"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

18 April 2011

ரூஹ் (ஆன்மா) ஊதப்படுவது 4 மாதத்திலல்ல. 42ம் நாளில்

ஆலிப் அலி, (இஸ்லாஹியா வளாகம்)
குறிப்பு : இந்த ஆய்வைப் பெரும் சிறமத்திற்கு மத்தியில் நீண்ட நாள் முயற்சியின் பின்பு செய்து முடித்துள்ளேன். தயவுசெய்து இதனை யாரும் தம்பெயரில் பிரசுரம் செய்யவோ தமது பதிவுகளில் இடவோ வேண்டாம். இப்பகுதியின் Link ஐ அனைவருக்கும் அறிமுகம் செய்து வைக்கவும் என வினயமாயக் கேட்கின்றேன்.
மனித ஆன்மாவின் உருவாக்கம் :
மனிதன் பிற படைப்பினங்கள் அனைத்திலிருந்தும் சிறப்புப் பெருவதற்கான மிக முக்கிய காரணம் அல்லாஹ்விடமிருந்து அவன் ரூஹ் எனும் ஆன்மாவைப் பெற்றிருப்பதாகும். வேறு ஒரு படைப்பிற்கும் அல்லாஹ் இந்த ஆன்மாவை வழங்கவில்லை. மனித ஆன்மாக்கள் படைக்கப்பட்ட விதம் குறித்து அல்லாஹ் அல்குர்ஆனிலே பின்வருமாறு கூறுகின்றான்.
நபியே உமதிரட்சகன் ஆதமுடைய மக்களில் அவர்களது முதுகுகளிலிருந்து அவர்களது சந்ததிகளை (வெளியாக்கி) அவர்களைத் தமக்கே சாட்சியாக்கி அவர்களிடம் நான் உங்கள் இரட்சகனல்லவா? என்று (கேட்ட) சமயத்தில்...” (அல்அஃராப்:172)
அவன் மனிதப் படைப்பைக் களிமண்ணிலிருந்து ஆரம்பித்தான். பின்னர் வடிகட்டி எடுக்கப்பட்ட அற்ப நீரில் (இந்திரியத்தில்) இருந்து அவனது சந்ததியை உண்டாக்கினான். பின்னர் அதனைச் செவ்வையாக உருவாக்கி தன்னுடைய ரூஹிலிருந்து அதில் ஊதி (மனிதனை உண்டாக்கி)னான். ﴿ (32:7,8,9) இதுபோன்ற வசனங்கள் இன்னும் குர்ஆனில் காணப்படுகின்றன. (15:29/ 38:72/ 66:12/ 21:91)
அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களைப் படைத்ததும் மறுமை நாள் நிகழும் வரை இவ்வுலகில் இனி யாரெல்லாம் வாழப்போகின்றார்களோ அவர்கள் அத்தனைபேரினது ஆன்மாக்களையும் படைத்து அவற்றை ஆலமுல் அர்வாஹ் எனும் ஆன்மாக்களின் உலகத்தில் வைத்துள்ளான். பூமியில் ஒருபெண் கருத்தறித்ததும் அல்லாஹ் அவளது கருவறையில் உருவாகும் சிசுவிற்கான ஆன்மாவை ஒரு வானவரினூடாக அனுப்பி அதனுடன் இணைத்து விடுகின்றான். மனிதப் படைப்பை அல்லாஹ் இப்பூவுலகில் தோற்றுவித்ததிலிருந்து இன்று வரை இந்த அற்புதமான முறையில்தான் மனித வாழ்வு சுழன்றுகொண்டிருக்கின்றது.
