ஆலிப் அலி (இஸ்லாஹி)
அல்ஹஸனாத் – ஜனவரி / 2008சமகால இஸ்லாமிய அறிஞர்கள் அனைவராலும் அறியப்படக்கூடிய, பிரபல்யமான, தலைசிறந்த ஒரு அறிஞர்தான் அஷ்ஷெய்க் முஹம்மத் நாஸிருத்தீன் அல்பானி அவர்கள். இவர் ஹிஜ்ரி 1332 (1914)ல் பிறந்தார். அல்பேனியாவின் தலைநகரமான அஷ்கொடராவில் எளிமையானதொரு குடும்பத்தில் பிறந்தார். நாஸிருத்தீன் அல்பானி அவர்களின் தந்தை நூஹ் நஜ்ஜாதி அல்அல்பானி, கொன்ஸ்தாந்துநோபிள் என அழைக்கப்பட்ட இஸ்தான்பூலிலே மார்க்கக் கல்வியைப் பூர்த்திசெய்துவிட்டு அல்பேனியாவிலே சிறந்த மார்க்க அறிஞர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். இறை மறுப்புக்கொள்கையான நாத்திகம் அல்பேனியாவில் தடம் பதித்தபோது வெறுப்படைந்த நூஹ் நஜ்ஜாதி அவர்கள் குடும்ப சகிதம் சிரியாவின் தலைநகரான டமஸ்கஸிற்கு இடம்பெயர்ந்தார்.
ஷெய்க் நாஸிருத்தீன் அல்பானி அவர்கள் சிறுபராயம் முதல் கல்வியில் வேட்கையுடையவராகக் காணப்பட்டார். டமஸ்கஸ் நகரம் இமாமவர்களின் கல்விக்குத் தகுந்த களமாக அமைந்தது. அங்கு தமது ஆரம்பக் கல்வியைத் திறம்படப் பூர்த்திசெய்தார். அதன் பின்பு அல்குர்ஆன், தஜ்வீத்> அரபு இலக்கணம் போன்றவற்றையும் ஹனபி மத்ஹபின் சட்டக்கலைகளையும் மற்றும் மார்க்கத்தின் இன்னோரன்ன அம்சங்களையும் பல்வேறுபட்ட அறிஞர்களிடமிருந்தும் தனது தந்தையின் நண்பர்களிடமிருந்தும் கற்றுக்கொண்டார்.
அவற்றோடு மாத்திரம் நின்றுவிடாமல் கடிகாரத் தொழிநுட்பங்களையும் அதனைப் பழுதுபார்த்துத் திருத்தியமைக்கும் உத்திகளையும் தனது தந்தையிடமிருத்தே கற்றுக் கொண்ட இவர் அதில் புலமை பெற்று கடிகாரம் திருத்தும் ஒரு கடையை சிறியளவில் அமைத்து தனது குடும்ச் செலவினங்களுக்கான போதிய வருவாயையும் அதிலிருந்தே
நாஸிருத்தீன் அல்பானி அவர்கள் தனது 20ஆவது வயதிலே ஹதீஸ் துறையிலும் அதுசார்ந்த கலைகளிலும் தேர்ச்சி பெறலானார். அந்தவகையில் அல்ஹாபிஸ் அல் ‘அல்முக்னி அனில் ஹமலில் அஸஃபார் ஃபில் அஸஃபார் ஃபீ தக்ரீஹி மா ஃபில் இஹ்யா மினல் அக்பார்’ ஐ பிரதியெடுக்கவும் அதற்குக் குறிப்புகளைச் சேர்க்கவும் முனைப்புக் காட்டினார். ஹதீஸ் துறையில் அவரது ஆய்வுகளை இன்னும் ஆழமாக மேற்கொண்டதோடு அதன் பலதரப்பட்ட பகுதிகளையும் தந்தையின் மத்ஹபுக்கு வெளியிலிருந்து ஆய்வுசெய்தமையால் அவரது அதிருப்தியையும் சம்பாதித்துக் கொண்டார்.
