ஆலிப் அலி (இஸ்லாஹி)
குறிப்பு : இவ்வாய்வினை நீண்ட நாள் கடும் முயற்சியின் பின்னர் கஷ்டப்பட்டு செய்து முடித்துள்ளேன். எனவே யாரும் இதனை எனது அனுமதியின்றி Copy செய்து தமது பெயரிலோ அல்லது தமது வலைத் தளங்களிலோ பிரசுரிக்க வேண்டாம் என்பதனை இறைவனை முன்நிறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன். ஆனால் எனது பெயருடனோ அல்லது எனது வலைத் தள முகவரியுடனோ பலரும் பயன்பெற இவ்வாக்கத்தினைப் பகிர்ந்துகொள்ள நான் சம்மதிக்கின்றேன். இது ”மீள்பார்வை” பத்திரிகையில் (17 ஜுன் 2011) பிரசுரமான ஆக்கமாகும்.
“كلا لئن لم ينته لنسفعا باالناصية ناصية كاذبة خاطئة....”
“அவன் இச்செயலிலிருந்து விலகிக்கொள்ளாவிடின் நிச்சயமாக (அவனது) முன்நெற்றியை (நாஸியாவை)க் கடுமையாக இழுத்து விடுவோம். அது தவறிழைத்து பொய்யுரைக்கும் முன்நெற்றியாகும்.” (96:15,16)
நபி (ஸல்) அவர்களைத் தொழவிடாமல் தடுக்கப்போவதாக அபூஜஹ்ல் சூழுரைத்தபோது அவனைக் கண்டித்து மேற்கூறிய வசனம் இறக்கப்பட்டது. இந்த நாஸியாவை அல்லாஹ் தொடர்ந்து வர்ணிக்கும்போது அது தவறிழைக்கக் கூடியதாகவும் பொய்யுரைக்கக் கூடியதாகவும் குறிப்பிடுகின்றான்.
நாஸியாவைப் பற்றி விளங்க சற்று மூளை பற்றிய அறிவும் அவசியப்படுகின்றது. மூளை மூன்று பகுதிகளாகப் பரிக்கப்படுகின்றது. அவை முன் மூளை (Cerebrum)> நடு மூளை, பின் மூளை என்பனவாகும். முன் மூளையானது முன்நெற்றி எழும்புடன் (Frontal bone) இணைந்தே அமைந்துள்ளது. இவ்வெழும்பு முன் மூளையைப் பாதுகாக்கும் தொழிலைச் செய்கின்றது.
முன் மூளையில் அடுக்கடுக்காகப் பல மடிப்புக்கள் நிறைந்து காணப்படுகின்றன. இம்மடிப்புகள்தான் முன் மூளையின் முக்காள் பாகத்தையே ஆக்கிரமித்துள்ளன. இந்த முன் மூளையின் மேலால் 4.5mm அளவில் ஒருவகை மெலிதான உரை அமைந்துள்ளது. இதுவே Cortex எனப்படுகின்றது. இதில் 800 கோடி நரம்புச் செல்கள் காணப்படுவதோடு அவற்றுக்கு இடையேயுள்ள ஒரு கன இணைப்பில் ஒரு இன்ச் இடைவெளிக்குள் 16>000 Km அளவு நுட்பமான பல்வேறு மடிப்புகளினாலான அமைப்புகள் காணப்படுகின்றன. இம்முன் மூளை மடிப்புகளே மனிதனது ஆற்றல்களையும் திறமைகளையும் ஆளுமைகளையும் தீர்மானிக்கின்றன.
ஒரு விடயத்தில் தீவிரமாக ஈடுபடுவதிலும் சிந்திப்பதிலும் விடயங்களை ஞாபகத்தில் இருத்திக்கொள்வதிலும் இத்தோல்பகுதியின் பங்கு அலாதியானது. ஒரு விடயத்தை உணர்ந்து அதனை ஆரம்பிப்பதிலும் பிரித்தறிவதிலும் இது பாரிய செல்வாக்குச் செலுத்துகின்றது. இவையாவும் அமைந்துள்ள முன் மூளையே “Cerebrum” எனப்படுகின்றது. அல்குர்ஆன் இதனை நாஸியா என்றழைக்கின்றது.
