இப்படத்தில் நீங்கள் காண்பதுபோன்று 'வாள் முனையில் பரப்பப்பட்ட மார்க்கம்தான் இஸ்லாம்" என்று இஸ்லாம் குறித்த சரியான வரலாற்று நோக்கை அறியாதோரும் மற்றும் இஸ்லாத்தின் மீது துவேச உணர்வுகளை வெளிப்படுத்துவோரும் தவறான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். இஸ்லாத்தைப் பற்றி தவறான கருத்துக்களைப் பிரச்சாரம் செய்யவென்றே இயங்கும் ஒரு அமைப்புதான் மேலுள்ள படத்தில் காண்கிறீர்கள். உண்மையிலேயே இது மடமைத்தனமானதொரு குற்றச்சாட்டு என்பதை பக்கசார்பின்றி நோக்கும் முஸ்லிமல்லாதோரின் கருத்துக்களிலிருந்து விளங்கலாம்.
இஸ்லாம் நபி முஹம்மத் (ஸல்) அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட மார்க்கமல்ல. மாறாக அவருக்கு முன் வந்த தூதர்களான ஆதம் (அடம்), நூஹ் (நுவாஹ்), இப்றாஹீம் (ஏப்றஹாம்), இஸ்மாஈல் (இஸ்மவேல்), இஸ்ஹாக் (இஷாக்), மூஸா (மோஸஸ்), ஈஸா (ஜீஸஸ்) போன்ற பல நபிமார்களால் கொண்டுவந்த மார்க்கத்தையே இறுதியாக வந்த முஹம்மத் (ஸல்) அவர்களும் போதித்தார்கள்.
இஸ்லாம் மானிட வாழ்க்கைக்கான வழிகாட்டி. அதனால்தான் அது எக்காலத்துக்கும் எந்த இடத்துக்கும் எந்த இன மக்களுக்கும் மானுட வாழ்வின் அனைத்துப் படித்தரங்களுக்கும் பொருந்திச்செல்கின்றது.மனித வாழ்வின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வாயமைகின்றது. இது ஒரு சாராருக்கு மட்டும் பிரத்தியேகமானதல்ல. முழு மனித சமூகத்துக்கும் பொதுமையானது.அதனால்தான் அல்குர்ஆனில் பொதுப்படையாக 'மனிதர்களே! இது (இந்த அல்குர்ஆன்) உலகத்தார் அனைவருக்குமானது" (81:27) என விழித்துக் கூறப்பட்டுள்ளது.
ஆக, இப்படியானதொரு மார்க்கத்தைத் தீவிரவாத மார்க்கம் என்று சொல்வது எவ்வளவு மடமை? எனவே அறிவின்றிக் கூறும் அவர்களின் ஊகங்களைப் புறம்தள்ளிவிட்டு இஸ்லாத்தைப் பற்றியும், முஹம்மத் நபியவர்களைப்பற்றியும் சிறப்பித்துக்கூறும் சில அறிஞர்களின் கருத்துக்களைப் பார்ப்போம்.
2. De Lacy O' Leary :-
“கத்தி முனையில் பரப்பப்பட்ட மார்க்கம்தான் இஸ்லாமென சில வரலாற்றாசிரியர்கள் மக்கள் மத்தியில் சிறு பிள்ளைத்தனமாக திருப்பித் திருப்பிக் கூறுகின்றனர். இது வெறும் கற்பனைக் கதையேயன்றி வேறில்லை." (ISLAM AND THE CROSS ROADS, LONDON , PAGE – 08)

3. புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் Edward Gibbon :-

'இறைவன் ஒருவன், முஹம்மத் அவனது தூதர்" என்ற இக்கோசத்தை முஸ்லிம்கள் அனைவரையும் ஏற்கச்செய்து சர்வ வல்லமை பொருந்திய இறைவனைச் சிலையில் வடித்து வணக்கம் செலுத்தாமல் தடுத்தது முஹம்மத்தான்"
4. Thomas Karl ail :-
“இறைவன் ஆணுக்கும் பெண்ணுக்குமிடையில் அன்பெனும் பிணைப்பை ஏற்படுத்தி அவர்களின் குழந்தைகளிடத்தில் கருணையையும் அன்பையும் ஏற்படுத்தியது இறைவனின் பேரருளாகும், என எடுத்துக்காட்டியது நபி(ஸல்) அவர்களது சிந்தனையின் மகிமையை உணர்த்துகின்றது. அன்பென்ற இவ்வுணர்வு மனிதர்களிடத்தில் இல்லாவிடில் மனித சமுதாயத்துக்கு என்ன நடக்கும்?"
5. George Bernard Shaw :-

