ஆலிப் அலி, இஸ்லாஹியா வளாகம்
அல்லாஹ் மனிதர்களை நன்நெறிப்படுத்துவதற்காக காலத்திற்குக் காலம் தூதுவர்களையும் வேதங்களையும் அனுப்பிவைத்தான். அந்தவகையில் முஹம்மத் நபி (ஸல்) அவர்களை முழு உலகத்துக்குமான இறுதித்தூதராகவும் அல்குர்ஆனை அவர்களது வாழ்வின் சகல படித்தரங்களுக்குமான வழிகாட்டியாகவும் அருளினான். இதனூடாக நன்மை, தீமை என்பவற்றை தெளிவுபடுத்திய இறைவன் சுவனம், நரகத்திற்கான பாதைகளையும் தெறிவுபடுத்திவிட்டான். அதனை அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான். “மேலும் (நன்மை, தீமையாகிய) இரு வழிகளை நாம் அவனுக்குக் காண்பித்தோம்” (90:10)
இவ்வாறு இரு பாதைகளைக்காட்டிய இறைவன் “நீ இந்தப் பாதையைத்தான் தெரிவு செய்ய வேண்டும்” என்று மனிதனை நிர்ப்பந்திக்கவில்லை. அவரவர் விரும்பும் பாதையை, மார்க்கத்தை, மதத்தைத் தேர்வுசெய்துகொள்வதற்கான சுதந்திரத்தை வழங்கியுள்ளான். அவன் காட்டித்தந்த பாதையில் மனிதன் அல்லாஹ்வுக்கு நன்றியுடையவனாகவோ அல்லது நன்றி கெட்டவனாகவோ இருக்க முடியும் என்பதனையும் அல்குர்ஆனில் பின்வருமாறு தெளிவுபடுத்துகின்றான். “நிச்சயமாக நாம் அவனுக்கு (நன்மை, தீமை பற்றிய) வழியைத் தெளிவுபடுத்தினோம். (அதில்) அவன் நன்றியுள்ளவனாக இருக்கலாம். அல்லது (அதனைப் பின்பற்றாது) நன்றிகெட்ட (நிராகரிப்ப) வனாகவும் இருக்கலாம்.” (76:03)
ஜிஹாத் என்ற சொல்லைக் கேட்டதுமே பலரும் உசாராகி விடுகின்றார்கள். ஏனெனில் இன்று இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள், இஸ்லாத்தின் குறகிய கால வளர்ச்சியை சீரனிக்க முடியாதவர்கள் இந்த ஜிஹாத் எனும் யுத்தத்தினூடாகவே இஸ்லாம் பரப்பப்பட்டது என்றும் வெற்றிகொள்ளப்பட்ட மக்கள் வாள் முனையில் காட்டாய மதமாற்றம் செய்யப்பட்டனர் என்றும் பிரச்சாரம் செய்கின்றனர். வரலாற்று நெடுகிலும் நடந்த யுத்த வெற்றிகளின் பின்பு மக்கள் இஸ்லாத்தில் நுழைந்தமையைக் காரணங்காட்டி லியோனி கைட்டான், கோல்ட்ஸியர், பண்டலி ஜோஸி, எம்.கியோஜி மற்றும் பெர்னார்ட் லுயிஸ் போன்ற சில அறிஞர்களும் வரலாற்றாசிரியர்களும் இஸ்லாம் வாள்முனையில் பரப்பப்பட்ட மார்க்கம் என்று குற்றக் கணைகளைத் தொடுக்கின்றனர்.
உண்மையில் வரலாற்றில் எங்குமே முஸ்லிம்கள் நாடு பிடிக்கும் நோக்கிலோ, தமது இனத்தின் எண்ணிக்கையைக் (Quantity) கூட்டிக்கொள்ள வேண்டுமென்ற அவாவிலோ படையெடுத்துச் செல்லவில்லை. அவ்வாறு எண்ணிக்கையை அதிகரிப்பதால் இஸ்லாம் பலவீனப்படுகின்றதேயல்லாமல் ஒருபோதும் பலம்பெறுவதில்லை. மாறாக அவர்கள் படையெடுத்துச் சென்றதெல்லாம் இரண்டே இரண்டு விடயங்களுக்காகத்தான்.
