"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

17 May 2011

ஷஹீத் சையித் குதுப் அவர்களின் அழைப்புப் பணி

 குறிப்பு:   குதுப் அவர்கள் தொடர்பாக பலதரப்பட்டவர்களிடமும் பல்வேறு மாற்றுக் கருத்துக்கள் காணப்பட்டபோதிலும் அல்குர்ஆனின் கூற்றுக்கு ஏற்ப (எங்கள் இரட்சகா! எங்களையும் விசுவாசம் கொள்வதில் எங்களை முந்திவிட்டார்களே அத்தகைய எமது சகோதரா்களையும் நீ மன்னித்துவிடுவாயாக! விசுவாசம்கொண்டவர்களைப்பற்றி எமது இதயங்களில் வெறுப்பை ஏற்படுத்தாதிருப்பாயாக! எமது இரட்சகா! நீ மிக்க இரக்கமுடையவன். மிக்க கருணையுடையவன்” -59:10-) இங்கு அவரது குறைகளை ஆராய்வதைவிட்டு இஸ்லாத்திற்காக அவர் புரிந்த தியாகங்களையும் பணிகளையுமே நான் குறிப்பிட்டுள்ளேன்.
ஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்)
அன்றைய எகிப்தின் நிலை :
பதின் எட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் ஐரோப்பியக் காலனியாதிக்கத்திற்கு உட்பட்டிருந்த எகிப்து அப்போதிருந்தே படிப்படியாக அதன் பண்பாட்டு,  கலாசார, விழுமிய அடையாளங்களை இழந்துகொண்டிருந்தது. ஐரோப்பிய நாடுகள் எகிப்தை ஆக்கிரமித்து வளங்களைச் சுரண்டுவதை மட்டும் இலக்காகக்கொண்டிருக்கவில்லை. தமது மதத்தையும் கலாசாரத்தையும் எகிப்திய முஸ்லிம்கள் மீது கட்டுடைப்புச் செய்வதனையும் நோக்காகக் கொண்டு செயற்பட்டன.
தமது ஆதிக்கத்தை முஸ்லிம்கள் மத்தியில் தொடர்ந்தும் நிலைநிருத்தவேண்டுமாயின் முஸ்லிம்களை அவர்களது சத்தியமார்க்கம் இஸ்லாத்திலிருந்தும் தூரப்படுத்தவேண்டும். அல்குர்ஆனுடனான தொடர்பைத் துண்டிக்கவேண்டும் என ஐரோப்பிய நாட்டுத் தலைவர்கள் கருதி அதன்படி செயலாற்றினர். விக்டோரியா கால பிரிட்டிஷ் பிரதமர் கிளாட்ஸ்டன் மக்கள் அவையில் குர்ஆனைக் கையில் ஏந்தியவாறு இந்தப் புத்தகம் எகிப்தியரிடம் இருக்கும்வரை அந்நாட்டில் எம்மால் அமைதியை அனுபவவிக்க முயாது என்று குமுறியது இதற்குத் தக்க சான்றாகும்.
எனவே முஸ்லிம்களைக் குர்ஆனுடனான தொடர்பிலிருந்து துண்டிப்பதற்காகவும் இஸ்லாத்தை விட்டும் தூரப்படுத்துவதற்காகவும் நன்கு திட்டமிட்ட அடிப்படையில் சில தீர்மானங்களை எடுத்தனர். அவை:
1.  மேற்கின் கலாசார நாகரீகங்களின்பால் முஸ்லிம் இளைஞர்களின் கவனத்தை ஈர்த்தல்.
2.  வரையறைகளின்றி அவர்கள் மத்தியில் ஆபாசக் குப்பைகளைக் குவித்தல்.
3.  இஸ்லம் பற்றிப் பெய்யான சந்தேகங்களைக் கிளப்பி தப்பபிப்பிரயங்களை ஏற்படுத்தி மேற்கு அறிஞர்களின் சிந்தனைகளை விதைத்தல்.
4.  வரைமுறையின்றி இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்தல்.
