மனிதன் இவ்வுலகில் படைக்கப்படுவதற்கு முன்பு அல்லாஹ் அவனை ரூஹாக ஆலமுல் அர்வாஹில் படைத்து தன்னை இரட்சகனாக ஏற்கும்படி ஓரு வாக்குறுதியை வாங்கியுள்ளான். அவ்வாக்குறுதிதான் இவ்வுலகில் மனிதனிடம் இறைவன் இருக்கின்றான் என்ற உள்ளுணர்வாக, இயல்பூக்கமாக வெளிப்படுகின்றது. எவ்வாரெனின் மனித இயல்பு கற்றலோ கற்பித்தலோ இன்றி காரண காரிய விதியை ஏற்றுக்கொள்கின்றது.
காரண காரிய விதியென்பது எல்லா நிகழ்வுக்கும் பின்னால் ஒரு காரணமுண்டு. காரணமின்றிக் காரியமில்லை. செயல்களுக்குப் பின்னால் செய்தவன் ஒருவன் இருக்கின்றான். எதுவம் காரணமின்றித் தோன்றாது. இந்த விளக்கமே காரண காரிய விதியாகும்.
சிறு பிள்ளைகள் தம்மைச் சூழவுள்ள சிறுசிறு விடயங்களை உற்றுநோக்கி அவைகுறித்து அதிகமதிகம் கேள்விகேற்பதைப் பார்க்கின்றோம். தமக்குத் திருப்திகரமான பதில் கிடைக்கும்வரை இது தொடர்கிறது. இது யாரது தூண்டுதலுமின்றி மனித உள்ளம் இயல்பாகவே காரணத்திற்கான காரியத்தை வேண்டி நிற்பதை உணர்த்துகின்றது.
மனித உள்ளத்தில் இறைவன் இருக்கின்றான் என்ற இயல்பூக்கம் குறித்து பிரபல்யமான தத்துவ அறிஞர் ‘டெகாட்’ இவ்வாறு கூறகின்றார். “என்னில் குறைபாடுள்ளது என்பதை நான் உணரும் அதேவேளை பூரணத்துவமிக்க ஒன்று உள்ளது என்பதை நான் உணர்கிறேன். பூரணத்துவத்தின் அனைத்துப் பண்புகளையும் கொண்ட இறைவனே இவ்வுணர்வை என்னில் வைத்துள்ளான் என நம்பாதிருக்க முடியவில்லை”.
வரலாற்றுத் தொடராக ஏதோவொரு வகையில் மனித உள்ளம் இறைவன்பால் நாட்டம் கொண்டுள்ளது.
“தத்துவமோ, அறிவியலோ, கலைகளோ காணப்படாத மனிதக்; கூட்டங்கள் வாழ்ந்துள்ளன என்றால் நம்ப முடியும். ஆனால் மார்க்கமே இன்றி மனிதன் வாழ்ந்தான் என்றால் அதை ஒருக்காலும் ஏற்கமுடியாது” என பிரான்ஸியத் தத்துவ ஞானி ஜெபர்ஸன் கூறுகின்றார். அதேபோன்று பழம் கிரேக்க வரழாற்றாசிரியர் புலூடாக் மனித இயல்பை இவ்வாறு விளக்ககின்றார். “வரலாற்றில் கோட்டைகள், பாடசாலைகள், மாடமாளிகைகள் அற்ற நகரங்கள் காணப்பட்டன. ஆனால் மத வழிபாட்டுத் தளங்கள் இல்லாத நகரங்கள் ஒரு போதும் இருக்கவில்லை”.
அனைத்தும் தற்செயலாகத் தோன்றியவை என்ற இறைமறுப்பாளர்களின் - நாஸ்திகர்களின் கொள்கை மிகவும் விகடமானது. இப்பிரபஞ்சத்தில் படைப்பினங்களில் காணப்படும் அற்புதத் தன்மைகள், ஒவ்வொன்றுக்குமிடையிலான ஏதோ ஒருவிதத் தொடர்பு, அவற்றில் காணப்படும் ஒழுங்கு, திட்டமிடல், நேர்த்தி என்பன தற்செயல் நிகழ்வுக்கு முற்றிலும் முரணானது என பேராசிரியர் மொரிசன் கூறுகிறார்.
ஆரய்ந்து அறிவதுகூட அவசியமற்றது என இப்னு அதாஉல்லாஹ் ஸிக்கந்தர் இவ்வாறு கூறுகிறார். “இறைiவா! தன் இறுப்புக்கே உன்னில் தங்கியிருக்கும் பொருட்களை உனக்கு ஆதாரமாக எப்படி நான் கொள்வேன்? நீ மிகத் தெளிவானவன்”.