'நான் முஹம்மதின் மார்க்கத்தை மிக்க சிறப்பானதாகக் கருதுகின்றேன். காலமாற்றத்துக்கு ஏற்றதும் ஒவ்வொரு கால மக்களையும் கவரும் தன்மை கொண்டதுமான ஒரே மார்க்கம் இஸ்லாம் என்றே எனக்குத் தோன்றுகின்றது. இந்த அற்புத மனிதரைப் பற்றி நான் படித்துள்ளேன். அவர் இயேசு கிறிஸ்துவுக்கு எதிரானவரல்லர் என்பதுவே எனது அபிப்பிராயம். மானுட வசந்தத்துக்குக் காரணம் முஹம்மத்தான் என்பதை நிச்சயித்துக் கூற முடியும். அவர் போன்ற ஒருவர் இந்த நவீன உலகை ஆளுபவராக வந்தால், இவ்வுலகம் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதில் வெற்றிகிடைக்கும். இன்றைய ஐரோப்பாவும் நாளைய ஐரோப்பாவும் இதனையும் முஹம்மதின் மார்க்கத்தையும் ஏற்றுக்கொள்ளும்." (THE GENUINE ISLAM – VOL - I, NO ; 8193)
6. Canon Tailor :-
'வாழ்க்கைக்கு முற்றிலும் மாற்றமான பிரச்சினைக்குத் துணிவுடன் முகம் கொடுக்கும் உளப்பாங்கு முஹம்மத் நபியவர்களால் உருவாக்கப்பட்டது. மானிடத்துக்கு சகோதரத்துவத்தை உணர்த்தி மனிதத்தின் பொருளை உணர்த்தியதும் அவரே!" (PAPER READ BEFORE THE CHURCH CONGRESS AT WALVER HAMTON OCT. 07. 1887. QUOTED BY ARNOLD IN "PREACHING OF ISLAM". PAGE-71,72)
7. Sarojani Naidu :-
7. Sarojani Naidu :-

8. Diwan Chand Sharma :-
“முஹம்மதின் செல்வாக்கு எங்கும் வியாபித்தது. அவரைச் சூழ்ந்திருந்தவர்களால் மறக்கவே முடியாதளவு அவரது கருணை உயிராயிருந்தது.” (“THE PROPHETS OF THE EAST” PAGE – 122)
9. Sir c.p.Ramasami Ayyar :-

10. Mahatma Gandhi :-

11. நாவலர், Dr.Somasundara Paraziyar :-
'புது மதபோதகர்கள் யாவரும் தம்மைக் கடவுளின் அவதாரமாகவும் அல்லது புதல்வராகவுமே கூறுகின்றனர். ஆனால் முஹம்மத் நபி தம்மை ஒரு சாதாரன மனிதராகவே கருதி அப்படியே பிறரிடமும் கூறிவந்தார். பல தெய்வ வழிபாடு, மனிதன் படைத்த கற்சிலைகளை மனிதனைப் படைக்கும் கடவுளர்களாகப் போற்றி அவற்றுக்குப் பணியும் வழக்கமுடைய அரபியரிடையே நபியவர்கள் சுயமாகத் தம்மறிவால் சிந்தி;த்து இறைவன் உருவமில்லா ஒருவனாகவே இருக்கவேண்டும் எனத் துணிந்துகூறிய பெருமை முஹம்மது நபியின் முதற்பெரும் வெற்றியாகும்.

