"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

12 January 2010

துருக்கி வீரன் முஹம்மத் அல்பாதிஹ்

... ஆலிப் அலி ...

அம்ரிப்னு ஆஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஒரு முறை நாம் நபி(ஸல்) அவர்களைச் சூழ அமர்ந்திருந்தோம். அப்போது அண்ணலாரிடம் கொன்ஸ்தாந்து நோபிள், ரோம் இவற்றில் எது முதலில் வெற்றிகொள்ளப்படும்?” என வினவப்பட்டது. அதற்கவர் ஹிரகல் மன்னனின் நகரம் - கொன்ஸ்தாந்து நோபிள் - தான் முதலில் வெற்றிகொள்ளப்படும் என்றார்கள்.
(ஆதாரம் - முஸ்னத் அஹ்மத் : 6645)
ðððð

கொன்ஸ்தாந்து நோபிள் என்பது துருக்கியின் தற்போதைய பெரிய நகரங்களில் ஒன்றான இஸ்தான்பூலாகும். இது அரபு மொழியில் குஸ்தன்தீனியா என்றழைக்கப்படுகிறது. அன்று நபியவர்காலத்து பெரும் வல்லரசான ரோம் சாம்ராஜ்யம் இரண்டு கிளைகளைக் கொண்டு காணப்பட்டது. ஒன்று; ரோமைத் தலைநகராகக்கொண்ட மேற்கு ராஜ்யம். மற்றையது; கொன்ஸ்தாந்து நோபிளைத் தலைநகராகக்கொண்ட கிழக்கு ராஜ்யம். அக்கிழக்கு ராஜ்யம்தான் பைஸாந்தியப் பேரரசு எனப்பட்டது. பெரும் வல்லரசாகத் திகழ்ந்த இந்நகரம் ஒரு நாள் முஸ்லிம்களால் வெற்றிகொள்ளப்படுமென நபியவர்கள் எதிர்வுகூறியதே மேற்கண்ட நபிமொழி. இதுபற்றி மற்றுமொருமுறை நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்.

கொன்ஸ்தாந்து நோபிள் ஒரு வீரனால் வெற்றிகொள்ளப்படும். அத் தளபதிதான் சிறந்த தளபதி. அந்த சேனைதான் சிறந்த சேனை என்றார்கள். (முஸ்னத் அஹ்மத்) 

நபிகளாரது பொன்மொழியை நிதர்சிப்பதற்கும் அதன் சிறப்பைப் பெறுவதற்குமாக வரலாற்று நெடுகிலும் பல வீரர்கள் கொன்ஸ்தாந்து நோபிளை நோக்கிப் படை நகர்த்திச் சென்றுள்ளார்கள். ஹிஜ்ரி 48 ஆம் ஆண்டு கலீபா முஆவியா(ரழி) அவர்கள் ஸ{ப்யான் பின் அவ்ஃப்(ரழி) அவர்கள் தலைமையில் ஒரு படையனுப்பினார். அதில் மிக முக்கிய ஸஹாபாக்களான அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ், அப்துல்லாஹ் இப்னு உமர், அப்துல்லாஹ் இப்னு ஸைத் மற்றும் அபூ அய்யூப் அல்அன்ஸாரி (ரழியல்லாஹ் அன்ஹ்ம்) போன்ற பல முக்கிய ஸஹாபாக்கள் பங்கேற்றனர். எனினும் அக்கோட்டை நகரை அவர்களால் வெற்றிகொள்ள முடியவில்லை. அதில் அபூ அய்யூப் அல்அன்ஸாரி(ரழி) அவர்கள் சஹீதாகி கோட்டையின் அருகாமையில் அடக்கம் செய்யப்பட்டார்கள்.

