"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

13 November 2009

தொலைக்காட்சி விளம்பரங்களில் பெண்கள் - ஒரு நோக்கு.

ஊடகங்களின் தனிநிகர் வடிவம் தொலைக்காட்சி என்பது இலங்கைவாழ் மக்களில் பெரும்பாலானோரின் கருதலாகும். இன்று இலங்கையில் மாத்திரம் ஏகப்பட்ட தொலைக்காட்சி அலைவரிசைகள் இயங்கிவருகின்றன. அலைவரிசைகளில் கூடுதலாக இடம்பிடித்திருப்பவை விளம்பரங்களாகும். விளம்பரங்களில் அதிகமானவை பெண்களைக் காட்சிப்படுத்தியே கட்டமைக்கப்படுகின்றன என்பதை ஒருக்காலும் மறுதலிக்க முடியாது. அந்தவகையில் தொலைக்காட்சி விளம்பரங்களில் பெண்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறார்கள் என்றும், அவ்விளம்பரங்களைப் பார்ப்பவர்களின் மனோபாவத்தில் அவை எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்றும் ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தொலைக்காட்சி அலைவரிசைகள் விளம்பரத்திற்கு கூடுதல் முன்னுரிமையளிக்கின்றன. விளம்பரம் உற்பத்தியாளர்களின் சந்தைப்படுத்தலுக்கான ஓர் ஊடகமாகவும் அலைவரிசை நிறுவனங்களுக்கான சம்பாத்தியமாகவும் விளங்குகிறது. ஒரு நிகழ்ச்சியினிடையே எத்தனை விளம்பரங்கள் காட்டப்படுகின்றன எனக் கணக்கிட்டால் அதற்கு வழங்கப்படும் முக்கியத்துவத்தை விளங்கலாம்.

இலங்கையில் தொலைக்காட்சி பார்க்கும் வாலிபர்கள் தமது வாழ்வில் இரண்டு வருடங்களை விளம்பரம் பார்ப்பதில் கழிப்பதாக ஒரு கணிப்பீடு சுட்டி நிற்கின்றது. பொதுவாக விளம்பரங்கள் அதனைப் பார்ப்பவர்களின் விருப்பு வெறுப்புகளிளும் நடத்தைக் கோலங்களிளும் ஆழமான தாக்கத்தை உருவாக்கிவிடுகின்றன. இன்று உற்பத்திப் பொருட்களைச் சந்தைப்படுத்த தொலைக்காட்சி விளம்பரங்கள் பெண்களை வெகுவாகப் பயன்படுத்துகின்றன. விளம்பரங்களில் பெண்களின் நிலைகுறித்து சிறியதொரு தரவுடன் ஆய்வுக்குள் நுழைவது சாலப் பொருந்தும் என நினைக்கிறேன்.

 காட்சிப்படுத்தப்படும் அனைத்து விளம்பரங்களிளும் 75% ஆனவற்றில் குளியலறை மற்றும் சமயலறை உற்பத்திப் பொருட்களுக்கே பெண் பயன்படுத்தப் படுகிறாள்.

 56% ஆன விளம்பரங்களில் பெண் வீட்டுப்பணிப் பெண்னாகவும் இல்லத்தரசியாகவும் காட்டப்படுகிறாள்.

 அழகுசாதனப் பொருட்களின் பாவனை பற்றிக் காட்சிப்படுத்த பெண்களின் தோற்றம் பயன்படுத்தப்படுகிறது.

சில விளம்பரங்கள் இயற்கைக்கு மாற்றமாக அதாவது குடும்பத்தை வழிநடாத்துபவளாகப் பெண்னையும் அவளுக்குக் கீழ்ப்பட்ட நிலையில் ஆணையும் சித்தரிக்கின்றன. இதனை நடைமுறையில் ஒரு பெண் கைக்கொள்வதன் மூலம் கணவனை மிஞ்சி தனக்கு விருப்பமான பொருட்களை தானே நுகரும் நிலை உருவாகின்றது. இது ஒரு வியாபாரத் தந்திரமாகவே காணப்படுகின்றது.

விளம்பரங்களின் ஒரு பக்கம் வியாபார நோக்கமென்றாலும் அதன் மறுபக்கம் எம்மால் அலட்சியம் செய்யப்படுகின்ற அவலட்சனமான பக்கமாகும். பெண்கள் இன்று வெறும் காட்சிப்பொருளாக்கப்பட்டு வருகின்றனர். விளம்பரங்களில் இது சர்வசாதாரணமாகக் காட்டப்படுகின்றது. குளியலறை என்றும் கடற் கரையென்றும் படுக்கை அறையென்றும் நகர்ப்புறம் என்றும் அனைத்து இடங்களிலும்பெண்னை உள்ளடங்கலாகவே விளம்பரம் அமைக்கப்படுகின்றது.

