"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."
Showing posts with label பிரபஞ்ச அழிவு. Show all posts

18 March 2014

பிரபஞ்ச உருவாக்கம், பிரபஞ்ச அழிவு, மஹ்ஷர் வெளி

உலக அழிவு எப்படி நிகழும் என்பதை அச்சொட்டாக இல்லாவிடினும்  அல்குர்ஆன் மற்றும் சுன்னாவின் நிழலில் ஓரளவேனும் விளங்கச் சற்று முயற்சிப்போம். நவீன விஞ்ஞான ஆய்வுகள் சூரிய மண்டலம் உறுப்பெற்று அதனுடைய கிரகங்கள் அனைத்தும் முழுவளர்ச்சி பெற்று அதாவது பிரபஞ்சம் படைக்கப்பட்டு இற்றைக்கு 13.5 பில்லியன் வருடங்களாகின்றன என்கின்றது. அத்தோடு இப்பிரபஞ்சம் தொடர்ந்தும் வினாடிக்கு 300,000 Km வேகத்தில் விரிவடைவதாகவும் குறிப்பிடுகின்றது. இவ்வாறு விரிவடையும் பிரபஞ்சம் முழுமையாக அழியும் என்பதாக இஸ்லாம் கூறிக்கொண்டிருக்கின்றது. இன்று விஞ்ஞானமும் அதனை ஏற்றுக்கொண்டுள்ளது. பிரபஞ்ஞ அழிவு பற்றி அறிவதற்கு அதன் உருவாக்கம் பற்றி சிறிது அறிந்துகொள்வது அவசியம்.

பிரபஞ்ச உருவாக்கம்.

பிபஞ்சம் எப்படி உருவானதோ அவ்வாறே இது அழிவதும் நிச்சயமானதாகும். பிரபஞ்ச உருவாக்கம் பற்றி பெரு வெடிப்புக் கோட்பாடு Big Bang Theory மிக அழகாக எடுத்துக்கூறுகின்றது. இல்லாமையிலிருந்தே இப்பிரபஞ்சம் உருவானது என்பதை இன்றைய விஞ்ஞானம் நிரூபித்துள்ளது. பிரபஞ்சம் படைக்கப்பட முன்பு இங்கு யாதுமே அற்ற சூனியமாகவே இருந்துள்ளது. அப்போது நீர், காற்று, ஒளி, ஒலி ஏன் காலம்,  நேரம்,  இடைவெளி (Space) என யாதும் அங்கு காணப்படவில்லை. இதுபோன்றதொரு இடத்தைக் கற்பனை பண்ணுவதுகூட மிகவும் சிரமமான விடயம்.

ஆனால் அங்கு சில வாயுக்களும், சடத்துணிக்கைகளும் ஒன்று திரண்டு மிகச் சிறிய அளவில் புகை மூட்டமாக ஒரு புள்ளியின் அளவில் உருவாகின. இதுவே Cosmic egg என்ப்படுகின்றது. இது குறித்து அல்லாஹ் அல்குர்ஆனில் பின்வருமாறு கூறுகின்றான். நிச்சயமாக வானங்களும் பூமியும் (ஆரம்பத்தில் புள்ளியாக) இணைந்தே இருந்தன. பின்னர் இவ்விரண்டையும் நாமே பிரித்தோம்என்பதை இந்நிராகரிப்போர் பார்க்கவில்லையா?” (21:30 / 41:11)

இந்த Cosmic egg இனுள் ஏற்பட்ட அதிகூடிய அமுக்கம், காரணமாக அது பாரிய அழுத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதனையே Big Bang –  பெரு வெடிப்பு என விஞ்ஞானம் குறிப்பிடுகின்றது. இப்பெரு வெடிப்புடன் சேர்ந்து வெடித்துச் சிதறிய பல துணிக்கைகள் ஒன்றோடொன்று இணைந்து சூரியன், சந்திரன், கோள்கள், நட்சத்திரங்கள், கெலக்ஸிகள்... என இப்பிரபஞ்சப் பொருட்கள் உருவாகின. அன்று அப்பாரிய வெடிப்பினால் ஏற்பட்ட பெரு விசையின் காரணமாக தொடர்ந்தும் விரிவடைய ஆரம்பித்த இப்பிரபஞ்சம் இன்றும் இன்னும் விரிவடைந்துகொண்டே செல்கின்றது. 1929 ஆம் ஆண்டு Edwin Hubble மேற்கொண்டு வெளியிட்ட ஆய்வுகள் இதனை உறுதிப்படுத்துகின்றன. அல்குர்ஆனோ பிரபஞ்சத்தின் இவ்வரிவாக்கம் பற்றி என்றோ கூறிவிட்டது. அல்லாஹ் கூறுகின்றான். “(எவரது உதவியுமின்றி) எம் கைகளினாலே நாம் வானத்தை அமைத்தோம். மேலும் நாம் அதனை வரிவாக்கிக்கொண்டே இறுக்கின்றோம்.” (51:47) என்கின்றது.

