"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

06 February 2010

இஸ்பைனில் இஸ்லாம்

வெற்றி அல்லது வீர மரணம் எனும் இவ்விரண்டைத் தவிர தோற்று ஓடுதல் என்ற மூன்றாவது வழியொன்று நமக்குக் கிடையாது
...ஆலிப் அலி...

“இறைவா! இந்த சாகரம் மட்டும் என்னைக் குறுக்கிட்டுத் தடுத்திராவிடின் கண்காணாத தூரம் வரை சென்று உன் நாமத்தைப் பரப்பியிருப்பேன்

மேற்கு ஆபிரிக்காவின் கடற்கரையிலிருந்து அடுத்ததாக உள்ளது அட்லாண்டிக் சாகரம். அன்று வடமேற்கு ஆபிரிக்காவின் எல்லை வரை இஸ்லாமியத் தளபதி உக்பா வெற்றிகண்டுகொண்டே முன்னேறினார். இறுதியாக அட்லாண்டிக் சாகரத்தையடைந்ததும் இதற்கப்பால் தன்னால் செல்ல முடியவில்லையே என்ற கவலை தொனிக்கும் குரலில் தனது புரவியின் கழுத்தைச் சாகரம் தொடுமளவிற்க்கு அதனைக் கடலிலே செலுத்திவிட்டுக் கூறியதுதான் மேற்கண்ட கூற்று.

அதன் பின்பு தளபதி மூஸா பின் நுஸைரின் தலைமையில் வந்த படை ஸ்திரமாகவே வடஆபிரிக்காவில் நிலைகொண்டுவிட்டது. அங்கிருந்து இஸ்லாத்தின் ஒளிக்கீற்றுகள் படிப்படியாக ஐரோப்பாவின் எல்லைவரை பிரகாசிக்கலானது. இக்காலப் பிரிவு ரொட்ரிக் என்ற கொடுங்கோலன் ஸ்பைனை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தான். அவனது அட்டகாசங்களையும் கொடுமைகளையும் தாங்காத மக்கள் அங்கிருந்து வடஆபிரிக்கா நோக்கி வந்துகொண்டிருந்தார்கள். காலச் சக்கரம் சுழல தினம் தோறும் இடம்பெயர்ந்து வந்து கவர்னர் மூஸாவிடம் முறையிடும் மக்கட்தொகை கூடிக்கொண்டே வந்தது. வடஆபிரிக்காவில் இஸ்லாத்தின் மகிமையைக் கண்ட அம்மக்கள் படிப்படியாக இஸ்லாத்தின் பால் கவரப்பட்டுவந்தனர்.

இனியும் கவர்னர் மூஸா தாமதியாது ஒரு முடிவுக்கு வந்தவராய் கலீபா வலீதுபின் அப்துல் மலிக்கிற்கு ஸ்பைனை வெற்றிகொள்ள அனுமதிகோரி ஒரு நிருபம் வரைந்தார். அதில் ஸ்பைனில் நடக்கும் மனித ஆட்சியின் கொடுமைகளையும் அங்கு இறை ஆட்சியை நிறுவ வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியிருந்தார். கவனக்குறைவாக முஸ்லிம்களைப் போரில் ஈடுபடுத்தி அநியாயமாக அவர்களது உயிர்களை சிதைத்துவிடக் கூடாதென்ற ஒரு கண்டிப்பான நிபந்தனையுடன் அனுமதிவழங்கப்பட்டது.

அனுமதி கிடைத்த மகிழ்ச்சியோடு ஸ்பைனின் சூழ நிலவரங்கள் குறித்து ஆராய்ந்து பார்ப்பதற்காக இளைஞன் தரீபின் தலைமையில் 500 படைவீரர்களை கவர்னர் மூஸா ஸ்பைனுக்கு அனுப்பி வைத்தார். அப்படை அங்குசென்றடைந்தது முதல் வந்து கொண்டிருந்த செய்திகள் எல்லாம் மனதைக் குளிரவைப்பனவாய் அமைந்தன. ஏனைய படைவீரர்களும் அடுத்தகட்டமாக எங்கே தாமும் ஸ்பைனில் கால்பதிக்கப்போகிறோம் என்று துடியாய்த் துடித்துக்கொண்டிருந்தார்கள். இச்சமயம் பார்த்து ஸ்பைனிலே இறையாட்சியின் கொடியை, இஸ்லாத்தின் தீபத்தை ஏற்றிவைப்பதற்காக கவர்னர் ஒரு படையைத் தயார்செய்து அதற்கு ஒர் அற்புதமான மனிதனைத் தளபதியாகவும் நியமித்தார்.

