"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

04 June 2011

21ம் நூற்றாண்டில் சைபர் யுத்தம்

நாடுகளுக்கிடையே நடைபெறவிருக்கும்  உலகப்போர்.

ஆலிப் அலி (இஸ்லாஹி)
 
இற்றைக்கு சுமார் 28 வருடங்களுக்கு (1982) முன்பு  Rich Skrenta என்ற ஒன்பதாம் ஆண்டு மாணவன் தனது சக நண்பனுக்கு பகிடியாக ஒரு கணினி செய்நிரல் (Computer Program) ஒன்றை எழுதி அனுப்பினான். அதன் பெயர் “Elk Cloner”. இந்த செய்நிரல் ஒரு Floppy Disk இல் சேமிக்கப்பட்டிருந்தது. இதனை 49 தடவைகள் மாத்திரமே பயன்படுத்த முடியுமான விதத்தில் எழுதப்பட்டிருந்தது. 50 ஆவது தடவை உபயோகிக்கும் போது கணினித் திரை வெற்று நீல நிறத்தில் ஒரு கவிதையைக் காட்சிப்படுத்தியது. இதுதான் அக் கவிதை.
It will get on all your disks. it will infiltrate your chips. Yes it’s Cloner! It will stick to you like glue. It will modify RAM too. Send in the Cloner!
அன்று வெறும் பகிடிக்காக செய்யப்பட்ட அந்தக் கணினி செய்நிரல் அது ஒரு வைரஸ் என்பதை உருவாக்கிய அச்சிறுவன் கூட அறிந்திருக்கவில்லை. ஆனால் இன்று உலகெங்கும் பல்வேறு பரிணாமமெடுத்து பல்கிப் பெருகி கணினி வைரஸாக உருவெடுத்துள்ளது. ஒரு சைபர் யுத்தமாக வளர்ந்துள்ளது.
ஆரம்ப காலங்களில் வாளையும் கேடயத்தையும் அம்பையும் வில்லையும் சுமந்துசென்று மக்கள் நேருக்கு நேர் நின்று யுத்தம் செய்தனர். அதன் பின்னர் துப்பாக்கி தோட்டாக்கள், குண்டுகள் என்பவற்றைப் பயன்படுத்தி தொலைவிலிருந்து யுத்தத்தில் ஈடுபட்டனர். ஆனால் இன்று அப்பாரம்பரிய யுத்தங்களையெல்லாம் மிகைக்கும் விதத்தில் டிஜிடல் யுத்தம் என்று சொல்லக் கூடிய சைபர் யுத்தம் வளர்ந்து வருகின்றது.
டிஜிடல் யுத்தம் (Digital war), இலத்திரனியல் யுத்தம் (Electronic war), சைபர் யுத்தம் (Cyber war) என பல்வேறு பெயர்களில் இந்நவீன யுத்தம் அழைக்கப்படுகின்றது. சில சமயம் இனம் தெரியாதவர்களால் இனம் தெரியாத விதத்தில் இனம் தெரியாத இடங்களிலிருந்து இந்த யுத்தம் தொடுக்கப்படுவதுதான் மிகவும் ஆபத்தான விடயம்.
உலகில் மூலை முடுக்குகளிலெல்லாம் பெருகி வரும் கணினிப் பாவனையும் அதனுடன் சேர்ந்து மக்களது இணையப் பிரவேசமும் தகவல் புரட்சியும் இந்த சைபர் யுத்தத்திற்கான சாத்தியப்பாட்டை உருவாக்கியுள்ளன. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியை சில தனிநபர்களும் குழுக்களும் சில நாடுகளும் தமது இலாபத்திற்கு முறைகேடாகப் பயன்படுத்த முணைவதில்தான் இவ்வாறானதொரு சைபர் யுத்தம் உருவாகியிருக்கின்றது எனலாம்.