தாயின் கருவறையில் இருக்கும் சிசுவிடம் குறித் ஆன்மா எப்படி? எத்தனையாம் நாள் ஊதப்படுகின்றது? என்பது பற்றியெல்லாம் அல்குர்ஆனும் ஹதீஸம் 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே அழகான முறையில் விளக்கமாகக் கூறியுள்ளன. நவீன விஞ்ஞானத்தின் கண்டுபடிப்புகளும் இதற்கு மேலும் வலுசேர்ப்பனவாக அமைந்துள்ளன. எனவே அல்குர்ஆன், ஹதீஸ், நவீன விஞ்ஞானம் என்பவற்றை ஆதாரமாகக் கொண்டு மனித விருத்திபற்றியும் ஆன்மா ஊதப்படுதல் பற்றியும் சற்று விளங்க முயற்சிப்போம்.
கருவறையில் சிசு வளர்ச்சி
ஆணின் விந்து பெண்ணில் செலுத்தப்பட்டு 24 மணி நேரங்களுக்குள், பலோப்பியன் குழாயினூடாக கருவறையை நோக்கி வந்துகொண்டிருக்கும் பெண்ணின் சினை முட்டையுடன் இணைந்து கருக்கட்ட ஆரம்பிக்கின்றது. பின்னர் விந்தினதும் சினை முட்டையினதும் சேர்க்கையான அக்கலப்புத்துளி பலோப்பியன் குழாயினூடாக 6 ஆம் நாளில் கருவறையை வந்தடையும். இக்கலப்புத் துளியையே அல்குர்ஆன் நுத்பதுன் அம்ஷாஜ்نطفة امشاج) என்கின்றது. ﴿إِنَّا خَلَقْنَا الإِنسَانَ مِنْ نُطْفَةٍ أَمْشَاجٍ﴾  நிச்சயமாக நாம் மனிதனை (ஆண், பெண் இருவரின்) கலப்பான ஓர் இந்திரியத் துளியிலிருந்து படைத்தோம்.”(76:2) விஞ்ஞானம் இக்கலப்புத் துளியை  Zygote  என்கின்றது. கருவறையை நோக்கி வரும் வழியில் 4ஆம் நாளில் Zygote - Blastocyst என்ற சூழாக விருத்தியடைய ஆரம்பித்து 6ஆம் நாள் கருவறையை வந்தடைகின்றது. பின்பு அங்கு இஸ்திரமாக 10 நாட்கள் நுத்பதுன் அம்ஷாஜ் என்ற நிலையில் தங்கியிருக்கும். இந்தத் தங்கு நிலையையே அல்குர்ஆன்        ﴿فَجَعَلْنَاهُ فِي قَرَارٍ مَّكِينٍ. إِلَى قَدَرٍ مَّعْلُومٍ﴾  குறிப்பிட்டதொரு (கால) அளவுவரை அதனைப் பாதுகாப்பான இடத்தில் அமைத்தோம்” (77:21,22)               ﴿ ثم َجَعَلْنَاهُ نطفة فِي قَرَارٍ مَّكِينٍ﴾  பின்னர் ஒரு பாதுகாப்பான இடத்தில் (கருவறையில்) நாம் அவனை இந்திரியத் துளியாக்கினோம்.” (23:13) என்கின்றது.
கருவறையை வந்தடைந்த 6ஆம் நாளில் இருந்து 15ஆம் நாள் வரை முளையம் (சுமார் 10 நாட்கள்) Blastocyst  நுத்பதுன் அம்ஷாஜ்  என்ற நிலையிலேயே இருக்கும். பின்பு 15 ஆம் நாளிலிருந்து 23 அல்லது 24 ஆம் நாள் வரை (சுமார் 8 அல்லது 9 நாட்கள்) கரு அலகா(علقة) – Placenta என்ற நிலையில் வளர்ச்சியடையும்.
23 அல்லது 24 ஆம் நாளுடன் அலகா என்ற நிலை முற்றுப் பெறுகின்றது. அதிலிருந்து இரண்டு நாட்களில் (24ஆம் நாள் முதல் 26ஆம் நாள் வரை) அலகா அவசரமானதொரு மாற்றத்திற்குள்ளாகி முழ்கா(مضغة) என்ற கட்டத்தை அடைகின்றது. இங்கு அல்குர்ஆனின் மொழியாள்கையின் அற்புதத்தைச் சற்று நோக்குவோம். அரபு மொழியில் சும்ம - ثم  என்ற பதம் காலதாமதத்துடன் கூடிய தொடர் நிகழ்வைக் குறிக்கவும், ஃப - ف  என்ற பதம் தொடர்ந்து அவசரமாக நடக்கும் நிகழ்வினைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.
