"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

14 November 2019

தேன் பருகும் தேன் சிட்டு

காலை ஆறு மணி இருக்கும். ஜன்னல் வழியாக டொக் டொக்…” என்று ஒரு சப்தம். யார் ஜன்னலை விடாமல் தட்டிக்கொண்டிருப்பது? என்று சற்று கோபத்தோடு எட்டிப் பார்த்தேன். சின்னஞ் சிறிய ஹம்மிங் பேர்ட் ஒன்று அதன் விம்பம் கண்ணாடியில் இருப்பதைக கண்டு ஏமார்ந்து தன் அலகினால் தட்டி விளையாடிக்கொண்டிருந்தது. அந்த ஹம்மிங் பேர்ட் தான் இக்கட்டுரையை எழுதத் தூண்டியது.

பெயர் அறிமுகம்.
இப்பறவை ஆங்கிலத்தில் இது ஹம்மிங் பேர்ட் (Humming Bird) என்று அழைக்கப்படுகின்றது. தமிழில் தேன் சிட்டு என்று அறிமுகாகியுள்ளது. இவை சிறகடித்துப் பறக்கும்போது ஹம்…” என்ற சப்தம் ஏற்படுவதனால்தான் ஆங்கிலத்தில் ஹம்மிங் பேர்ட் என அழைக்கப்படுகின்றது. தேனையே ஆகாரமாக்க் கொண்டு வாழ்வதால் தமிழில் இவை தேன் சிட்டு என அழைக்கப்படுகின்றது.

தோற்றம்.
பறவைகளிலேயே மிகச் சிறிய இனம் இந்தத் தேன் சிட்டுக்கள்தாம். உருவத்தில் சிட்டுக்குருவியை விடச் சிறியவை. 7CM அளவு நீளமாக இருக்கும்.  மகிவும் சுருசுருப்பான பறவை. ஒரு இடத்தில் அமைதியாக கொஞ்ச நேரம் இருக்காது. அங்கும் இங்கும் திரும்பித் திரும்பியும் கிளைகளுக்கிடையில் தாவிக்கொண்டும் பறந்துகொண்டும்தான் இருக்கும். பெண் குருவிக்கு பச்சை நிறம் கலந்த பழுப்பு நிற இறக்கைகளும், தலையும் முதுகும் வெளிர் நிறத்திலும் இருக்கும். ஆண் குருவியின் தலை, கழுத்து இவை கரு நீல நிறத்தில் மயிலின் கழுத்து போன்று மின்னும். இறக்கையும் முதுகும் கருமையாகவும் அடி முதுகு கரு நீல நிறத்திலுமாகவும் அடிப் பாகம் மஞ்சள் நிறமாகவும் இருக்கும். சிலபோது சூரிய ஒளியில் கழுத்துப் பகுதி ஊதா நிறத்தில் மின்னும். தேன் சிட்டுக்களில் இதுவரை 133 வகை இனங்கள் இருப்பதாகவும் அதில் 12 வகை இந்தியா மற்றும் இலங்கையில் இருப்பதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

வாழிடங்கள்.
இப்பறவைகள் வட, தென் அமெரிக்கா, ஆபிரிக்கா,ஆஸ்த்ரேலியா மற்றும் மேற்கு ஆசியா முதல் தென்மேற்கு ஆசியா வரை பல பகுதிகளில் பரவி உள்ளன. இவை தன் வாழ்விடங்களிலிருந்து புலம் பெயரும் பழக்கம் இல்லதவை. ஈருப்பினும் தேன் பருகுவதற்காக பூக்களைத்தேடி சிறு தூரங்கள் வரை செல்லும். இவை பெரும்பாலும் சமவெளிகளில் வாழ்வதையே விரும்புகின்றன. அத்தோடு சிறிய காடுகள் மட்டுமின்றி நகர்புறத்தோட்டங்களிலும் இவற்றைக் காண இயலும். பூந்தோட்டங்கள் என்றால் அவ்வளவு பிரியம். தேன் சிட்டுக்கள் உங்கள் வீட்டுக்கும் விருந்தாளியாக வர வேண்டும் என்றால் அழகிய பூச் செடிகளை நாட்டுங்கள்.