இன்று இந்த சைபர் யுத்தம் பல்வேறு பரிமாணங்களில் தொடுக்கப்படுகின்றது. இரகசியமான அல்லது மிக அவசியமான தகவல்களைக் கொள்ளையடித்தல் (Cyber Robbing), இணைய தளங்களைத் தாக்கி முடக்கிவிடுதல், கணினிகளையும் அதன் பயணர்களையும் உளவு பார்த்தல், கப்பம், இலஞ்சம் வாங்குதல், வங்கிகளை ஊடுருவி பணங் கொள்ளையடித்தல், ஆபாசப் படங்கள், புகைப்படங்கள் என்பவற்றை வியாபாரம் செய்தல், பாதுகாப்பு இலக்கங்கள் Security Numbers), கடனட்டை இலக்கங்கள் (Credit Card Numbers) , தனிப் பாவனையாளர் இலக்கங்கள் (Personal Identification Numbers – PIN)> மின்னஞ்சல் முகவரிப் பட்டியல், தனியார் நிறுவனங்களின் வர்த்தக இரகசியங்கள் என பல்வேறு தரவுகளையும் தகவல்களையும் திருடுவதும் அவற்றை வைத்து கப்பம் வாங்குவதும் அவற்றை மூன்றாம் நபருக்கு விற்பனை செய்வதுமாக இன்று இந்த சைபர் குற்றங்களும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.
சைபர் யுத்தம் என்னாறல் என்ன?
அமெரிக்க அரசாங்க ஆலோசகர் ரிச்சர்ட் க்ளார்க் கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் “Cyber War” (சைபர் யுத்தம்) என்ற தலைப்பில் ஒரு நூலை வெளியிட்டார். அதில் அவர் சைபர் யுத்தத்தைப் பின்வருமாறு வரைவிலக்கணப்படுத்தியிருந்தார். சைபர் யுத்தம் என்பது ஒரு குழுமம் மற்றுமொரு குழுமத்தின் கணினியில் ஊடுருவி அதில் அழிவுதரும் காரியங்களை மேற்கொள்வதாகும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
அவர் இதன் பாரதூரம் குறித்து மேலும் குறிப்பிடுகையில்இந்த சைபர் யுத்தத்தை நடாத்துவதற்கான சாத்தியங்கள் அதிகமாக உள்ளன. இந்த இலத்திரனியல் இணைப்புகளினூடாக மின் நிலையங்களைத் தாக்கவும் இலத்திரனியல் புகையிரதங்களை அவற்றின் தண்டவாளங்களை விட்டுத் தடம் புரலச் செய்யவும் ஒன்றோடு ஒன்று மோதச் செய்யவும் வாயுக் குலாய்களையும் (Gas Tunnels) பெட்ரோல் குலாய்களையும் வெடிக்கச் செய்யவும் பாதை சிமிக்ஞைகளை மாற்றி வீதி விபத்துக்கள் ஏற்படுத்தவும் விமானங்களைச் செயலிலக்கச் செய்யவும் முடியும்என்றார்.