நுத்பா என்ற நிலையிலிருந்து அலகா என்ற நிலைக்கு மாற்றமடைய நீண்ட (8 அல்லது 9) நாட்கள் செல்கின்றன. இங்கு காலதாமதம் ஏற்படுவதனைச் சுட்டிக்காட்ட ثم  என்ற பதம் பிரயோகிக்கப்பட்டுள்ளது. ஆனால் குறுகிய காலத்திற்குள் அதாவது 2 நாட்களுக்குள் அலகா என்ற நிலையிலிருந்து முளையம் முழ்கா என்ற நிலைக்கு மாறுகின்றது. இந்த அவசர மாற்றத்தைக் குறிக்கவே அல்குர்ஆன் ف  என்ற பதத்தைப் பிரயோகித்துள்ளது. مضغة ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة. அல்குர்ஆனின் மொழியற்புதத்திற்கு வேறென்ன சான்று வேண்டும்.
முழ்கா அமைப்பைத் தொடந்து கருவில் என்பு வளர்ச்சி ஆரம்பிக்கின்றது. இதாம்(عظام) என்பது என்பைக் குறிக்கின்றது. இதனை அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான். ﴿فخلقنا المضغة عظاما﴾ பின்னர் அம்மாமிசத் துண்டை எழும்புகளாகப் படைத்தோம்.”(23:14) என்பு வளர்ச்சி குறிப்பிட்டதொரு காலத்துக்குள் முற்றாகப் பூரணமடைகின்றது என்று கூற முடியாது. ஏனெனில் ஒரு மனிதனின் என்பு வளர்ச்சியானது அவனது 20-25 வயது வரைக்கும் நீடித்துச் செல்கின்றது. கருவறையினில் முளையத்தின் ஆரம்ப நிலைக்கான என்பு வளர்ச்சிகளே நடைபெறுகின்றன. என்பு வளர்ச்சியினைத் தொடர்ந்து அவற்றைச் சூழ தசைகள் உருவாகின்றன. முளையத்தின் என்பு மற்றும் தசை உருவாக்கங்கள் சுமார் 15 நாட்களில் நடைபெறுகின்றன. இச்செயற்பாட்டினை அல்குர்ஆன் இவ்வாறு பிரஸ்தாபிக்கின்றது. ﴿ فكسونا العظام لحما﴾ பின்னர் அவ்வெழும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம்.” (23:14)
இதன்பின்பு முளையமானது ஸுரா அல் முமினூனின் 14ஆம் வசனத்தில் குறிப்பிடப்படுவதுபோன்று புதிய வித்தியாசமானதொரு அமைப்புக்கு மாற்றப்படுகின்றது. இதனை அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான். ﴿ ثُمَّ أَنشَأْنَاهُ خَلْقًا آخَرَ فَتَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ﴾ பின்னர் நாம் அதனை வேறு படைப்பாக (முழு மனிதனாக) உருவாக்கினோம் ஆகவே படைக்கின்றவர்களில் மிக அழகானவனான அல்லாஹ் உயர்ந்தவன்.” (23:14) உண்மையில் இக்கட்டத்தை அடைகையில்தான் முளையம் மனிதனை ஒத்த முக அமைப்பைப் பெறுகின்றது. அதேபோன்று ஏழவே வேறு இடங்களில் உருவாக்கப்பட்டிருந்த எளிய அமைப்பிலான முக உறுப்புகள் அவ்விடங்களை விட்டும் சரியான பொருத்தமான இடங்களுக்கு மாற்றப்படுகின்றன. காதுகள் கழுத்துப் பகுதியிலிருந்து அதன் சரியான இடத்திற்கும் கண்கள் இருபக்க