"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

06 February 2010

உலக வாழ்க்கை அற்பமானதே!

இவ்வுலகம் நிரந்தரமற்றது. அற்பமானது. இன்பமனுபவிப்பதற்கான இடமல்ல. இதுவொரு சோதனைக்களம்.
 
ஆலிப் அலி
எம்மில் பலர் இவ்வுலக வாழ்க்கை நித்தியமற்றதென அறிந்திருந்தபோதிலும் ஷைதானுக்குக் கட்டுப்பட்டு மனோ இச்சைக்கு வலிப்பட்டு அதன்படி வாழ்ந்து மடிகின்றனர். இவ்வுலகில் உயர்ந்த அறிவார்ந்த படைப்பாகிய மனிதன் வெறும் உடலிச்சைகளையும் மனோ இச்சைகளையும் மாத்திரம் தீர்த்துக்கொண்டு அவன் படைக்கப்பட்டதன் உண்ணத நோக்கத்தை புரிந்துகொள்ளாமல் பொருளாதாரத்தை ஈட்டுவதில் மாத்திரம் குறியாய் வாழ்ந்து குறுகிய ஆயுளைச் செலவு செய்துவிட்டு இறந்துவிடுவதென்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாதவொன்று.

இவ்வுலகின் யதார்த்தம் யாதெனில் இது நிரந்தரமற்றது. அற்பமானது. இது இன்பமனுபவிப்பதற்கான இடமல்ல. இதுவொரு சோதனைக்களம். மனிதனின் நிரந்தரமான நித்திய வாழ்க்கை மறுமையில்தான் அமைகின்றது. இம்மை என்பது தற்காலிகத் தங்குமிடம் மாத்திரம்தான். இவ்வுலகம் பெறுமதியற்றது, கவர்ச்சிகரமிக்கது, வீணும் விளையாட்டும் நிரம்பியது. அல்லாஹ்விடத்திலும் நபிகளாரிடத்திலும் இவ்வுலக வாழ்க்கைக்கு எப்பெருமானமும் இருக்கவில்லை. அல்லாஹ் இதுபற்றி அல்-குர்ஆனில் இவ்வாறு கூறுகின்றான்.

“(மனிதர்களே!) அறிந்துகொள்ளுங்கள். நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கையெல்லாம் விளையாட்டும் வீணும் அலங்காரமும் உங்களுக்கு மத்தியில் பெருமையடித்துக்கொள்வதும் செல்வங்களிலும் பிள்ளைகளிலும் அதிகப்படுத்திக் கொள்வதும்தான்...” (அல்ஹதீத்:20) மற்றுமோரிடத்தில். இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றக் கூடிய (அற்ப) இன்பத்தைத் தவிர வேறில்லை” (ஆலஇம்ரான்:185) பிறிதோரிடத்திலும் அல்லாஹ் கூறுகிறான். மேலும் இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும் வீணுமேயன்றி (வேறு) இல்லை. இன்னும் பயபக்தியுடையோருக்கு நிச்சயமாக மறுமையின் வீடு மேலானதாகும்” (அல்அன்ஆம்:32)

உலகம் பெறுமதியற்றது என்பதை நபி(ஸல்) அவர்கள் ஓர் நடைமுறை உதாரணத்தின் மூலம் குறித்துக் காட்டினார்கள். ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் ஸஹாபாக்கள் புடைசூழ கடைத்தெருவொன்றைக் கடந்துகொண்nருந்தார்கள். அப்போது அங்கே இறந்து, காதுகள் அறுந்துகிடந்த ஓர் ஆட்டைக் கண்டார்கள். உடனே அதனை நெருங்கி அதன் காதைப் பிடித்துக்கொண்டு உங்களில் யார் இதை ஒரு வெள்ளிக் காசுக்கு வாங்க விரும்புவார்?” என்று கேட்டார். அதற்கு அம்மக்கள் நாம் அதனை வாங்க விரும்ப மாட்டோம். அதனைவைத்து நாம் என்ன செய்வோம்?” என்று கேட்டனர்.