ஜித்தாவிலுள்ள அப்துல் அஸீஸ் பல்கலைக்கழகத்தின் மறுத்துவத் துறைப் பீடாதிபதி பேராசிரியர் முஹம்மத் யூசுப் நாஸியாபற்றிய ஆய்வுகளை மேற்கொண்டதன் பின்னர் இவ்வாறு கூறுகின்றார். “நாஸியாவே மனிதனது நடத்தைகளைத் தீர்மானிக்கின்றது. ஒரு மனிதனை உண்மை பேசவும் பொய் பேசவும் நல்லது செய்யவும் தீயது செய்யவும் தூண்டுவது நாஸியாவேயாகும். காரியங்களைச் செய்வதற்குத் தீர்மானம் எடுக்ககுமிடமாக நாஸியாவே காணப்படுகின்றது.” என்று விளக்குகிறார்.
நாஸியா வழங்கும் தீர்மானங்களை வைத்தே உடல் அவயவங்கள் கருமமாற்றுகின்றன. இதுதொடர்பாக “Essentials of anatomy and physiology” என்ற கற்கை பின்வருமாறு விளக்குகின்றது. “தூண்டுதல், திட்டமிடுதல் மற்றும் ஒரு விடயத்தை ஆரம்பித்துவைத்தல் போன்ற செயற்பாடுகளை முன்நெற்றியே செய்கின்றது” என்கின்றது. எனவேதான் அமெரிக்கா போன்ற நாடுகளில் தொடர்ந்தும் பெரிய பெரிய குற்றங்களைச் செய்துகொண்டிருக்கும் குற்றவாளிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும் சந்தர்ப்பத்தில் அவர்களது மூளையின் முன்பகுதியில் உள்ள நாஸியாவை சத்திர சிகிச்சை மூலம் துண்டித்து அகற்றிவிடுகின்றனர். இதனால் அக்குற்றவாளி சுயமாகத் தீர்மானம் எடுத்து எதனையும் செய்யும் சக்தியிழந்து சொல்வதை மாத்திரம் செய்யும் ஒரு ரோபோ போன்று ஆகிவிடுகின்றான்.
இதுபற்றி Dr.கீத்மூர் இவ்வாறு குறிப்பிடுகின்றார். “நாஸியாவானது மனிதனைத் தீர்மானமெடுக்கவும் அவனது நடத்தைகளைக் கட்;டமைக்கவும் செய்கின்றது. ஒருவன் பொய் சொல்ல நாடினால் பொய், சொல்வதா இல்லையா என்ற தீர்மானம் மூளையின் முன்நெற்றிப் பகுதியாலேயே (நாஸியா) எடுக்கப்படுகின்றது. அவன் ஒரு குற்றம் செய்ய நாடினாலும் அவ்வாறுதான்” என்கிறார்.
தொடர்ச்சியாக பொய்யுரைக்கும் ஒரு பெண்ணை FMRI (functional magnetic resonance imaging) தொழில்நுட்பம் மூலம் இஸ்கேனிங் இயந்திரத்தில் இட்டு கட்டங்கட்டமாக ஆய்வு செய்து பெறப்பட்ட புகைப்படங்களே இவை. இதில் சிவப்பு நிறத்தில் காணப்படுவது நாஸியாப் பகுதியாகும். அடுத்து இரண்டாவது படத்தில் நாஸியாவே மஞ்சல் நிறத்தில் காட்டப்பட்டுள்ளது. முதல் படம் உண்மை உரைக்கும் தருவாயில் இஸ்கேனர் மூலம் எடுக்கப்பட்ட படம். அதனைத் தொடர்ந்து உள்ள ஏனைய படங்கள் அப்பெண் படிப்படியாகப் பொய்யுரைக்க ஆரம்பித்துள்ளமையைக் காட்டுகின்றது. ஆரம்பித்தில் மிகத் தெளிவாகக் காட்சிதரும் நாஸியா படிப்படியாக பிரகாசம் குறைந்து இறுதியில் கருமை நிறமடைந்து காணமால் போயிருப்பதைக் காணலாம். பொய்யிலே உருண்டு பிறண்டு மூழ்கிப் போனவர்களது நாஸியாவும் இவ்வாறுதான் கருமை படிந்து காட்சியளிக்கும்.
இங்கு நபி (ஸல்) அவர்கள் மொழிந்த ஒரு ஹதீஸை ஞாபகிப்பது சிறந்ததெனக் கருதுகின்றேன்.
"إن العبد إذا أخطأ خطيئة نكت في قلبه نكتة سوداء. فإن هو نزع واستغفر وتاب صقل قلبه. فإن عاد زيد فيها حتى تعلو قلبه فهو الران."
