"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

20 November 2016

அறிவுத் திறன் மிக்க காகம்.

பாலர் பாடசாலை செல்லும் நாட்களில் நான் முதலாவதாகப் பாடிய பாடலும் முதலாவதாகப் படித்த கதையும் காகம் பற்றியதுதான். காகம் ஒன்று காட்டிலே, தாகத்தினால் தவித்ததாம்…” என்ற சிறுவர் பாடல் இன்னும் ஞாபகத்தில் இருக்கின்றது. பொதுவாக மனிதர்களோடு மிகவும் நெருங்கி வாழக்கூடிய பறவை. அதனால்தான் வழமைக்கு மாற்றமாக வீட்டைச் சுற்றி காகங்கள் கரைந்தால் வீட்டிற்கு விருந்தாளிகள் வர உள்ளார்களென மூத்தவர்கள் கூறுவதுண்டு. மேலும் ஒற்றுமைக்கும் பகிர்ந்து உண்ணலுக்கும் காகங்கள் உதாரணமாக எடுத்துக்காட்டப்படுகின்றன. இந்தக் காகம் பற்றிய பல வியப்பான செய்திகளை இத்தொடரில் பார்க்கலாம்.

இனமும் குடும்பமும்

காகம், காக்கை என்று தமிழிலும் Crow என்று ஆங்கிலத்திலும் غُرَابٌ என்று அரபுமொழியிலும் இவை அழைக்கப்படுகின்றன. காகம் கார்விடே (Corvidae) குடும்பத்தைச் சேர்ந்த பறவை இனமாகும். பெரும்பாலும் கருப்பு நிறத்திலும் அரிதாக வெள்ளை நிறத்திலும் இருக்கும் பறவை இனமாகும். காகங்களில் ஆஸ்திரேலிய, வட அமெரிக்க, ஆபிரிக்க, ஐரோப்பிய, ஆசிய என 40 வகை இனங்கள் உள்ளன. கரியன் காகம், வீட்டுக் காகம், அண்டங் காகம் என்பன ஆசியக் காக இனங்களாகும். உலகில் அண்டார்டிகா பகுதி தவிர்ந்த மற்றைய எந்தப் பருவ நிலையிலும் எல்லா நிலப்பகுதிகளிலும் வாழக்கூடிய தகவமைப்பை காகங்கள் பெற்றுள்ளன.

உடலமைப்பு.

கடிணமான, தடிப்பான அலகு கடினமான எந்தப் பொருளையும் உடைத்து உண்ண இலகுவாக இருக்கின்றது. கருமை நிற அடர்த்தியான உடல் மயிர்களும் சிறகுகளும் அவற்றுக்கு குளிர், வெப்ப காலங்களில் தகுந்த போர்வையாக அமைகின்றன. இரு பக்கமும் இரகுகள் வேகமாகவும் காற்றின் வேகத்திற்கு ஈடுகொடுத்தும் பறக்க உதவுகின்றன. வால் பகுதி அவசர அவசரமாகத் திகைகளை மாற்றி மாற்றிப் பறப்பதற்கு ஒத்துழைப்பதோடு இரண்டு கால்களும் அவற்றில் உள்ள நான்கு விரல்களும் அதில் உள்ள பலமான நகங்களும் கிளைகளைப் பற்றிப் பிடித்து நிற்பதற்கும் இறைகளை லாவகமாகப் பற்றிக்கொண்டு பறப்பதற்கும் உதவுகின்றன.

வாழ்க்கை முறை.

காகங்கள் கூட்டமாக வாழும் பறவை இனம். அவை எப்போதும் தனித்துச் செல்வதில்லை. ஒரு கூட்டத்தில் 10 முதல் 30 வரையான காகங்கள் இருக்கும். பெண் காகங்கள் மூன்று வருடங்களிலும் ஆண் காகங்கள் ஐந்து வருடங்களிலும் இணப்பெருக்கத்திற்குத் தயாராகிவிடும். புறா மற்றும் பென்குயின் பறவைகள் போன்று காகங்களும் ஆண், பெண் ஜோடி சேர்ந்தால் இறுதிவரை பிரியாமல் இருக்கும். மற்ற பறவைகள் மிருகங்கள் போலல்லாமல் இவை மறைவாகவே இணப்பெருக்கத்தில் இணையும். இது காகங்களிடமுள்ள ஒரு விஷேட குணமாகும்.