பறக்கும் ஆற்றல்.
குட்டி ஹெலிகாப்டர்தான் இந்த தேன் சிட்டு. ஹெலிகாப்டர் எப்படி ஒரே இடத்தில் இருந்தவாறு மேலெழும்பவும் கீழிறங்கவும் முன்னே செல்லவும் அப்படியே பின்னே செல்லவும் ஒரே இடத்தில் பறந்துகொண்டிருக்கவுமாக வடிவமைக்கப்பட்டுள்ளதோ அதேபோன்றுதான் வல்லோன் அல்லாஹ் இந்தத் தேன் சிட்டுக்களையும் படைத்துள்ளான். தேன் சிட்டுக்கள் பறப்பதில் வல்லவை. பறவைகளில் பஃபின் பறவைக்கு அடுத்ததாக தேன் சிட்டுக்களால்தான் இவ்வாறு பறந்துகொண்டே மேலெழும்பவும், கீழிறங்கவும், முன் செல்லவும், பின் செல்லவும், பக்க வாட்டில் திரும்பவும், ஒரே இடத்தில் பறக்கவும் முடிகின்றது. பறக்கும் போதும் ஹம் என்ற சப்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். எந்த அளவு இது ஆச்சரியம் என்றால் தேன்சிட்டுக்க்ள பறக்கும்போது ஒரு நொடிக்கு 80 தடவைகள் சிறகடிக்கும் வல்லமை கொண்டவை. அவை பறந்துகொண்டிருக்கும்போது மிகத் துல்லியமாகப் படம் எடுக்கும் ஒரு கெமராவின் துணையின்றி எமது வெற்றுக் கண்களால் அவற்றின் சிறகுகளைப் பார்க்க முடியாது.

தேன் பருகும் அற்புதம்.
தேன் சிட்டுக்களின் ஆகாரமே தேன்தான். அதனால்தானே தமிழில் தேன் சிட்டு எனப்படுகின்றது. சாதாரணமாக ஒரு நாளைக்கு இவை 1000 பூக்களிலிருந்து தேன் அருந்துகின்றன. செம்பருத்திப் பூக்களின் தேன்தான் இவற்றின் பிரியமான உணவு. பூச் செடிகளின் கிளைகளில் அமர்ந்துகொண்டு தேன் குடிக்கும். அல்லது பூவின் அருகில் பறந்துகொண்டே மகித் துல்லியமாக தமது நீண்ட அலகைப் பயன்படுத்தி தேன் பருகும். ஒரு நாளும் பூவை சிதைத்துவிடாது. பூவின் இதழ்களில் அமர்ந்தாலும் பூவுக்கு ஒன்றும் நடக்காது. காரணம் அவ்வளவு சிறிய, எடை இல்லாத பறவைதானே இந்தத் தேன் சிட்டு.

பூக்களின் நடுவில் ஆழத்தில் இருக்கும் தேனை லாவகமாக உரிஞ்சு எடுப்பதற்கு ஏற்றாற்போலதான் அவற்றின் அலகையும் நாக்கையும் அல்லாஹ் படைத்திருக்கின்றான். ஊசி போன்ற நீண்ட அலகு அவற்றுக்கு பூவில் இருக்கும் தேனை உறிஞ்ச உதவுகின்றது. அது மட்டுமன்றி அவற்றின் அலகைவிடவும் நீளமான நாக்கும் நாக்கில் உள்ள குழாய் அமைப்பும் தேனை உறிஞ்ச இன்னும் உதவியாக இருக்கின்றது. ஆச்சரியம் என்ன தெரியுமா? தேன்சிட்டின் அலகைவிடவும் அவற்றின் நாக்கு மிக நீளமானது. நாக்கை வெளியே நீட்டாத சமயங்களில் (படத்தில் இருப்பதுபோன்று) மண்டையோட்டைச் சுற்றி தமது நாக்கை சுற்றி வைத்துக்கொள்ளும். மலர்களின் தேன் மட்டுமன்றி சிலபோது தேன் பூச்சிகளின் தேனையும் சிறு புழுக்களையும் பூச்சிகளையும் உண்டு தமது உடலுக்கான புரதச் சத்துக்களைப் பெற்றுக்கொள்ளும்.
  