யுத்தத்தை நடாத்துபவர்கள்
கணினிகளை ஊடுருவித் தாக்குதல் நடாத்தும் மேற்படி ஆயுதங்களை அல்லது வைரஸ்களை வடிவமைப்பவர்களைப் பொதுவாகஹெகர்ஸ் (Hackers) துருவிகள்என அழைத்தாலும் அவர்களை இரண்டுவகையினாரப் பிரிக்க முடியும். அனுமதியின்றி சட்டவிரோதமாகக் கணினிகளை ஊடுருவி நாசகார வேலைகளைச் செய்வோர் கருப்புத் தொப்பிகள் (Black Hats) என அடையாளப்படுத்தப்படுகின்றனர். Crackers என்றும் இவர்கள் குறிப்பாக அழைக்கப்படுகின்றனர். கணினித் தொகுதிகளினுள் அனுமதியுடன் உட்பிரவேசித்து அவற்றிலுள்ள ஓட்டை உடைசல்களை, பிழைகளை இனங்கண்டு அவற்றின் பாதுகாப்பற்ற தன்மைகளை நீக்கி சரிசெய்பவர்கள் வெள்ளைத் தொப்பிகள் (white Hats) என்றும் அழைக்கப்படுகின்றனர். அவர்கள் சட்டபூர்வமான முறையில் அதில் ஈடுபடுவதனால்  இவர்களை Ethical Hackers என்றும் அழைக்கப்படுகின்றனர்,
சைபர் ஆயுதங்கள் - Cyber warfares
இணையமூடாக நடாத்தப்படும் இந்த சைபர் தாக்குதல்களுக்கு பொதுவாகப் பயன்படுத்தப்படுவது கணினி வைரஸ்களாகும். கணினி வைரஸ் என்பது பிரிதொரு கணினியைத் தாக்கி நாசம் செய்யும் விதத்தில் எழுதப்படும் கிணினிச் செய்நிரல் (Computer Program) ஆகும். இவை இணைய மூடாகவும் மின்னஞ்சலூடாகவும் மற்றும் இறுவட்டுக்கள் Floppy Disk மற்றும் Pen drive போன்ற வற்றினூடாகவும் ஒரு கணினியிலிருந்து மற்றொரு கணினிக்கு கடத்தப்படுகின்றன. சைபர் யுத்தத்திற்குப் பயன்படுத்தும் ஆயுதங்களாக இந்தக் கணினி பிறழ் மென்பொருட்களே (Malicious Softwares) காணப்படுகின்றன.
சைபர் தாக்குதல்கள்
இதுவரை உலகெங்கிலும் இணையமூடாகப் பல்வேறு சைபர் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுள்ளன. கடந்தவருடம் அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் இஸ்தாபகத் தலைவர் ஜுலியன் அஸான்ஜே இனால் அமெரிக்கா மீது தொடுக்கப்பட்ட சைபர் தாக்குதல் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இணையமூடாக அமெரிக்காவின் சுமார் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான இரகசிய இராஜாங்க செய்தித் தகவல்கள் அடங்கிய கேபில்களைத் திருடி அவற்றை விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டு பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியமை யாவரும் அறிந்த விடயம்.
அதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் பெண்டகன் வட்டாரம் விக்கிலீக்ஸ் இணையதளத்தை முடக்குவதற்கான பல்வேறு நடவடிக்கைகைள சைபர் தாக்குதலூடாக முன்னெடுத்தது. அதனையும் மீறி  விக்கிலீக்ஸ் இணையதளம் மீண்டும் மீண்டும் இயங்கியமை குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமன்றி விக்கிலீக்ஸ் இணையதளத்தின் சேவைகளை அமெரிக்கா முடக்க முயற்சிசெய்ததால் அதற்குப் பதிலடியாக விக்கிலீக்ஸின் பணியாளர்கள் உலகின் கிரடிட் கார்ட் நிறுவனங்களான மாஸ்டர் கார்ட், விசாக் கார்ட் நிருவனங்களின் இணைய தளங்களை இணையமூடாகவே தாக்கியுள்ளனர்.
கடந்த வருடம் (2010) செப்டம்பர் மாதத்தில் ஈரானின்  பஷீர்எனும் அணுமின் உற்பத்தி நிலையத்தை முதற்தடவையாக ஆரம்பித்து வைக்கும் தருவாயில் அதனை இயங்கவிடாது இணைய வழித்தாக்குதல் நடாத்தப்பட்டது. இனம் தெரியாத சிலரால் இணையமூடாக அனுப்பப்பட்ட W32.Stuxnet என்ற வைரஸே இந்நிலையத்தின் பணிகளை இஸ்தம்பிதமடையச் செய்ததாக அறியப்படுகின்றது. இந்தவை வைரஸ் கணினியைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதோடு குறித்த கணினியை உளவு பார்க்கவும் செய்கின்றது. இது ஈராணுக்கு எதிரான ஒரு இலத்திரணியல் யுத்தத்தின் ஆரம்பமென ஈரானின் தொலைத் தொடர்பாடல் சங்கத்தின் முக்கியஸ்தர் மஹ்மூத் லியாலி BBC இற்கு செய்தி அறிவித்துள்ளார்.
