தப் பருவத்தில் அவை அங்கும் இங்கும் குழம்பிப்போய் ஒடும்போது அதிக வீதி விபத்துகளை ஏற்படுத்துகின்றன. சண்டையில் வெற்றி பெற்ற ஆண் கழுதை பெண் கழுதையுடன் இணை சேர்கின்றது. தாய்க் கழுதை 12 மாதங்கள் வரை குட்டியை வயிற்றில் சுமக்கும். ஒரு தடவைக்கு ஒரு குட்டியை மட்டுமே அவை பிரசவிக்கும். அது முதல் கழுதைக் குட்டிகளை குறித்த பருவம் வரும் வரை  தாய்க் கழுதை தன்னுடன் அழைத்துக்கொண்டு திரியும். சிறு வயதில் கழுதைக்குட்டி பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும். சிலபோது ஆண் கழுதைகள் பெண் குதிரைகளோடு இணை சேரும் சந்தர்ப்பங்களும் உண்டு. அப்படிப் பிறக்கும் கழுதைகளே கோவேறுக் கழுதை எனப்படுகின்றது. இணைய வந்த ஆண் கழுதைகள் இணைப்பின் பின் பெண் குதிரையால் உதைத்து கடித்து துரத்திவிடப்படும் என்பது வேறுகதை.

கேவேறுக் கழுதை.

கோவேறு கழுதை (mule) என்பது ஆண் கழுதையும்  பெண் குதிரையும் தம்மிடையில் இனவிருத்தி செய்வதன் மூலம் பிறப்பவையாகும்.  இவை சந்ததியைப் பெருக்கும் திறன் அற்ற மலட்டு விலங்குகளாகும். இவை கழுதையை விட தோற்றத்தில் பெரியனவாகவும், குதிரையை விட சிறியனவாகவும் உடலைப் பெற்றிருக்கும். கழுதைக்கும் கோவேறுக் கழுதைக்கு இடையில் உள்ள சில வித்தியாசங்களைப் பார்ப்போம். கழுதைகள் இனப் பெருக்கத்தில் ஈடுபட்டு குட்டி போடும். கோவேறு கழுதைகள் இனப்பெருக்கம் செய்ய முடியாது. கோவேறு கழுதைகள் வேலைக்குச் சிறந்தவை. கழுதைகளைவிட கோவேறுக் கழுதைகள் அதிக எடையைத் தாங்குபவை.

கோவேறு கழுதைகளால் சில அடி உயரத்துக்குக் குதிக்க முடியும். கழுதையால் குதிக்க முடியாது. கழுதைகளைவிட கோவேறுக் கழுதைகள் புத்திசாலிகள். கோவேறுக் கழுதைகளின் காதுகள், கழுதைகளின் காதுகளைவிடச் சிறியதாக இருக்கும். ஆனால் உருவமோ குதிரை போல உயரமாக, பெரிதாக இருக்கும். கழுத்தும் பற்களும்கூட கொஞ்சம் பெரிதாகவே இருக்கும். தலை, ஒல்லியான கால்கள், பிடரி மயிர் ஆகியவை கழுதைகளது போலவே கோவேறு கழுதைகளுக்கு இருக்கும். குதிரையின் வாலைப் போலவே கோவேறு கழுதையின் வால் அடர்த்தியானது. ஆனால், கழுதையின் வாலோ பசுவின் வாலைப் போல இருக்கும். கழுதை கத்தும். ஆனால் கோவேறு கழுதை குதிரையைப் போலக் கனைக்கும்.

கழுதை கத்தும் சப்தம்.

கழுதையின் கத்தல் ஒலி அபாரமானது. அதன் வீச்செல்லையும் கூடுதலாக இருக்கும். கேட்டுச் சகிக்க முடியாத ஒலியை கழுதைகள் வெளிப்படுத்தும். அதனால்தான் கழுதை போன்று கத்தாதே!என்று திட்டுகிறோம். லுக்மான் (அலை) தனது மகனுக்கு உபதேசிக்கும் போது சப்தத்தைத் தாழ்த்திப் பேசுமாறும் சப்தங்தங்களிலேயே கர்ண கொடூரமானது கழுதையின் சப்தம்தான் என்றும் கூறிய சம்பவத்தை அல்லாஹ் அல்குர்ஆனில் 31:19 என்ற வசனத்தில் ஞாபகப்படுத்துகின்றான். கழுதை கத்தத் துவங்கினால்  மனிதன் மட்டுமல்ல நாய், மாடு, காகம், அணில் போன்ற உயிரினங்களும் அந்த இடத்தைவிட்டு ஓட்டமெடுப்பதைக் கண்டிருக்கின்றேன். அவ்வளவுக்கு சகிக்க முடியாததாக இருக்கும். நகைச்சுவைக்காக இதனை கழுதைப் பாடல் என்றும் சொல்வர்.
பாரம் சுமக்க ஏற்ற பிராணி

