"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

09 October 2010

இரும்பின் அதிசயம்

அல்லாஹ் தனது திருமறையிலே இரும்பைப் பற்றி பின்வருமாறு கூறுகின்றான். “இன்னும் இரும்பையும் நாமே இறக்கினோம். அதில் கடுமையான சக்தியும் மனிதர்களுக்குப் பயன்களும் இருக்கின்றன.” (அல்ஹதீத்:25)

அல்லாஹ் இவ்வசனத்தில் இரண்டு விடயங்களை முக்கியப்படுத்திக் குறித்துக்காட்டுகின்றான். ஒன்று; இரும்பை நாமே இறக்கினோம், இரண்டு; மனிதர்களுக்கு அதில் பயன்களும் இருக்கின்றன. இவ்விரு விடயங்களையும் விளக்கமாகப் பார்ப்பதனூடாக இரும்பைப் பற்றிய ஆச்சரியமான சில விடயங்களையும் இறைவனின் வல்லமைகளையும் விளங்கிக்கொள்ள முடியும். அவற்றை சற்று விளக்கமாகப் பாப்போம்.

1. இரும்பையும் நாமே இறக்கினோம்

“இரும்பு எவ்வாறு பூமியில் தோன்றியது அல்லது உருவாகியது?” என்ற இக்கேள்வி ஆச்சரியமான, வியக்கவைக்கக்கூடிய, இறை இருப்புக்குச் சான்றான பல விடைகளைத் தருகின்றது.

இதுதான் இரும்பு என்று அறியாமலேயே இரும்பு கண்டெடுக்கப்பட முன்னதாகவே ஆதிமனிதன் இரும்பைப் பயன்படுத்தியுள்ளான். தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆதிமனிதன் பயன்படுத்திய இரும்பாலான உபகரணங்களைக் கண்டெடுத்துள்ளனர். அவை சிறிய கூர்மையான உள்போன்ற ஆயுதங்கள், வேட்டை ஆயுதங்கள், ஆபரணங்கள் என அமைந்திருந்தன. ஆராய்ச்சியாளர்கள் இவற்றை ஆதிகால மனிதர்களின் கல்லறைகளிலிருந்தே கண்டெடுத்தனர். இந்த இரும்பினாலான உபகரணங்ளை விஞ்ஞானிகள் ஆய்வுகூடத்தில்வைத்து நுணுக்கமாக ஆராய்ந்த போது அதிலிருந்து ஆச்சரியமான தகவல்களைப் பெற்றனர்.

அவ்வாறு அப்பொருட்களை ஆராய்ந்த போது அவற்றில் இரும்பு, நிக்கல், கோபால்ட் ஆகிய விஷேடமான பூமியில் கிடைக்க மிக மிக அறிதான உலோகங்கள் இருப்பதைக் கண்டுகொண்டனர். பூமியில் இயற்கையாகக் கிடைக்கும் இரும்பில் கோபால்ட் இருப்பதில்லை. ஆனாலும் பூமியின் மீது விழும் விண்கற்களில் இவ்வுலோகம் கனிசமாக உள்ளது எனவும் அண்டவெளியில் இவை தாராளமாகக் காணப்படுகின்றன எனவும் விஞ்ஞானிகள் ஏற்கனவே கண்டுபிடித்திருந்தனர்.

எனவே பூமியில் இயற்கையாகக் கிடைக்கப்பெற அறிதான, விண்கல்லில் தாராளமாக உள்ள சில உலோகப்பதார்த்தங்கள் ஆதிமனிதர்கள் பயன்படுத்திய உபகரனங்களில் காணப்பட்டதால் அவ்வுபகரனங்கள் விண்கட்கள் மூலமே தயார்செய்யப்பட்டிருக்க வேண்டும் என்ற திடமான முடிவுக்கு வந்தனர் தொல்பொருள் ஆய்வாளர்கள். ஆகவே பழங்குடிமக்கள் இவ்விண்கட்களை எடுத்து தாம் விரும்பிய வடிவங்களில் சுட்டும், உருக்கியும் பயன்படுத்தியிருக்க வேண்டும்.