ஆம்! அவன் அற்புதமானவன். பெரும் போர் வீரன். இதற்கு பல்லாண்டுகளுக்கு முன்பாக வட ஆபிரிக்கக் கரையோரம் நெடுகிலும் வியாப்பித்து ரோமானிய சாம்ராஜ்யத்தையே ஆட்டங்காணச் செய்துகொண்டிருந்த பாபர் இனத்து வீரன் அவன். பின்பு வடஆபிரிக்காவில் இஸ்லாம் காலூன்றியதும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள்தாம் இந்த பாபர் இனத்து மக்கள்.

தளபதி மூஸாவின் காலத்தில் நடந்த ஒரு யுத்தத்தில் கைதியாய்ப் பிடிபட்டு பின்பு அவரால் விடுவிக்கப்பட்டு அவரது பேரன்புக்கும் மதிப்புக்கும் பாத்திரமானவன்தான் அவன். இதுவரை ‘டாஞ்சியர்’ பகுதிக்கு ஆளுனராய் இருந்துவிட்டு தற்போது ஸ்பைனை வெற்றிகொள்ள அனுப்பிவைக்கப்படவுள்ள படைக்குத் தளபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள உன்னத வீரன். அவன்தான் ஸியாதின் மகன் தாரிக். தாரிக் பின் ஸியாத் எனப் பிரபல்யமான இருபது வயதுகூட நிரம்பாத நிலையில் ஒரு நாட்டை வெல்ல ஒரு படைக்கே தளபதியாக்கப்பட்டவன்.

ஹிஜ்ரி 92ஆம் ஆண்டு (கி.பி.711) 7000 படைவீரர்களை கவர்னர் மூஸாபின் நுஸைர் தாரிக்கின் தலைமையில் ஸ்பைன் நோக்கி வழியனுப்பிவைத்தார். கடல் கடந்து வந்த தாரிக் தலைமையிலான படை முதன் முதலில் கரையோரமிருந்த ஒரு குன்றின்மீது இறங்கினர். அன்று முதல் அது ‘ஜபலுத்தாரிக்’ தாரிக் மலை என்றுதான் அழைக்கப்படுகின்றது. ‘ஜிப்ரோல்டர்’ என அனைவராலும் பொதுவாக அழைக்கப்படும் அளவுக்கு அது வரலாற்றுச் சிறப்புப்பெற்றுவிட்டது.

இருள் கவ்விய இரவு நேரம். கரையோரக் கூடாரங்களில் தங்கியிருந்த வீரர்கள் தீச்சுவாலைகள் கிளம்பிய திக்கு நோக்கி விரைந்தனர். அனைவரது முகங்களிலும் பதட்டம் முகாமிட்டிருந்தது. எவ்விதச் சலனமுமின்றி கையில் ஒரு தீப்பந்தத்துடன் அங்கே தாரிக் நின்றிருக்க, தம்மைச் சுமந்து வந்த கப்பல்கள் தீக்கிரையாகிக்கொண்டிருப்பதைக் கண்டு அனைவரும் ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றனர். அனைவரது முகங்களிலும் கோபம் அப்பிக்கிடந்தது. நிதானமாகவும் உணர்ச்சி பூர்வமாகவும் தாரிக் கூறினான். “மக்களே! எதிரிகளோ எம்முன்னால், ஆழ் கடலோ எம் பின்னால் இருக்க, அல்லாஹ் மீதாணையாக வெற்றி அல்லது வீர மரணம் எனும் இவ்விரண்டைத் தவிர தோற்று ஓடுதல் என்ற மூன்றாவது வழியொன்று நமக்குக் கிடையாது. அல்லாஹ்வின் மீது முழுநம்பிக்கை வைத்து முன்னேறுவோம். இறை மார்க்கத்தை முழங்குவோம்” அடுத்த கணம் மக்களிடமிருந்து உணர்ச்சி பொங்க வெளிப்பட்ட தக்பீர் கோஷம் விண்ணைப் பிளந்தது.

முஸ்லிம்கள் வந்திறங்கிய நோக்கத்தை அறிந்து கொண்ட மன்னன் ரொட்ரிக் அவர்களை எதிர்த்துப் போர்புரிய தனது படைபட்டாளங்களைத் தயார்செய்ய உத்தரவிட்டான். இதற்குள் கவர்னர் மூஸாவினால் அனுப்பிவைக்கப்பட்ட மேலதிக 5000 வீரர்களைக் கொண்ட படையும் வந்து தாரிக்குடன் இணைந்து கொண்டது. முஸ்லிம் படை வீரர்களைவிட எண்ணிக்கையிலும் ஆயுத பலத்திலும் பன்மடங்கான வீரர்கள் ரொட்ரிக்கின் தலைமையில் வந்துகொண்டிருந்தனர். தாம் எண்ணிக்கையில் அதிகமாயிருந்தாலும் முஸ்லிம்களின் நெஞ்சுறுதிக்கும் ஈமானியப் பலத்திற்கும் முன்னால் அற்பமானவர்கள் என்பதை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள்.