இவ்வகையிலான வைரஸ்களை உருவாக்குவது இஸ்ரேலின் வேளை என பிரித்தானியாவின் Telegraph செய்திப் பத்திரிகை அறிவித்தபோதிலும் ஈரான் அது அமெரிக்காவின் வேலை என்றே கூறிவருகின்றது.
அதுமாத்திரமன்றி CIA, NSA போன்ற அமெரிக்க செய்தி மற்றும் உளவு நிறுவனங்கள் பண்னாட்டு வியாபார நிலையங்களின் முக்கியத் தகவல்களை இரகசியமாகத் திருடிவருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. துருவிகளின் செயற்பாடுகள் கூடுதலாக இருப்பது அமெரிக்காவிலாகும். இது மொத்த அளவில் 31% ஆகக் கணிக்கப்பட்டுள்ளது.
2009 இல் உலக நாடுகள் 103 உளவு பார்ப்பதற்காக சீனாவினால் இணையமூடாக Gost net என்ற கணினி வைரஸ் தொடுக்கப்பட்டது.
2009 இல் சீனாவினால் Google உட்பட இன்னும் 20 அமெரிக்க நிறுவனங்களுக்கு எதிராக Operation Aurora என்ற சைபர் தாக்குதல் தொடுக்கப்பட்டது.
இந்தியா, ஜேர்மன், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு எதிராக சீனா இணையமூடாக சைபர் ஆயுதங்களைப் பயன்படுத்துவதாக மெகாபீ (MacAfee) நிறுவனம் 2007 இல் அறிவித்தது.
2007 இல் ஏப்ரல் மாதத்தில் ரஷ்ய அரசின் மூலம் எஸ்டோனியாவின் பிரதான வங்கி, அமைச்சுக்கள் மற்றும் வெகுசன ஊடகங்களை நோக்கி சைபர் தாக்குதல் ஒன்று தொடுக்கப்பட்டுள்ளது.
2007 இல் இஸ்ரேல் சிரியா மீது Operation Orchard என்ற தாக்குதலை நடாத்தி சிரியாவின் விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு மையத்தினுள் நுழைந்தது. விமானக் கட்டுப்பாட்டுக் கணினிக்கு கணினி வைரஸ் ஒன்றை அனுப்பி அதன் ரேடார்களைச் செயலிழக்கச் செய்தபின்பே இரானுவம் உள்ளே இலகுவாக நுழைந்தது. இவ்விமானக் கட்டுப்பாட்டு மையத்தின் கட்டுப்பாட்டை தம்வசம் எடுப்பதற்காகச் செய்யப்பட்ட கணினி செய்நிரல்தான் Suter எனப்படுகின்றது. அமெரிக்காவின் வலைப்பின்னல் வழியாக 2006 ஆம் ஆண்டு இறுதி ஆறு மாதங்களில் சுமார் 4943 போலி வங்கிக் கடணட்டைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக Symantec கணினித் தொகுதிப் பாதுகாப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
2006 இல் லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்திற்கு எதிரான விதத்தில் செயற்பட இஸ்ரேலினால் விசேடமான சைபர் யுத்தமுறை விஸ்தரிக்கப்பட்டது.