12 Michael H. Hart :-
13. Encyclopedia Britannica :-
“அனைத்துத் தீர்க்கதரிசிகளை விடவும் மதத்தலைவர்களை விடவும் மிகச் சிறந்த வெற்றியாளர்தான் முஹம்மத்.”14. Hans Kohan :-
“இன்று முழு ஐரோப்பாவும் அச்சாறாகிக் குழம்பிப்போயுள்ளது. ஒழுக்கயீனம் கோளோச்சுகின்றது. சமூக மற்றும் தனிநபர் வாழ்க்கை சின்னாபின்னமாகியுள்ளது. எனவே ஐரோப்பாவுக்கு மாத்திரமன்றி முழு உலகுக்கும் தேவைப்படுகின்ற சமநிலையான சமுக வாழ்க்கைக்கான தீர்வு இஸ்லாமென்றால் அது முஹம்மதின் மார்க்கத்திலுள்ளது.” (National History of Eastern Countries)
15. Rev. Bosworth Smith :-
“வரலாற்றிலே அதிஷ்டவசமாக, அபூர்வமாக முஹம்மத்தான் மூன்று அம்சங்களையும் ஒரு சேரப்பெற்ற மனிதர். ஒன்று; மக்கட்கூட்டம். இரண்டு; ஆட்சி. மூன்று; மார்க்கம்.” (MOHAMMED AND MOHAMMEDANISM)
தனது மற்றுமொரு நூலிலே இவ்வாறு குறிப்பிடுகிறார்.
“முஹம்மத் நபி ஒரு நாட்டினதும் ஒரு மதத்தினதும் தலைவராகக் காணப்பட்டார். அவரிடம் ஒரேதடவையில் சீசரையும் போப் ஆண்டவரையும் காண முடியும். எனினும் அவர் போப் ஆண்டவர் பெற்றுள்ள சுகபோகத்தைப் பெறாது போப் ஆண்டவராகவும் இராணுவ பலத்தையோ, மைப்பாது காவலர்களையோ, மாட மாளிகைகளையோ பெறாமல் சீசரின் இடத்தையும் பெற்றுள்ளார்கள். ஒருவர் சரியான இறை வழிகாட்டலில் ஆட்சிபுரிந்தார் என்றால் அது

முஹம்மதாகத்தான் இருக்கவேண்டும். அவருக்குக் கிடைத்த ஆட்சி, மக்கட்பலம் என்பவற்றுக்காக மமதைகொள்ளவில்லை. மாறாக அவரது தனிப்பட்ட வாழ்விலிருந்த ஏழ்மைத்தன்மை அவரது சமூக வாழ்விலும் காணப்பட்டது.” (Life of Mohammed)
16. John Goethe :-