விண்ணிலிருந்து பூமியை வந்தடையும் விண்கள்கள் பலவற்றில் கணிசமானளவு இரும்பு காணப்படுகிறது. இவ்விதமான விண்கற்களில் இரும்பு மட்டுமன்றி 8% அளவு நிக்கலும் சிறிதளவு கோபால்டும் அடங்கியிருக்கும். சிலவற்றில் நிக்கலின் அளவு 27% முதல் 65% வரை அதிகரிப்பதுமுண்டு. அத்தோடு “ஜெர்மனியம், காலியம், இண்டியம், டங்ஸ்டன்” ஆகிய உலோகங்கள் மிகக்குறைந்த அளவில் காணப்படுகின்றன.

மேலே பார்த்தவாறு தொல்பொருள் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வுகளின்படி உண்மையில் இரும்பு பூமியில் விளைந்தவொன்றல்ல. அது விண்ணிலிருந்தே பூமிக்கு வந்திருக்கவேண்டும் என்ற முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்துவிட்டனர். சூரியனையும்விட பல நூறு மில்லியன் வெப்பநிலைகொண்ட உடுக்களாளேயே இரும்பைத் தோற்றுவிக்க முடியும். ஒரு உடுவில் இரும்பினளவு குறிப்பிட்ட அளவைவிட அதிகரிக்கும்போது அது Nova அல்லது Me nova என்ற வடிவில் வெடிக்கிறது.
 
இவ்வாறு வெடிக்கும் இரும்பைக் கொண்ட இவ்வெரிகட்கள் கிரகமொன்றின் ஈர்ப்புக்குட்படும் வரை அண்டத்தில் மிதந்துகொண்டிருக்கும். இவ்வாறு பூமியின் ஈர்ப்புக்குட்பட்டு வீழ்ந்த இரும்புகள்தான் தற்போது பூமியில் புதைந்துகிடக்கின்றன. எனவே விண்ணிலிருந்துதான் இரும்பு பூமிக்கு வந்திருக்கிறது என்ற உண்மை புலனாகின்றது. இதுவே நாம் ஆரம்பத்தில் கேட்ட கேள்விக்கான விடையும்கூட. இவ்விடையை 1500 வருடங்களுக்கு முன்பே அல்லாஹ் அல்குர்ஆனிலே கூறி எம்மை வியக்கவைக்கின்றான் பாருங்கள் “இன்னும் இரும்பையும் நாமே இறக்கினோம்...”

பூமியைப் படைத்ததன் பின்பு அல்லாஹ் விண்கற்கள் மூலமோ அல்லது வேறு ஏதாவது வகையிலோ இரும்பைப் பூமிக்கு இறக்கியிருக்கலாம். அல்லாஹ்வே யாவற்றையும் அறிந்தவன். ‘நாமே இறக்கினோம்’ என இவ்விடயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கூறப்படுகின்றதென்றால் ஆரம்பத்தில் பூமியில் இரும்பு இல்லாமலிருந்து பின்னர் அது பூமிக்கு இறக்கப்பட்டிருக்க வேண்டும். ஆக இரும்பு விண்ணிலிருந்து வந்ததுதான் என்ற விஞ்ஞானிகளின் நவீன கண்டுபிடிப்பு மேற்கூறிய அல்குர்ஆன் வசனத்துடன் பொருந்தி நிற்பது அல்குர்ஆன் மெய்யாகவே இறைவனின் வேத வெளிப்பாடு என்பதனை உறுதிப்படுத்துகின்றது.

2. மனிதர்களுக்கு அதில் பயன்களும் இருக்கின்றன.
இன்று இரும்பு உலகில் புரியும் தொழிற்பாடுகள் பற்றி நாம் அறியாமலில்லை. இத்தெழிற்பாட்டைச் சுருங்கக் கூறுவதாயின் Paper clip முதல் விண்வெளி விமானம்வரை அனைத்து விதமான சந்தர்ப்பங்களிளும் இரும்பு பயன்படுத்தப்படுகிறது. கட்டிடங்கள் அமைக்கவும் பாலங்கள் கட்டவும் போக்குவரத்துச் சாதனங்கள் தயாரிக்கவும் யுத்த தளபாடங்கள் செய்யவும் என்று பல்வேறு அன்றாட நடவடிக்கைகளில் இரும்பு வெகுவாவகப் பயன்படுத்தப்படுகிறது. இலத்திரனியல் உலகம் (e-world) என்று இன்றைய உலகை அழைப்பதுபோன்று இரும்பியல் உலகம் (I-world) என அழைப்பதிலும் பிழையில்லை எனலாம். ஏனென்ரால் இந்த இலத்திரனியலின் அடிப்படையிலும் இரும்பு தாக்கம் செலுத்துகிறது.

