"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

03 August 2016

சாணிப் பந்துசெய்யும் சாணி வண்டுகள்

“நாம் இல்லாவிட்டாலும் பூச்சிகளால் உயிர்வாழ முடியும், ஆனால் இப் பூச்சிகள் மட்டும் இல்லையென்றால் எம்மால் நிலைத்திருக்க முடியாது. உயிரற்ற தாவரங்களும் விலங்குகளும்தான் பூமியெங்கும் குவிந்துகிடக்கும்”
Christopher O'toole - Alien empire Book.

அறிமுகம்

சாணி வண்டுகள் எனத் தமிழிலும் Dung Beetle என ஆங்கிலத்திலும் அறியப்படும் இவை மாம்பழ வண்டு, இரட்டைக் கொம்பு வண்டு, ஸ்காரப் வண்டு, காண்டாமிருக வண்டு போன்ற பலநூற்றுக்கணக்கான வண்டினங்களில் ஒரு இனமாகும். இவற்றை எமது ஊர் வழக்கில் Pபீ வண்டு என்றும் அழைப்போம். இவற்றின் அறிவியல் பெயர் “பேக்கிலோமெரா பெமொர்லிங்” என்பதாகும். துருவப் பிரதேசங்கள் தவிர்ந்த பாலை நிலங்கள், காட்டுப் பகுதிகள், புள் நிலங்கள் என எங்கும் இவை வசிக்கின்றன. ஆப்பிரிக்காவில் இவற்றைப் பரவலாகக் காணலாம். நமது கிராமப் புற வயல்வெளிகளில், வரம்புகளில் நிறையக் கண்டுகொள்ளலாம்.

இவ்வகை வண்டுகள் பல அற்புதமான இயல்புகளைக் கொண்டுள்ளன. அதில் விஷேடமானதுதான் அவை கால்நடைக் கழிவுகளை மீள்சுழற்சி செய்து வாழும் விதம். இப் பூமிப் பந்தில் சேரும் இயற்கையான எந்தக் கழிவுகளையும் கொண்டுசென்று கொட்டுவதற்கு வேறு கிரகங்கள் தேவையில்லை. அவற்றை மீள் சுழற்சி செய்து பயன்படுத்தும் அமைப்பு பூமியிலேயே காணப்படுகின்றது. அவ்வாறு உயிரிணங்களின் கழிவுகளை அழித்து மீள் சுழற்ச்சி செய்யும் ஏராளமான உயிரினங்களை அல்லாஹ் இப்பூமியில் படைத்துள்ளான். அவற்றில் ஒன்றுதான் இந்த சாணி வண்டுகள்.

சாணி வண்டின் உடலமைப்பு

சாணி வண்டுகளுக்குள்ளும் மூன்று முக்கிய இனங்கள் உண்டு அவற்றில் சாணியைப் பந்து செய்பவை Rollers என்றும் சுரங்கம் தோண்டுபவை Tunnellers என்றும் சாணியிலேயே தங்கி வாழ்பவை Dwellers என்றும் அழைக்கப்படுகின்றன. இரும்புக் கவசம் அணிந்திருக்கும் ஒரு ரோபோவின் தோற்றத்தை சாணி வண்டுகள் கொண்டுள்ளன. அவற்றின் புறத்தோற்றம் பார்ப்பதற்கு பயத்தை ஏற்படுத்தி எமது உடம்பில் மயிர்கூச்சரியச் செய்யும். சாதாரணமாக ஒரு சாணி வண்டு 3 செ.மீ. நீளமும் 2 செ.மீ. அகளமும் கொண்டிருக்கும். இவை கருமை நிறத்திலும் சூரிய ஒளிக்கு பச்சை நிறத்தில் மின்னும் அமைப்பிலும் இருக்கும். உடலின் முன்பகுதியில் அரைவட்டவடிவில் மண்வெட்டி போன்ற ஒன்று உள்ளது. இதனைக் கொண்டு அவை நிலத்தில் சிறு குலிகளைத் தோண்டும், வேறு வண்டுகளுடன் சண்டையிடும், உணவை வெட்டி பதப்படுத்தி உண்ணும். சாணிகளை உருட்டி பந்து செய்யும். இவை அனைத்துக்கும் அந்த முன்பகுதி உதவியாயிருக்கும்.

