உஸாமா பின்லேடன் கொலை விவகாரம் உண்மையோ பொய்யோ அது தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. உஸமாவின் சடலம் என அமெரிக்க உளவுத்துறையினரால் வெளியிடப்பட்ட புகைப்படங்கள் போலியானவை என Agence france press தமது சிறப்புக் கணினி மென்பொருள் ஊடாக ஆய்வுசெய்து உறுதிப்படுத்தியுள்ளது.
2009 ஏப்ரல் 29 இல் மத்திய கிழக்கின் ஒரு இணையதளப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஒரு படத்தையும் உஸாமா பின்லேடனின் உண்மையான ஒரு படத்தையும் போட்டோசொப்பில் திள்ளு முள்ளு பண்ணி தற்போது இந்த புகைப்படத்தை வெளியிட்டிருப்பாதாக AFP தலைமை ஆசிரியர் மெலடன் அன்டனோவ் கூறுகிறார்.
ஆத்தோடு இது தொடர்பாக அமெரிக்கா வெளியிட்ட தகவல்களும் ஒன்றுக்கொன்று முரண்பாடாக உள்ளமையும் பல சந்தேகங்களைக் கிளப்பி வருகின்றது.
புpன்லேடனின் உடலை இஸ்லாமிய சடங்கு சம்பிரதாயங்களுடன் ஆழ்கடலில் நல்லடக்கம் செய்ததாக அமெரிக்கா செய்தி அறிவித்துள்ளது. புத்து வருட காலமாகத் தேடுதல் வேட்டைக்குள்ளான பல ஆயிரம் மக்களின் உயிருக்கு வேட்டுவைத்ததாகக் கூறப்படும் உஸாமாவின் உடலை ஒரே ஒரு போட்டோவை எடுத்துவிட்டு அமெரிக்கா அவ்வளவு சீக்கிரமாக எவ்வாறு கடலில் வீச முடியும்? இதுபோன்ற விடயங்கள் பல சந்தேகங்களைக் கிளப்பியிருந்தாலும்.
பின்லாதுன் உண்மையில் உயிருடன் இருந்தால் ஏன் அவர் இணையத்திலோ வேறு வழிமுறைகளுடாகவோ தான் உயிருடன் இருப்பதை வெளிப்படுத்தவில்லை. அத்தோடு அல்கெய்டா உறுப்பினர்களும் உஸாமாவின் மரணத்தை ஏற்றுக்கொள்வதோடு அடுத்த தலைவரையும் நியமித்துவிட்டனர். இத்தகவல்கள் உஸாமா பின்லேடனின் மரணம் உண்மையென ஊகிக்கவும் செய்கின்றது.
ஒருவேளை கொஞ்ச காலத்துக்கு இவ்வதந்தி இப்படியே இருக்கட்டும் என்று அல்கெய்டாவும் உஸாமாவும் தலைமறைவு நாடகத்தை நடாத்தப்போகின்றார்களோ தெரியாது.
இங்கு மற்றும் ஒரு விடயம் கவணிக்கப்பட வேண்டும்.
உஸாமா பின்லாதின் கொலைசெய்யப்பட்டு கண்டுபிடிக்கப்பட்ட இடம் பாகிஸ்தானின் அடோபாத்தில் வைத்தாகும். அடோபாத் பாகிஸ்தானின் இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் ஒன்று. அத்தோடு உஸாமா மறைந்திருந்த வீடும் இராணுவ அகடமியிலிருந்து 800 யார் தூரத்தில் அமைந்திருந்தது. எனவே பாகிஸ்தான் அரசாங்கம் உஸாமாவுக்கு இரகசியமாகப் பாதுகாப்பு வழங்கியுள்ளதாகவும் அமெரிக்கா பாகிஸ்தானைக் குற்றம் சாடியுள்ளது. பாகிஸ்தான் பயங்கரவாதத்தைத் தடுக்க ஒத்துழைப்பதாக அரங்கில் கோசமிட்டுவிட்டு அந்தரங்கத்தில் உஸாமாவுககு புகளிடம் அளித்துள்ளதாக அமெரிக்கா விசனம் தெரிவித்துள்ளது. ஒருவேளை பாகிஸ்தானை தற்போது அமெரிக்கா பயங்கரவாதக் குலிக்குள் தள்ளிவிட்டு ஒரு போரை நடாத்த உத்தேசிக்கின்றதோ???
இவ்வாறு பல்வேறு ஊகங்கள் எழும் நிலையில் இனி என்ன நடக்கப்போகின்றது என்பதை பொறுத்துத்தான் பார்க்கவேண்டும்.
ஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்)
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...