“அடியான் பாவமான தொரு விடயத்தைச் செய்துவிட்டால் அவனது உள்ளத்திலே கருமை நிறப் புள்ளியொன்று படிகின்றது. அவன் அப்பாவத்தை விட்டு பாவமன்னிப்புத் தேடினால் அவனது உள்ளம் தூய்மையடைகின்றது. மீண்டும் அவன் பாவத்தின்பால் மீண்டு மூழ்கிப்போனால் அவனது உள்ளம் முழுதும் துருப்பிடித்து கருமையடைந்துவிடுகின்றது.” (திர்மிதி, அஹ்மத்) இதனைத் தொடர்ந்து நபிகளார் பின்வரும் வசனத்தை ஓதிக்காட்டினார்கள்.
அல்லஹ் கூறுகின்றான் “அவர்கள் தேடிக்கொண்டவை அவர்களது இதயங்களின் மீது துருவாகப் படிந்துவிட்டன.” (83:4)
உள்ளம் என்பது எங்குள்ளது என்பது இதுவரை அறியப்படாத நிலையில் அது தலைப் பகுதியில் இருக்கவேண்டும் என்ற கருத்து தற்போது முன்வைக்கப்படுகின்றது. அந்தவகையில் பார்த்தால் இந்த ஹதீஸ் நாஸியாவைக் குறிப்பதாகவும் இருக்கலாம். பொய் என்பது சகல பாவங்களுக்குமான நுழைவாயில் என்பதால் பொய் கூறுவபன் பல்வேறு பாவங்களையும் செய்து அவனது உள்ளம் விரைவில் கருமையடைந்து விடுகின்றது.
பொய்யுரைப்பவர்களை இனங்காண்பதற்காக விஞ்ஞானிகளால் ஒரு சிறு இயந்திரம் கண்டுபடிக்கப்பட்டுள்ளது. அவ்வியந்திரத்தைத் தலையில் பொறுத்திக்கொண்டு ஒருவர் உண்மை பேசினாலோ பொய்யுரைத்தாலோ சிறு ஒலியுடன்கூடிய சிறு மின்குமிழை ஒளிரச்செய்து காட்டிக்கொடுக்கின்றது. இது நாஸியாவுடன் தொடர்புபடுத்தித் தயாரிக்கப்பட்டுள்ள ஒரு இயந்திரமாகும். பொய் சொல்வதில் வல்லவர்களையும் பச்சை பச்சையாகப் பொய்யுரைப்பவர்களையும் இவ்வயிந்திரத்தால் இனங்காண முடியாது. காரணம் அவர்களது நாஸியா கருமை படிந்து போயிருப்பதாகக்கூட இருக்கலாம்.
நாஸியா பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டுவிட்டு பேராசிரியர் கீத்மூர் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். “நாம் தற்போது அறிந்துகொண்டுள்ள இந்த முன்நெற்றியின் இயக்கங்கள் பற்றி வரலாற்றில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. மறுத்துவ நூல்களில்கூட காணப்படவில்லை. நபி (ஸல்) அவர்களின் காலம் முதல் அதன் பிற்பட்ட காலங்கில்கூட சிறு குறிப்புக்களோ விளக்கங்களோ கூட இருந்ததில்லை. ஆனால் அல்குர்ஆன் இதுபற்றி அன்றே குறிப்பிட்டுள்ளது. இதனால்தான் அல்குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தைகள் என்றும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனது தூதர் என்பதும் உறுதியாகின்றது” என்றார்.
நாஸியாவானது மனிதர்களுக்கு மாத்திரமன்றி அனைத்து உயிரினங்களிடமும் காணப்படுகின்றது என்பதை பின்வரும் அல்குர்ஆனிய வசனம் கூறுகின்றது. “எந்தவொரு ஜீவராசியாயினும் அவற்றின் முன்நெற்றியை (நாஸியாவை) அவன் (அல்லாஹ்) படித்துக்கொண்டே இருக்கின்றான்.” (11:56)
உசாத்துணைகள்:
- "بينات الرسول (ص) و معجزاته" - mg;Jy; k[Pj; ]pd;jhdp.
2. A Brief illustrated guide to understanding Islam
ஆலிப் அலி (இஸ்லாஹி)
4 comments:
SubahanaALLAH! incredible research... May this truth reachout to the wide world and let hearts be enlightened,inshaALLAH...
weldon brother,my heartiest wishes 4 u 2 do this ,allah guides whom he wish:allah knows best may allah guide us 2 get his mercy...........
சிறப்பான தகவல்.....
மென்மேலும் உமது தேடலும் ஆக்கங்களும் வளர்ந்து விருட்சமாகட்டும்..........
fathima from Eravur
allahu akbar........ quraan koorum unmaiyai ulaham arindae theerum..
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...