வாயின் அருகில் இரு மருங்கிலும் உணர்கொம்புகள் இரண்டும் காணப்படும். சாணி வண்டுகளின் அபாரமான மோப்பசக்திக்கு இவ் உணர்கொம்புகளே காரணம். இரண்டு பக்கவாடுகளிலும் மூன்று மூன்றாக மொத்தம் ஆறு கால்கள் இருக்கும். அதன் முன்னங்கால்கள் குட்டையாகவும் பின்னங்கால்கள் நீண்டும் காணப்படும். விர்ரென்ற சப்த்த்துடன் பறப்பதற்கு இரண்டு சிறகுகளும் உண்டு. அந்தச் சிறகுகள் அவற்றின் முதுகில் உள்ள இரண்டு கவசங்களுக்குள் பத்திரமாக மறைந்திருக்கும். மேலுடல் சற்று கடினமாக அமைந்திருக்கும். அதில் எமது கண்களுக்குப் புலப்படாத அளவு நுண்ணிய மயிர்கள் காணப்படும். இவ்வாறாக சாணி வண்டுகளின் உடல் அமைப்பு காணப்படுகின்றது.

உணவு முறை

குழுவாக சேர்ந்து வாழ்வதும் கூட்டாக சேர்ந்து உண்ணுவதும் சாணி வண்டுகளிடம் உள்ள விஷேட குணமாகும். இவற்றுக்கு சாணி வண்டு என்ற பெயர் வரக்காரணமே இவை விலங்கினங்களினது சாணத்தை உண்டு வாழ்வதால்தான். சாணிகள் என்றால் அவ்வளவு பிரியம். நிலத்தில் எங்கு சாணி இருக்குமோ அங்கு இவ்வண்டுகளைக் காணலாம். ஆடு, மாடு, யானை போன்ற பெரிய விலங்குகள் உணவுட்கொண்டு அவற்றை மலமாக வெளியேற்றியதும் அதிலிருந்து வரும் மணம் காற்றில் பரவியவுடன் அதனைத் தூர இருந்தே மோப்பம் பிடிக்கும் இவ்வண்டுகள் விரைந்து வந்து மொய்த்துக்கொள்கின்றன. அந்த சாணத்திலும் சமிபாடடையாத அநேகமான உணவுத் துண்டுகள் காணப்படும். அந்த உணவுத் துண்டுகளைத்தான் இந்த சாணி வண்டுகள் உட்கொள்கின்றன. 

இணப்பெருக்கம்.

சாதாரணமாக இரண்டு வருடங்கள் வரை உயிர் வாழும் ஒரு சாணி வண்டின் வாழ்க்கை வட்டம் நான்கு கட்டங்களில் சுழல்கின்றது. அவற்றைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

முதலாவது கட்டம்

இணப்ப பெருக்க காலத்தை அடையும் ஆண் சாணி வண்டு உருண்டை வடிவில் ஒரு சாணிப் பந்தைத் தயார் செய்யும். அதில் கவரப்படும் பெண் சாணி வண்டு ஆண் வண்டுடன் இணை சேரும். இணைசேரும் காலத்தில் இரண்டு வண்டுகளும்சேர்ந்து குறித்த சாணி வண்டை முற்றாகத் திண்றுவிடும். அது முடிந்ததும் ஆண், பெண் இரண்டு வண்டுகளும் சேர்ந்து இரண்டு மூன்று சாணிப் பந்துக்களைச் செய்யும். அவற்றை ஒன்றன் பின் ஒன்றாக உருட்டிக்கொண்டு சூரிய ஒளி படக்கூடிய மணற்பாங்கான இடத்தை வந்தடையும். சாணிப் பந்தைத் தயாரிப்பது முதல் தமது இருப்பிடம் வந்து சேரும்வரை பலவிதமான யுக்திகளை அவை கையாள்கின்றன.

அற்புதமான யுக்திகள்.

