"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

20 October 2020

கற்பக விருட்சம் தென்னை

பிள்ளையைப் பெத்தா கண்ணீரு; தென்னையைப் பெத்தா இளநீரு” இப்படி ஒரு பாடல் வரி உண்டு. “ஒன்ன வளக்குறத இரண்டு தென்னை மரத்த வளர்த்திருக்கலாம்! “பிள்ளைகளைப் பெற்று அவர்களால் மனம் வருந்திக்கொண்டிருக்கும் பெற்றோர் இப்படியான வார்த்தைகளைக் கூறுவதை முன் சென்ற பரம்பரையினரிடம் அடிக்கடி கேட்க முடியும். இதில் தென்னையை உதாரணமாகக் கூறியிருப்பது தென்னையின் மகிமையும் அதன் பயன்பாடுகளும் மனிதனைவிட அதிகமாக இருக்கின்றது என்பதனால்தான். இத்தொடரில் தென்னையின் அற்புதப் பயன்கள் பற்றி அறிந்துகொள்வோம்.

தோற்ற அமைப்பு

எரிக்கேசியோ (ARECACEAE) குடும்பத்தில் அடங்கும் தென்னையின் தாவரவியல் பெயர் கோக்கஸ் நியூசிஃபெரா (Cocos nucifera L.) என்பதாகும். ஆங்கிலத்தில் Coconut என்று அழைக்கப்படும் தென்னை தமிழில் தெங்கு, தாழை என்ற வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகின்றது. இலங்கை, இந்தியா போன்ற வெப்ப மண்டல நிலப்பரப்புகளில் தென்னை நன்கு வளர்கின்றது. தென்னை மரம் நிலத்தில் பல ஆயிரம் சிறு வேர்களை ஊன்றிப் பரப்பி கிளைகள் இன்றி செங்குத்தாக உயர வளரும். உயர வளர்ந்து 6 மீட்டர்களுக்கு சுற்றிலும் அழகாக ஓலைகளைப் பறப்பி அன்னார்ந்து நிற்கும் தென்னையின் அழகோ தனி அழகு.  தென்னையில் நெட்டைத் தென்னை 70 முதல் 100 ஆண்டுகள் வரை உயிர் வாழக் கூடியது. நட்டு 7 ஆவது ஆண்டிலிருந்து காய்க்கத் துவங்கும்.  அதேபோன்று குட்டை வகைகள், நட்டு 5 ஆவது ஆண்டிலிருந்து காய்க்கத் தொடங்கும். இவற்றின் ஆயுள் 30 - 35 ஆண்டுகளாகும்.

உலகளவில் தென்னை வேளான்மை.

உலகில் 80 க்கும் மேற்பட்ட நாடுகளில் தென்னை வளர்க்கப்படுகிறது. நட்டு ஐந்து வருடங்களில் விளைச்சல் தர ஆரம்பிக்கும். தென்னை வேளான்மையில் இந்தோனேசியா, பிலிப்பைன்சு, இந்தியா ஆகிய மூன்று நாடுகளுமே எப்போதும் முன்னணியில் இருந்து வருகின்றன. இந்தியாவில் தமிழகம், கேரளா, கர்நாடகம் மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களிலும் இலங்கையில் குருனாகல், புத்தளம் போன்ற பகுதிகளிலும்தான் தென்னை அதிகளவில் வளர்க்கப்படுகிறது. இதனால் உலகளவில் தேங்காய் உற்பத்தி ஆண்டுக்கு 61 மில்லியன் டன்களாகக் காணப்படுகின்றது.

தென்னையின் பயன்கள்.

மரம் என்றால் உணவு, மரம் என்றால் தண்ணீர், மரம் என்றால் காற்று, மரம் என்றால் வாழ்வு, மரம் என்றால் உயிர், மரம் தானே நம் வாழ்வின் அடிப்படை. அந்த மரங்களில் தென்னைக்கு பிரதான இடமுண்டு. காரணம் அதன் மூலம் நாம் அடையும் இன்னோரன்ன நன்மைகளாகும். தென்னை மரம் முழுமையாக செழுமை நிறைந்ததாகவே காணப்படுகின்றது. இளநீர், தேங்காய், தேங்காய் எண்ணெய், கருப்பட்டி, கள்ளு, தேங்காய் நார், தென்னங் கீற்று, பட்டை, பாலை, தென்னம் பூ, தென்னங் குறுத்து, மரம், வேர், சிரட்டை என எல்லா உறுப்புகளும் பல்வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

 உடலுக்கு ஆரோக்கியம்.