5.  இஸ்லாமியக் கலாசாரம், அரசியல், வரலாறு என்பன பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு அவற்றைத் திரிபுபடுத்தி எழுதுதல். (Oriantelism)
இத்திட்டமிடல்களின் அடிப்படையில் மேற்குலகம் எகிப்து முஸ்லிம்களை இஸ்லாத்தைவிட்டும் தூரப்படுத்திக்கொண்டிருந்தது. முஸ்லிம்களை மேற்கு விலைகொடுத்து வாங்கியது. முஸ்லிம்களுக்கு மேற்கு நாடுகளில் கூடிய ஊதியத்துடன் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டன. உயர்படிப்புக்காக முஸ்லிம் மாணவர்களுக்கு சிறப்புப் புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டு மேற்கின் பல்கலைக்கழகங்களில் கல்விபயிலும் வாய்ப்புகள் வழங்கப்பட்டன.  அவர்களது சடவாத நாஸ்திகக் கல்விக்கொள்கையில் பயிற்றப்பட்ட இளைஞர்கள் பெயர்தாங்கி முஸ்லிம்களாகவே நாடு திரும்பினர். மேற்கின் மூலைச்சலவைக்குட்பட்ட நிலையில் நாடுதிரும்பிய அவர்கள் ஐரோப்பாவைப் புகழ்ந்துரைப்பவர்களாகவும் அவர்களுக்காகவும் அவர்களது சீர்கெட்ட கலாசாரங்களுக்காகவும் வக்காலத்து வாங்கியதோடு இஸ்லாத்தைப் பரவலாக விமர்சனம் செய்தனர். அல்குர்ஆன் தற்காலத்திற்கு ஒவ்வாதவொன்றென வாதித்தனர். நபியவர்களது ஹதீஸ்களைப் பொய்ப்பித்தனர். மொதத்தத்தில் இவர்கள் மதமறியா மிஸ்டர்களாகவே இருந்தனர். உயர்படிப்புப் படித்தவர்கள் என்பதால் இவர்களுக்கு சமூகத்தில் உயர் அந்தஸ்தும் காணப்பட்டது.
இக்காலப்பிரிவில் இஸ்லாத்தில் பற்றுருதிமிக்கவர்களாக இருந்த முஸ்லிம் ஆலிம்களால் மேற்கின் இச்சவாலை எதிர்த்து நிற்க முடியவில்லை. ஏனெனில் அவர்கள் உலகமறியா முல்லாக்களாகவே காணப்பட்டார்கள். முஆத் இப்னு ஜபல் (ரழி) அவர்களால் இஸ்லாமிய வேரூன்றப்பட்ட எகிப்து தேசம் இக்காலகட்டங்களில் படுமோசமாக வீழ்ச்சியை நோக்கிச்சென்றுகொண்டிருந்தது.
இதன்போதுதான் இமாம் அஷ்ஷஹீத் ஹஸனுல் பன்னா (ரஹ்) அவர்கள் இஸ்லாமியப் பிரச்சாரத்தை ஆரம்பித்து இஹ்வானுல் முஸ்லிமூன் என்ற இயக்கத்தையும் தோற்றுவித்தார்கள்.
பிறப்பும் கல்வியும் :
அன்றைய எகிப்தின் சமூக நிலை இவ்வாறு தரிகெட்டுப் போய்க்கெண்டிருக்கும் போதுதான் 1906 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி எகிப்தின் அஸ்ஸுயூத் மாகாணத்தில் மூஸே கிராமத்தில் ஸையித் குதுப் (ரஹ்) அவர்கள் பிறந்தார்கள். இவரது தந்தை சிறந்த மார்க்கமேதையாக விளங்கியவர். பெயர் இப்றாஹீம் குதுப். தாயார் பாதிமா ஹுஸைன் உஸ்மான். இவரும் மார்க்கப் பற்றுள்ள பெண்மனி. இவர்ளுக்கு நான்கு பிள்ளைகள். ஒருவர் சையித் குதுப். மற்றவர்கள் முஹம்மத் குதுப், ஆமினா குதுப், ஹமீதா குதுப் ஆவார்கள்.