அதேபோன்று அமெரிக்கா, பிரிட்டன், அயர்லாந்து போன்ற நாடுகளில் செயற்படும் T.K.Max எனும் நிறுவனத்தின் 45.6 மில்லியன் நுகர்வோரின் கடனட்டை இலக்கங்களை 2005, 2006 பகுதிகளில் துருவிகள் திருடியுள்ளனர். அதேபோன்று Card System Solution  நிறுவனத்தின் 40 மில்லியன் கடணட்டை இலக்கங்கள் 2005 இல் திருடப்பட்டுள்ளன. மேலும் 2001 – 2002 காலப்பகுதிகளில் அமெரிக்காவின் 97 இராணுவத் தகவல் மையங்களையும் NASA வின் கிணினித் தொகுதிகளையும் பிரித்தானியாவைச் சேர்ந்த  Gary McKinnon என்ற துருவி ஊடுருவித் தாக்கியுள்ளார். அதன் காரணமாக அவர் 2002 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
1991 இல் அமெரிக்காவின் விமானப்படையூடாக AF/91 என்ற பெயரில் ஒரு கணினி வைரஸ் தயாரிக்பட்டடது. இது ஈராக்கின் விமானங்களின் ஆயுதங்களை செயலிழக்கச்செய்வதற்காக செய்யப்பட்டது. இந்த வைரஸ் பிரின்டர் ஒன்றில் பதிக்கப்பட்ட சிறியதொரு சிப்பில் இன்ஸ்ரோல் செய்யப்பட்டு அனுப்பப்பட்டது.
ஆரம்பமாக 1982 ஆம் ஆண்டு சோவியத்தின் உளவாளி ஒருவரினூடாக கெனேடிய நிறுவனமொன்றின் விசேடமாகத் தயாரிக்கப்பட்ட கணினி செய்நிரல் ஒன்று திருடப்பட்டது. இது எண்னெய்ப் பம்பிகளினூடாக பம்பப்படும்எண்ணெய்யின் வேகத்தை அதிகரித்து எண்ணெய்க் குழாய்களை வெடிக்க வைப்பதற்கான ஒரு செய்நிரலாகும். இது அமெரிக்காவின் CIA இனால் தயாரிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறு சைபர் யுத்தத்தின் ஆரம்ப வரலாறு பின்னோக்கிச் செல்கின்றது.
பயனர்களை உளவு பார்த்தல்.
கணினி வைரஸ்கள் கணினியை ஊடுருவித்தாக்குதல் நடாத்துவது மாத்திரமன்மறி கணினிப் பாவனையாளர்கள் ஆற்றும் பணிகளை உளவு பார்க்கவும் செய்கின்றன. இவ்வகை உளவு பார்க்கும் வைரஸ்கள் Spyware, Junk ware, Thief ware போன்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றன. பயனர்களின் இணையப் பாவனையையும் அவர்களது மின்னஞ்சல்களையும் உளவு பார்ப்பதற்கென்றுள்ள மற்றுமொரு வகை வைரஸ்கள்தாம் Web Beacon மற்றும் Web Cookies என்பனவாகும்
இவ்வகையான உளவு பார்க்கும் வைரஸ்கள் ஏன் பயன்படுத்தப்படுகின்றன என்றால் ஒருவர் இணையத்தில் எவ்வகையான தளங்களைப் பார்வையிடுகின்றனர் என்ற தகவலை அறிந்து அவரது இரசனைக்கேட்ப விளம்பரங்களை வழங்கி அதனூடாக இந்த வைரஸ் உற்பத்தியாளர்கள் குறித்த விளம்பர நிறுவனங்களிடம் இலட்சக்கணக்கில் பணம் பெறுவதற்காகும்.
இவ்வேளை இத்தோடு நின்றுவிடாமல் எமது தகவல்கள் மற்றும் தரவுகள் மூன்றாம் நபருக்கு விற்பனை செய்யப்பட்டு தனிமனித சுதந்திரத்திற்கு பங்கம் விளைவிக்கும் செயல்களும் நடக்கின்றன. Google, Yahoo, msn போன்ற இணைய உளவி (Search engines) கள்கூட இதுபோன்ற உளவுபார்க்கும் வைரஸ்களை எமது கணினிகளில் இரகசியமாகவே நிறுவி விடுகின்றன.