பூலோகத்தின் கற்பக விருட்சம் என்று சொல்லி தென்னையையும் அதன் முத்தான தேங்காயையும் சித்த மருத்தவம் உள்பட இந்திய மருத்துவ முறைகள் காலம் காலமாகப் போற்றி வருகின்றன.

இளநீரின் பயன்கள்.

தென்னை மரங்களில் பாளை (பூ) விரிந்த 2 வாரங்களில் ஆண் பூக்கள் மலர்ந்து உதிர்ந்துவிடும். 3 ஆவது வாரம் முதல் பெண் பூக்கள் கருவுறுதல் நிகழ்ந்து பிஞ்சுகளாக வளர தொடங்கும். அதிலிருந்து சுமார் 150 முதல் 180 நாட்களுக்குள் நல்ல இளநீ கிடைக்கும். தேங்காய் இளமையாக இருக்கும் பொழுது இளநீர் என்று அழைக்கப்படும். அதனுள் தேங்காய் நீர் நிறைந்து காணப்படும். வெயில் காலங்களில் வெயிலுக்கு இதமாக இருக்க இளநீர் பயன் படுகிறது. சிறுநீர் எரிச்சல், குடல் எரிச்சல், உடல் எரிச்சல், மலச்சிக்கல் போன்றவற்றை இளநீர் சீராக்கும்.

இளநீர் நா வறட்சியை போக்கி தாகத்தை தணிக்கிறது. அயன், மக்னீசியம், துத்தநாகம் போன்ற தாது சத்துகள் இளநீரில் உள்ளது. பற்கள் பாதுகாப்புக்கும், எலும்பு வளர்ச்சிக்கும் தேவையான சுண்ணாம்புச்சத்து 29 சதவீதம் இளநீரில் உள்ளது. குடலில் உள்ள புழுக்களை அழிக்கும் சக்தி இளநீருக்கு உண்டு. காலையில் வெறும் வயிற்றில் இளநீர் குடிப்பதினால் புழுக்கள் அழிவதுடன் குடல் நோய்களும் குணமாகும். காலரா, மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இளநீர் கொடுப்பதினால் நல்ல சத்து மற்றும் ஆற்றல் கிடைக்கும். இளநீர் மிகவும் தூய்மையானது, எனவே வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் இருக்கும் நோயாளிகளுக்கு உடனடி ஊட்டச்சத்துக்கு சேலைன் மூலம் நரம்பு மண்டலத்திற்கு செழுத்தப்படுவது இளநீர்தான். அந்த அளவுக்கு இளநீர் சிறப்பு வாய்ந்தது.

தேங்காய், தேங்காய் எண்ணெய்.

இளநீர் முற்றிய பின் அது தேங்காய் என்றும் இன்னும் அதிகளவு முற்றி அதனுள் இருக்கும் நீர் வறண்ட பின் அதனை கொப்பரை தேங்காய் என்றும் அழைப்பர். கொப்பரைத் தேங்காயிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்தான் உனவு சமைப்பதற்கும், தலைமுடி வறண்டு போகாமல் இருப்பதற்கும் பயன்படுகிறது. தேங்காய் எண்ணெய் எடுத்த பின்பு மீதமிருக்கும் கழிவு கால்நடைகளுக்கு உணவாகப் பயன்படுத்த படுகிறது.

தேங்காய் தென்னிந்திய மற்றும் இலங்கைச் சமையலறைகளில் முக்கிய
இடத்தைப் பெறுகிறது. சமையலுக்கு சுவை கொடுக்கும் அம்சமாகவும் தேங்காய் எண்ணெய், தேங்காய்ப் பால் காணப்படுகின்றது. தேங்காய்ச் சம்பலும் பானும் உண்டவர்களுக்குத் தெரியும் அதன் சுவை. இடியப்பம் என்றால் அங்கு கட்டாயம் தேங்காயச் சம்பல் இருக்கவே வேண்டும். இப்படி உணவில் பெருமிடத்தை தேங்காய் பெருகின்றது.