சையித் குதுப் அவர்கள் தமது பாடசாலைக் கல்வியை 1912ல் தொடர்ந்தார். பின்பு 1918ல் அதிலிருந்து இடைவிலகி 1920ல் கெய்ரோ வந்து தாருல் உலூம் கல்வி நிலையத்தில் சேர்ந்தார். குதுப் அவர்களுக்கு சிறுவயது முதலே இருந்த இலக்கிய ஆர்வத்தின் விளைவு 1933ல் இலக்கியத் துறையில் பட்டப் படிப்பைப் பூர்த்திசெய்தார். பின்னர் சிறிதுகாலம் அங்கேயே விரிவுரையாளராவும் பணியாற்றினார்.
அவரின் கல்வியாற்றலை அறிந்துகொண்ட எகிப்திய கல்வியமைச்சு 1948ல் அவரை அமெரிக்காவின் கல்விக்கொள்கையை ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்கக்கோரி அமெரிக்காவுக்கு அனுப்பிவைத்தது. அமெரிக்காவில் கழித்த இரண்டு ஆண்டுளில் அவர் அங்கிருந்து இத்தாலி, சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கும் பயணங்களை மேற்கொண்டார். குதுப் அவர்களது இந்த அமெரிக்கப் பயணம்தான் அவரது பிற்பட்டகால வாழ்க்கையின் திருப்புமுனைக்கு வித்தாயமைந்தது.
மேற்குறித்த நாடுகளுக்கான பரவேசத்தின்போது சையித் குதுப் அவர்கள் அந்நாடுகளின் கீழ்த்தரமான நாகரிகங்கள், கலாசாரங்கள் குறித்தும் இஸ்லாத்தை அழிப்பதற்காக அவர்கள் தீட்டும் சூட்சுமங்கள் பற்றியும் நன்கு அறிந்துகொண்டார். அத்தோடு எகிப்தில் ஹஸனுல் பன்னா (ரஹ்) கொலைசெய்யப்பட்ட செய்தியைக் கேள்வியுற்ற அமெரிக்கர்கள் அதனைப் பெரும் ஆரவாரத்துடன் கொண்டாடியமை குதுப் அவர்களை இன்னும் ஆழமாகச் சிந்திக்கத் தூண்டியது. அதுவரை மேற்குலகை மெச்சுபவராகவும் மேற்கு சார்புடையவராகவும் இருந்த குதுப் அவர்களது உள்ளத்தில் மேற்கின் மீதான வெறுப்பும் அருவறுப்பும் கொஞ்சம் கொஞ்சமாக வேர்விடத்துவங்கியது.
1950களில் குதுப் அவர்கள் நாடு திரும்பினார். அவருக்காக கல்வியமைச்சகம் ஏற்பாடு செய்துவைத்திருந்த பதவியையும் அவர் ஏற்க மறுத்துவிட்டார். மேற்குலகின் சடவாத கல்விச்சிந்தனையை முஸ்லிம் மாணவர்கள் மத்தியில் பதித்து அவர்களை மேற்குலக சார்புடையவர்களாகவும் இஸ்லாத்தின் எதிரிகளாகவும் மூளைச் சலவைசெய்ய அவர் விரும்பவில்லை.
இயக்கத்தில் இணைதல் :
சையித் குதுப் அவர்கள் எகிப்து திரும்பியதும் அடுத்தகட்டமாக இமாம் ஹஸனுல் பன்னா பற்றியும் அவரது இஸ்லாமிய இயக்கமான இஹ்வானுல் முஸ்லிமூன் பற்றியும் தேடியறிந்து 1953ல் தன்னை உத்தியோகபூர்வமாக அவ்வியக்கத்தில் இணைத்துக்கொண்டார். அப்போது இயக்கத்தின் தலைவராக ஹஸன் ஹுழைபி அவர்களும் செயலாளராக அப்துல் காதர் அல்அவ்தா அவர்களும் இருந்தனர். இதில் குதுப் அவர்கள் முழுநேர ஊழியனாகத் தன்னை இணைத்துக்கொண்டதோடு பிரசாரக்குழுத் தலைவராகவும் பணியாற்றினார்.
இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தின் தலைவராக குதுப் அவர்கள் இருக்காவிடினும் இயக்க ஊழியர்களிலேயே ஹஸனுல் பன்னா (ரஹ்) அவர்களின் பின்னரான சிந்தனைச் சிற்பியாக போற்றப்படுபவர் இவரே. இஸ்லாமிய அழைப்புப் பிரசாரத்தற்கு குதுப் அவர்கள் தமது சிறுபராயம் முதலே இருந்துவந்த இலக்கிய வேட்கையினை நன்கு பயன்படுத்திக்கொண்டார். பன்னாவின் சிந்தனைகளையும் தனது சிந்தணைகளையும் இணைத்து அவற்றுக்கு இலக்கிய மெருகூட்டி தனது பேனா முனையினால் முழுவடிவம் கொடுத்தார். இவரது இலக்கியத் துறை பற்றிக்கூறுவதாயின் எகிப்திய இலக்கிய உலகின் தலைசிறந்த எழுத்தாளர்களாக மதிக்கப்படும் தாஹா ஹுஸைன் (இவர் மதச்சார்புடையவர், இஸ்லாத்தை விமர்சித்து பல கருத்துக்களை வெளியிட்டுள்ளார்), அக்காத், முஸ்தபா ராபிஃ போன்றவர்களுடன் இணைத்து சையித் குதுப் அவர்களது பெயரும் பேசப்படுகின்றது. அவரது இந்தப் பேனாமுனைப் புரட்சியின் ஆரம்பகட்டமே எகிப்தின் சடவாத அரசுக்குப் பெரும் இடியாய் இடித்தது.
சிறையில் சையித் குதுப் :
இயக்கத்தில் இணைந்த அடுத்த வருடமே (1954ல்) இயக்கத்தின்இஹ்வானுல் முஸ்லிமூன்பத்திரிகையின் தலைமை ஆசிரியராகப் பதவியேற்றார். என்றாலும் இவர் பதவியேற்று இரண்டு வாரங்களிலேயே இப்பத்திரிகை தடைசெய்யப்பட்டது. அதே ஆண்டில் (1954 ஜுலை 07) எகிப்து ஜனாதிபதி ஜமால் அப்துல் நாஸருக்கும் ஆங்கிலேயருக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கைச்சாத்தானது. இதுவே ஆங்கிலோ-எகிப்து ஒப்பந்தம் எனப்படுகின்றது. இதற்கு இஹ்வான்கள் தமது கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தனர். எனவே இஹ்வான்களில் பலர் நாஸரின் அரசால் கைதுசெய்யப்பட்டனர். இதில் சையித் குதுபும் ஒருவர்.
சிறை அதிகாரிகள் குதுப் அவர்களின்மீது சித்திரவதைகளைக் கட்டவிழ்த்துவிட்டனர். கடுமையான சுடு நீராலும் குளிர் நீராலும் அவரைப் பதம்பார்த்தனர். சொற்களாலும் கற்களாலும் வதைத்தனர். பூட்ஸ் கால்களால் உதைத்தனர். பசி வெறிபிடித்த நாய்களை ஏவிக் குதறச்செய்தனர். இவ்வாறு அவர்மீது புரிந்த சித்தரவதைகள் எல்லை தாண்டிச்சென்றுகொண்டிருந்தன.
