"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

04 February 2019

அமேசன் மழைக்காடு

அமேசன்.
அமேசன் அல்லது அமேசான் என்று தமிழிலும் Amazon அல்லது Amazonia என்று ஆங்கிளத்திலும் இக்காடு அழைக்கப்படுகின்றது. தென் அமெரிக்காவின் அண்டிஸ் மழைத்தொடரின் கிழக்கில் இருந்து அமேசன் ஆறுகளை ஒட்டி இக்காடுகள் அமைந்திருப்பதாலே இக்காடுகளுக்கும் அமேசன் என்று பெயர் வந்தது. உலகின் மிகப் பெரிய மழைக்காடாக இது திகழ்கிறது. இதன் பரப்பளவு ஏழு மில்லியன் சதுர கிலோமீட்டர்களாகும். இதில் காடு மட்டும் 5.5 மில்லியன் சதுர கிலோ மீட்டரைக்கொண்டுள்ளது. மேலும் இக்காடு பிரேசில், பொலிவியா, பெரு, ஈக்வாடோர், கொலம்பியா, வெனிசுலா, கயானா, சுரியநாம், பிரென்ச் ஆகிய ஒன்பது நாடுகளில் பரவியுள்ளது. இக்காட்டின் ஏறத்தாழ 60 வீதமான பகுதி (4,776,980 ச.கி.மீ.) பிரேசில் நாட்டின் எல்லைக்குள் அடங்குகின்றது. எனவே ரஷ்யாவிற்கு அடுத்து இரண்டாவது பெரிய காட்டு வளத்தைக்கொண்ட நாடாக பிரேசில் உள்ளது.  எனவே பிரேஸில் தனது நாட்டு மாநிலமொன்றுக்கு அமேசானாஸ் என்று பெயரிட்டுள்ளது.

மழைக்காடு.
மழைக்காடு அல்லது பொழில் (Rainforest) என்பது அதிக மழை வளத்தால் செழித்திருக்கும் காடுகளாகும். பொழிதல் என்றால் மழை பெய்தல் என்று பொருள். இச்சொல் இன்றைய அறிவியலில் மழைக்காடு என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஆண்டுக்கு மழை பொழியும் அளவானது 1750 மில்லி மீட்டருக்கும், 2000 மி.மீ. இற்கும் இடையில் உள்ள காடுகளையே இன்றைய அறிவியல் மழைக்காடுகள் என்னும் வரைவிலக்கணத்துக்குள் அடக்குகின்றது. அந்த வகையில் அமேசன் பெருந்தன்மையுடன் அவ்விடத்தைப் பிடித்துள்ளது. எனவேதான் இதனை அமேசன் மழைக்காடு என்கிறோம்.

அமேசன் மழைக்காட்டின் அமைப்பு.
அமேசன் காடு உயரத்தில் இருந்து நிலம் வரை ஐந்து தளங்களால் ஆன அமைப்பைக் கொண்டுள்ளது. மிகவும் உயரத்தில் உள்ள மேல்தளம் உயரமான மரங்களின் மேற்பகுதிகளால் ஆனது. அதற்குச் சற்றுக் கீழுள்ள தளம் நடுத்தர உயரம் கொண்ட சிறு மரங்களால் ஆனது. அதற்கு அடுத்த தளம் உயரம் குறைவான குறு மரங்களினால் அமையப் பெற்றது. மேலிருந்து நான்காவது நிலையில் உள்ள தளம் செடிவகைகளைக் கொண்டிருக்கும்.

ஐந்தாவதான நிலத்தளம் புல், பூண்டுகளினால் ஆனது. நான்காவது, ஐந்தாவது தளங்கள் முறையே செடித்தளம், பூண்டுத்தளம் எனவும் குறிப்பிடப்படுவதுண்டு. சில வேளைகளில் நில மட்டத்தில் பாசிகளைக் கொண்ட ஒரு தளமும் இருப்பதுண்டு. அத்தோடு நில அமைப்பைப் பொருத்தவரை குன்றுகளும் மேட்டு நிலங்களும் மலைகளும் அருவிகளும், குளங்களும், நீர் ஓடைகளும், பேராறுகளும் சிற்றாறுகளும் சேற்று நிலங்களும் மணல் திட்டுக்களுமாக அமைந்திருக்கும். கடும் பச்சையாகவும் குளிர்ச்சியான சுழலையும் பறவைகளில் சங்கீத ராகத்தோடு அருவிகளினதும் ஓடைகளினதும் சப்தமும் கலக்கும்போது அந்த இடமே ரம்யமானதாக இருக்கும். அதுதான் அமேசன்.

அமேசன் காட்டின் சிறப்புப் பண்புகள்.
உலகின் மிகப் பெரிய மழைக்காடாக அமேசன் திகழ்வதுதான் முதல் சிறப்பு. அதேபோன்று உலகின் மிகப் பாரிய உயிர்ப் பல்வகைமை நிலவும் பகுதியாகவும் உலகின் மிகப்பெரிய உயிரியல் ஆய்வுப் பிரதேசமாகவும் உலகின் மிகப் பெரிய இயற்கை மருந்துச் சாலையாகவும் அமேசன் விளங்குகிறது. பலவகையான மூலிகைத் தாவரங்கள் இருப்பதால் இன்றும் மருத்துவ ஆய்வுகள் அங்கு நடைபெற்று வருகின்றன.

