"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

10 January 2013

ரிஸானா நபீக், இனி நாம் செய்யவேண்டியது என்ன?

ரிஸானா நபீக் இற்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும்போது எடுக்கப்பட்ட புகைப்படம், வீடியோ என பொய்யான தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் குறிப்பாக facebook இல் முஸ்லிம்களாலேயே பகிரப்பட்டு வருகின்றன. தயவு செய்து போலிகளை தவிர்ந்துகொள்ளவேண்டும் இவற்றைப் பார்த்துவிட்டு முஸ்லிம் அல்லாதவர்கள் பச்சை பச்சையாக முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் தூற்றி வருகின்றனர்.

ரிஸான நபீக்தான் இறையடி சேர்ந்துவிட்டார். தற்போது அவரது குடும்பத்தையாவது பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எமக்குள்ளது. முஸ்லிம் அல்லாத சில சக்திகள் இதனைப் பயன்படுத்தி மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட வாய்ப்புள்ளது. முஸ்லிம் தலைமைகளும், தனவந்தர்களும் அவரது குடும்பத்திற்கு செய்யவேண்டிய கடமைகளைக் கருத்திற்கொண்டு செய்து கொடுக்க முன்வரவேண்டும்.

இது ஒரு முஸ்லிம் பெண்ணுக்கு நடந்தால் ஏதும் அசம்பாவிதங்கள் நடக்காதிருக்கின்றன. இதுவே ஒரு சிங்களப் பெண்ணுக்கு நடந்திருந்தால் இன்று இலங்கையில் முஸ்லிம்கள் என்ன என்ன பிரச்சினைகளை முகங்கொடுக்க வேண்டி இருந்திருக்குமோ? அல்லாஹ்தான் அனைத்துக்கும் போதுமானவன்.

ரிசானா சகோதரிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இச்சம்பவம் இன்னு எமது நாட்டில் முஸ்லிம் அல்லாதவர்களையும் உலுக்கிவிட்டுள்ளது. முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் மிகவும் கீழ்த்தரமாக சாடும் நிலைமையை வலைதளங்களில் காணமுடிகின்றது. இனி தஃவா இயக்கங்களும் அமைப்புகளும் என்ன செய்ய வேண்டும் என்பதனை திட்டமிட்டு முன்னெடுக்க வேண்டும்.

பெண் மக்களை, பிள்ளைகளையும், மனைவியரையும் வெளிநாட்டில் சம்பாதிக்க அனுப்பி வீட்டில் இருந்துகொண்டு உண்டு தொலைக்கும் ஆண்மை கெட்ட ஆண்மக்களே! இனியாவது உங்கள் பெண்களை வெளிநாடு அனுப்புவதைத் தவிர்ப்பீரா?

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

2 comments:

ஊமை விழி said...

இன்று எம் சமுதாயத்தை ஏனைய சமூகம்இழிவாய் பார்க்கும் ஈனநிலைக்கு மீண்டும் தள்ளப்பட்டிருப்பது
எமது துரதிஷ்டமே.என்றாலும் உண்மைநிலையை புடம் போட்டு காட்டிய உங்கள்பணிக்கு நன்றி.

Aalif Ali said...

இனி தஃவா அமைப்புகளின் முன்னெடுப்புகள்தான் மிக முக்கியம்

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...