"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

22 October 2011

புறம் பேசுவது இறந்த சகோதரனின் மாமிசத்தை உண்ணுவது போன்றது.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

அல்லாஹ் கூறுகிறான்:
உங்களில் சிலர் சிலரைப்பற்றிப் புறம் பேசவேண்டாம். உங்களில் ஒருவர் தன்னுடைய சகோரசரின் மாமிசத்தை அவர் இறந்து பிணமாக இருக்கும் நிலையில் புசிக்க விரும்புவாரா? அப்போது அதனை நீங்கள் வெறுத்து விடுவீர்கள். (அல்குர்ஆன் 49:12)

புறம் என்றால் என்னவென நபி(ஸல்)அவர்கள் விவரிக்கின்றார்கள்:
புறம் என்றால் என்னவென நீங்கள் அறிவீர்களா? என நபி(ஸல்)அவர்கள் கேட்டபோது, அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர் என நபித்தோழர்கள் கூறினர். அப்போது நபி(ஸல்)அவர்கள், உன்னுடைய சகோதரன் வெறுப்பதை நீ கூறுவது தான் -புறம்- என்றார்கள். நான் கூறுவது என்னுடைய சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்)அவர்கள், நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசுகிறாய். நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இல்லையெனில் நீ அவனைப் பற்றி இட்டுக்கட்டுகிறாய் என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: முஸ்லிம்)

ஒரு சகோதரர் வெறுப்பதை நாம் பேசுவதே புறம் ஆகும். அது அவருடைய உடல், மார்க்கம் மற்றும் உலக விஷயம், மனோநிலை, நடைமுறை, குணம்.. ஆகிய எதனோடு தொடர்புடையதாக இருந்தாலும் சரியே! புறம் பேசுவதில் பல வகைகள் உள்ளன. ஒரு முஸ்லிமின் குறையைக் கூறுவதும் பிறரை இழிந்துரைப்பதும் புறம் பேசுவதில் ஒருவகையே!

அல்லாஹ் நாடினால் தன் அடியானின் பாவங்களை மன்னித்துவிடுவான். ஆனால் அவ்வடியான் மற்றுமொரு அடியானுக்கு, சகோதரனுக்கு அவனுடைய கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படும் விதமாக இவ்வுலகில் நடந்திருப்பானாகில் அவன் மன்னிக்கும் வரை அக்குற்றத்தை அல்லாஹ்வும் மன்னிக்கப்போவதில்லை. மிகக்கேவலமா, இழிவாகக் கருத்தப்படும் புறம் பேசுதல் விஷயத்தில் நாம் அறியாமலேயே மற்ற சகோதரனது கண்ணியத்தைக் கலங்கப்படுத்துகின்றோம். மறுமையில் அவ்வடியான் எமக்கெதிராக அல்லாஹ்விடத்தில் வழக்குத்தொடுத்தால் எமது நிலை என்னவாக இருக்கும். எனவே மிகப் பயங்கரமான இப்பாவத்திலிருந்து தவிர்ந்துகொள்ளவேண்டும்.

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: வட்டியிலேயே மிகக் கொடிய வட்டி ஒருவன் தனது சகோதரனின் கண்ணியத்திற்கு இழுக்கு விளைவிப்பதாகும். (அறிவிப்பவர்: ஸயீத் பின் ஜைத்(ரலி) நூல்: அபூதாவூத்)

சபையில் இருப்பவர் இத்தீமையிலிருந்து பிறரைத் தடுப்பது கடமையாகும். மேலும் புறம் பேசப்படும் சகோதரருக்கு சார்பாக நாம் பேசவேண்டும். இவ்வாறு பேசுவதை நபி(ஸல்)அவர்கள் வரவேற்றுள்ளார்கள்.

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: தனது சகோதரனுடைய கண்ணியத்திற்கு இழுக்கு விளைவிப்பதை தடுப்பவரின் முகத்தை மறுமை நாளில் நரக நெருப்பை விட்டும் அல்லாஹ் தடுத்துவிடுவான். (அறிவிப்பவர்: அபூதர்தா(ரலி) நூல்: அஹமத்)

யா அல்லாஹ் இப்பாவத்திலிருந்தும் தவிர்ந்துகொள்ளும் மனவலிமையைத் தந்தருள்வாயாக. நரக நெருப்பின் தீங்கைவிட்டும் எம்மைப் பாதுகாப்பாயாக! ஆமீன்...

உங்கள் கருத்து:

1 comments:

fathima said...

good article. thanks brother... sila theemaihal ariyamal saiyyappaduhindrana avai jafahp paduththap padum pothu payam uruvahirathu

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...