பிரபஞ்சத்தின் அழிவு

இவ்வாறு விரிவடையும் பிரபஞ்ஞம் தொடர்ந்தும் விரிவடைந்துகொண்டே செல்லாது. ஒரு தருனத்தில் அதன் விரிவாக்கம் அவ்வாறே நின்றுவிடும். அப்போது பிரபஞ்சத்தினுள் இருக்கும் அனைத்து திண்மப்பொருட்களும் திரவ, வாயுப் பொருட்களும் அழிவடைந்து விடும் என்பதனை இன்றைய விஞ்ஞானம் கண்டறிந்துள்ளது. உலக அழிவுபற்றிக் கூறும் அல்குர்ஆன் அத்தோடு நின்றுவிடாமல் மீண்டும் அல்லாஹ் எவ்வாறு மஹ்ஷரை உருவாக்குகின்றான் என்பதனையும் தெளிவாகவே விஞ்ஞான பூர்வமாக கூறியுள்ளது.

முதல் சூர் ஊதப்படல்.

உலக அழிவுக்கான சிறிய பெரிய அடையாளங்கள் அனைத்தும் நடைபெற்று முடிவடைந்த பின்னர் முதலாவது சூர் ஊதப்படும். அந்த சூருடன் அல்லாஹ் நாடிவர்களைத் தவிர மற்ற அனைவரும் இறந்துவிடுவர். திருமறை கூறுகின்றது. மேலும் (முதல்) ஸ{ர் ஊதப்படும். பின்னர் வானங்களில் இருப்பவர்களும் பூமியிலிருப்பவர்களும் (அல்லாஹ் நாடியவர்களைத் தவிர) மூர்ச்சித்து (சித்தமிழந்து வீழ்ந்து) விடுவார்கள்.” (39:68)

தரையிலும் கடலிலும் ஏற்படும் அழிவுகள்.

சூர் ஊதப்படுவதோடு சீராக இயங்கிக்கொண்டிருக்கும் இப்பிரபஞ்சத்தில் பாறிய மாற்றங்கள் நிகழ ஆரம்பிக்கின்றன. பூயின் நிலப்பரப்பில் இருந்து அழிவுகள் ஆரம்பிக்கும். பூமி பலமாகக் குழுங்கி பூகம்பம் ஏற்படும். அதன் விளைவாக மலைகள் ஒன்றோடு ஒன்று தூக்கி எறியப்பட்டு தூள் தூளாக்கப்படும். கடல் பொங்கி அதற்கு மத்தியில் உள்ள திரைகள் அகன்று கரைக்குள் வரும். நீர் பற்றி எரிய ஆரம்பிக்கும்.

பூமியானது (அதன் அடிப்பாகத்திலிருந்து) கடுமையான அசைவாக அசைக்கப்பட்டுவிடும்போது”(99:01) “பூமியும் மலைகளும் உயர்த்தப்பட்டு அவ்விரண்டும் ஒரே தூளாக தூளாக்கப்பட்டுவிட்டால்..”(69:14) “கடல்களும் பொங்கவைக்கப்பட்டு (அவற்றுக்கு மத்தியிலுள்ள திரைகள் அகற்றப்பட்டு ஒன்றாகக் கலந்து) விடும்போது.”(82:03) “கடல்களும் தீ மூட்டப்படும்போது”(81:06)

விண் வெளியில் ஏற்படும் அழிவுகள்.

சூரியனின் ஈர்ப்பு விசைதான் எமது புவிக் கோள் உட்பட மற்றைய ஏழு கோள்களையும் சீராக இயங்கச் செய்கின்றது. ஆனால் சூரியனின் சக்தி தீர்ந்து அது கருந்துளையாகிவிடுவதாக குர்ஆன் கூறுகிறது.  சூரியன் (ஒளி நீக்கப்பட்டு) சுருட்டப்பட்டு விடும்போது. நட்சத்திரங்களும் (ஒளியிழந்து) உதிர்ந்துவிடும்போது” (81:1,2) அவ்வாறு நடந்தால் சூரியனின் ஈர்ப்பிலிருந்து ஒவ்வொரு கோளும் விடுபட்டு ஒன்றுடன் ஒன்று மோதி அழிந்து விடும். கருந்துளையான சூரியன் கோள்களை அதனுள் ஈர்த்துக்கொள்ளும். கருந்துளை பிற கோள்களை தன்னுள் ஈர்க்கும் என்ன செய்தியை பின்வருமாறு அல்லாஹ் கூறுகின்றான். “(அந்நாளில்) சூரியனும் சந்திரனும் ஒன்றாக்கப்பட்டுவிடும்.” (75:9)