ஒன்று; முஸ்லிம்களின் இருப்புக்கு அச்சுருத்தல் வந்தால் அதிலிருந்து தம்மைத் தற்காத்துக்கொள்வதற்கும் இரண்டு; அராஜக ஆட்சியின் கீழ் அல்லுற்ற மக்களே அவ்வாட்சியாளர்களிடமிருந்து தம்மைக் காப்பாற்றி விடுவிக்குமாறு கோரியதனாலும் அடுத்து இறையாட்சியின் அம்மக்களை சுபீட்சமடையச் செய்யவும்; தாம்பெற்ற இன்பத்தை இவ்வையகமும் பெறச்செய்யவேண்டும் என்ற உயரிய நோக்கிலுமே படைநடாத்திச் சென்றார்கள். இதற்கு கடந்துசென்ற வரலாறே சான்று.
அல்லுற்ற மக்களை அல்லாஹ் எவ்வாறு காப்பாற்றினான் என்பதனை அல்குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது. “மேலும், மனிதர்களில் (அநியாயம் செய்யும்) சிலரை (மற்ற) சிலரைக்கொண்டு அல்லாஹ் தடுக்காதிருந்தால் (பாதிரிகளின்) மடங்களும் கிறிஸ்தவர்களின் வணக்கஸ்தளங்களும் யூதர்களின் வணக்கஸ்தளங்களும் மஸ்ஜிதுகளும் - இவற்றில் அல்லாஹ்வின் பெயர் அதிகமாகக்கூறப்படுபவையாவும் இடிக்கப்பட்டுப் போயிருக்கும்” (22:40) என்கின்றான்.
ரோம் நாட்டு மன்னன் ஹெர்க்யூலிஸ் முஸ்லிம்கள் கைப்பற்றியிருந்த பகுதிகளை ஆக்கிரமிக்க பெரும்படையுடன் வந்தபோது தளபதிகளான காலித் பின் வலீத், அபூ உபைதா (ரழி) ஆகியோர் அப்பிரதேச மக்களிடம் பெற்ற ஜிஸ்யாவைத் (ஆள் வரி) திருப்பி ஒப்படைத்து விட்டு முன்சென்று போராட முனைந்த போது அக்கிறிஸ்தவ மக்கள் கண்ணீர் மல்கும் கண்களுடன் கவலை தொய்ந்த முகத்துடனும் “நீங்கள் அவர்களுடன் போரிட்டு வென்று வரவேண்டும். உங்களது ஆட்சியில் ஜிஸ்யா வெலுத்தி வாழ நாம் ஆவளாக இருக்கின்றோனம்” என்றனர்.
ஆரம்பத்தில் இஸ்பைனில் கிறிஸ்தவ அரசர்களால் கொடுமைப்படுத்தப்பட்ட யூதர்கள் மேற்கு ஆபிரிக்கா நோக்கித் தப்பி வந்து தளபதி மூஸா பின் நுஸைரிடம் வேண்டியதற்கிணங்கவே அவர் இஸ்பைனை வென்றெடுப்பதற்காக தாரிக் பின் ஸியாதை அனுப்பினார். அவ்வாறுதான் சிந்துப் பிரதேசத்தில் பிராமணபுரியை ஆண்டுவந்த மன்னன் உதயவீரன் மக்களை அதிமாகவே நெருக்கடிக்குட்படுத்தியதால் அம்மக்கள் கலீபா வலீத் பின் அப்துல் மலிக்கிடம் தம்மை காப்பாற்றக் கோரியபோது முஹம்மத் பின் காசிமை அங்கே அனுப்பி அம்மக்களைக் காப்பாற்றினார்.
இவ்வாறு தம்மைக் காப்பாற்றக் கோரி அழைப்பதைப் பற்றி அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான். “இன்னும் அல்லாஹ்வின் பாதையில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோரில் பலவீனமானவர்களின் (பாதுகாப்பு) விசயத்திலும் நீங்கள் யுத்தம் செய்யாதிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்களோ “எங்கள் இரட்சகனே! இவ்வூரிலிருந்து எங்களை வெளியேற்றிவிடுவாயாக. இவ்வூர் வாசிகள் அநியாயக்காரர்களாக இருக்கின்றார்கள். நீ எங்களுக்கு உன் புறத்திலிருந்து ஒரு பாதுகாவலரை ஆக்குவாயாக! நீ எங்களுக்கு உன் புறத்தால் ஒரு உதவியாளரை அளித்தருள்வாயாக என்று பிரார்த்தனை செய்து அழைக்கின்றனர்.” (04:75) என்கிறான்.