இதுபற்றி Google இன் Global Privacy Counsel இன் அதிகாரி Peter Fleischer பின்வருமாறு அறிவித்துள்ளார். “எந்த மூன்றாம் தரப்பினருக்கும் எம்மால் கேசரிக்கப்படும் பயனர்கள் தொடர்பான தரவுகளைப் பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம். எச்சந்தர்ப்பத்திலும் எமது பயனர்களின் கணக்கு விபரங்கள், IP முகவரிகள் என்பவற்றை மூன்றாம் நபருக்கோ விளம்பரதாரருக்கோ வழங்க மாட்டோம்என உறுதி தெரிவித்துள்ளார். இணைய நிறுவனங்களின் இதுபோன்ற இணைய உளவு பார்க்கும் செயற்பாட்டினால் தனிமனித சுதந்திரம் பாதிக்கப்படுவதனால் சில நாடுகள் இது தொடர்பில் சட்டங்களையும் உருவாக்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சைபர் யுத்தத்தில் களமிறங்கியுள்ள நாடுகள்
இதுவரை சுமார் 400 இற்கும் மேற்பட்ட நாடுகள் இந்த சைபர் யுத்தத்தில் களமிறங்கி தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவும் போர் தொடுப்பதற்காகவும் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றன. பிரித்தானியா, அமெரிக்கா, இஸ்ரேல், சீனா, ஈரான், ரஷ்யா, வடகொரியா என்பன சைபர் யுத்தத்தில் களமிறங்கியுள்ள சில முக்கிய நாடுகளாகும்.
அமெரிக்காவைச் சேர்ந்த ரிச்சட் க்ளார்க் மற்றும் ஜோன் ஹார்பர் என்போரது கணிப்பீட்டின்படி குறைந்தபட்சம் 20 – 30 நாடுகள் ரஷ்யா, சீனா, பிரித்தானியா, இஸ்ரேல், ஈரான் என்பன இராணுவ நோக்கில் இதனை ஆரம்பித்துள்ளதாகக் கூறுகின்றார்கள்.
அல்மானியாவைச் சேர்ந்த தொழில்நுட்பவியலாளர் செண்டோ ஜய்கின் சுமார் 400 நாடுகள் இலத்திரனியல் யுத்தத்தை ஆரம்பித்துள்ளதாகவும் இதற்காகப் படைகளும் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்கா சுமார் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரையான படையினரை இதற்காகப் பயிற்றுவித்துள்ளதாகவும் சீனா 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் பேரை இதற்காகப் பயன்படுத்துவதாகவும் அறிவித்தார்.
அமெரிக்க அரசின் சைபர் யுத்த நிபுணர்களில் ஒருவரான ஜேம்ஸ் கொஸ்லர் கூறுகையில்அவரது மதிப்பீட்டின்படி உலகிலேயே முதலாவது பெரிய சைபர் யுத்தப்படை இருப்பது சீதாகவும் கூறுகின்றார்.
சைபர் யுத்தத் தற்காப்புப் படைகள்
நவீன உலகம் எதிர்நோக்கியிருக்கும் சைபர் யுத்தத்திலிருந்து தமது நாட்டையும் பாதுகாத்துக்கொள்வதற்காக அல்லது பாதுகாப்பதற்காக என்ற பெயரில் பிற நாடுகளை அச்சுரத்துவதற்காக இன்று நாடுகள் போட்டியிட்டுக்கொண்டு சைபர் யுத்தப் படைகளையும் தற்காப்புப் படைகளையும் உருவாக்கிவருகின்றன.
இணைய மூலமான சைபர் தாக்குதல்களைத் தடுப்பதற்காக ஒரு விசேட படை நிறுவப்பட்டவுள்ளதாக 2009 மே மாதம் அமெரிக்கா செய்தி அறிவித்தது. அதன்படி மேரிலண்டில் சுமார் 100 மில்லியன் டொலர் செலவுடன் NCCIC – “National Cyber Security and Communications Integration Centre” என்ற மத்தியஸ்தம் நிறுவப்பட்டது.