1955 மே 3ம் திகதி சையித் குதுப் அவர்கள் உடல் ரீதியாகப் பெரிதும் பாதிக்கப்பட்டு இராணுவ மறுத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அந்நிலையிலேயே மீண்டும் அவர்மீது 15வருட சிறைத்தண்டனை விதியானது. இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அரசாங்கம் தூதுவர்களைக் குதுப் அவர்களிடம் அனுப்பிமன்னிப்புக் கோரிக்கை சமர்பித்தால் விடுதலை செய்வதாகவும் கல்வியமைச்சுப் பதிவியில் அமர்த்துவதாகவும் ஆசைவார்த்தைகளை வீசி வலைவிரித்தது. ஆனால் அதற்கு குதுப் அவர்கள் அளித்த பதில் மிகவும் உணர்வுபூர்வமாக இருந்தது. அவர் அத்தூதுவர்களிடம் கூறினார்:
அநியாயத்திற்குள்ளாக்கப்பட்டவர்கள் அநியாயத்தை வாழ்க்கையாகக்கொண்டவர்களிடம் மன்னிப்புக் கேட்கவேண்டுமென்பது விந்தையானதொரு விடயம். அல்லஹ்வை முன்னிறுத்திக் கூறுகின்றேன். மன்னிப்பைக் கேட்கும் ஒரே ஒரு வார்த்தைதான் என்னைக் காப்பாற்றிவிடும் என்றாலும் அதனை நான் சொல்லத்தயாராயில்லை. என்னைப் படைத்த என் இரட்சகனின் முன் நான் அவனைச் சந்திக்க விரும்பும் முகத்தோடு அவன் என்னைப் பொருந்திக்கொள்ளும் விதத்திலேயே நான் சமர்பிக்கப்படுவதை விரும்புகின்றேன் என்றார்.
இதன் பின்பு சிறையிலிருந்தவாறே நூற்களைப் படிப்பதற்கான வசதிகள் அவருக்கு செய்துகொடுக்கப்பட்டது. இதன்போதுதான் அவர் அல்குர்ஆனுக்கு விளக்கவுரையாகபீ ழிலாலில் குர்ஆன் - அல்குர்ஆனின் நிழலில்என்ற நூலை எழுதினார். அரபு மொழியிலான அல்குர்ஆன் விளக்கவுரைகளில் இதற்குத் தனித்துவமான இடமுண்டு.
15 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டாலும் 10 வருடங்களிலேயே (1964) அவர் விடுதலைசெய்யப்பட்டார். என்றாலும் எகிப்தின் பாதுகாப்புப் படையின் கடுமையான கண்கானிப்பின் கீழே அவர் நாட்களைக் கழிக்கவேண்டியிருந்தது. இக்கால கட்டத்தில்தான் ஸையித் குதுப் அவர்கள்மஆலிம் பித் தரீக் - இஸ்லாமிய எழுச்சியின் மைற்கற்கள்என்ற நூலை எழுதினார். இதுவே அவருக்கு மரணதண்டனை விதிக்கவும் காரணமாயமைந்தது. இந்நூல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால் நாஸரின் வயிற்றில் புலியைக் கரைத்தது.
தூக்கு மேடையில் துணிச்சலுடன் :
மஆலிம் பித்தரீக் நூல் வெளியானதும் அது ஜனாதிபதி அப்துல் நாஸரைக் கொலைசெய்வதற்கான ஒரு சூழ்ச்சியென்றும் இஹ்வான்கள் ஆட்சியைக் கவிழ்க்கத் திட்டம் தீட்டுவதாகவும் பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அவசரகால சட்டத்தை அமுலாக்கம் செய்து சையித் குதுப் உட்பட சுமார் 24000 இஹ்வான் உறுப்பினர்களைக் கைதுசெய்து சிறையில் தள்ளியது. இது சையித் குதுப் சிறையிலிருந்து விடுதலையாகி மூன்றே மாதங்களில் (1964 மார்ச் 24) நடைபெற்றது. இதன்போது அவர்மீதான சித்தரவதைகள் அதிகரித்தன. இராணுவ நீதிமன்றம் இரகசியமான முறையில் விசாரணைகளை நடாத்தி ஒரு குருட்டுத் தீர்ப்பை வழங்கியது. அந்தவகையில் 1966 ஒகஸ்ட் 29ல் சையித் குதுப் உட்பட இன்னும் இருவருக்கும் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது. (இன்னலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்)
இவரது மரணம் உலக மக்களது உணர்வுகளைக் கொதிப்படையச் செய்தது. எகிப்திய ஆட்சிக்கெதிராக இஹ்வான்களோடு பொதுமக்களும் கண்டனக்கணைகளை எழுப்பினர். இஹ்வானிய இயக்கம் உலகளவில் தடம் பதிக்க அவரது மரணம் அடியாயமைந்தது. “அல்குர்ஆனின் நிழலில், இஸ்லாமிய எழுச்சியின் மைற்கற்கள், ஆத்ம பரவசங்கள், இஸ்லாத்தில் சமூக நீதி, எதிர்காலம் இஸ்லாத்திற்கே”(இவை அரபு நூற்களின் தமிழ் மொழிபெயர்ப்புகளாகும்) என்று அவர் எழுதிய சுமார் 22 புத்தகங்கள் உலகம் முழுதும் பரபரப்பாக விற்றுத் தீர்ந்தன.