அதன்பின் ஹிஜ்ரி 54ல்  கலீபா வலீத் பின் அப்துல் மலிக்கின் காலத்தில்  தளபதி மூஸா பின் நுஸைர் அவர்களும் முயற்சியெடுத்தார். அதன் பின் ஹிஜ்ரி 99ல் ஸலைமான் பின் அப்துல் மலிக்கின் காலத்திலும் கொன்ஸ்தாந்து நோபிள் வெற்றிக்காகப் பல பிரயத்தனங்கள் எடுக்கப்பட்டன. அப்போதும் அதனை வெற்றிகொள்ள முடியவில்லை. இவ்வாறு உமையா ஆட்சி முடிந்து அப்பாஸியர் ஆட்சிக்காலத்தில் கலீபா முஃதஸிமும் அவரைத் தொடர்ந்துவந்த பலரும் அண்ணலாரின் அப்பொற்கூற்றைத் தம் உளத்தினில் ஆழப்பதித்து செயற்பட்டார்கள். எனினும் அவர்கள் யாராலும் அச்சுபசோபனத்தின் சொந்தக்காரர்களாக மகுடம் சூட முடியவில்லை. இறை நாட்டத்தின்படி அது இவருக்குத்தான் சேரவேண்டும் என்று விதியாயிருக்கும் போலும்... 

பத்தாம் நூற்றாண்டின் இறுதியரைப் பகுதிகளில் ஸல்ஜுக்கிய சாம்ராஜ்யம் துருக்கியிலே வியாபித்தது. அது ஈராக், ஈரான்சிரியா என்று பல பகுதிகளிலும் பரவிக்காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து துருக்கியைத் தலைமையகமாகக்கொண்டு மாபெரும் பேரரசான பைசாந்தியப் பேரரசு எழுச்சிகண்டது. பைஸாந்தியர்கள் கொன்ஸ்தாந்து நோபிளைத் தமது சாம்ராஜ்யத்தின் தலைநகராக ஏற்றிருந்தனர். அதற்கு இயற்கை அமைத்துக்கொடுத்திருந்த அரணும் பைஸாந்தியர்களின் பலமும் சேர்ந்து அதன் இருப்பை இன்னும் வலுப்படுத்தியது. 

கொன்ஸ்தாந்து நோபிள் கோட்டை மூன்று பக்கங்களாலும் கடலால் சூழப்பட்டிருந்தது. கோட்டையின் அரண்கள் பிரமாண்டமாகக் காட்சியளித்தன. அன்று அந்நகரம் உலகிலே சிறந்த இராணுவப் படைப்பலம் பொருந்திய நகரமாக விளங்கியது. கோட்டையின் வாயிலை அடையவேண்டுமாயின் படகு மூலம் ஆற்றைக் கடந்தே செல்லவேண்டும். எனவே தமது அனுமதியின்றி எதிரிக்கப்பல்கள் வாயிலை நெருங்காதிருக்க நீர்ப்பரப்பின் மேற்பகுதியில் பிரம்மாண்டமான இறும்புச் சங்கிலியொன்றை ஆற்றுக்குக் குறுக்காகக் கட்டியிருந்தனர். இவ்வாறாக அவர்கள் பெற்றிருந்த வசதி வாய்ப்புகளும் ஆட்சியதிகாரங்களும் அவர்களை கர்வங்கொள்ளச்செய்தது. கொடுங்கோன்மை கோலோச்ச ஆரம்பித்தது. 

அது உஸ்மானியர் ஆட்சிக்காலம்    (Ottoman Empire)  கொன்ஸ்தாந்து நோபிளுக்கு எதிரான முஸ்லிம்களின் போர் மீண்டும் ஆரம்பித்தது. அது கலீபா பாயஸீதின் ஆட்சிக்காலம். அவர் 1393ம் ஆண்டு கொன்ஸ்தாந்து நோபிளை முற்றுகையிட்டார். இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு இறையாட்சி புரியுமாரும் அல்லது ஜிஸ்யா ஆள்வரி செலுத்தி இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் கீழ் ஆட்சிபுரியுமாரும் ஒரு நிறுபமனுப்பினார். எனினும் பைஸாந்தியப் பேரரசன் அதனை மறுத்து ஐரோப்பாவின் உதவியை நாடினான். அச்சந்தர்ப்பம் மங்கோலியர்கள் படையெடுத்துவந்து முஸ்லிம்களுக்கு எதிராகப் போர்தொடுத்தனர். இதில் கலீபா பாயஸீத் மரணித்தார். பைஸாந்தியர்களின் கொடுங்கோன்மை மேலும் ஓங்கிற்று. 