“The Spread of Islam in the world” “உலகம் முழுதும் பரவிய இஸ்லாம்” என்ற தனது நூலிலே சேர் தோமஸ் ஆர்ணல்ட் எனும் கிறிஸ்தவ வரலாற்றாசிரியர் “முஸ்லிம்களின் ஆட்சியின் கீழ் நிலவிய மதப் பாதுகாப்புணர்வு அதே காலகட்டத்தில் சின்ன ஆசியா (ஆசியா மைனர்) வாழ்ந்த கிறிஸ்தவர்களையும்கூட சல்ஜுக்கிய துருக்கியர்களைத் தங்களின் பாதுகாவலர்களாக எடுத்துக்கொள்ளும்படி விரும்பச் செய்தது. எட்டாவது மைக்கல் (1261-1282) என்பவரின் ஆட்சியில் சின்னாசியாவில் சிறு கிராமவாசிகள் துருக்கியர்களைத் தமது கிராமங்களை வென்று ஆட்சி செலுத்துமாறு வேண்டினர். பலர் தமது நாடுகளைவிட்டு துருக்கிய ஆட்சி நிலவும் பிரதேசங்களுக்குக் குடியேறினர்.” என்றவாறு வரலாற்று உண்மையை எழுதுகின்றார். மேலும் அவர் குறிப்பிடுகையில் “நெடுங்காலம் ரோம் ஆட்சியில் அனுபவியாத சுதந்திர வாழ்க்கையை அக்கிறிஸ்தவ மக்கள், இஸ்லாமிய ஆட்சியின் முதல் நூற்றாண்டிலேயே அனுபவித்தார்கள் யூதர்களும் கிறிஸ்தவர்களும் இஸ்லாமிய ஆட்சியின் கீழ்தான் நிம்மதியாக வாழ்ந்துள்னர்” என தனது நூலிலே எழுதுகின்றார்.
ஜிஹாத் என்றால் நேரடியகவே யுத்தம் என்றோ போர் என்றோ கருத்துக்கொள்வது பிழையானது. அடிப்படையில் ஜிஹாத் என்பது முயற்சி செய்தல், கடுமையாக உழைத்தல், ஒரு விடயத்திற்காகப் பாடுபடுதல் என்று பல கருத்துக்கள் கொள்ளப்படுகின்றன.
ஒரு தீமையைத் தடுப்பதற்கும் அவ்விடத்தில் நன்மையை விதைப்பதற்கும் மேற்கொள்ளும் அனைத்து செயற்பாடுகளையும் ஜிஹாத் (முயற்சி, உழைப்பு) என்று அழைக்கமுடியும். அது நாவின் மூலம், எழுத்து மூலம் என பல்வேறு பரிமாணங்களில் இடம்பெறலாம். இவற்றில் சாத்தியமில்லாது போகும் இறுதிக் கட்டத்தில் மாத்திரம் தான் ஆயதமேந்திப் போராடியாவது அத்தீமையை ஒழித்துக்கட்டுவதற்கான திட்டங்களில் இரங்கமுடியும். இதுவல்லாமல் எடுத்த எடுப்பிலேயே ஜிஹாத் என்று கூறிக்கொண்டு களத்தில் ஆயுதங்களுடன் குதிக்குமாறு இஸ்லாம் ஒரு போதும் கூறவில்லை.
ஒரு தீமையைத் தடுப்பதற்கும் அவ்விடத்தில் நன்மையை விதைப்பதற்கும் மேற்கொள்ளும் அனைத்து செயற்பாடுகளையும் ஜிஹாத் (முயற்சி, உழைப்பு) என்று அழைக்கமுடியும். அது நாவின் மூலம், எழுத்து மூலம் என பல்வேறு பரிமாணங்களில் இடம்பெறலாம். இவற்றில் சாத்தியமில்லாது போகும் இறுதிக் கட்டத்தில் மாத்திரம் தான் ஆயதமேந்திப் போராடியாவது அத்தீமையை ஒழித்துக்கட்டுவதற்கான திட்டங்களில் இரங்கமுடியும். இதுவல்லாமல் எடுத்த எடுப்பிலேயே ஜிஹாத் என்று கூறிக்கொண்டு களத்தில் ஆயுதங்களுடன் குதிக்குமாறு இஸ்லாம் ஒரு போதும் கூறவில்லை.
