"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

23 July 2010

கொழும்பில் கொலை: பிச்சைக்காரர்கள்

இலங்கையின் தலைநகர் கொழும்பு மாநகரில் அண்மையில் பிச்சைக்காரர்கள் கொடூரமான முறையில் படுகொலைசெய்யப்பட்டுள்ளனர். இது நாட்டு மக்களிடத்திலும் குறிப்பாக கொழும்பு மாநகர பிச்சைக்காரர்களிடத்திலும் கடும் பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் கொங்கறீட் கட்டைகளால் பலமாகத் தாக்கப்பட்டும் வீதியோரங்களில் இரவு நேரங்களில் தூங்கிக்கொண்டிருக்கும் போது பாறாங்கற்களைத் தலையில் போட்டும் படுபயங்கரமாக கொலைசெய்யப்பட்ள்ளனர். இப்பாதகத்தைப் புரிபவர்கள் நிச்சயமாக மனிதப் பிறவகளாக இருக்க அருகதையற்றவர்ளென்றுதான் கூறவேண்டும்.
வயிற்றுப் பசிக்காவும் வாழ்வாதாரத் தேவைகளுக்காகவும் யையேந்தி நிற்கும் பிச்சைக்காரர்கள் இன்று உயிர் பிச்சைபோடுமாறு கண்ணீர் வடிக்கின்றனர். இப்படுபாதகச் செயல்களின் பின்னால் ஒரு சில நபர்களோ அல்லது ஒரு குழுவோ தனித்துச் செயற்படுவதாகச் சந்தேகிக்கப்படுகின்றது. கொலைகாரர்களில் சிலரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளதாகத் தெரிவித்திருப்பினும் இன்னும் அக்கொலைகள் தொடர்வதுதான் மர்மத்திலும் பெரும் மர்மமாகக் காணப்படுகின்றது.
உண்மையில் இதனைத் தனிப்பட்ட முறையில் யாரும் செய்கின்றார்களா அல்லது அதிகார வர்க்கத்தின் செல்வாக்கினோடு செய்யப்படுகின்றதா என்பதுதான் தற்போது அனைவர் மத்தியிலும் எழுந்துள்ள கேள்வி.
ஏனெனில் தலைநகரின் அபிவிருத்திப் பணிகளின் நிமித்தம் அண்மைக் காலமாக கொழும்பிலிருந்து பிச்சைக்காரர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்துள்ளது. மருதானை, கொம்பனித் தெரு, கொள்ளுப்பிட்டி, புறக்கோட்டை போன்று நகரங்களிலிருந்து பிச்சைக்காரர்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த மே மாதம் முதல் பொது இடங்களில் பிச்சை எடுப்பதும் பஸ் வண்டிகளில் ஏறி பிச்சை எடுப்பதும் கூடாது என அரசு சட்டம் கொண்டுவந்துள்ளது.
எப்படியோ இவ்வாறான நடவடிக்கைகளால் பிச்சைக்காரர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழவே அவர்கள் பல்வேறு காரணிகளால் குடும்பத்திலிருந்து விரட்டப்பட்டு அல்லது பெற்றோரைச் சிறுவயதிலேயே இழந்து அல்லது நோய் நொடிகள் காரணமாக பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அவர்களில் அதிகமானவர்கள் வயோதிபர்களாகவும் கை, கால் ஊணமுற்றவர்களாகவும் கர்ப்பிணித் தாய்மார்களாகவும் பிள்ளைகளைக் கையில் சுமந்து திரியும் தாய்மார்களாகவுமே காணப்படுகின்றனர். அவர்களை தனியாக அனுகிக் கேட்டால்தான் அவர்களது பிரச்சினைபற்றி அறியமுடியும்.
எடுக்கும் சொற்ப பிச்சையில் கூட அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களோ மிக அதிகம். பிச்சைக்காரர்களிடம் கொள்ளையடிப்பது, அவர்களை ஏமாற்றி பணம் கலவாடுவது, மிரட்டுவது, பஸ்ஸில் பிச்சைகேட்டால் கிடைப்பதில் ஒரு தொகையை பஸ் ஓட்டுனருக்குக் கொடுக்கவேண்டிய நிலை, வேகாத வெயிலில் தள்ளாடும் வயதில் பாதை வழியே அழைந்து திரியும் பரிதாபம், நோய் நொம்பளம் என்றால்கூட கேட்டுப் பார்க்க யாருமற்ற அவலம், பலரதும் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாக வேண்டியமை என இவற்றைப் பார்க்கும் போதே உள்ளம் பதருகின்றது.
இதற்கு யார் காரணம்? ஒன்று சிறுவயதிலேயே தீய பழக்கங்களின் விளைவாக வீட்டை விட்டும் துரத்தப்பட்டவர்கள். துர்நடத்தைகளால் ஊரை விட்டு வேறு ஊர் வந்துசேர்ந்தவர்கள். குடும்பத்தினருடன் தகராரிலீடுபட்டு வீட்டை விட்டு வந்தவர்கள். தமது பெற்றோறே தமக்கு சுமையென எண்ணியதால் துரத்தப்பட்ட பெற்றோர்கள் அல்லது முரியோர் காப்பகங்களில் சேர்க்கப்பட்டு அதிலிருந்து வந்தர்வகள். இவ்வாறு ஒரு ஒழுங்கான கட்டுக்கோப்பான வாழ்க்கை முறை இல்லாமையினால் பலர் இந்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதனை சமூகமே பொறுப்பேற்க வேண்டும்.
எப்படிப்போனாலும் அபிவிருத்திப் பணிகளோ என்னவோ எதுவாயிருந்தாலும் இந்த மனிதர்களது புணர்வாழ்வு குறித்து அரசு கவனம்செலுத்தவேண்டும். அவர்களுக்கு ஒரு மாற்றீடு வழங்குவது அவசியம்.

ஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...