கலீபா பாயஸீதின் மரணத்தைத் தொடர்ந்து அடுத்த கலீபாவாக அவரது மகன், இளம் வீரன்,  அபுல் கைராத் (நல்லறங்களின் தந்தை) எனப் புணைப் பெயர்பெற்ற 22 வயதை மாத்திரமேகொண்ட உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் எட்டாவது கலீபா முஹம்மதிப்னு முராத்மன்னனாக முடிசூண்டான். தந்தையின் ஆட்சிக்காலத்தில் அவருக்கு உதவியாகப் பல அரச பணிகளில் ஈடுபட்ட பழுத்த அனுபவமும்  பலத்தில் நிகரின்மையையும் நீதியில் வழுவாமையும் பல மொழிகளில் பாண்டித்தியமும் கவித்துவத்தில் புலமையும் பிறரிடத்தில் அன்பையும் பணிவையும் காட்டும் உண்ணத குணம்படைத்தவன்தான் இந்த முஹம்மத். முஹம்மதின் நேச ஆசான் ஆக் சம்சுதீன் முஹம்மதுக்கு அல்குர்ஆன், அல்ஹதீஸ்,  இஸ்லாமிய சட்டக்கலை,  அரபு,  பாரஸீக, துருக்கிய மொழிகள் என்பவற்றைக் கற்றுக்கொடுத்திருந்தார். அதேபோன்று விளையாட்டு, விண்ணியல், போர் தந்திரம் மற்றும் வரலாறு என்பவற்றையும் கற்றுக்கொடுத்திருந்தார்.  

இக்காலை கொன்ஸ்த்தான்திநோபிளை வெற்றிகொள்வதற்காக இஸ்லாமிய வரலாற்று நெடுகிலும் நடந்த யுத்தங்களையும் உஸ்மானிய மன்னர்கள் மேற்கொண்ட யுத்த நகர்வுகள் பற்றியும் நன்கறிந்து வைத்திருந்தான். அதைவிடவும் இவ்வெற்றி குறித்து நபியவர்கள் கூறிய நபிமொழி அவனது உள்ளத்திலே ஆழப்பதிந்து வேர்விட்டிருந்தது. முஹம்மத் சிறுவனாக இருக்கும்பொழுதே அவனது தந்தை பாயஸீத் அவனை ஆர்வமூட்டுவதற்காக அவனது அரைச் சுவரில் கொன்ஸ்தாந்து நோபிள் வெற்றிபற்றி நபியவர்கள் கூறிய ஹதீஸை பெரிய எழுத்துக்களில் எழுதி ஒட்டிவைத்திருந்தார். அத்தோடு தினமும் காலையில் அதனை அவனுக்கு வாசித்துக்காட்டுவார். இவ்வாறு வளர்ந்த முஹம்மத் அல்பாதிஹ் கலீபாப் பதவியை ஏற்றதுமுதல் துருக்கியை வெற்றிகொள்வதில் மிக்க கரிசனையுடன் செயற்பட்டான். 

முஹம்மத் அல்பாதிஹ் கொன்ஸ்தான்துநொபிளை வெற்றி கொள்ள உளப்பூர்வமாகத் தயாரானான். தனது தளபதிகளை  அழைத்து யுத்த வியூகங்களை வகுத்தான். மாபெரும் படை வெள்ளமொன்றையும் திரட்டினான். அவர்கள் மத்தியில் ஜிஹாதின் உண்ணதத் தன்மையை விதைத்தான். நபியவர்களின் பொன்மொழியை எடுத்துக் கூறி உட்சாகப் படுத்தினான். திறமை வாய்ந்த பொறியியலாளர்கள் மூலம் பீராங்கிகளையும் வேறுபல யுத்த தளபாடங்கiயும் தயார்செய்தான். தனது சேனையின் உதவிகொண்டு படகுகளையும் அமைத்தான். திடகாத்திரமான பல போர்க் குதிரைகளையும் வாங்கினான். 