இஸ்லாத்தைப் பொருத்தவரை அனைவரும் இஸ்லாத்தில் நுழைய வேண்டும் என்ற நிர்ப்பந்தமில்லை. அல்லாஹ் ஸ{ரதுல் பகறாவில் 255 ஆம் வசனத்தில் தனது ஆட்சியதிகாரங்களையும் வல்லமைகளையும் தானே அனைத்துக்குமான ஒரே அதிபதி என்றெல்லாம் கூறிவிட்டு அதனைத் தொடர்ந்து வரும் அடுத்த வசனத்தின் ஆரம்பத்திலேயே “(சத்திய இஸ்லாம்) மார்க்கதில் எத்தகைய நிர்ப்பந்தமுமில்லை. (ஏனெனில்) வழிகேட்டிலிருந்து நேர்வழி உறுதியாகவே தெளிவாகிவிட்டது” என்று மனிதனுக்கு மதச்சுதந்திரத்தை அளிக்கின்றான்.
மற்றுமோர் இடத்தில் அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான். “மேலும் உமதிரட்சகன் நாடியிருந்தால் பூமியிலுள்ள அனைவரும் விசுவாசித்திருப்பர். எனவே மனிதர்களை அவர்கள் (அனைவருமே) விசுவாசிகளாக வேண்டும் என்று நீர் நிர்ப்பந்திக்கிறீரா? எந்த ஆத்மாவும் அல்லாஹ்வின் அனுமதியின்றி அது விசுவாசித்துவிடாது” (10:99,100)
நாம் யாரையும் நிர்ப்பந்தித்து இஸ்லாத்தில் நுழைவிக்கவேண்டியதில்லை. அவருக்கு இஸ்லாத்தின் தூதை எத்திவைப்பது மட்டுமே போதுமானது. இதனை அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான். “நீர் அவர்களை அடக்கியாள்பவரல்லர். (எனவே) நமது அச்சுருத்தலைப் பயப்படுவோரை இந்தக் குர்ஆனைக்கொண்டு நல்லுபதேசம் செய்வீராக” (50:45) மேலும் கூறுகின்றான் “(அல்லாஹ்வின் தூதைப்) பகிரங்கமாக எத்திவைப்பதைத்தவிர (வேறு கடமை) எம்மீது இல்லை” (36:17) ஆக இவ்வாறான அல்குர்ஆனிய மற்றும் நபியவர்களின் வழிகாட்டல்களின் பிரகாரமே பிற்பட்ட காலங்கள் ஸஹாபாக்களும் முஸ்லிம்களும் நடந்துள்ளார்கள். இதனை ஆதாரபூர்வமான பல்வேறு வரலாற்றுச் சம்பவங்களிலிருந்து கற்க முடிகின்றது.
நபி (ஸல்) அவர்கள் ஒரு சேனைக்கு தளபதியாக ஒருவரை நியமித்தால் அவருக்கு பின்வருமாறு உபதேசிப்பார்கள். இறைவனுக்காவென்று அவனது பெயரால் போராடுங்கள். போர் செல்வங்களில் கையாடல் செய்யாதீகர்ள். ஒப்பந்தங்களை முறிக்காதீர்கள். மக்களை அங்கவீனப்படுத்தாரீர்கள். குழந்தைகளைக் கொலைசெய்யாதீர்கள். இவ்வாறு தொடர்கின்றது....” (முஸ்லிம்:3565)
ஹஸீன் (ரழி) அவர்கள் மதீனத்து பனூ சலீம் பின் அவ்ப் குலத்தைச் சேர்ந்த ஒரு அன்ஸாரித் தோழர். அவர் இஸ்லத்தை ஏற்றிருந்தும் அவரது இரு புதல்வர்களும் கிறிஸ்தவ மதத்தில் உறுதியாகவே இருந்துவந்தமை இவரைப் பெரிதும் வாட்டியது. எனவே தனது புதல்வர்கள் என்ற உரிமையில் அவர்களை இஸ்லாத்தில் நுழையவைக்க நபியவர்களிடம் அனுமதி வேண்டிச்சென்றார். இதன்போதுதான் அல்லாஹ் “لا إكراه في الدين” என்ற வசனத்தை இறக்கிவைத்து அக்காரியத்தைத் தடுத்தான்
சிரியாப் போருக்காக உஸாமா பின் ஸைத் (ரழி) அவர்களை கலீபா அபூபக்கர் (ரழி) அவர்கள் அனுப்பியபோது கூறிய யுத்த தர்மங்கள் இங்கு ஞாபகிக்கத்தக்கவை. இவை யுத்தத்தின்புது பிற மதங்களை எவ்வாறு மதிக்கவேண்டும் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டுகளாக விளங்குகின்றன. அபூபக்கர் (ரழி) அவர்கள் கூறினார்கள் “ஆசிரமங்களில் இருக்கும் துறவிகளை துன்புரத்தாதீர்கள். அவர்களது ஆலயங்களை அழித்துவிடாதீர்கள். பிற மதகுருக்களை நேர்மையுடனும் கண்ணியத்துடனும் நடத்துங்கள்.” என்று உபதேசித்தார்.