வாழ்க்கை வட்டம்
தேன்சிட்டுக்கள் எப்போதும் ஜோடியாகவே இருக்கும். தோட்டங்களிலும்  மலர்கள்  நிறைந்திருக்கும் இடங்களிலும் 40 முதல் 50 பறவைகள் கொண்ட கூட்டங்களையும் காணமுடியும். சாதாரணமாக இயற்கை சூழலில் வாழ்ந்தால் 5 வருடங்கள் வரை வாழும். பாதுகாப்பான முறையில் கூண்டினுள் வளர்த்தால் 15 வருடங்கள் வரை வாழும். தேன் பருகும்போதும், மலர்களை நெருங்கும்போதும் கணீரென்ற குரலில் கீச்சிட்டுக்கொண்டிருக்கும். அந்த சப்த்த்தை நன்கு அவதானித்தால் சுவீஈஈஈட், சுவீஈஈஈட்...என்று ஒலிப்பதுபோல் இருக்கும். இது ஒருவகை தகவல் பரிமாற்றம் எனலாம். பூக்களில் அமர்ந்து தேன் பருகுவதால் இவை மகரந்தச் சேர்க்கைக்கும் பங்களிப்புச் செய்கின்றன.

தேன் சிட்டுக்கள் மழைக்காலத்திற்கு முன்பே இணை சேர்கின்றன. எனவே இந்தியாவிலும் இலங்கையிலும் சனவரி முதல் ஜுன் வரையான காலங்களில் இணைசேரும். பெண் குருவியைக் கவர்வதற்கான ஆண் ஒரு கிளையில் அமர்ந்துகொண்டு நடனமாடும்.  அவை தலையை தூக்கித் தூக்கியும்  விசிறி போல் தன் இறகுகளை விரித்தும் சுறுக்கியும் ஆடும். தன் குரலையும் பலமாக உபயோகிக்கும். பெண் பறவை ஆணின் குரல் வளம் மற்றும் தோற்றத்தால் கவரப்பட்டு இணைசேர ஒத்துக்கொள்ளும். பின்னர் இரண்டும் சேர்ந்து கூடுகட்ட ஆரம்பிக்கும்.

கூடுகட்டும் தொழிநுட்பம்.
கூட்டிற்கு பாதுகாப்பான இடம் முக்கியம். ஆண் தேன் சிட்டுத்தான் கூடு கட்டும் இடத்தைத் தெரிவுசெய்யும். எனவே முதலில் ஆண் குருவி பாதுகாப்பான இடத்தைத் தெரிவுசெய்யும். அது மரக் கிளையாகவோ எமது வீட்டின் கூரையாகவோ இருக்கும். கூட்டினைக் கட்டுவது பெண் குருவியே. ஆண் குருவியோ தானும் விழுந்து விழுந்து வேலை செய்யும் பாவனையில் கூடக் கூட பறந்து கொண்டிருக்கும். கூடு எப்போதும் தொங்கியபடியே இருக்கும். சிலந்தியின் வலையில் ஒட்டும் தன்மை இருப்பதால் அதனை எடுத்துவந்து அதனுடன் காய்ந்த சருகுகள், வேர்கள், காகிதத் துண்டுகள் சிலந்தியின் வெள்ளை நிற முட்டையின் உறை, பஞ்சு என்பவற்றை ஒட்டி கூட்டை அழகாக அமைக்கும். கூட்டிற்குள்ளே செல்ல பக்கவாடில் சுமார் மூன்று அல்லது நன்கு சென்டிமீடர் அளவிலான துவாரம் இருக்கும். அந்த துவாரத்திற்கு ஒரு 'சன் ஷேடும்' அமைக்கப் பட்டிருக்கும். கூட்டின் உள்ளே பஞ்சு மெல்லிய வேர்த் துண்டுகள் இவற்றால் மெத்தை அமைக்கப் பட்டிருக்கும். இவ்வாறு சிறமத்திற்கு மத்தியில் சுமாராக இரண்டு வாரங்களில் கூடு தயாராகும்.