போருக்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தியடைந்துவிட்டன. முஹம்மத் அல்பாதிஹின் தலைமையில் சுமார் 50200 பேரைக் கொண்ட முஸ்லிம் சேனை பைஸாந்தியப் பேரரசின் கோட்டை கொன்ஸ்தான்துநோபிளை நோக்கி வெள்ளமெனப் புறப்பட்டது. கோட்டையை அன்மித்ததும் பாதிஹ் தன் படையை வெவ்வேறாகப் பிரித்து பல திக்கிலும் முற்றுகைக்காக நிறுத்தினான். படகுகளும் கடல் வழியாக வந்து சேர்ந்தன. பாதிஹ் தன் சேனைப் படைகள் முன் சென்று உபதேசங்களை நிகழ்த்தினான். ஜிஹாதின் பால் ஆர்வமூட்டினான். வெற்றி அல்லது வீரமரணம் என்ற கொள்கையை உள்ளங்களில் ஆழமாக அறைந்தான். நபியவர்கள் சுட்டிக்காட்டிய ஒரு ஹதீஸை அடிக்கடி நினைவுபடுத்தினான். உருக்கமாகவும்,  உறுதியாகவும் உரையாற்றினான். இறுதியில் மக்கள் எழுப்பிய தக்பீர் கோசம் விண்ணைப் பிளந்து எதிரொலித்தது. 

முஸ்லிம்களின் படையெடுப்பை அறிந்த கொன்ஸ்தான்துநோபிள் மன்னன் ஏழவே ஐரோப்பாவிடம் உதவிப்படையனுப்புமாறு வேண்டியிருந்தான். அதற்கமைய அடுத்தநாள் ஐரோப்பிய உதவிப்படை பெரும் கப்பலொன்றிலும் இன்னும் சில படகுகளிலும் வந்து சேர்ந்து அது பைசாந்நியருக்கு உளரீதியாகப் புத்துணர்வை அளித்தது. 

முஹம்மத் அல்பாதிஹ் கோட்டை மன்னனுக்கு ஒரு நிருபம் அனுப்பினான். அதில் உங்களது கொன்ஸ்தான்துநோபள் நகரை எம்மிடம் ஒப்படைத்து நல்லாட்சி புரிய ஒத்துழையுங்கள். அல்லது ஒவ்வொருவருக்கும் ஆள்வரி செலுத்தி இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் கீழ் நல்லாட்சி புரியுங்கள். நிச்சயமாக எனது படை உயிர் பற்றியோ, சொத்து பற்றியோ,  செல்வங்கள் பற்றியோ அக்கரை கொள்ள மாட்டாதுஎன வரைந்திருந்தார். அது கண்ட மன்னன் வெகுண்டெழுந்தான். போர் செய்வதென உறுதி பூண்டு பரையறிவித்தான். கோட்டை வீரர்கள் யுத்தத்துக்குத் தயாராயினர். 