இதனை நிறுவியதன் பின் அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா தமது நாடு சைபர் யுத்தத்திற்கும் தயாராக உள்ளதாகக் கூறியுள்ளார். அதுமட்டுமன்றி இதற்கு வலுசேர்க்கும் முகமாக அமெரிக்க பாதுகாப்புத் தினைக்களச் செயலாளர் வில்லியம் லயின்தரை, வான், கடல் போன்றே சைபர் யுத்தத்திற்கான தயார்படுத்தல்களும் அத்தியவசியம்என்று கூறியுள்ளார். மீண்டும் 2010ஆம் ஆண்டு பெண்டகனினால் United State Cyber Command என்ற ஒரு படை புதிதாக நிறுவப்பட்டது.
அதேபோன்று ஈரானின் பஷீர் அனுமின் நிலையத்தின் மீது கடந்த 2009 ஆம் ஆண்டில் சைபர் யுத்தம் தொடுக்கப்பட்டதன் பின்பு ஈரானும் சைபர் யுத்தத்திற்கான படைகளையும் பாதுகாப்புப் படைகளையும் உருவாக்கியிருக்கின்றது. இணையத்தில் நடக்கும் குற்றச் செயல்களைக் கண்கானிப்பதற்காக சீனா மெய்நிகர் இணையப் பொலிஸ்களையும் பயன்படுத்திவருகின்றது.
அதேசமயம் இந்த சைபர் யுத்த நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்துவதற்காக உக்ரேனின் சர்வதேச நீதி தொடர்பான பேராசிரியர் அலெக்ஸெண்டர் மொரெஸ்கோசைபர் யுத்தத்தைத் தடுப்பதற்கான சர்வதேச சங்கம் - (International Convention on Prohibition of Cyber war in Internet) ஒன்றை இஸ்தாபித்துள்ளார்.
2011 பெப்ரவரி 22 இல் Strategics Dominations of Cyber Warfare என்ற தலைப்பில் கொழும்பில் நடந்த சைபர் Warfare தொடர்பான செயலமர்வில் இராணுவப் படை உபதலைவர் ஜெனரல் ஜகத் ஜயஸுரிய பின்வருமாறு கூறினார். “30 வருடங்களாகத் தொடர்ந்த உடல் ரீதியான யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால் சைபர் யுத்தம் இன்னும் முடிவுறாது தொடர்ந்தவண்ணமே இருக்கின்றது. சைபர் யுத்தம் என்பது இவ்வுலகிற்குப் பெரும் அச்சுருத்தலாகும். சைபர் யுத்தத்திற்கு இனித்தயாராக வேண்டீயுள்ளதுஎன்றார்
முடிவுரை
எதிர்வரும் காலங்களில் பேராபத்துக்களை இந்த சைபர் யுத்தம் ஏற்படுத்தவிருக்கின்றது என்பதில் ஐயமில்லை. தனிமனித சுதந்திரத்திற்குப் பங்கம் ஏற்பட்டுவிடும் என்பது மட்டுமல்ல இணையத்தைப் பயன்படுத்தும் தனிமனிதர்களுக்கு உயிராபத்துகளும் கணினியூடாக ஏற்படவிருக்கின்றது. இன்றைய உலகின் அறிவியல் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய காரணியாக இருக்கும் தகவல் பொக்கிஷங்களடங்கிய இணையம் சிலவேளை நாசகாரத் துருவிகளால் சின்னாபின்னப்படுத்தப்படவும் வாய்பபுள்ளது.