உலகில் வாழும் உயிரின வகைகளுள் பத்தில் ஒரு பங்கு அமேசன் மழைக்காடுகளில் வாழ்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதுவே உலகின் மிகப்பெரிய உயிரினத் தொகுப்பாகும். இப்பகுதி 25 லட்சம் வகையான பூச்சியினங்களுக்கும் 16,000 இற்கும் அதிகமான தாவரவகைகளுக்கும், ஏறத்தாழ 2000 பறவை, 500 வகையான பாலூட்டி இனங்களுக்கும் 3,000 இற்கும் அதிகமான மீன் வகைகளுக்கும் 175 வகையான பல்லி வகைகளுக்கும் மற்றும் 300 இற்கும்மேற்பட்ட ஊர்வன இனங்களுக்கும்  தாயகமாக விளங்குகிறது.

உலகில் உள்ள அனைத்துப் பறவைகளில் ஐந்தில் ஒன்று இம்மழைக்காடுகளில் வசிக்கின்றன. இதுவல்லாமல் எண்ணற்ற செடி கொடிகளையும், பிரம்மாண்டமான மரங்களையும் மூலிகைகளையும் தன்னகத்தே கொண்டுள்ள அதிசய உலகம் அமேசான் மழைக்காடுகள். உலகின் ஆற்று நீரின் பதினாறு விகிதம் அமேசன் கழிமுகத்தின் வழியாக பாய்கிறது. ஒவ்வொருநிமிடத்துக்கும் 28 பில்லியன் கேலன் நீர் அட்லாண்டிக் சமுத்திரத்துக்குள் பாய்கிறது. கடல் கடந்து 100 மைல்களுக்கும் அப்பால் கடலின் உப்புத்தன்மைச் செறிவை குறைக்கின்றது. உலகில் வெளியிடப்படும் கார்பன்டை ஒக்சைடு கரியமிள வாயுவை பெருமளவில் உட்கொண்டு நூறு விகித ஆக்சிஜனை எமக்குத் தருகிறது.

அமேசன் நதி.
அமேசன் காடுகளை உருவாக்கிய பெருமை அமேசன் நதிக்கே போய்ச் சேரும். அமேசன் காடுகளின் ஜீவாதாரமாய் விளங்கும் அமேசன் நதி உலகின் மிகப் பெரிய நதியாகும். அமேசன் நதி மேற்கில் இருந்து கிழக்கு திசையில் பாய்கிறது. இதற்கு 17 பெரிய ஆறுகளும், ஆயிரத்துக்கு மேற்பட்ட சிறிய கிளை ஆறுகளும் உள்ளன. 17 பெரிய ஆறுகளும்கூட 1000 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்டவை.

பிரதான ஆறு 4,080 மைல் நீண்டு உள்ளது. அதன் வடிகால் 27,22,000 சதுர மைல்களை உள்ளடக்குகிறது.  இதுவே உலகின் மிகப் பெரிய வடிகாலாகும். உலகிலேயே பரப்பளவில் பெரிய ஆற்றுப் படுக்கையும் இதுதான்.  இந்த ஆற்றிலிருந்து கடலில் கொட்டப்படும் நீரின் அளவு ஏறத்தாழ ஒரு விநாடிக்கு 209,000 கன மீட்டர்களாகும். எனவே, அமேசன் ஆற்றை மிகப்பெரிய வல்லரசு ஆறுஎன்று கூட வர்ணிக்கலாம்.

மர்மமான உயிரினங்கள்.
அமேசன் காட்டுக்கே உரித்தான பாம்புதான் அனகொண்டா. ஆபத்தான பாம்பு. மிகப் பெரிய இப் பாம்புகள் ஆற்றுப் பகுதிகளில் அதிகம் வசிக்கின்றன. மூக்கு பகுதி மட்டும் நீர் மட்டத்துக்கு வெளியே வைத்துக்கொண்டு நீருக்காக வரும் மான், எருதுகளை வேட்டையாடி விழுங்கி விடுகின்றன. மனிதர்களை விழுங்கிய சந்தர்ப்பங்களும் உண்டு. அனகொண்டா திரைப்படம் கூட அமேசன் காட்டையும் இப் பாம்பையும் கருவாகக் கொண்டு எடுக்கப்பட்டது. அதேபோன்று அமேசன் ஆற்றில் பிரானா என்ற மீன் வகை காணப்படுகிறது. இவை கூட்டமாக வாழும். அதிலும் சிவப்பு வயிற்றுப் பிரானாக்கள் நீர் பருக வரும் மாடு, மான் போன்ற உயிரினங்களை கடித்து, கூட்டமாகத் தின்றுவிடும். மனிதர்களும் தாக்கப்பட்டுள்ளார்கள். அதேபோன்று நீர் நிலைகளில் இருக்கும் இலக்ட்ரிக் மின்சார விலாங்கு மீன்களும் ஆபத்தானவை. அமேசன் ஆற்றில் டொல்பின் மீன்களும் வாழ்கின்றன. இவையே ஆற்று டொல்பின்களில் பெரியவை.