சாணி வண்டுகள் சாணியை உருட்டிக்கொண்டு வருவதிலும் ஓர் அற்புதம் உள்ளது. சாணம் உள்ள இடத்தில் இருந்து அதனை உருண்டை செய்து மணல் நிலம் வரை அதனை உருட்டிக்கொண்டு வர அற்புதமான பல தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துகின்றது. அதில் முதலாவது சாணத்தை உருண்டையாக செய்வதன் நோக்கம் அப்போதுதான் தனது நிறையைவிடவும் பத்து மடங்கு பாரமாக உள்ள பந்தை மேடுகளிலும் பள்ளங்கலிலும் கற்கள் முற்கள் குறுக்கிடும்போதும் இலகுவாக உருட்டிச் செல்ல முடியும்.

இரண்டாவது தனது வாழிடத்தை நோக்கிக் பந்தைக் கொண்டுவருவதற்கான திசையை கண்டறியும் ஆற்றல். பகல் காலங்களில் சூரிய ஒளியினால் அதன் நிலழ் எத்திசையில் விழுகிறதோ அதற்கு எதிர்த் திசையை நோக்கி நகரும். இடை இடையே தன்னைவிடப் பெரிய அந்த சாணிப் பந்தின் மீது ஏறி நாளா புறமும் பார்த்து திசையை ஊர்ஜிதம் செய்துகொள்ளும். இரவு காலங்களாக இருந்தால் சந்திரனதும் நட்சத்திரங்களதும் உதவியுடன் திசையை அறிந்து செயற்படும். 

மூன்றாவது தமது முழுப் பலத்தையும் பந்தின் மீது பிரயோகிக்கவேண்டும் என்பதால் தமது முன் கால்களை நிலத்தில் பலமாக ஊன்றி பின் கால்களால் சாணிப் பந்தை எத்தி உருட்டிக்கொண்டு செல்லும். நான்காவது இரண்டு வண்டுகளும் அர்ப்பணத்துடன் செயற்படும். மேடுகள், பல்லங்கள் நேரிட்டால் இரண்டும் சேர்ந்து அதனை எதிர்கொள்ளும். சிலபோது வேறு வண்டுகள் கள்ளத்தனமாக இவ்வண்டுகளின் சாணிப் பந்தை களவாட வரும். அப்போது பெண் வண்டு சாணிப்பந்தை காவல் காக்க, ஆண் வண்டு மும்முறமாகச் சண்டையிடும். 

இரண்டாவது கட்டம்

பாதுகாப்பானதொரு இடத்தைத் தெரிவுசெய்து அவ்விடத்தில் இரண்டு வண்டுகளும் சேர்ந்து இரண்டு அல்லது மூன்று அடி ஆளமான ஒரு குழியைத் தோண்டும். பின்னர் உருட்டிக்கொண்டுவந்த சாணிப்பந்தை மெதுவாகக் குழிக்குள் கொண்டுசென்று பெண் வண்டு ஒரு பந்தில் ஒரு முட்டைவிகிதம் இருக்கும் சாணிப் பந்துகளில் வெள்ளை நிறத்தில் நீள்வட்ட முட்டைகளையிடும். முட்டையிட்ட பின்னர் வெளியே வந்து அந்தக் குழியை மண்ணால் மூடிவிட்டு இரண்டு வண்டுகளும் பிரிந்து சென்றுவிடும்.

மூன்றாவது கட்டம்

ஒரு வாரத்தில் முட்டையிலிருந்து லாவாக்கள் (புழுக்கள்) உறுவாகும். அவை அந்த சாணிப் பந்தை கொஞ்சம் கொஞ்சமாக உண்ண ஆரம்பிக்கும். சிலபோது நாம் நிலத்தைத் தோண்டினால் (இந்தப் படத்தில் இருப்பதுபோன்று) வெண்மை நிறத்தில் கால்களுடன் புழுக்கள் இருப்பதை அவதானித்திருப்போம். சீனர்கள் இதனை விரும்பி உண்பதால் சைனிஸ் புழு என்ற பெயரும் இவற்றுக்கு உண்டு. இது உண்மையில் புழு அல்ல வண்டுகளின் உருவாக்கத்தில் ஒரு கட்ட நிலையாகும். இவ்வாறு ஒரு மாதகாலம் இவை அதனுள்ளே வளரும்.

