கட்டமைப்பைப் பலப்படுத்தும் கூட்டமைப்பின் பண்புகளில் பிரதானமானவொன்றுதான் கட்டுப்பாடு. ஒரு
நிறுவனத்தின், குழுவின் அல்லது சமூகத்தின்
வெற்றி அதன் ஆரோக்கியமான தலைமைத்துவத்திலும் கட்டுப்படான அங்கத்தவர்களிலும்தான் தங்கியுள்ளது.
எத்தகைய இலக்குகள், திட்டமிடல்கள்,
வழிமுறைகள் இருந்தாலும் அவற்றைக்
கொண்டுநடாத்தக்கூடிய அங்கத்தவர்களிடம் செவி தாழ்த்துதல், கட்டுப்படுதல் என்ற பண்புகள் இல்லாதிருந்தால் ஒருக்காலும்
அந்த இலக்குகளை அடைந்துகொள்ள முடியாது.
இறைத் தூதர்கள் அனைவரும் தத்தமது சமூகத்தினருக்குப் போதித்த இரண்டு முக்கியமான
விடயங்கள், ஒன்று தக்வா-அல்லாஹ்வை
அஞ்சுவது. இரண்டாவது தாஅத்-கட்டுப்பட்டு நடப்பது. தரமான தலைமை அவசியம் அந்தத் தலைமைக்கு
செவிதாழ்த்துதல் அவசியம் அதற்குக் கட்டுப்படுதல் அவசியம். இதனை வல்லவன் அல்லாஹ்வின் பிரபஞ்சப் படைப்புகள் அனைத்திலும் கண்டுகொள்ளலாம்.
இந்தக் கட்டுப்படுதல் என்ற ஒழுங்கு அணுவிலும் உண்டு. மரம், செடி, கொடிகளிலும் உண்டு. எறும்பிலும் உண்டு, தேன் பூச்சியிலும் உண்டு கடலில் வாழும் ஜீவராசிகளிலும்
உண்டு. சூரியனைப் பாருங்கள், சந்திரனைப் பாருங்கள்,
அந்த சூரியனைச் சுற்றிவரும்
கோள்களைப் பாருங்கள். இவை யாவற்றிலும் ஒரு தலைமைத்துவமும் கட்டுப்படுதலும் ஒன்றித்துப்
போயிருப்பதைப் பார்க்கலாம்.
இவையெல்லாவற்றிற்கும் மேலாக மனிதனின் பரம விரோதி, அல்லாஹ்வால் சபிக்கப்பட்ட ஷைத்தான்கள்கூட இப்லீஸ்
என்ற பெரிய ஷைத்தானுக்குக் கட்டுப்பட்டு, செவிதாழ்த்தி ஒரு கட்டுக்கோப்புடன்தானே செயற்படுகின்றன? அப்படியானால் ஏன் இந்த மனிதன் மட்டும் கட்டுப்பாடு
எனும் கட்டிலிருந்து விடுபட்டு வாழ விரும்புகின்றான்?
அல்லாஹ் அல்குர்ஆனில் நான்கு இடங்களில் (2:285) (4:46) (5:7) (24:51) “ஸமிஃனா வஅதஃனா – செவிமடுத்தோம் கட்டுப்பட்டோம்” என்ற சொற்பிரயோகங்களைப் பயன்படுத்துகின்றான். இவ்வாறு
கூறியவர்களைப் புகழ்ந்துரைக்கின்றான். இதே ஒரு வசனத்தில் “ஸமிஃனா வஅஸைய்னா – செவிமடுத்தோம் மாறுசெய்தோம்” என்று கூறிய யூதர்களை அல்லாஹ் கண்டித்தும் அவர்களை
சபித்தும் உள்ளான்.
வெற்றியின் இரு பண்புகளில் ஒன்று செவிமடுத்தல், மற்றையது கட்டுப்படுதல். “கட்டுப்பாடு இல்லாத இடத்தில் கூட்டமைப்பு இல்லை, கூட்டமைப்பு இல்லாத இடத்தில் இஸ்லாம் இல்லை”
உமர் (ரழி)
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...