முட்டையிடும் பருவம் வந்ததும் ஆண், பெண் காகங்கள் இரண்டும் இணைந்து கம்புக் குச்சிகள், இலைகள், மர நார்கள் என்பவற்றைக் கொண்டு உயரமான கிளைகளில் கூடுகளைக் கட்டும். பின்பு அக்கூட்டில் முட்டைகளை இடும். இவை கூடு கட்டி முட்டையிடும் பருவம் வரும் வரை காத்திருக்கும் குயில்கள் இத்தருணத்தில்தான் தமது முட்டைகளையும் காகத்தின் கூட்டில் இட்டுவிட்டுச் செல்லும். காகம் 4 முதல் 7 முட்டைகளை இடும். அணேகமாக பெண் காகம்தான் முட்டைகளை அடைகாக்கும். ஆண் காகம் கூட்டைப் பாதுகாக்கும். சுமார் 18 நாட்களில் முட்டை பொறிந்து குஞ்சுகள் வெளிவரும். இனி இரண்டு காகங்களும் சேர்ந்து குஞ்சுகளுக்கு மாறி மாறி இறை தேடிவந்து கொடுத்து வளர்த்தெடுக்கும். இவ்வாறு சுயாதீனமாக ஒரு காகம் 20 வருடங்கள் வரை உயிர்வாழக்கூடியது.

உணவு முறைமை.

காகங்கள் அனைத்தும் உண்ணிகள். ஒரு காகத்திற்கு தினமும் சராசரியாக 280 கிராம் உணவு தேவை. எனவே அவை தானியங்கள், பூச்சி, புழுக்கள், விதைகள், தவளை, நண்டு, சிறிய குருவிகள், மாமிசங்கள், இறந்துபோன பாம்பு, எலி, தவலை போன்ற உயிரினங்களின் உடல்கள் என அனைத்தையும் உண்ணும். வயல்களில் உள்ள பூசிகளையும் உணவாகக் கொள்வதால் உழவர்களின் நன்பன் எனப்படுகிறது. சில போது வீட்டில் வளர்க்கும் கோழிக் குஞ்சுகளயும் காகங்கள் வந்து தூக்கிச் சென்று உண்டுவிடும். நாம் வீட்டிலிருந்து வீசும் எஞ்சிய எச்சில்களையெல்லாம் இவை தின்று சூழலை சுத்திகரிக்கும் பணியையும் செய்கின்றன. எங்காவது உணவொன்றைக் கண்டால் தனியாக வந்து உண்ணாது தனது கூட்டத்தையே அழைத்துவந்து பங்குபோட்டு பகிர்ந்து உண்ணும்.

அறிவுத் திறன்.

1. நிடோபோடாலியம்

பறவை இனங்களிலேயே கூடுதலான அறிவுத் திறன்கொண்ட பறவையாக காகம் கணிப்பிடப்பட்டுள்ளது. காகத்தின் அளவில் உள்ள பறவைகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால்  இதனுடைய மூளையே பெரிது. காகங்களின் கூரிய அறிவுத்திறனுக்குக் காரணம் அதன் மூளைப்பகுதியில் அமைந்துள்ள நிடோபோடாலியம்என்ற பகுதிதான் என பறவையியற் துறை ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். நிடோபோடாலியம் என்பது பறவைகளின் அறிவுத் திறனுக்கு காரணமாக உள்ள மூளையின் செயல்பாட்டுப் பகுதியாகும். அமெரிக்க மற்றும் கனடாவில் காணப்படும் ஜெக்டா எனப்படும் காகம் மற்றும் சிம்பன்சிகளின் மூளையில் உள்ள சிந்தனையைத் தூண்டும் 'நியோகார்டெக்ஸ்' பகுதி மனிதனின் மூளைப்பகுதியில் அமைந்துள்ள 'நியோகார்டெக்ஸ்' பகுதியை பெரிதும் ஒத்த அமைப்பில் காணப்படுகின்றது. அதேபோன்று சிம்பன்சிகளுடையதை விட காகங்களின் 'நியோகார்டெக்ஸ்' பகுதி பெரிதாக இருப்பதும் காகங்களின் அறிவுத் திறனுக்கு முக்கிய காரணமாகும்.