நான்காவது கட்டம்

தற்போது உணவும் முடிந்திருக்கும். புழு என்ற நிலையில் இருந்து முழுமையான வண்டாக மாறியிருக்கும். தற்போது இளம் வண்டு குழியைத் தோண்டிக்கொண்டு வெளியுலகைப் பார்க்க வந்து சிறகுகளை முதற் தடவையாக விரித்துப் பறந்துவிடும். வெளியில் வந்து இரண்டு மாதங்களில் இணப்பெருக்கத்திற்குத் தயாராகும். சாணிப் பந்துகளை உருட்டும் தொழில்நுட்பங்களை அல்லாஹ் அவற்றுக்குக் கொடுத்திருக்கும் இல்ஹாம்-இயல்புக்கத்திலிருந்து கற்றுக்கொண்டு வேலையை ஆரம்பிக்கும். அவ்வண்டின் அடுத்தகட்ட வாழ்க்கை மேலே சொன்ன படிமுறையில் சுழல ஆரம்பிக்கும். 

நாம் கற்றுக்கொள்ளவேண்டியது

“Pபீயுடன் காலம் கழிக்கும் இந்த Pபீ வண்டினால் நமக்கென்ன பயன்?” என்று நினைத்துவிட வேண்டாம். எமது வாழ்க்கைக்கும் இவ்வண்டுகள் பெரிதும் துணைபுரிகின்றன. இதனால்தான் பூச்சியியல் வல்லுனரான கிறிஸ்டோஃபர் ஓட்டூல் “நாம் இல்லாவிட்டாலும் பூச்சிகளால் உயிர்வாழ முடியும், ஆனால் இப் பூச்சிகள் மட்டும் இல்லையென்றால் எம்மால் நிலைத்திருக்க முடியாது.” என்று கூறுகின்றார். வயல் வெளிகளிலும், விவசாய நிலங்களிலும் அடர்ந்த காடுகளிலும் உள்ள சாணிகளையும் எச்சங்களையும் இவை பிரித்து, பதப்படுத்தி எடுத்து பூமிக்கு அடியில் குழிதோண்டிப் புதைப்பதால் தாவரங்களும் பயிர்களும் முளைக்கத் தேவையான உரம் இலகுவாகக் அவற்றுக்குக் கிடைக்கின்றது. 

பூமியில் எந்தவொன்றையும் அல்லாஹ் குறிப்பட்ட அளவில்தான் படைத்திருக்கின்றான். (அல்குர்ஆன்-54:49) தாவரங்கள் சரமாறியாக முளைக்கின்றன. ஆனால் கால் நடைகள் அவற்றை உண்பதால் அவை கட்டுக்குள் கொண்டுவரப்படுகின்றன. கோடிக்கணக்கான கால் நடைகள் உண்டு கழியும் கழிவுகள் அப்படியே புமியின் மேற்பரப்பில் தங்கிவிடுகின்றன. அவை அப்படியே என்றும் இருந்தால் எப்படியிருக்கும்? பூமியே நாறும். அதனால்தான் அந்தக் கழிவுகளை பல இலட்சக்கணக்கான சாணி வண்டுகள் பூமிக்கு அடியில் குழிதோண்டிப் புதைத்து விடுகின்றன. மட்டுமன்றி அதனை தமது இணத்தின் விருத்திக்காக மீள்சுழற்கி செய்கின்றன. பார்த்தீர்களா? அல்லாஹ் எந்தவொன்றையும் வீணாகவோ, வீணுக்காகவோ படைக்கவில்லை. இதுபோன்று அல்லாஹ்வின் படைப்புகளைப் பற்றி ஆராய்வோரின் நிலைபற்றி அல்லாஹ் கூறுகின்றான்.

“(இறை படைப்புகளைப் பற்றி ஆராய்வோர்) அவர்கள் நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும் தங்கள் விலாப் புறங்களில் சாய்ந்துகொண்டும் அல்லாஹ்வை நினைவு கூர்ந்தவார்கள். மேலும் அவர்கள் வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பைப் பற்றியும் சிந்தித்து, "எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாக (வீணுக்காக)ப் படைக்கவில்லை, நீ மிகத் தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!" என்று கூறுவார்கள். (3:191)
அஷ்ஆ.லிப் அலி (இஸ்லாஹி) 

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...