தேங்காயும், அதன் தண்ணீரும் ஜீரணமண்டலத்தை வலுப்படுத்த உதவும். வயிற்று இறக்கம், நாவறட்சி, மயக்கம், படபடப்பு, இதயத்துடிப்பு அதிகரிப்பு போன்றவற்றைக் குணப்படுத்த உதவும். இதன் வேரைக் கசாயமிட்டு பருகினால் தோல்படை, சொறி, தோல் நோய், நாக்கு வறட்சி போன்றவை குணமாகும். இரத்த மூலத்திற்குத் தென்னம் பட்டையையும் இரத்தப் போக்கைக் கட்டுப்படுத்த தேங்காய் எண்ணெயையும் மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள். தேங்காயின் சதைப் பகுதியைச் சர்க்கரையுடன் கலந்து சாப்பிட்டால் ஆண்மைச் சக்தியை அதிகரித்து வயிற்றுப்பூச்சிகளைச் சாகடிக்கிறது. தென்னையில் இருந்து பெறப்படும் எண்ணெய் பிறந்த குழந்தைகளுக்கு தடவி குளிக்க வைப்பதால் குழந்தைகளின் தசை வளர்ச்சிக்கும், எலும்பு வளர்ச்சிக்கும், கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது. இதை தினமும் தடவி அரை மணிநேரம் கழித்து குளித்தால் உடல் களைப்பு நீங்கும். வாய்ப்புண், நாக்குப்புண் போன்றவற்றிற்கு தேங்காய் எண்ணெயை சிறிதளவு குடிக்கலாம். வெட்டுக் காயங்களில் நோய் தொற்று ஏற்படாமல் பாதுகாக்க இதன் எண்ணெயை பயன்படுத்தலாம்.

அளவாக எடுத்தால் தேங்காயில் உள்ள பேட்டி ஆசிட் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது. தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ்,  நார்ச்சத்து அனைத்தும் தேங்காயில் உள்ளன. பெண்களுக்கு மாதவிலக்கின் போது ஏற்படும் அதிக உதிரப்போக்குக்கு, தென்னை மரத்தின் வேரிலிருந்து எடுக்கப்படும் சாறு நல்ல மருந்தாகும். புண்ணாக்கோடு கருஞ்சீரகத்தைச் சேர்த்து, தோல் நோய்களுக்கு மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.  தேங்காய் பால் உடல் வலிமைக்கு நல்லது. மற்றும் நஞ்சு முறிவாகப் பயன்படுத்தப்படுகிறது. நஞ்சருந்திவிட்டு வைத்தியசாலை சென்றால் முதலில் தேங்காய்ப் பாலை குடிக்கத் தந்துதான் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பார்கள்.

வீட்டுப் பொருட்கள்.

வீடு கட்டுவதற்கும், மண் வீடுகள் கட்டும் போது தூண் எழுப்புவதற்கும் வீட்டின் கூரை அமைப்பதற்கும் தென்னையின் தண்டு பயன்படுகின்றது.  தென்னை ஓலையைக் கொண்டு கூரையை மழைக்கு ஒழுகாமல் மறைப்பார்கள். இன்றிருக்கும் மின் விசிரியில் இல்லாத குளுமை  இதில் கிடைக்கும். ஓலையைச் சீவிகீற்றுகளைக் கொண்டு கூட்டுமாறு செய்வார்கள். தென்னை மட்டையின் தும்பை எடுத்து துடைப்பம் தயாரிப்பார்கள். கயிறு திரிப்பதும் அதனால்தான். அத்தோடு தும்புச் சோறு உரம் தயாரிப்பதும் அதனால்தான். பாத்திரங்கள் கழுவவும் தென்னை மட்டை பயன்படுகின்றது. சிரட்டைகளை அடுப்பு எரிப்பதற்கு பயன்படுத்துவார்கள். விரகு, கை விசிறி இன்னும் வீட்டிற்கு அலகு சாதனப் பொருட்கள் செய்யவும் தென்னை மரத்தின் பாகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. சிலபோது சிறிய ஓடைகளைத் தாண்டிச் செல்வதற்காக தென்னையின் தண்டை கொண்டு சிறு பாலங்களும் அமைக்கிறார்கள்.

இவை மட்டுமன்றி இந்துக்களும், பௌத்தர்களும் தேங்காயை பூஜைகளுக்குப் பயன்படுத்துகின்றனர். இளம் ஓலைகளை அழகாகப் பின்னி இந்து மதத்தவர்கள் திருவிழா காலங்களிலும்திருமண வைபவங்களிலும் தோரணமாக் தொங்கவிடுவார்கள். அத்தோடு தென்னை ஏராளமான உயிர் ஜீவிகளுக்கு அடைக்களம் தருமிடமாகவும் உள்ளது. மரங்கொத்தி, வண்டுகள், புழுக்கள், பூச்சிகள், அனில், காகம் என பலதும் அடைக்கலம் தேடும் இடம் தென்னை மரம்தான். ஆக மனிதனுக்கு மட்டுமன்றி பூவுலகின் அனைத்து உயிர்களுக்கும் இறைவன் அருளியுள்ள இயற்கையின் பொக்கிசம் கற்பக விருட்சம்தான் தென்னை.

அஷ்.ஆலிப் அலி (இஸ்லாஹி) 

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...