2. காகம் ஒன்று காட்டிலே

காகத்தின் அறிவுக் கூர்மைக்கு சிறந்த உதாரணம்தான் இக்கட்டுரையின் ஆரம்ப வரிகளில் குறிப்பிட்ட காகம் ஒன்று காட்டிலே…” சிறுவர் பாடல். உண்மையில் அது வெறும் பாடல் அல்ல. காகங்களின் அறிவுத் திறனில் ஒன்று. தாகத்தைத் தனித்துக்கொள்ள பானையின் அடியில் கிடக்கும் நீரின் மட்டத்தை உயர்த்த சிறு கற்களை போட்டு பின் நீர் மட்டம் உயர்ந்ததும் தாகம் தீரக் குடித்துவிட்டு சந்தோசமாகப் பறந்து சென்ற காகத்தின் கதையை பாடசாலையில் முதலாம் ஆண்டில் படித்திருப்போம்.  அதேபோன்று பாட்டி சுட்ட வடையைத் திருடிய காகம், காகத்திடமிருந்து முதற் தடவை நரி வடையைத் திருடினாலும் இரண்டாம் தடவை பாடம் படித்து புத்தியுடன் செயற்பட்ட காகத்தின் புத்தி சாதுர்யம் என்பவற்றையெல்லாம் வெறும் கதைக்காகப் படித்திருந்தாலும் அவற்றிலுள்ள அறிவியல் விடயங்கள் இன்றுதான் புரிகின்றன, மெய் சிலிர்க்கின்றன.

3.எம்மை அடையாளம் காணும் ஆற்றல்.

எமது ஒவ்வொருவருடைய வீட்டைச் சுற்றியும் எப்போதும் ஒரே காகங்கள்தான் சுற்றிக்கொண்டிருக்கும். அக்காகங்கள் அவ்வீட்டு அங்கத்தினரை நன்கு ஞாபகத்தில் வைத்திருக்கும்.  காகங்கள் முக வடிவமைப்பைக் கொண்டு ஒரு மனிதனை மற்றொரு மனிதனிடமிருந்து வேறுபடுத்தி அடையாளம் காண்கின்றன என்பது அண்மையில் செய்யப்பட்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இதனால்தான் வீட்டுக்கு வரும் விருந்தினரை அடையாளம் கண்டு ஞாபகத்தில் வைத்துக் கொள்ளும் இவை மீண்டும் அவர்கள் வரும் போது காகா.. என்று கரைகின்றன. இதனால்தான் எம் முன்னோர்கள் காகம் கரைந்தால் வீட்டுக்கு விருந்தினர் வருகின்றனர்என்று கூறினார்கள்போலும். தெருவில் வரும் மீன் காரனை இவற்றுக்கு நன்றாகவே தெரியும். அவர் மாலோ.. மாலோ..என்றதும் இவை பதிலுக்கு காகாஎன்று கரைந்துகொண்டு வந்து சேரும்.

4.மனிதக் குரலில் பேசவும் முடியும்.

ஜொஷா கிளெயின் என்ற அறிவியல் அறிஞர் காகங்களை நாம் சமுதாயத்திற்குப் பயனுள்ள வகையில் பழக்கப்படுத்தலாம் என முதற் தடவையாக ஒரு ஆய்வை மேற்கொண்டார். அதில் அவர் புறாக்களைப் போன்று இக் காகங்களையும் மிக இலகுவாக எம்மால் பழக்கப் படுத்திக்கொள்ள முடியும் என்கின்றார். காகங்களைப் பழக்கி திருட்டு போன்ற சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுத்திய சம்பவங்களும் சில நாடுகளில் நடந்துள்ளன. இதனால்தான் இவற்றைச் செல்லப் பறவைகளாக வளர்ப்பது சில நாடுகளில் சட்டவிரோதமாக்கப்பட்டுள்ளது. நன்கு பழக்கப்படுத்தினால் இவற்றாலும் கிளிகளைப்போன்று மனிதக் குரலில் பேச முடியுமெனவும் மேற்கண்ட ஆய்வில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

5.திருடித் திண்ணும் குணம்.

வீட்டில் சமயலறையில் ஏதும் உணவுகளை வைப்பதை காகம் ஒன்று பார்த்துவிட்டால் போதும் யாரும் இல்லாத சமயம் பார்த்து திருட்டுத் தணமாக உள்ளே நுழைந்து சட்டியை மூடியிருக்கும் மூடியைத் தூக்கி அப்பால் போட்டுவிட்டு உணவைத் திருடிக்கொண்டு பறந்துவிடும். கோழி முட்டை, மீன், இறைச்சி, பான் எதுவானாலும் பரவாயில்லை. லபக்கென்று தூக்கிக்கொண்டு பறந்து காகாஎன்று மற்றைய காகங்களையும் அழைத்துக்கொண்டு விருந்துண்ணும். சிறுவயதில் படித்த பாட்டி சுட்ட வடையைத் திருடிய காகத்தின் கதை ஞாபகமிருக்கிறதா?