இமாமவர்கள் மிகுந்த சிரமத்திற்கும் கஷ்டத்திற்கும் மத்தியில் ஆய்வுகளையும் கற்கைகளையும் மேற்கொண்டார். அவரின் ஆய்வுகளுக்கான நூல்களைப் பெற்றுக்கொள்ள மிகவும் சிரமப்பட்டார். தந்தையிடம் பெரிய நூலகமொன்று இருந்த போதிலும் அது ஹனபி மத்ஹபின் சட்ட நூல்களை மாத்திரமே உள்ளடக்கியிருந்தது. அவசியமான நூல்களை விலைக்குவாங்க அவரிடம் போதியளவு பணமிருக்கவில்லை. எனவே> அவசியமான நூல்களை டமஸ்கஸின் பிரபல்யம்பெற்ற நூலகமான ‘அல்மக்தபதுத் தாஹிரிய்யா’ விலிருந்தும் சிலபோது புத்தக விற்பனையாளர்களிடமிருந்தும் கடனுக்கும் இரவலாகவும் பெற்றுக்கொண்டார்.
நாஸிருத்தீன் அல்பானி அவர்கள் ஹதீஸைக் கற்பதில் முழுமனதுடன் சிலவேளைகளில் தனக்கு வருவாயை ; இருந்த இடத்திலேயே சிறு ஆகாரத்துடன் உணவுத் தேவையை முடித்துக்கொள்வார். இவ்வாறு இமாமவர்கள் பெரும்பிரயத்தனத்துடன் கல்வி பயின்றார்.
இருதியில் நூலக நிர்வாகம் அவருக்கென்றே பிரத்தியேகமானதொரு அறையை வாசிகசாலையிலே அமைத்துக் கொடுத்தது. வழமையாக நூலகம் திறக்கும் நேரத்துக்கு முன்பே இமாமவர்களின் ஆய்வு நடவடிக்கைகளுக்காக அவருக்கு மாத்திரம் உட்பிரவேசிக்க பிரத்தியேகமானதொரு திறப்பையும் ஏற்பாடுசெய்து கொடுத்தது. அதுமுதல் இமாமவர்கள் அடிக்கடி அதிகாலை முதல் இஷாநேரமாகும் வரை அவரது வேலைகளுக்காக நூலகத்திலேயே இருந்து வந்தார். இக்காலப்பகுதியில் அவர் ஏகப்பட்ட பெறுமதிமிக்க நூற்களை எழுதி முடித்தார்.
எவ்வாறாயினும் இமாமவர்களின் அயராத உழைப்பைக் கண்ட டமஸ்கஸின் அறிஞர்கள் சிலர் அவரை மென்மேலும் உற்சாகப்படுத்தி ஆதரவு நல்கினர். அவர்களுள் அஷ்ஷெய்க் பஹ்ஜதுல் பய்ஜார் பத்தாஹ் தௌபீக் அல்பர்ஸஹ் ரஹிமஹ{முல்லாஹ் போன்றோர் முக்கியமானவர்கள். ஏகத்துவத்தையும் ஸ{ன்னாவையும் பரப்புவதற்கான பிரயத்தனத்தில் அஷ்ஷெய்க் நாஸிருத்தீன் அல்பானி அவர்கள் பல எதிர்ப்புகளுக்கும் முகம் கொடுத்து வந்தார்.
சில காலங்களின் பின்பு பாடசாலை மாணவர்களுக்கும் பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கும் இரண்டு வாராந்த வகுப்புகளை ஆரம்பித்தார். அதிலே அகீதா ஃபிக்ஹ் உஸுலுல் ஹதீஸ் போன்ற பல்வேறுபட்ட நூற்களிலிருந்தும் கற்றுக்கொடுத்தார். இக்காலப் பகுதியில் இமாம் அல்பானி அவர்களின் தஃவாப் பிரசாரங்கள் விரிவடைந்தன. அதனால்> மாதாந்தம் தஃவாப் பணிக்காக சிரியாவினதும் ஜோர்தானினதும் பல நகரங்களுக்கு பிரயாணங்களை மேற்கொண்டார். அத்தோடு ஹிஜ்ரி 1381இல் சஊதி அரேபியாவின் பல்கலைக்கழகங்களில் மூன்று வருடங்களுக்கு விரிவுரையாற்ற விரிவுரையாளராகத் தெரிவுசெய்யப்பட்டார்.