இவ்வாறு விண்ணிலுள்ள நட்சத்திரங்கள் கருத்துளையாகி அழிவதானல் அந் நட்சத்திரங்களைச் சுற்றிவரும் கோள்களும் விண் பொருட்களும் அக்கருந்துளைகளுக்குள் அகப்பட்டு அழிந்துவிடும். அதேபோன்று பெரிய கருந்துளைகள் சிறிய கருந்துளைகளத் தம் உள்ளே ஈர்த்துக்கொள்ளும். இன்னும் சில நட்சத்திரங்கள் வெடித்துச் சிதறிவிடும். இதன்போது வானம் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். வானம் பிளந்துவிடும்போது அது (உருகி) எண்ணையைப்போல் (சிவப்பு) ரோஜாநிறமாகிவிடும்.” (55:37)

இதுவரையிலும் வினாடிக்கு 300>000Km  தூரம் விரிவடைந்துகொண்டிருந்த பிரஞ்சம் முதலாவது ஸுர் ஊதப்பட்டதும் அப்படியே நின்றுவிடும். பின்னர் நாலா புறமிருந்தும் பிரபஞ்சம் உள்நோக்கி சுருங்க ஆரம்பிக்கும். பெருவெடிப்பு - Big Bang என அழைக்கப்படுவது போன்று பிரபஞ்சதம் சுருங்குவதை விஞ்ஞானம் பெரும் அழுத்தம் - Big Crunch  எனக் குறிப்பிடுகின்றது. பிரபஞ்சத்திலுள்ள மிகப் பிரம்மாண்டமான சடப்பொருட்கள் வாயுக்கள் அணைத்தினதும் மூலப் பொருள் அணு என்பதால் பிரபஞ்சம் பெரும் அழுத்தத்துடன் உள்நோக்கி சுருருங்க ஆரம்பிக்கும்போது அணுக்கள் யாவும் வெடித்து பிரிகை அடைந்து யாதுமற்ற நிலைக்குச் சென்று விடும்.

இவ்வாறு முழுப் பிரபஞ்சமும் சுருங்கும் செய்தியை எளிமையான முறையில் அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான். “(நபியே!) எழுதப்பட்ட (பெரும்) ஏடுகளைச் சுருட்டுவதைப்போன்று நாம் வானத்தைச் சுருட்டிவிடும் நாளை (நினைவு கூறுவிராக!)”(22:104) மற்றுமொரு வசனத்தில் இன்னும் பூமி அனைத்தும் மறுமை நாளில் அவனது (ஒருகைப்)பிடியிலும் வானங்கள் (அனைத்தும்) அவனது வலக்கையிலும் சுருட்டப்பட்டனவாயிருக்கும்.”(39:67)

இவ்வாறு முழுப் பிரபஞ்சமும் சுருங்கி ஆரம்பத்தில் இருந்த Cosmic egg எனும் புள்ளியாக மாறிவிடும். இங்குள்ள விவரணப் படம் இதனைத் தெளிவுபடுத்துகிறது.

 மேலே உள்ள படங்கள் முஸ்லிம் விஞ்ஞானிகளால் தயாரிக்கப்படாததால் பெரும் அழுத்தத்துடன் (Big Crunch) பிரபஞ்சத்தின் கதை முடிவதாக சித்தரிக்கப்படுகிறது. ஆனால் அதையும் தாண்டிய ஒரு விஞ்ஞானத்தை இஸ்லாம் சொல்லித் தருகிறது.

மஹ்ஷர் வெளி

Cosmic egg எனும் புள்ளியாக மாறிய இப்பிரபஞ்சம் இரண்டாம் சூர் ஊதப்பட்டதும் மீண்டும் ஒரு பாரிய வெடிப்புக்குள்ளாகும். அதன் பின் மீண்டும் ஒரு வெளி ஏற்படும். அதனையே நாம் மஹ்ஷர் வெளி என்று கூறுகின்றோம். சுபஹானல்லாஹ்!

இன்று முஸ்லிமல்;லாத பலரும் சந்தேகம் கொள்ளும் ஒரு விடயம்தான் மறுமை வாழ்வு. அதனால்தான் நபியவர்கள் பல தடவைகளில் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான்கொள்பவர்என்று மறுமை நம்பிக்கையை குறித்துக்காட்டியுள்ளார். மறுமை எவ்வாறு நிகழ்கின்றது என்பதை அல்குர்ஆனிய விஞ்ஞான ஒளியில் அறிவுபூர்வமாக விளக்கவும் விளங்கவும் அருள்பாளித்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அல்ஹம்துலில்லாஹ்.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

Related Posts Plugin for WordPress, Blogger...