ஜெர்மனிய இலக்கியத்துக்குப் புத்துயிரூட்டிய ஜெர்மனியக் கவிஞர் ஜோன் கொதே அல்குர்ஆனைப் படித்துவிட்டு பின்வருமாறு பிரஸ்தாபித்துள்ளார். “இஸ்லாமியப் போதனைகள் இவைதானென்றால் எமக்குமத்தியில் உள்ள சிந்தனாமிக்க மனிதர்கள் யாவரும் இயல்பிலேயே முஸ்லிம்கள்தாம்”
***
மேற்கூறிய அறிஞர்களது கருத்துக்களின் உண்மைத் தன்மையை விளங்க பக்கசார்பின்றி இஸ்லாத்தின் வரலாற்றைப் படித்துப் பார்க்குமொருவரால் நிச்சயமாகப் இஸ்லாமிய மார்க்கத்தின் உன்னதத் தன்மையைப் புரிந்துகொள்ள முடியும். அதுதான் உண்மையும் கூட. ஏனெனில் இஸ்லாம் மனிதனால் உருவாக்கப்பட்ட கொள்கையோ கோட்பாடோ அல்ல.
மாறாக இப்பிரபஞ்சத்தையே படைத்துப் பரிபாலித்துக்கொண்டிருக்கும் இறைவனால் மனித வாழ்க்கைக்கு வழிகாட்டும் பொருட்டு அருளப்பட்ட மார்க்கமே இஸ்லாம். இம்மார்க்கத்தை மனிதர்களுக்குப் போதித்து அவர்களை நேர்வழிப்படுத்த மனிதர்களிலிருந்து இறைவனால் தெரிவுசெய்யப்பட்டு நியமிக்கப்பட்டவர்கள்தான் நபிமார்கள் (தூதர்கள்). அவர்களுள் ஒருவரும் இறுதியானவரும்தான் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
அவ்வாறெனின் அம்மார்க்கம் எவ்வாறு பிழைக்கமுடியும்? இஸ்லாம் பற்றிய பூரண அறிவில்லாத அல்லது அறிவிருந்தும் சிலர் தமது காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துவதற்காக, பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். இஸ்லாத்தைக் கொச்சைப் படுத்தும் செயல்களை முடுக்கிவிடுகின்றனர். அண்மையில் நெதர்லாந்தில் தயாரிக்கப்பட்ட “பித்னா” என்ற குறுந் திரைப்படம் அத்தோடு நபியவர்கள் குறித்து வெளியிட்ட கேலிச் சித்திரங்கள் மற்றும் ஒவ்வொரு நாளும் வெளியாகிக்கொண்டிருக்கும் இஸ்லாத்திற்கு எதிரான நூற்கள், கருத்துக்கள் போன்றன இதற்குச் சில உதாரணங்களாகும்.
எனவே நீங்கள் பக்கசார்பின்றி நடுநிலையாக நின்று இஸ்லாம் குறித்துப் படியுங்கள் அது கூறும் உயர் தத்துவங்களை விளங்க முயலுங்கள். இறைவன் உங்கள் உள்ளங்களை நேரான வழியில் செலுத்துவானாக…..!
ஆலிப் அலி (இஸ்லாஹி)
மாறாக இப்பிரபஞ்சத்தையே படைத்துப் பரிபாலித்துக்கொண்டிருக்கும் இறைவனால் மனித வாழ்க்கைக்கு வழிகாட்டும் பொருட்டு அருளப்பட்ட மார்க்கமே இஸ்லாம். இம்மார்க்கத்தை மனிதர்களுக்குப் போதித்து அவர்களை நேர்வழிப்படுத்த மனிதர்களிலிருந்து இறைவனால் தெரிவுசெய்யப்பட்டு நியமிக்கப்பட்டவர்கள்தான் நபிமார்கள் (தூதர்கள்). அவர்களுள் ஒருவரும் இறுதியானவரும்தான் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
அவ்வாறெனின் அம்மார்க்கம் எவ்வாறு பிழைக்கமுடியும்? இஸ்லாம் பற்றிய பூரண அறிவில்லாத அல்லது அறிவிருந்தும் சிலர் தமது காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துவதற்காக, பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். இஸ்லாத்தைக் கொச்சைப் படுத்தும் செயல்களை முடுக்கிவிடுகின்றனர். அண்மையில் நெதர்லாந்தில் தயாரிக்கப்பட்ட “பித்னா” என்ற குறுந் திரைப்படம் அத்தோடு நபியவர்கள் குறித்து வெளியிட்ட கேலிச் சித்திரங்கள் மற்றும் ஒவ்வொரு நாளும் வெளியாகிக்கொண்டிருக்கும் இஸ்லாத்திற்கு எதிரான நூற்கள், கருத்துக்கள் போன்றன இதற்குச் சில உதாரணங்களாகும்.
எனவே நீங்கள் பக்கசார்பின்றி நடுநிலையாக நின்று இஸ்லாம் குறித்துப் படியுங்கள் அது கூறும் உயர் தத்துவங்களை விளங்க முயலுங்கள். இறைவன் உங்கள் உள்ளங்களை நேரான வழியில் செலுத்துவானாக…..!

1 comments:
சிறந்த பதிவு...
இஸ்லாத்தப் பத்தி சொல்ற அறிஞர்களின் கருத்தை நானும் கேள்விப்பட்டுருக்கேன்... பட் சில தவறான கருத்துக்களையும் கேள்விப்பட்டீருக்கேன்...
இப்பதான் கொஞ்சம் கொஞ்சம் இஸ்லாத்தப் படிச்சிட்டு வா்ரேன்...
இதுபோன்ற உங்கள் பதிவுகள் தொடரட்டும்...
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...