மீண்டும் நபியவர்கள் இது உங்களுக்குரியதாக (இலவசமாக) இருக்க வேண்டுமென நீங்கள் விரும்பமாட்டீர்களா?” என்று கேட்டார். அதற்கு மக்கள் அல்லாஹ்வின் மீதானையாக உயிரோடு இருந்தாலும் இது காதறுந்த குறையுள்ள ஒரு ஆடு. அவ்வாறிருக்க செத்த நிலையில் எப்படி (இதற்கு மதிப்பிருக்கும்)எனக் கேட்டனர். அதற்கு அண்ணலார் அவ்வாறாயின் அல்லாஹ்வின் மீதானையாக இந்த இறந்த ஆட்டைவிட இவ்வுலகம் அல்லாஹ்வின் கணிப்பில் அற்பமானதுஎன்றார்கள் (முஸ்லிம்)

அது மட்டுமன்றி இவ்வுலகில் 60,70 வருடங்கள் வாழ்ந்த மனிதன் மறுமைக் காட்சிகளைத் தன் கண்களால் காணும்போது இவ்வுலகில் சொற்பகாலமே ஜீவித்ததுபோன்று உணர்வார்களென அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான்

அதனை அவர்கள் காணும் நாளில் மாலையிலோ அல்லது அதன் முற்பகலிலோ (ஒரு சொற்ப நேரமே) தவிர (பூமியில்) தங்கியிருக்காதது போன்று (அவர்கள் உணர்வார்கள்)” (அந்;நாஸிஆத்:46)
இந்த சொற்பகால உலக வாழ்வை நாம் நாளை நிரந்தர மறுமை வாழ்வைப்பெறுவதற்காக நல்ல முறையில் கழிக்கவேண்டும். இறைசட்டதிட்டங்களைப் பேணி அவன் தூதர் வழிகாட்டுதல்களின்படி செயற்படவேண்டும். இவ்வுலகில் அபரிமித விறுப்புவைத்து (ஹ{ப்புத் துன்யா) சுகண்டியான வாழ்வில் திழைத்துவிடக்கூடாது. எனவேதான் இவ்வுலகில் ஒரு வழிப்போக்கனைப்போன்று வாழ்ந்துசெல்லுமாறு நபியவர்கள் போதித்தார்கள். நீங்கள் உலகத்தில் ஓர் அந்நியனைப்போன்றோ அல்லது ஒரு வழிப்போக்கனைப்போன்றோ வாழுங்கள்.”(புகாரி)

இப்பூமியில் 950 வருடங்கள் வாழ்ந்த நூஹ் நபியிடம் மலகுல் மௌத் வந்து நீர் இங்கு எவ்வளவு காலம் வாழ்ந்தீர்?” என்று கேட்டதற்கு ஒரு வீட்டின் முன் வாயிலால் நுழைந்து பின் வாயிழால் வெளியேறியது போன்றகால அளவுதான்.என்றார்கள். இதுபோன்று அல்குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது. ஆண்டுகளின் எண்ணிக்கையால் எவ்வளவு காலம் நீங்கள் பூமியில் தங்கினீர்கள்? என்று அவன் கேட்பான். அதற்கவர்கள் ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறு பகுதியே தங்கியிருந்தோம்என்பார்கள் (23:112,113). அதுமட்டுமன்றி இப்பூமி அல்லாஹ்விடத்தில் ஈயின் இறக்கையிலும் அற்பமானதென நபியவர்கள் கூறினார்கள். இவ்வுலகம் அல்லாஹ்விடத்தில் ஈயின் இறக்கையளவு பெறுமதியாக இருக்குமென்றால் அவனை நிராகரிக்கும் மனிதனுக்குத் தண்ணீரும் கொடுக்கமாட்டான்.”(திர்மிதி) ஆக மனிதன் என்பவன் இப்பூமியில் வெறுமனே உண்டு கழித்துவிட்டு இறந்துபோகக் கூடிய விலங்கினமோ அல்லது விரும்பியவாறு தனது மனோ இச்சையின் பிரகாரம் வாழ்ந்துவிட்டுப்போகும் சதைப்பிண்டமோ அல்ல. மாறாக அவன் வாழ்வு இறை வழிகாட்டலின்படி அமையவேண்டும். எனவே இவ்வுலகன் யதார்த்தத்தை விளங்கி நாளை நிரந்தர சுவனத்தை அனந்தரங்கொள்ள இறைவன் அருள்புரியட்டும்.

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...