இது பிரத்தியேகமானதொரு பொருள் என இரும்பை எம்மிலிருந்தும் பிரிதிதுப்பார்க்க முடியாது. அந்த அளவுக்கு இரும்பு எம்முடன் ஒட்டியுறவாடுகிறது. எப்படியென்றால் அது பூமியில் புதைந்துகிடப்பது மட்டுமன்றி எமது அன்றாடப் பாவனைப் பொருள்களிளும் பயன்படுத்தப்படுகிறது. அத்தோடு மிருகங்கள், தாவரங்கள் மற்றும் மனிதனின் உடலிலும் இரும்பு காணப்படுகிறது.

பூமியின் புறவோட்டில் 5% இரும்பாகும். எனினும் தனி இரும்பாகக் காணப்படுவதில்லை. வேறு பல மூலப்பொருள்களுடன் ஒன்று சேர்ந்து கலப்பு நிலை உலோகமாகவே காணப்படுகிறது. இரும்பு உற்பத்தி நிபுணர்கள் (Ironmasters) இவ்வுலோகத்தைப் பூமியிலிருந்து எடுத்து அதிலிருந்து இரும்பு உட்பட இன்னும் பல தூய உலோகங்களைப் பிரித்தெடுக்கின்றனர். பூமியில் காணப்படும் இவ்வுலோகத்தில் மெக்னடய்ட், ஹெமடைட், லெமனைட், ஸைடரைட், பைரைட் போன்ற மூலக்கருக்கள் காணப்படுகின்றன. நிபுணர்கள் பூமியிலிருந்து இதனை எடுத்து இரும்பாலமைக்கப்பட்ட 60m உயரமான ஊதுகுலையினுல் இடுகின்றனர்.

பின்னர் அம்மூலக்கருக்களிலிருந்து இரும்பைப் பிரித்தெடுக்க சுண்ணாம்புக்கல்லும் கரியும் சேர்க்கின்றனர். பின்பு அவ்வுலை அதி உச்ச வெப்பநிலையில் சூடாக்கப்படுகிறது. இச்சமயத்தில் அவ்வுலையிற்கு தூயகாற்றும் செலுத்தப்படுகிறது. இவ்வாறு உச்ச நிலையில் வெப்பமடையும்போது இரும்பு திரவநிலையை அடைந்து தூய இரும்பும் மாசுக்களும் வேறாகின்றன. இரும்பும் மாசுக்களும் வௌ;வேறு குழாய்களால் வெளியேற்றப்படுகின்றன. இவ்வாறு வெளியேறும் இரும்பைத்தான் தூய இரும்பு (Pig iron) என்கிறோம். இதில் 93% இரும்பும் 7% காபனும் இன்னும் சில மூலக்கூறுகளும் காணப்படுகின்றன. இந்த சூடான இரும்பு குளிரடையுமுன் நிபுணர்கள் தேவையான அமைப்புகளில் இரும்பை வடிவமைத்து பாவனைக்கு விடுகின்றனர்.

இவ்வாறு மனிதன் இன்று விஞ்ஞான தொழிநுட்பத் துறைகளில் அடைந்திருக்கும் முன்னேற்றத்திற்கு இரும்பின் பங்கு அளப்பரியது. அல்லாஹ் இரும்பை விண்ணிலிருந்து பூமிக்கு இறக்கிவைத்ததன் காரணமாகத்தான் இன்று மனிதன் அதிலிருந்து பல்வேறு பயன்களையும் பெறுகின்றான். அல்லாஹ் அனைத்திலும் சக்திபெற்றவன் என்பதை இரும்பு மட்டுமல்ல துரும்பு முதல் அனைத்துமே பரைசாட்டுகின்றன.

ஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்)

அகரம் சஞ்சிகையில் பிரசுரமாகியது

உங்கள் கருத்து:

1 comments:

fathima said...

sirantha thagaval thanthamaiku nantri

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...