இதன் பிறகு நாஸிருத்தீன் அல்பானி அவர்கள் மீண்டும் பழைய அறிஞர்களின் நூல்களை ஆய்வுசெய்வதற்காக தனது கடையை சகோதரர் ஒருவரிடம் ஒப்புவித்துவிட்டு அத்தாஹாரிய்யா நூலகத்திற்கு மீண்டார். இமாம் அல்பானியவர்கள் தஃவாப் பிரசாரத்திற்காகவும் பாட விரிவுரைகளுக்காகவும் பல நாடுகளைத் தரிசித்துள்ளார். கட்டார் எகிப்து குவைட் எமிரேட்ஸ் ஸ்பைன் மற்றும் இங்கிலாந்து என்பன அவர் தரிசித்த நாடுகளில் சிலவாகும்.
நவீன கால அறிஞர்களுள் ஹதீஸ் துறையில் தலைசிறந்த அறிஞர்களுள் ஒருவராக முஹத்திஸாக ஷெய்க் அவர்கள் மதிக்கப்படுகிறார்கள். இதற்குக் காரணம் அவரது கவனம் முழுவதும் ஹதீஸ் துறைகளிலும் அதுசார்ந்த கலைகளிலுமே காணப்பட்டமையாகும். இமாமவர்களின் மாணவர்களுள் ஷெய்க் ஹம்தி அப்துல் மஜீத்> கலாநிதி உமர் ஸுலைமான் அல்அஷ்கர் ஷெய்க் முக்பில் இப்னு ஹாதி அல்வாதிய்யா> ஷெய்க் அப்துர்ரஹ்மான் அப்துஸ்ஸமத் போன்றோர் இன்;றைய பிரசித்தமான மார்க்க அறிஞர்காளாகக் காணப்படுகின்றனர்.
இமாமவர்கள் ஹதீஸ் துறையில் சில முக்கியமான நூற்களைத் தொகுத்தளித்துள்ளார். அத்தோடு சில இமாம்களின் நூற்களுக்கு விளக்கவுரைகளையும் எழுதியுள்ளார். அவர் எழுதியவற்றுள் இர்வாஉல் கலீல், முக்தஸர் ஸஹீஹ் முஸ்லிம், ஸில்ஸலா அல்அஹாதீஸ் அல்ழஈபா, ஸில்ஸிலா அல்அஹாதீஸ் அஸ் ஸஹீஹா, மிஷ்காதுல் மஸாபீஹ் என்பன பிரபல்யமான சில நூல்களாகும்.
இவ்வாறு இமாமவர்கள் ஹதீஸ் துறைக்குப் பெரும் பங்காற்றியுள்ளார். இறுதியில் 1999ஆம் ஆண்டு (ஹிஜ்ரி-1420) ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி தனது 87ஆவது வயதில் இறையடி சேர்ந்தார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அல்லாஹ் அவரது ஆத்மாவைப் பொறுந்திக் கொள்வானாக!
ஆலிப் அலி (இஸ்லாஹி)
3 comments:
ஷேக் அல்பானீயைப் பற்றிய நூல் நீங்கள் எழுதியிருக்கின்றீர்களா?
சிறந்த பணி செய்கிறீர்கள்.
வாழ்த்துகள்!
சகோதரருக்கு!
இதுவரையிலும் அவரைப் பற்றி நூல் ஏதுவும் எழுதவில்லை.
ஆனால் ”அல்ஹஸனாத்” சஞ்சிகைக்கு ஒரு கட்டுரை எழுதினேன். அதனைத்தான் இங்கு இடுகையிட்டுள்ளேன்.
கருத்துரைக்கு மிக்க நன்றி...
fathima .....
good..... puthiya vidayam onrai therinthu konden
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...