முஸ்லிம்சேனை தம்வசமிருந்த பிரம்மாண்டமான பீரங்கிகளைப் பயன்படுத்தி கோட்டை அரண்களைத் தாக்கத் துவங்கியது. அரண்களும் விட்டுக்கொடுப்பதாயில்லை. வானை மேவி நிற்கும் மலைகளாய் முரட்டுத்தனமாக நின்றுகொண்டிருந்தன. மறுபுறம் பாதிஹின் கடற்படைத் தளபதியும் கோட்டை வாயிலை நெருங்குவதற்குப் படகுகளைக் கிளப்பிக்கொண்டு புறப்பட்டுச்சென்றான். எனினும் நினைத்ததுபோன்று சாதிக்க முடியவில்லை. வாயிலை நெருங்கவிடாது குறுக்காகக் கட்டப்பட்டிருந்த பெரிய சங்கிலிகள் படகுகளைத் தடுத்துநிறுத்தின. அதுமட்டுமன்றி கோட்டைச் சுவர்களின்மீதிருந்து வந்த தாக்குதல்களும் கனத்தன. எனவே வேறு வழியின்றி படகுகளுடன் தளபதி முகாமுக்குத் திரும்பினான். பாதிஹின் பீரங்கிப் படைகளாலும் பெரியளவில் ஒன்றும் சாதிக்க முடியவில்லை. அதற்குள் சூரியன் ஓய்வெடுக்கும் நேரமும் வந்துவிட்டதால் யுத்தம் இடைநடுவே நிறுத்திவைக்கப்பட்டது. கோட்டைப்படைகள் சேதத்துக்குள்ளான கோட்டையின் மதிற்சுவர்களை புணரமைத்துக்கொண்டிருந்தனர். இவ்வாறு போர்தொடுப்பதும் மீண்டும் இடைநிறுத்துவதுமாக முற்றுகையிலேயே நீண்ட நாட்கள் கழிந்தன.  

இதிலே சலிப்புற்ற முஹம்மத் அல்பாதிஹ்  ஒரு நாள் அற்புதமான,  யாராலும் நினைத்தும் பார்க்கமுடியாத,  சிரமசாத்தியமானதொரு திட்டம் தீட்டனான். அதனைத் தன்பிற தளபதிகளுடனும் பகிர்ந்துகொண்டான். இத்திட்டம்பற்றி சேனைப்படைகள் அறியப்பெற்றதும் வாய்பிளந்து ஆச்சரியப்பட்டனர். சிலர் இது சாத்தியப்படுமா என்று சந்தேகிக்கவும் செய்தனர். எனினும் அத்திட்டத்தை முஹம்மதே தலைமையேற்று முன்னின்று தன் சேனையின் உதவியோடு கச்சிதமாக செய்துமுடித்ததும்தான் அது எவ்வளவு பெரிய செயல், எவ்வளவு அருமையான திட்டம் எனத்தெரியவந்தது. 

ஆம்! கோட்டைக்குப் பின்புறத்தால் பெரியதொரு நீர்ப்பரப்பு காணப்பட்டது. அதற்குக் கர்ணுஸ்ஸஹபி என்று பெயர். அதனைத்தொடர்ந்து வந்தது ஒரு மலைத்தொடர். அந்த நீர்ப்பரப்பில் கப்பல்களைக்கொண்டு சென்றால் சுலபமாகக் கோட்டையைக் கைப்பற்றலாம். இரவோடு இரவாக பாதிஹ் தன் படையின்மூலம் மலைக்காட்டின் நடுப்பகுதியால் கர்ணுஸ்ஸஹபி வரை மரங்களை வெட்டி சுமார் மூன்று மைல் தூரத்துக்குப் பெரும் தண்டவாலங்களை அமைத்தான். பின்பு அதன் வழியாக ஒரே இரவில் தனது 70 கப்பல்களையும் இழுத்துச்சென்று கர்ணுஸ்ஸஹபியில் இறக்கினான். 

மறுநாள் காலை முஹம்மத் பல புதிய திட்டங்களுடன் படைமுன்வந்து சற்று உரையாற்றினான். நபியவர்களது சுபசோபன வார்த்தைகளைக்கூறி வீரர்களை உற்சாகப்படுத்தினான். வெற்றி அல்லது வீர மரணம் என்ற மந்திரத்தை மீண்டும் மீண்டும் கூறி ஆர்வமூட்டினான். மேலும் யுத்தத்தில் பொதுமக்களை அநியாயமாகக் கொலைசெய்ய வேண்டாமென்றும் குழந்தைகள்,  பெண்கள்,  வயோதிகர்கள் மீது அன்பு செலுத்துமாரும் பிறவணக்கஸ்தலங்களையும் மதகுருக்களையும் மதித்து நடக்குமாறும் பல யுத்ததர்மங்ளைக் கண்டிப்பாகப் பின்பற்றுமாறு கூறினான். 