இறைவன் இருப்பதென்பது மிகத்தெளிவானதாக இருக்கும்போது நவீன தத்துவார்த்தத்தின் தந்தை என மேற்குலகம் போற்றும் ‘பேடன் ரஸல்’ போன்றோரின் இறைவன் குறித்த இக்கோட்பாடு எவ்வளவு மடத்தனமானது. “புலனுக்கு அப்பாற்பட்டவற்றை விஞ்ஞானம் நிறூபித்தாலே அன்றி நம்பமாட்டோம்”. இக்கோட்பாட்டின் மூலம் இறைவனையே நிறாகரித்து விஞ்ஞானத்தைக் கடவுளாகக் கொண்டுவிட்டனர். ஒரு கவிஞன் இதனை இவ்வாறு கூறுகின்றான். “பகலை நிறுவவே ஆதாரம் தேவையெனின் அந்த அறிவில் வேறெதுவும் சரியாகத் தோன்றாது”
James jeans என்பவர் ஒரு வானியல் வல்லுனர், ஒரு நாஸ்த்திகரும்கூட. ஆனால் விஞ்ஞான ஆய்வுகளின் பயனாக இறுதியில் விஞ்ஞானத்தின் சிக்கல்களை இறை நம்பிக்கையின்றித் தீர்க்க முயாது என்ற முடிவுக்கு வந்தார்.
இப்பிரபஞ்சம் எதேச்சையாகத் தோன்றியதென வாதிக்கும் நாஸ்திகர்கள் அவர்கள் வாதத்திலேயே இறை இருப்புக்கான சான்றுகள் உள்ளதை அறிய மறந்துவிட்டனர். செயற்கையான பொருட்கள் ஒவ்வொன்றிலும் நாம் ஏகப்பட்ட குறைகளைக் காண்கின்றோம். அதேசமயம் இயற்கையாகத் தோன்றியதாகக் கூறப்படுபவற்றில் சிறிதும் குறைகான முடியாதுல்லது. அவ்வாறெனின் அவ்வியற்கை எவ்வளவு சக்தி வாய்ந்ததும் நுண்மையானதுமாயிருக்கும். அந்த இயற்கைதான் இந்தப் பிரபஞ்சத்தை உறுவாக்கியதாக நாஸ்திகர்கள் கூறினால் அவர்கள் கூறும் அவ்வியற்கை வேறொன்றுமல்ல. அந்த அல்லாஹ்வைத் தான் கூறுகிறார்கள்.
படைப்பினங்கள் பற்றிய ஆராய்ச்சிகளில் இறங்கி அதனூடாக இறைவனைக் கண்டுகொண்ட விஞ்ஞானிகள் எத்தனையோபேர். பரந்து விரிந்த இந்த சமுத்திரத்தில் முத்தெடுக்க மூழ்கிய பலர் அதிலே இன்பங்கண்டு கரைசேராமல் அதிலேயே மூழ்கிப்போயினர். ஒவ்வொரு வருடமும் ஜெர்மனியில் இஸ்லாத்தை நோக்கி வருபவர்களில் 20% வர்கள் நாஸ்திகர்கள் எனற அந்நாட்டு பெண் ஆய்வாளரான மேரி எலிசபத் போமனின் கூற்று இதனை வலுப்படுத்துவதாயுள்ளது.
இவ்வாறு நாஸ்திகக் கொள்கை பகுத்தறிவால் ஏற்றுக்கொள்ள முடியுமானவொன்றோ மனித இயல்புடன் பொருந்துகிறவொன்றோ அல்ல என்பது தெளிவாகிவருகின்றது. சத்தியத்தை எவ்வளவுதான் பொய்ப்பிக்க முயன்றாலும் அது சத்தியமானபடியால் என்றும் ஒளிவிட்டுப் பிரகாசித்துக்கொண்டே இருக்கும்.
“அல்லாஹ்வின் பிரகாசத்தை தம் வாய்களால் (ஊதி) அனைத்துவிட அவர்கள் நாடுகிறார்கள். நிராகரிப்போர் வெறுத்தபோதிலும் அல்லாஹ்வோ தனது பிரகாசத்தைப் பூர்த்தியாக்குகிறான்”
(அஸ்ஸஃப்: 08)
ஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்)
3 comments:
மாஷா அல்லாஹ் சிறந் ஆக்கம். பதிவுகள் மென்மேலும் தொடர எம் வாழ்த்துக்கள்.
Nice article brother.
fathima.....
நிச்சயமாக சத்தியம் வந்துவிட்டது. அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியம் அழிந்தே தீரும்......
(அல்குர்ஆன்)
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...