ஹிராவாசிகளுடன் நடந்த ஒரு யுத்த ஒப்பந்தத்தில் கலீபா அபூபக்கர் (ரழி) அவர்கள் அறிவித்த பிரகடனம் கூட ஒரு காலத்திலும் போர்க்களினூடாக இஸ்லாம் பரபப்படவில்லை என்பதற்குத் தக்க சான்றாகும். அப்பிரகடனத்தின்படி “(முஸ்லிம் அல்லாதவர்களுடைய) சந்நியாசி மடங்களும் கோவில்களும் அழிக்கப்படமாட்டா. எதிர்த்துப் போராடும் சமயம் அவர்கள் சரணடைந்துவிட்டால் அவர்களது அரண்மனைகள் துவம்சிக்கப்படமாட்டா. கோவில்களில் சங்கு ஊதுவதும் மணி அடிப்பதும் தடுக்கப்படமாட்டா. வைபவங்களில் சிலுவைகளைச் சுமந்து ஊர்வலம் செல்வதுகூட தடுக்கப்படமாட்டா” என்று அமைந்திருநுதது.
இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் இரண்டாம் கலீபா உமர் (ரழி) அவர்களுளுக்கு அஸ்பக் என்ற ஒரு அடிமை இருந்தார். அவரை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுமாறு உமர் (ரழி) அவர்கள் அடிக்கடி கூறுவார்கள். ஆனால் உமர் (ரழி) அவர்கள் அவ்வாறு கூறும்போதெல்லாம் அஸ்பக் அச்சமின்றி உடனே அதனை மறுத்துவிடுவார். இச்சந்தர்ப்பத்தில் உமர் அவர்கள் “لا إكراه في الدين” “லா இக்ராஹ பித்தீன்” என்ற குர்ஆனிய வசனத்தை ஓதிவிட்டு மௌனமாகச் சென்றுவிடுவார். ஒரு ஜனாதிபதி தன் அடிமைவிடயத்தில் கூட இஸ்லாத்தை ஏற்குமாறு எந்தவித நிர்பந்தமும் செய்யாது நடந்துகொண்டுள்ளமை இங்கு கவனம் செலுத்தி நோக்கத்தக்கவொன்றாகும்.
உமர் (ரழி) அவர்களது முஸ்லிம் சேனாப்படை ஜெரூஸலத்தை வெற்றிகொண்டதும் சொப்ரானியஸ் பாதிரியார் ஜெரூஸலத்தை உமர் (ரழி) அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு அதனைச் சுற்றிக் காண்பித்தவாறு கனீஸதுல் கியாமா என்ற மாதாக்கோயிலைப் பார்வையிட வரும்போது அஸர் தொழுகைக்கான நேரம் வந்துவிட்டது. உடனே கலீபா அவர்கள் தொழுகையை நிரைவேற்ற நாடினார். அதற்கு பாதிரியார் அந்த மடாலயத்திலேயே தொழுதுகொள்ள ஆலோசனை கூறியதும் அதற்கு உமர் (ரழி) அவர்கள் அளித்த பதில் இஸ்லாம் எந்தளவு பிற மதங்களை மதிக்கின்றதோ அந்தளவு அதற்குப் பாதுகாப்பும் வழங்கியுள்ளது என்பதை எடுத்துக்காட்டுகின்றது. உமர் அவர்கள் கூறினார்கள். “அல்லாஹ்வை எந்த இடத்திலும் தொழ முடியும்தான். ஆனால் நான் இங்கு தொழுதால் பின்னர் வரும் சமூகம் இது முஸ்லிம்களுக்குரியது என்று உரிமை கொண்டாடிவிடக்கூடும். அதற்கு நான் முன்மாதிரியாய் இருந்துவிட மாட்டேன்” என்று கூறினார்கள்.