வழமைபோன்று யுத்தம் ஆரம்பமாகியது. முன்தினம் பீரங்கிகள் பதம்பார்த்த அதே இடங்களைக் குறிவைத்துத் தாக்கியது பீரங்கிப்படை. இம்முறை அரண்களால் நின்று பிடிக்க முடியவில்லை. ஒருபகுதி ஆட்டங்கான ஆரம்பித்து பெரும்துளையை ஏற்படுத்தியது. 

கர்னுஸ்ஸஹபியிலே இறங்கிய கப்பல்களும் படிப்படியாக முன்னேறிக்கொண்டிருந்தன. இதனை எதிர்பாராத கோட்டைப் படைகள் ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றன. அக்கணம் முஸ்லிம் படைகள் கடல் மார்க்கமாகவும் தரைமார்க்கமாகவும் இருகட்டத் தாக்குதல்களை நடாத்தின. பீரங்கித்தாக்குதலால் நிலைகுழைந்த ஒரு பக்க வாயிலில்,  பெரும் துளையொன்று ஏற்பட்டது. உடனே முஸ்லிம்கள் அதனைநோக்கி ஜிவ்வென்று பாய்ந்துசென்றனர். 

அதனைச் சூழநின்று எதிர்த்தாக்குதல் செய்துகொண்டிருந்த எதிரிப்படையைத் தாக்கி உட்பிரவேசிக்க முயற்சித்துக்கொண்டிருந்தனர். எனினும் அது சிறியதொரு இடமென்பதாலும் சனநெரிசல் அதிகரித்தமையாலும் கோட்டையின் மேலிருந்து எதிரிப்படை தாக்கிக்கொண்டிருந்ததாலும் முஸ்லிம்களில் பலர் சஹீதாயினர். உடனே முஸ்லிம் படைவசமிருந்த மரத்திலாலான பிரம்மாண்டமான மூன்றுதட்டுகளைக்கொண்ட நகரக்கூடிய சப்பரமொன்றைக் கொண்டுவந்து கோட்டைமீதிருந்தவர்களோடு எதிர்த்தாக்குதல் புரிந்தனர். தொடர்ந்தும் வந்த பீரங்கி குண்டுகள் மென்மேலும் கோட்டைச் சுவரை உருக்குலையவைத்தமையால்  முஸ்லிம் படைகள் விரைவில் கோட்டையினுள் நுழைந்து தாக்குதல் நடாத்தி இருதியில் அவ்வாயிற் சுவரின்மேலே உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் கொடியைப் பறக்கவிட்டன.  

அக்கொடியைக் கண்ட பைசாந்திய வீரர்கள் அச்சம்கொண்டனர். முன்னேறிப் போராடிய முஸ்லிம் வீரர்கள் மேலும் முன்னேறி அவர்களை வெருண்டோடச்செய்தனர். வானுயர்ந்துநின்ற கொடியைக்கண்ட பிற முஸ்லிம் வீரர்களுக்கும் அது புதுத்தெம்பையூட்டியது. எனவே அதனைத்தொடர்ந்து பல வாயில்கைள முஸ்லிம் வீரர்கள் கைப்பற்றிக்கொண்டனர். அத்தோடு பின்புறம் கப்பல்களில் வந்த முஸ்லிம்வீரர்களும் முழுமையாக உள்ளே நுழைந்;தனர். 

