அல்லாஹ்வின் அற்புதப் படைப்புகள் என்ற தலைப்பில் தொடர்ச்சியாக அகரம் சிறுவர் சஞ்சிகையில் எழுதிவந்த ஆக்கத் தொடரில் நூறாவது கட்டுரை எழுதிவிட்டேன். அல்ஹம்துலில்லாஹ்! நூறாவது கட்டுரையுடன் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
அதுவும் நுறாவது தொடரில் காட்டு ராஜா சிங்கம் என்ற தலைப்பில் எழுதியுள்ளேன். சிங்கம் ஏன் காட்டு ராஜாவாக மதிக்கப்படுகின்றது. அதனைவிட அளவில் புலி பெரிதாக இருந்தும், அதனைவிட வேகத்தில் சிறுத்தை கூடுதலாக இருந்தும் அதனைவிட தந்திரத்தில் நரி விஷேடமாக இருந்தும் ஏன் சிங்கம் காட்டு ராஜாவாக மதிக்கப்படுகின்றது? அல்லாஹ் திருமறையில் சிங்கத்தைக் கண்டு ஓடும் கழுதைபோல என்று சிங்கத்தை வைத்து உவமானம் கூற என்ன காரணம்?
அல்லாஹ்வின் அற்புதப் படைப்புகள் என்ற தலைப்பில் தொடர்ந்து எட்டு வருடங்களாக அகரம் சஞ்சிகையில் பல தலைப்புகளில் எழுதிவருகின்றேன். இதற்கு அருள் புரிந்த வல்ல ரஹ்மானுக்கே புகழ்கள் அனைத்தும் அல்ஹம்துலில்லாஹ். தொடர்ந்தும் எனது ஆக்கங்களை வாசித்துவருகின்ற தம்பி தங்கைகளுக்கும் ஆலோசனைகள் கூறி என்னை உட்சாகமூட்டுகின்ற சகோதர சகோதரிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
அடிக்கடி என்னைத் தொடர்புகொண்டு ஞாபகமூட்டி கட்டுரைகளை எழுதத் தூண்டி அவற்றை வடிவமைத்து வெளியிடுவதில் அயராது உழைக்கும் IPC அகரம் சஞ்சிகை ஆசிரியர் குழாத்திற்கும் நிர்வாகத்திற்கும் எனது உளப்புர்வமான நன்றிகள் உரித்தாகட்டும். ஜஸாகுமுல்லாஹு கைரன்.
இனி வரும் காலங்களிலும் தொடர்ந்தும் இன்ஷா அல்லாஹ் பல்வேறு தலைப்புகளில் அல்லாஹ்வின் படைப்பினங்களில் உள்ள அற்புதங்களைத் தேடி எழுதவேண்டுமென ஆவலாய் உள்ளேன். பிரார்த்திக்கின்றேன். நீங்களும் மறவாமல் உங்கள் பிரார்த்தனைகளிலும் என்னைச் சேர்த்துக்கொள்ளுங்கள்.
அகரம் சஞ்சிகையில் வெளியாகிய எனது ஆக்கங்களைத் தொகுத்து படைப்பினங்களில் படைப்பாளனின் கைவண்ணம் என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தையும் வெளியிட்டுள்ளேன். மீண்டுமொரு புத்தகம் வெகு விரைவில் உங்கள் கரம் கிட்டும். இன்ஷா அல்லாஹ்.
இவன்.....
அஷ்.எம்.என்.ஆலிப் அலி (இஸஸ்லாஹி) B.A.
Dip. in Psychological Counseling,
Special in Al-Quran & Science Researches.

0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...