குதுப் அவர்கள் எதிர்கொண்ட சவால்கள் சுருக்கமாக:
அஷ்ஷஹீத் சையித் குதுப் (ரஹ்) அவர்கள் அக்காலத்தில் காணப்பட்ட முக்கியமான நான்கு பிரச்சினைகளில் கவனம்செலுத்தினார்கள்.
ஒன்று; இஸ்லாமிய நாட்டில் காணப்பட்ட மதசார்பற்ற சடவாத அரசு. இஸ்லாமிய சரீஅத் சட்டங்கள் அங்கு அலட்சியப்படுத்தப்பட்டு மனித சட்டங்கள் மக்களை அடக்குமுறைக்கு உட்படுத்திக்கொண்டிருந்தன. இதனைக் குதுப் அவர்கள் வன்மையாக எதிர்த்தார்கள்.
இரண்டாவது; இஸ்லாமியக் கலாசார முறைமை மறக்கடிக்கப்பட்டு மேற்கின் குப்பைக் கலாசாரம் அங்கு புகுத்தப்பட்டு வந்தது. இதனால் பெரும்பாலான மக்கள் தமது அடையாளங்களையே தொலைத்திருந்தனர். எனவே ஹஸனுல் பன்னா (ரஹ்) வின் பாணியில் இஸ்லாத்தின் அடிப்படைக்கோட்பாடுகளினதும் விழுமியங்களினதும் பக்கம் மக்களை அழைக்க அவர் பிரயத்தனம் மேற்கொண்டார்.
மூன்றாவது; ஜனநாயகம், மனித உரிமை என்ற பெயரில் மேற்கு நாடுகள் மக்கள்மீது புரிந்துவந்த அடக்குமுறைகளை அமெரிக்காவுக்கு நேரில் பயணம் மேற்கொண்டு அறிந்துகொண்ட குதுப் அவர்கள் அதிலிருந்து தமது நாட்டையும் நாட்டு மக்களையும் விடுவிக்கப் போராடினார். இக்கருத்துக்களை அவரதுநான் கண்ட அமெரிக்கா, இஸ்லாத்தில் சமூக நீதிபோன்ற நூற்களில் விளக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
நான்கு; முஸ்லிம்கள் மேற்குலகினாலும் அவர்களது அடிவருடிகளினாலும் மூலைச்சலவை செய்யப்படுவதை அவர் வெறுத்தார். எனவே தான் அவருக்கு வழங்கப்பட்ட கல்வியமைச்சுப் பதவியையும் ஏற்க மறுத்தார்.
இவ்வாறு குதுப் அவர்கள் அக்காலத்தில் காணப்பட்ட முக்கியமான முதன்மைப்படுத்தப்பட வேண்டிய பிரச்சினைகளை எதிர்கொண்டு அவற்றைத் தீர்ப்பதற்காகப் பல பிரயத்தனங்களை மேற்கொண்டார். இதற்காக அவர் பயன்படுத்திய மூல ஊடகம் எழுத்துத் துறையே. இறை பொருத்தத்தை நாடி அவர் செய்த பணியில் அவர் வெற்றிபெற்றார் என்றுதான் கூறவேண்டும். அல்லாஹ் அவரது பிழைகளைப் பொறுத்து நற்கூலி வழங்குவானாக!

உங்கள் கருத்து:

1 comments:

Boosary said...

காத்திரமான உங்கள் பணி என்றும் நிலைக்கட்டும் என்று வாழ்த்துகின்றேன்.

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...