ஆபத்தான அமேசன்.
அமேசன் காடு அழகானது போன்றே இன்னொருவகையில் ஆபத்தானதும்தான். காட்டுக்குள் சென்று வழி தவறிவிட்டால் மீண்டு வருவது கடினம். இதற்கு காரணம்அங்கு வாழும் விலங்குகளும், இயற்கை அமைப்புகளும், தண்ணீரின் ஓட்டமும், இருட்டான சூழ்நிலையும்தான். அப்படி வழிதவறி இறந்துபோன சுற்றுலாப் பயணிகளும் இருக்கின்றனர். கேய்மன்”  என்ற ராட்சத கருப்பு முதலைகள், பாம்புகள், ஆபத்தான சிறுத்தை வகைகள், விஷ தாவரங்கள், விஷமீன்கள், விஷ  வவ்வால்கள்மற்றும் டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சலை பரப்பும் விஷ கொசுக்கள் இப்படிப்பட்ட பல ஆபத்துக்களும் இங்கு உள்ளன.

பழங்குடி மக்கள்.
அமேசன், ஆப்ரிக்கா மற்றும் பெரு நாட்டு பழங்குடி மக்கள் குறித்து ஆராய்ச்சி செய்யும் அமைப்பு ஒன்று கடந்த ஒரு வருடகாலமாக நடத்திய தீவிர முயற்சிக்கு பின் ஒரு பழங்குடியினரை அமேசன் காட்டுக்குள் கண்டுபிடித்துள்ளனர். வெளி உலகத்துடன் எந்தத் தொடர்பும் இல்லாத இவர்கள் காலாகாலமாக அங்கு வாழ்ந்து வருவதாக கண்டுபிடிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலாடை அணியும் வழக்கமில்லாதவர்களாக, நமது எந்த மொழியையும் அறிந்திராதவர்களாக, தங்களுக்கென்று பெயர்கள் கூட இல்லாதவர்களாக அவர்கள் உள்ளனர்.  உணவுக்காக வேட்டையாடுவதும், மூங்கில் மற்றும் ஓலை வேய்ந்த குடில்களில் வசிப்பதும் இவர்களது வாழ்க்கை முறை. உணவை தேடி நாடோடிகளாக வாழ்கிறார்கள். எம்மைப்போன்று பாரிய நோய் நொடிகள் அற்றவர்களாக நிம்மதியான, சுதந்திரமான வாழ்வை அனுபவித்து வருகிறார்கள். இயற்கையான சூழலில் வாழ்ந்து சுத்தமான காற்றை சுவாசித்து சுகாதாரமான உணவை உண்டு வாழ்வதால் ஆயுள் காலமும் அதிகம் என்கிறார்கள்.

காடழிப்பு.
இந்த மழைக்காடுகளைக் காப்பது இந்நாட்களில் முக்கிய விடயமாக மாறி இருக்கிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இன்றியமையாததாக விளங்கும் அமேசன் காடுகளை, அழிக்கும் நடவடிக்கை முன்பைவிட ஆறு மடங்கு அதிகரித்துள்ளது.  இரண்டு மாதங்களில் மட்டும் 593 சதுர கி.மீ. பரப்பளவுள்ள காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. அமேசன் காடளிப்பு மிக வேகமாக நடைபெற்று வருகின்றது. இதனால் பிரேசில் அரசு சிறப்பு அதிரடிப்படை ஒன்றை நிறுவி காடுகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இப்பகுதிகளில் 17 லட்சம் ஏக்கர் பகுதிகள் அரச பாதுகாப்பில் உள்ளது.

இன்னும் கண்டுபிடிக்கப்படாத மர்மங்கள்.
அமேசான் காட்டிலும் இன்னும் மனித அறிவியல் ஆய்வுகளால் கண்டுபிடிக்கப்படாத மர்மங்கள் நிறையவே உள்ளன.  அறிவியல் கண்டு பிடிப்புகளுக்கு உட்பட்டவைபோக அறியப்படாத அனைத்தையும் கண்டுபிடிக்க இன்னும் 300 வருடங்களாவது எடுக்கும் என அமேசன் வன உயிரினங்களுக்கான சிக்காக்கோவின் ஃபீல்டு அருங்காட்சியகத்தின் வனவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

வல்லவன் அல்லாஹ்வின் அற்புதப் படைப்புகளையும் அப்படைப்பினங்களில் உள்ள அற்புதங்ங்களையும் அறியவேண்டுமானால் இயற்கையை ரசித்தாகவேண்டும். இயற்கையோடு உறவாடவேண்டும். அமேசன் மழைக்காட்டைச் சுற்றிப்பார்க்க முடியாவிட்டாலும் ஒரு முறையேனும் எமது நாட்டில் உள்ள சிங்கராஜ மழைக்காட்டையாவது சுற்றிப்பாருங்கள்.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...