அல்லாஹ் அல்குர்ஆனில் கழுதையை ஏடு சுமக்கும் கழுதை” [62:5] என்றுதான் சிலாகித்துள்ளான். கழுதைகளுக்கு பாதைகள் பற்றிய நல்ல ஞாபக சக்தியுண்டு. எங்கு செல்லவேண்டுமோ அந்த இடத்தை ஒரு தடவை காட்டிக்கொடுத்தால் போதும். அதன் பிறகு அவ்வழியே சென்று வரும். யாரும் கழுதையை ஓட்டிச் செல்லத்தேவையில்லை. துணைக்கு யாருமில்லாமலேயே எட்டு கிலோமீட்டர்களுக்கும் அப்பால் இருந்து இவற்றால் சுமைகளை சுமந்துகொண்டு வரமுடியும், ஏற்றியிறக்க இங்கேயும் அங்கேயும் யாராவது இருவர் இருந்தால் மட்டும் போதும். இழு வண்டிகளோ, வாகனங்களோ செல்ல முடியாத மலைச் சரிவுகளிலும் இவை பாரங்களைச் சுமந்துகொண்டு ஏறுகின்றன. குறுகிய நடைபாதைகளிலும் கற்கள் நிறைந்த நதிப்படுகைகளிலும் சேறு நிறைந்த பாதைகளிலும் இன்னும் கரடு முரடான நிலங்களிலும் வளைவு நெளிவுகள் நிறைந்த குறுகலான பாதைகளிலும் இவை இலகுவாக சுமைகளுடன் பயணம் செய்கின்றன.

குதிரையோ ஒட்டகமோ போக முடியாத இடத்திற்கும் கழுதையால் போக முடியும். சில இடங்களில் வண்டிகளை இழுக்கவும் கழுதைகளை உபயோகிக்கின்றனர். இன்றும் ஆபிரிக்கா போன்ற நாடுகளில் பொருள்களை ஏற்றிச்செல்ல லட்சக்கணக்கான மக்களுக்கு, இதுவே மிக முக்கிய போக்குவரத்துச் சாதனமாக இருக்கிறது. அல்லாஹ் அவற்றைப் படைத்திருக்கும் விதமே பொறுமையுடன் சுமைகளைத் தாங்கும் இயல்பில்தான். பொறுமைக்கு பேர்போன விலங்கு கழுதைதான். கழுதைகளின் தாக்குப்பிடிக்கும் திறன் அதிகம்.

வீட்டு விலங்காக கழுதைகள்.

பண்டைக் காலம் முதல் இன்றுவரை கழுதைகள் மனிதர்களால் வளர்க்கப்பட்டு வந்துள்ளன. பிரயாண வாகனமாகவும் சுமை தாங்கியாகவும் சிலபோது செல்லப் பிராணியாகவும் வளர்க்கப்பட்டுள்ளன. கழுதைகளைப் பராமரிக்க அதிக சிரமப்பட வேண்டியதில்லை. அவற்றிற்குத் தேவையான உணவை அவையே தேடிக்கொள்கின்றன,  நகர்ப் புறங்களில் வாழும் கழுதைகள் கிட்டத்தட்ட எல்லாவற்றையுமே சாப்பிடுகின்றன. ஆடு, மாடுகளுடன் நீர் நிலைகளை பகிர்ந்து கொள்வதோடு கடதாசிகள், துணிகள் ,மனித உணவுக் கழிவுகளை உண்கின்றன.  பொதுவாக மனித கழிவுகளை நம்பியே நகர்ப்புறக் கழுதைகளின் உணவுத் தேவை அமைகிறபடியால் மனிதக் குடியிருப்புகளை சுற்றியே அவை நடமாடுகின்றன. இவை குதிரைகளை விட குறைவான உணவே உட்கொள்கின்றன. சிறந்த முறையில் கவனித்து வந்தால் எஜமானர்களிடம் ஒட்டிக்கொள்கின்றன.