6. விதைகளை உடைத்து உண்ணும் விந்தை.

ஜப்பானில் இருக்கும் ஒரு வகையான அண்டங்காகங்கள் விதைகளை உடைத்து அதனுள் இருக்கும் பருப்பை உண்ண அற்புதமானதொரு நுட்பத்தைக் கையாள்கின்றன. வாகனங்கள் விரைந்து செல்லும் நகரத்தின் மையப்பகுதியில் உள்ள ஒரு சிக்னலின் மேலிருந்து தமது அலகால் கடித்து உடைக்க முடியாத விதைகளை கீழே போடுகின்றன. வாகனங்களின் சக்கரத்தில் அரைபட்ட விதைகளிலிருந்து வெளியே தெரிக்கும் பருப்பினை பின்னர் எடுத்து உண்கின்றன. அதுவும் பாதசாரிகள் நடந்துசெல்வதற்கான பச்சை விளக்கு எறிந்தவுடனே தான். அதுவரை காத்திருக்கும். பச்சை விளக்கு எரிந்த்தும் கீழே வந்து உண்ணும். சிவப்பு விளக்கு எரியும்போது வாகனங்கள் வராது என்ற உண்மையை  அக்காகங்கள் அறிந்துள்ளன.

மனிதனுக்குக் கற்றுக்கொடுத்த காகம்.
யாராவது இறந்தால் அவர்களது உடலை மண்ணில் புதைத்து அடக்கிவிடும் பழக்கம் பொதுவாக அனைத்து மதங்களிலும் இருக்கின்றது. இம்முறையை மனிதனுக்கு முதற்தடவையாகக் கற்றுக்கொடுத்தது ஒரு காகம்தான். இதனை அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான். ஆதம் (அலை) அவர்களுடைய இரண்டு புதல்வர்களான ஹாபில், காபில் இருவரில் ஒருவர் மற்றவரைக் கொலை செய்துவிட்டு அந்த உடலை என்ன செய்வது என்று தெரியாமல் திண்டாடிக்கொண்டிருந்தார். அவ்வேலை அல்லாஹ் ஒரு காகத்தை அவரிடம் அனுப்பினான். அக்காகம் இறந்தபோன மற்றொரு காகத்தை மண்ணில் புதைத்தது. அப்போதுதான் இறந்த பிணத்தை மண்ணில்தான் புதைக்க வேண்டுமென்ற உண்மையை மனிதன் உணர்ந்தான். இதுகாலவரையும் அப்படித்தான் செய்துவருகின்றான். இது காகம் மனிதனுக்குக் கற்றுத் தந்த முதல் பாடம்.

அல்லாஹ்வின் படைப்பில் ஏராளமான ஜீவராசிகள் இருக்கும்போது, காகத்தை ஏன் அல்லாஹ் தேர்ந்தெடுத்தான்? காரணம் பறவை இனங்களில்  காகத்திற்கு மட்டுமே அறிவுத் திறனும் புத்திக் கூர்மையும் அதிகம். எனவேதான் அதனை வைத்து அல்லாஹ் மனிதனுக்குப் பாடம் நடாத்தினான்.

பின்னர் தம் சகோதரரின் பிரேதத்தை (அடக்குவதற்காக) எவ்வாறு மறைக்க வேண்டுமேன்பதைக் அவருக்கு அறிவிப்பதற்காக அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பினான்; அது பூமியை தோன்றிற்று (இதைப்பார்த்த) அவர் அய்யோ! நான் இந்த காகத்தினளவு கூட (அறிவு) இல்லாதவனாகி விட்டேனே! அப்படியிருந்திருந்தால் என் சகோதரனுடைய பிரேதத்தை நான் மறைத்திருப்பேனேஎன்று கூறி, கை சேதப்படக் கூடியவராகிவிட்டார்.”    அல் குர்ஆன் (5:27,31,32)

மனிதன் இன்றி மற்றைய பிராணிகளால் உயிர் வாழலாம். ஆனால் மற்றைய பிராணிகள் இன்றி மனிதனால் ஒருபோதும் உயிர் வாழ முடியாது.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...