விளம்பரம் என்ற போர்வையில் பெண்கள் அக்குவேறு ஆணிவேறாகக் கூறுபோட்டுக் காட்டப்படுகின்றனர். உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ஒவ்வொரு விளம்பரமும் பெண்னை அங்கமங்கமாகக் காட்சிப்படுத்துகின்றன. அழகுசாதனப் பொருட்களுக்கு இலகுவில் அடிமையாகுபவர்கள் பெண்கள் என்பதால் அவ்வாறு காட்சிப்படுத்தப்படுகின்றனர். உதாரணமாக செம்போ விளம்பரங்களுக்கு கூந்தலும் முகப்பூச்சு மற்றும் உதட்டுச்சாயங்களுக்கு முகமும் ஆபரணக் காட்சிகளுக்கு கழுத்து, கை, காது என்பனவும் பாதனி விளம்பரங்களுக்கு பாதமும் மற்றும் சவர்க்கார விளம்பரங்களுக்கு மேனியும், முழு உடலையும் ஆடைக் கண்காட்சி விளம்பரங்களுக்கும் பயன்படுத்துகின்றனர்.

ஒரு சில சந்தர்ப்பங்களில் இவ்வாறு ஆண்களைக் காட்டினாலும் அநேகமாக பெண்களே தோற்றுவிக்கப்படுகின்றனர். குறிப்பாக உடற்பயிற்சி இயந்திரங்களின் விளம்பரத்திற்கே பெண்னின் உடற்கவர்ச்சி முழுமையாகக் காட்டப்படுகின்றது.

ஆகமொத்தத்தில் இவ்வனைத்து விளம்பரங்களிலும் நுகர்வோனின் விருப்பு வெறுப்புக்கான வியாபாரப் பொருளாகவே பெண் காட்டப்படுகிறாள். “ஜீன் கில்போன்” என்பவர் “Beauty and the Beast of Advertising” என்ற தனது கட்டுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார். “அதிகமான விளம்பரங்களில் பெண் என்பவள் ஒரு பாலியல் பொருளாகவே காட்டப்படுகிறாள். பெண்கள் ஆடைக்கண்காட்சிக்காக வைக்கப்படும் பொம்மைகளாகவே (Mannequin) நோக்கப்படுகின்றனர்” என்கிறார்.

“பெண்கள் வீட்டுவேலைகளில் ஈடுபடுவதனாலேயே அவர்களை வைத்து விளம்பரம் செய்யப்படுகின்றது” என்ற வாதம் மாறி “பெண்களின் உருவம் இருந்தால்தான் குறித்த பொருள் விற்பனையாகும்” என்ற எண்ணம் உருவாகியுள்ளது. அதனால்தான் பெண்களுக்கு எவ்விதத்திலும் சம்பந்தப்படாத அல்லது அவர்களால் பயன்படுத்த முடியாத ஒரு பொருளை விளம்பரப்படுத்தும் போதுகூட அதனோடு ஒரு பெண்ணின் தோற்றத்தையும் சேர்த்துவிடுகின்றனர்.

ஆக விளம்பரங்களினால் ஏற்படும் பாதிப்புகளை மேற்கூறிய ஆய்வுகளிலிருந்து அறிந்துகொள்ளலாம். விளம்பரம் என்பது உற்பத்திப் பொருட்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் ஆசையையும் ஆர்வத்தையுமூட்டி இலகுவாக விற்பனைசெய்ய பயன்படுத்தப்படுகிறது. விளம்பரம் மனித உள்ளத்தைக் கட்டுப்படுத்தி அவனது விருப்பு வெறுப்புகளைத் தீர்மானிக்கும் ஒரு கருவியாகவும் செயற்படுகிறது. புதியன புகுதலாலும் பழையன கழிதலாலும் மனிதன் நவநாகரிகத்தின்பால் மூளைச்சலவை செய்யப்படுகிறான். இவ்வாறான விளம்பரங்களால் பெண்களின் தன்மானம் பாதிக்கப்பட்டு வெறுமனே காட்சிப்பொருளாக நோக்கப்படுகின்ற நிலைமை உருவாகிவருகின்றது. இவ்வாறு பல விபரீதங்கள் இன்றைய விளம்பரங்களில் காணப்படுகின்றன.

நாம் அறிந்தோ அறியாமலோ விளம்பரங்களால் இதுபோன்ற உளரீதியான பிரதிகூலங்கள் எம்மில் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. எனவே இது குறித்து நாம் விழிப்புடன் செயற்பட வேண்டும். விளம்பரங்கள் குறித்து இவ்வாறானதொரு தெளிவிருந்தாலே அதன் மூளைச் சலவையிலிருந்து விழித்துக்கொள்ளலாம். எனவே விளம்பரங்களின் விபரீதத்திற்கு அஞ்சி பயன்தகு நிகழ்ச்சிகளையும் விட்டுவிடாமல் உண்மை நிலையை அறிந்து முடியுமான அளவு அதன் தீங்கிலிருந்து எம்மைத் தற்காத்துக்கொள்ள முயற்சிப்போம்...
இவ்வாக்கம் அல்ஹஸனாத் மற்றும் உண்மை உதயம் சஞ்சிகைகளில் பிரசுரமாகியது.

ஆலிப் அலி

உங்கள் கருத்து:

1 comments:

Anonymous said...

fathima.....
penkalai kevalap paduthum ithu mathiriyana vidayangal pengalukke vilangathiruppathu perum kavalaikidamanathu....

good article....

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...