தெண்னம் தோப்புகளிலும் சுற்றுளாத் தளங்களிலும்கூட அழகுக்காக கழுதைகள் வளர்க்கப்படுகின்றன. இந்தியா, பொலிவியா போன்ற நாடுகளில் கழுதைப் பால் குடிக்கும் வழமை இருந்து வருகின்றது. ஆஸ்துமா,சளி உள்ளிட்ட நுரையீரல் சார்ந்த நோய்கள் குணமாக கழுதைப் பாலே சிறந்த மருந்து என்கிறார்கள் அவர்கள். உலகப் பேரழகி கிளியோபெட்ரா கூட தனது அழகைப் பராமரிக்க கழுதைப் பால் குடித்து வந்ததாகவும் கழுதைப் பாலில்தான் குளித்ததாகவும் சம்பவங்கள் கூறுகின்றன. முன்னேய காலங்களில் குழந்தைகளுக்கு ஏற்படும் சில நோய்களுக்கு கழுதைகளின் சிறுநீர், இரத்தம் மற்றும் பால் என்பன மருந்தாகவும் பயன் பட்டிருகிறதாம். மட்டுமன்றி இந்தியாவில் தோசம், கண்ணூறு கழிக்கவும் கழுதை உபயோகமாகியுள்ளது. கழுதையின் ஒலி நல்ல சகுனமென்றும் கூறுவார்கள். இப்படி கழுதையால் மூட நம்பிக்கைகளும் உருவாகியுள்ளது.

இழிவு படுத்தப்படும் கழுதை.

எல்லா மிருகங்களும் சமம்; ஆனால் சில மிருகங்கள் மற்ற மிருகங்களை விட கூடுதல் சமம்.  (‘’All animals are equal, but some animals are more equal than others—George Orwell’s Animal Farm) என்று ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் உண்டு. எல்லா மிருகங்களும் சமம்தான். ஆனால் சிங்கத்துக்கு ஏன் ராஜா பதவி? கழுதைக்கு ஏன் இந்த இழி நிலை? பழமொழிகளிலும் சரி, கல்வெட்டுகளிலும் சரி, சங்க இலக்கியங்களிலும் சரி கழுதை என்றால் கொஞ்சம் இளக்காரம் தான். கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை? கழுதை கெட்டால் குட்டிச் சுவருஇப்படிப் பல பழமொழிகளில் கழுதையைத் தரம் தாழ்த்தியேதான் கூறப்பட்டுள்ளன. இது இன்று நேற்று துவங்கியது அல்ல. 2000 ஆண்டுகளுக்கும் மேலாக இப்படி கழுதை எதிர்ப்பு உணர்வுஇருப்பதை வழக்காறுகள் வாயிலாக அறியலாம்.

ஏன் இப்படியெல்லாம் கூறப்படுகின்றது என்றால் கழுதைகளின் தோற்றமும் இயல்பும் காரணமாக இருக்கும். தோற்றமே அவை புத்தி சுவாதீனமற்றவை போன்று காட்சி தரும். இயல்பிலும் கழுதைகள் சித்த பிரமை பிடித்த மாதிரி ஒரே இடத்தில் நிற்பதையும் திடீரென அவை அங்கும் இங்கும் சத்தமிட்டவாறு கத்திக்கொண்டு ஓடுவதையும் அடிக்கடி அவதானிக்கலாம். கழுதையின் கிறுக்கு பிடித்த சுபாவம் காரணமாக யாரும் அதனை நெருங்க முயல்வதுமில்லை. சிலபோது பற்களால் கடிக்கவும் தலையால் குத்தவும் தனது பின் காலால் வேகமாகவும் உறுதியாகவும் உதைக்கவும் கூடியது. அது எந்த நேரத்தில் எந்த மூடில் (Mood) இருக்கும் என்று சொல்ல முடியாது. நிஜமாகவே கழுதைகள் சுவாரஷ்யமானவைகள்தான்.
நல்லுபதேசத்தை விட்டும் முகம் திருப்புகிறார்களே - இவர்களுக்கு என்ன நேர்ந்தது? இவர்களெல்லாம் சிங்கத்தைக் கண்டு வெருண்டு ஓடும் காட்டுக்கழுதைகளைப் போன்றவர்கள் [74:50]
அஷ்.எம்.என்.ஆலிப் அலி (இஸ்லாஹி) B.A

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...