கோட்டை மன்னனோ ஏற்கனவே ஐரோப்பாவுக்கு உதவிதேடிச்சென்றிருந்தான். அதற்குள் நடந்த இப்பேரதிர்ச்சியை யாராலும் ஜீரணிக்க முடியவில்லை. பல ஆண்டுகளாகக் கொன்ஸ்தாந்துநொபிளைக் கைப்பற்ற பல்வேறு படையெடுப்புகள் நடந்தும் யாராலும் அதனைச் செய்யமுடியவில்லை. இனியும் யாராலும் அக்காரியத்தைச் செய்யமுடியாது என்றே அம்மக்கள் நினைத்திருந்தனர். ஆனால் அதனை இளவேங்கை அற்புத வீரன் முஹம்மத் அல்பாதிஹ் நிறைவேற்றிவிட்டான். 

ஒருவாராக யுத்தம் முடிவுக்குவந்தது. கொன்ஸ்தாந்துநொபிள் கோட்டை முழுதும் முஸ்லிம்கள் வசமாகியது. பாதிஹ் அளவிலா மகிழ்ச்சியடைந்தான். எனினும் கர்வங்கொண்டு நெறிபிறழாது இறைவனைப் புகழலானான். தன்முன் நின்ற படைவீரர்களோடு அவ்வெற்றிக் கழிப்பைப் பகிர்ந்துகொண்டான். சிறிது உபதேசம் செய்தான். என்னருமைச் சகோதரர்கள் நீங்கள் குஸ்தந்தினீயாவை வெற்றிகொண்ட வீர வேங்கைகளாக ஆகிவிட்டீர்கள். நபிகள் பெறுமானின் பொன்மொழியை நிதர்சனப்படுத்தியுள்ளீர்கள். அன்னாரது சுபசோபனத்தைப் பெற்றுவிட்டீர்கள். மூத்த ஸஹாபாக்களதும் எம் முன்னோர்களதும் கனவை நனவாக்கிவிட்டீர்கள். அல்லாஹ் எம்மனைவருக்கும் நல்லருள் புரியட்டும்.” 

சேனாப்படை வீரர்களே...! இம்மக்களுக்கு நல்லன செய்யுங்கள். அவர்களோடு அன்பு பாராட்டுங்கள். யாருக்கும் எக்காரணம்கொண்டும் அநீதமிழைத்துவிட வேண்டாம். வணக்கஸ்தலங்களையும் மதகுருக்களையும் கண்ணியத்துடன் நடாத்துங்கள். இதுவே இஸ்லாம் கூறும் உயர்நெறி.” 

இவ்வாறு ஒரு சிறு உரையை நிகழ்தி முடிந்ததும் தக்பீர்கோசம் ஓங்கி ஒளித்தது. முஹம்மத் தன் புறவியிலிருந்து கீழே குதித்து அல்லாஹ்வுக்கு நன்றிசெலுத்தும்பொருட்டு  இரண்டு ரக்அத்துக்கள் தொழுதான். இறைவனுக்குப் பணிவோடு நன்றியுரைத்தான். பின்பு கொன்ஸ்தாந்துநோபிள் போரொன்றில் சஹீதாகி கோட்டையினருகில் அடக்கம்செய்யப்பட்ட அபூ அய்யூப் அல்அன்ஸாரி (ரழி) அவர்களது மண்ணரையினருகில் சென்று ஆனந்தக் கண்ணீர் வடித்தான். பின்னர் இம்மாபெரும் வெற்றிச் செய்தியை மிஸ்ர், பேர்ஸியா,  சிந்து போன்ற பல்வேறு பகுதிகளின் கவர்னர்களுக்கும் எத்திவைத்தான். 

முஸ்லிம் படையின் வெற்றிகுறித்து செய்தியறிந்த மக்களில் அதிகமானோர், அச்சத்தினாலும் பீதியினாலும் கிறிஸ்தவ ஆலயங்களில் தஞ்சம் புகுந்துதிருந்தனர். முஹம்மத்,  அவர்கள் முன்சென்று தாம் அவர்களை யாதும் செய்யப்போவதில்லை என்று எடுத்துக்கூறி முன்னர் எப்படி வாழ்ந்தார்களோ அதேபோன்று தம் வீடுகளுக்குச்சென்று சந்தோசமாக வாழுமாறு கூறினான். தம்மைத் துவம்சம்செய்ய வந்தவர்கள் என எண்ணியிருந்த இவர்களா இப்படிக்கூறுகிறார்களென வியப்பிலாழ்ந்தனர் அம்மக்கள். தம்முயிர்களுக்கோ,  உடமைகளுக்கோ எவ்விதச் சேதமும் நேர்ந்திராததைக் கண்டு அம்மக்கள் பூரிப்படைந்தனர். 