அத்தோடு இந்தப் புதுவகை யுத்தம் இஸ்லாத்தின்பால் திருப்பிவிடப்படாது என்று அச்சமற்றிருக்க எந்த நியாயமுமில்லை. வளர்ந்து வரும் இஸ்லாமியத் தகவல் களஞ்சியங்களையும் முஸ்லிம்களின் பன்னாட்டு நிதி நிறுவனங்களையும் துருவிகள் அழிவுக்குள்ளாக்கலாம். அதேபோன்று இரகசியத் தகவல்களைக் கொள்ளையிடலாம். பொய் வதந்திகளைப் பரப்பலாம். இஸ்லாத்திற்கு எதிராக ஆயிரக் கணக்கான இணைய தளங்கள் இயங்கி வருகின்ற நிலையில் சிலசமயம் இஸ்லாமிய விழுமியங்களை எடுத்துரைக்கும் ஒரு சில இஸ்லாமிய இணைய தளங்களையும் இத்துருவிகள் துவம்சம் செய்ய முடியும்.
எனவே இவற்றைத் தடுக்கவும் எம்மைத் தற்காத்துக்கொள்ளவும் ஏழவே நாம் பார்த்தது போன்று முஸ்லிம்களில் வெள்ளைத் தொப்பிகளை (White hats) உருவாக்கவேண்டிய தேவை எழுந்துள்ளது. இந்த யுத்தத்தில் நடுநிலையாக நின்று முகம்கொடுக்க இணையத் தொழில்நுட்ப வல்லுணர்கள் முஸ்லிம்களில் உருவாகவேண்டும். இறையச்சத்துடன் இந்த யுத்தத்தில் பங்காற்றும் முஸ்லிம் Ethical Hackers உருவாக்கப்பட வேண்டும்.
உண்மையில் இன்றளவில் இலத்திரணியல் வழி மூலமான பிரச்சாரமே தற்காலம் வேண்டிநிற்கும் ஜிஹாதாகும்” என்று கலாநிதி யூஸுப் அல் கர்ழாவி கூறியுள்ளமை இங்கு அழ்ந்து நோக்கத்தக்கது.
ஆல்லாஹ் கூறுகின்றான். “அவர்களை எதிர்ப்பதற்காகக உங்களால் இயன்றளவு பலத்தையும் திறமையான போர்க்குதிரைகளையும் தயார்படுத்திக்கொள்ளுங்கள். இதனால் நீங்கள் அல்லாஹ்வின் எதிரியையும் உங்களது எதிரியையும் அவர்களல்லாத வேறு சிலரையும் அச்சமடையச் செய்யலாம். (அச்சிலரை யாரென்று) நீங்கள் அறியமாட்டீர்கள். அல்லாஹ் அவர்களை அறிகிறான்.”(8:60)
எனவே இன்றளவில் முஸ்லிம்களாகிய நாம் எம்மை இலத்திரனியலூடான ஜிஹாதிற்கும் தயார் படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கான ஆயுதங்களைத் தயார்படுத்திக் கொள்ளவேண்டும். இங்கு அல்லாஹ் “இயன்றளவு பலத்தையும் திறமையான போர்க்குதிரைகளையும் தயார்படுத்திக்கொள்ளுங்கள்.” என்று கூறியுள்ளதை இன்றைய நவீன இலத்திரனியல் சைபர் யுத்தத்துடன் ஒப்பிட்டுப்பார்த்தால் சைபர் யுத்தத்திற்கான ஆயுதங்களைத் (Cyber Warfare) தயார்படுத்திவைப்பதாகவே கருத்துக்கொள் முடியும். எனவே சைபர் யுத்தத்திற்கான வளங்களையும் வளவாளர்களையும் உருவாக்குது ஒரு சமூகக் கடமை (பர்ளு கிபாயா) ஆகும். அதன்பாலும் எமது கவனங்களைக் குவிப்போம். இஸ்லாத்திற்கு மாத்திரமன்றி உலகிற்கொதிராக மேற்கொள்ளப்படவிருக்கும் சைபர் யுத்தத்திற்கு எதிராக களமிறங்கத் தயாராகுவோம்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
குறிப்பு : “எங்கள் தேசம் பத்திரிகையில் பிரசுரமான ஆக்கம்”

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...