இவ்வாறே உஸ்மானிய ஆட்சியின் சுல்தான் இரண்டாம் முஹம்மத் கொன்ஸ்தாந்துநோபிளை வெற்றிகொண்டதன் பின்னர் “தானே கிறிஸ்தவத் திருச்சபையின் பாதுகாவலன்” எனப் பறையறிவித்தார். அதேபோன்று துருக்கியருக்கும் ஹங்கேரியருக்கும் இடையில் போர் உக்கிரமமடைந்திருந்த ஒரு சமயம். துருக்கியத் தளபதியாக இரண்டாம் முராத் காணப்பட்டார். ஹங்கேரி மன்னன் ஜோர்ஜ் பிரான்கோவிக் (ஸர்பியா) தன் தளபதி ஹ{னியாடியைப் பார்த்து “இன்று வெற்றி உனக்கக்கிடைத்தால் நீ என்ன செய்வாய்?” என்று கேட்டான். அதற்கு தளபதி “அனைவரையும் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்தே தீருவேன்” என்றான். இதே கேள்வியைத் துருக்கியத் தளபதி இரண்டாம் முராதிடம் கேட்டுவர ஒரு தூதுவரை அனுப்பிவைத்தான் மன்னன் ஸர்பியா.
இதுதான் தூதன் கொண்டுவந்த பதில். “இந்த யுத்தத்தில் வெற்றி எனது படைக்குக் கிடைத்தால் ஒவ்வொரு பள்ளிவாயிலுக்கும் அண்மையில் ஒரு மடாலயத்தைக் கட்டுவிக்க அம்மக்களுக்கு அனுமதியளிப்பேன். எவர் பள்ளிவாயிலில் தொழுகை நடாத்த நாடுகின்றாரோ அவர் அதில் தொழலாம். எவர் ஆலயத்தில் வணக்கம் செலுத்த விரும்புகின்றாரோ அவர் அவ்வாறே செய்யலாம். நான் சமயச் சுதந்திரத்தை மக்கள் விருப்புக்கு விட்டுவிடுவேன்” என்றார். இதனைக் கேட்ட மன்னனின் கண்கள் ஆச்சரியத்தில் பூச்சொரிந்தன.
இன்று உலகம் பூராகவும் முஸ்லிம்கள் பற்றியும் இஸ்லாம் பற்றியும் பல்வேறு தப்பும் தவறுமான நச்சுக்கருத்துக்கள் தூவப்பட்டுவருகின்றன. “முஸ்லிம்கள் தீவிரவாதிகள், அவர்கள் குழப்பக்காரர்கள்” என்று நாளாந்தப் பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும் இணைய தளங்களும் கொட்டை கொட்டையாக செய்திகளைப் பரப்பிக்கொண்டுதான் இருக்கின்றன. இவற்றைப் படித்துவிட்டு பொதுமக்கள்கூட முஸ்லிம்களை இவ்வாறான ஒரு தோற்றப்பாட்டின் பின்னணியிலேயே பார்க்கின்றனர்.
ஆனால் இதுவரை நாம் இங்கு பார்த்த அல்குர்ஆனின் போதனைகளும் நபியவர்களின் வழிகாட்டல்களும் அதனைப் பின்பற்றி ஒழுகி நடந்த முஸ்லிம்களின் வரலாற்றுச் சான்றுகள் யாவும் இஸ்லாம் என்பது தீவிரவாதமோ பலாத்காரத்தினால் பரப்பபட்ட மார்க்கமோ அல்ல என்பதை நீங்கள் தெளிவாகப் புரிந்திருப்பீர்கள்.
உண்மையும் அதுதான். இஸ்லாம் ஒரு சாந்தி மார்கம். இது அமைதியையே விரும்புகின்றது. இவ்வுண்மையை உணரும்தருவாயில் நீங்களே இஸ்லாத்தின்பால் நாட்டம்கொள்வீர்கள். இன்ஷா அல்லாஹ்.
உண்மையும் அதுதான். இஸ்லாம் ஒரு சாந்தி மார்கம். இது அமைதியையே விரும்புகின்றது. இவ்வுண்மையை உணரும்தருவாயில் நீங்களே இஸ்லாத்தின்பால் நாட்டம்கொள்வீர்கள். இன்ஷா அல்லாஹ்.
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...