சிறிய குடும்பம்
கூடு தயாரானதும் பெண் குருவி முட்டையிடும் பருவமும் நெருங்கிவிடும். கூட்டுக்குள் பஞ்சு மெத்தையில் சின்னஞ் சிறிய இரண்டு அல்லது மூன்று முட்டைகளை இடும். இனி பெண் குருவி முட்டைகளை அடைகாக்க ஆரம்பிக்கும். தேவைக்கு மட்டும் வெளியே சென்று விட்டு மீண்டும் வரும். அப்போது ஆண் குருவி குடும்பப் பொறுப்புடன் கூட்டுக்கு வெளியே இருந்து முட்டைகளைப் பாதுகாக்கும். ஆனால் அதற்கு அடைகாக்கத் தெரியாது.  பெண் பறவைக்குத் தேவையான ஆகாரமான தேனையும், பூச்சி, புழுக்களையும், நீரையும் கொண்டுவந்து உணவாகக் கொடுக்கும். இவ்வாறு மூன்று வாரங்களுக்கு முட்டையை பெண் குருவி அடைகாக்கும்.

மூன்று வாரங்களின் பின்னர் குஞ்சுக் குருவிகள் மயிர் இன்றி, கண்கள் திறக்காத நிலையில், சதைக் குஞ்சாக முட்டையிலிருந்து வெளியே வரும். தற்போது ஆண் குருவி தாய்க்கும், பிள்ளைகளுக்கும் சேர்த்து உணவு கொண்டுவரும். அந்த உணவில் குறிப்பாக மாமிசப் பதார்த்தங்கள் இருக்கும். தேனீக்கள், சிலந்திகள், சிறு வண்டுகள், எறும்புகள், புழுக்கள் என்பவற்றையும் குஞ்சுகளுக்கு உணவாக்க் கொடுக்கும். காரணம் துரித வளர்ச்சிக்கு புரதச் சத்து (protein) மிக அவசியம் என்பதால்தான். இப்படி இரண்டு வாரங்கள் உருண்டோடும். தற்போது குஞ்சுக் குருவிகள் நன்கு வளர்ந்திருக்கும். அங்கே அழகியதொரு சிறிய குடும்பத்தைக் காணலாம். மேலும் ஒரு வாரம் பெற்றோருடன் இருக்கும். பின்பு தனியே பறந்து சென்றுவிடும்.

சுப்ஹானல்லா! மிகச் சிறிய, இலகுவில் கண்களில் தென்படாத, கருத்திற்கொள்ளப்படாத இந்த ஒரு குருவியில் அல்லாஹ் எத்துனை அற்புதங்களை வைத்திருக்கின்றான் என்று பார்த்தீர்களா? எத்துனை அற்புதங்கள் இருக்கின்ற என்பதை மீண்டும் ஒரு முறை இக்கட்டுரையை வாசித்துக்கொண்டே எண்ணிப் பாருங்கள். இன்ஷா அல்லாஹ்!
அஷ்.எம்.என்.ஆலிப் அலி (இஸ்லாஹி) B.A
Dip. In psychological Counseling
Al-Quran & Science Researcher

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...