முஹம்மத் அல்பாதிஹ் வெற்றிகொள்ளப்பட்ட கொன்ஸ்தாந்து நோபிள் கோட்டையிலிருந்த பேரளவிலான ஆட்சிமுறையை மாற்றியமைததான். பின்பு பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளையும் செய்தான். சமூகத்தின் தலைவன்தான் அவர்களது சேவகன் என்ற ஹதீஸக்கமைய தன்னை மாற்றிக்கொண்டான். கைதிகளுக்கு இரக்கம் காட்டினான். அவர்களுக்குத் தனது சொந்தப் பணத்திலிருந்தே செலவுசெய்தான். ஏழை மக்களுக்கு வாரி வழங்கினான். அறிவியல் வளர்ச்சிக்காகப் பல பாடசாலைகளைக் கட்டினான். வாசிகசாலைகளைப் பல இடங்களிலும் நிறுவினான். அங்காடிகளையும் வைத்தியசாலைகளையும் அமைத்தான்.  நகரை அழகுபடுத்துவதற்காக பூந்தோட்டங்களையும் நீர்க்குட்டைகளையும் அமைத்தான். பாதைகளைப் புணரமைத்து தெருவிளக்குகளைப் பொருத்தினான். புதுச்சாலைகளையும் ஏற்படுத்தினான். இவ்வாறு பல்வேறு பொதுப்பணிகளைச் செய்து புதியதோர் நாகரிகத்தையும் கலைச் செழுமையையும் அம்மக்களுக்கு அறிமுகப்படுத்தி அவர்களது உள்ளங்களில் நீங்கா இடம்பிடித்தான். அதிகமான மக்கள் இஸ்லாத்தின் உண்மையுணர்ந்து முஸ்லிம்களின் பண்புகளைக் கண்டு இஸ்லாத்தில் இணைந்துகொண்டனர். புது வாழ்வுபெற்றனர். 

முஹம்மத் பரந்து விரிந்த உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் ஆட்சிமையத் தலைநகரமாக கொன்ஸ்தாந்துநோபிளை மாற்றினான். அதற்கு இஸ்லாமிய நகரம் - இஸ்லாம் பூல் எனப்பெயரிட்டான். அதனைத்தான் இன்று நாம் இஸ்தான்பூல் என்றழைக்கின்றோம். இத்துருக்கிய வெற்றி ஐரோப்பிய வரலாற்றிலும் இஸ்லாமிய வரலாற்றிலும் பெரும் நிகழ்வாக இடம்பிடித்திருக்கின்றது. 

முஹம்மத் நபியவர்களால் எதிர்வுகூறப்பட்டு பல தளபதிகளும் முயன்று முடியாதுபோன இவ்வெற்றியை ஈட்டித்தந்ததன் காரணமாக வரலாறு நெடுகிலும் அல்பாதிஹ் - வெற்றியாளன் - என சிறப்புப்பெயரால் அழைக்கப்படுகின்றார். நபியவர்கள் கூறியதுபோன்று தளபதிகளுக்கெல்லாம் சிறந்த தளபதியென ஆனவர். தன் பெயரை வரலாறு படிக்கும் விதமாகப் பாடம்புகட்டிச்சென்றவர். ஆம்! அந்த மாவீரர் 1481ம் ஆண்டு (ஹிஜ்ரி– 886ல்) தனது 52ம் வயதில் இன்னுயிர் நீத்தார். 

இறைவன் அன்னாருக்கு நல்லருள் புரியட்டும்...... 
....ஆலிப் அலி....
                                                                                               Go Home...

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...