அடுத்தநாள் ரமழான் மாதம் 28ஆம் திகதி ஸிதோனியாப் பள்ளத்தாக்கில் முஸ்லிம் படைக்கும் ஸ்பைன் படைக்குமிடையே சமர் உக்கிரமமடைந்தது. நாட்கள் புறண்டன. எதிரிப் படை பலத்த இழப்புக்களுடன் படிப்படியாக பின்வாங்கிக் கொண்டிருந்தது. அன்று ஷவ்வால் மாதம் 5ஆம் நாள் ரொட்ரிக் மன்னனை வெட்டி வீழ்த்தி அப்போரிலே முஸ்லிம்கள் வெற்றிக் கிரீடத்தை அணிந்துகொண்டனர். அது முதல் எத்தனையோ நகரங்களும் சிற்றரசுகளும் சர சரவென தாரிக்கின் முன் வீழ்ந்துகொண்டிருந்தன. ஸ்பைனின் முக்கால் பகுதியைத் தாரிக் வெற்றிகொண்டு விட்டான்.

இத்தருணத்தில் முஸ்லிம் படைகளை எதிரிகள் முற்றுகையிட்டுவிடுவார்கள் என்றஞ்சிய கவர்னர் மூஸா தாரிக்கைத் தாமதித்து நிற்குமாறு கூறி மேலும் பெரும் படையுடன் தாமும் அங்கு வந்து சேர்ந்தார். பலமான இரு சக்கரங்கள் ஒன்றுசேர்ந்தமையால் வெற்றியென்ற இலக்குகள் மிகவேகமாக வந்தடைந்துகொண்டிருந்தன சக்கரங்களின் வேகத்திற்குமப்பால்.

தாரிக் முன்னேறிச் சென்றுகொண்டிருந்ததை யாராலும் குறுக்கிட்டுத் தடுக்க முடியவில்லை. ஆனால் ஆரம்பத்தில் தளபதி உக்பாவுக்கு நேர்ந்தவாறே தாரிக்கிற்கும் முட்டுக்கட்டையாய் அட்லாண்டிக் பெருங்கடல் படுத்துக்கொண்டிருந்தது. அவ்வாறே கவர்னர் மூஸாவும் பிரான்ஸ{க்கும் ஸ்பைனுக்கும் பிரிகோடாய் இருந்த பிரனீஸ் மலைத்தொடரை அடைந்ததும் கலீபா வலீதிடமிருந்து இரு தளபதிகளையும் மீண்டுவருமாறு அனுப்பப்பட்டிருந்த நிருபம் கரம்கிடைத்தது. உடனே இருவரும் மீண்டுவிட்டார்கள்.

அன்று முதல் ஸ்பைன் முழுவதும் உத்தியோக பூர்வமாக இஸ்லாமிய நாடாக மிளிர்ந்தது. ஸ்பைன் அல்அந்தலுஸ் என முஸ்லிம்களால் அலைக்கப்படலானது. அன்றிலிருந்து 800 வருட காலங்கள் அல்அந்தலுஸ் முஸ்லிம்களின் ஆட்சியின் கீழ் பல்வேறு அறிவியல் துறைகளாலும் நாகரிகத்திலும் ஓங்கி உயர்ந்து அஞ்ஞானத்திலிருந்த ஐரோப்பாவுக்கு ஒளியூட்டியது.

தாரிக் மகா வீரன். சிறு வயதில் குறுகிய காலத்தில் பெரியதொரு நாட்டையே வெற்றிகொண்டவன். இறுதியில் தனது வாழ்க்கையை அங்கேயே நிரந்தரப்படுத்திக்கொண்டான். அம்மக்களுக்காக அயராது உழைத்து அவர்களின் நன்மதிப்பைப் பெற்றான். ‘ரேச்சல்’ என்று பெயர் தாங்கிய ஒரு யூதப்பெண்ணை இஸ்லாமாக்கி ‘ராஹேல்’ என்ற பெயர் சூட்டி சந்தோசமானதொரு குடும்ப வாழ்க்கையில் தன்னை இணைத்துக்கொண்டான்.

தாரிக் - விடிவெள்ளி என்ற பெயரின் பொருளுக்கேட்ப இன்றும் உலக மக்களின் மனதில் ஒளிவிட்டுப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறார் அந்த மாமனிதர்.

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...