ஓரங்களிலிருந்து முன்னோக்கியும் அவ்வாறே மூக்கு வாய் என்பனவும் அவற்றுக்குரிய இடங்களுக்கு நகர்த்தப்பட்டு அன்னலவான மனித முகத் தோற்றத்தைப் பெறுகின்றன. அடையாளம் காண முடியாத ஒரு தோற்றத்திலிருந்து அடையாளம் காண முடியுமான மனித முகத்தோற்றத்திற்கு மாற்றப்படுவதையும் இந்த அன்ஷ/னா” - انشئنا என்ற பதம் குறிப்பதாகக் கொள்ளலாம். (படம்)
மற்றுமொரு விடயமும் இங்கு நோக்கத்தக்கது. ஆரம்ப வசனங்களில் பிரயோகிக்கப்பட்டு வந்த கலக்னா - خلقنا என்ற பிரயோகத்தை விட்டு இங்கு அன்ஷஃனா என்ற பதம் பிரயோகிக்கப்பட்டுள்ளது. தப்ஸீர் அறிஞர்களினதும் ஹதீஸ் துறை அறிஞர்களினதும் கருத்துப்படி இந்த அன்ஷஃனா என்பதன் விளக்கம் ஜடமாக, சதைப் பிண்டமாக இருந்த அம் முளையத்தினுள் ஆன்மா - ரூஹ் ஊதப்படுதல்என்பதாகும். அம் முளையம் ஏற்கனவே அசையும் நிலையில் இருந்தாலும் ரூஹ் ஊதப்பட்டதும்தான் அது சுயமாக அசையவும் செவியுறவும் பார்க்கவும் பேசவும் சிரிக்கவும் அழவுமான ஆற்றல்களைப் பெறுகின்றது. மேற்கூறிய அன்ஷனா என்ற பதம் இதனையும் குறிப்பதாகக்கொள்ளலாம்.
வளர்ச்சிக்கட்டங்களின் கால அளவுகள்:
இதுவரை நாம் அவதானித்த, தாயின் கருவறையில் நிகழும் சிசு வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்தினதும் கால அளவினைச் சற்று சுருக்கமாகப் பார்ப்போம்.
விந்தணுவும் சினை முட்டையும் பலோப்பியன் குழாயில் இணைந்து 6ஆம் நாளில் கருவறையை வந்தடைகின்றது. (6 நாட்கள்)
கருவறையை வந்தடைந்ததிலிருந்து 15ஆம் நாள் வரை கலப்புத் துளி نطفة امشاجஎன்ற நிலையில் தங்கியிருக்கும். (10 நாட்கள்)
16ஆம் நாளிலிருந்து 24ஆம் நாள் வரை அலகா علقة ஆக விருத்தியடையும். (9 நாட்கள்)
24ஆம் நாளில் இருந்து 26ஆம் நாளுக்குள் துரித மாற்றத்துடன் முழ்கா - مضغة ஆக மாறுகின்றது. (2 நாட்கள்)
என்புகளின் உருவாக்கமும் அவற்றுக்குத் தசை அணிவிக்கப்படுதலும் 15 நாட்களில் நடைபெறுகின்றது (15 நாட்கள்)
தற்போது இந்த நாட்களைக் கூட்டிப் பார்ப்போம். (6+10+9+2+15= 42  நாட்கள்)
அப்படியாயின் தாயின் கருவறையில் ஒரு சிசு அதன் அடிப்படை அங்க உருவாக்கம் யாவும் பூரணமடைய 42 நாட்கள் செல்கின்றன. இதனை இன்றைய நவீன மருத்துவ விஞ்ஞானம் அங்கமங்கமாகத் துல்லியமாகப் படம்பிடித்துக்காட்டுகின்றது. ஆனால் அற்புதம் அதுவல்ல இக்கண்டு பிடிப்பு இற்றைக்கு 14 நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே நபியவர்களால் கூறப்பட்டமைதான் அற்புதம். ஏனெனில் நுணுக்காட்டியோ வேறு சாதனங்களோ கண்டுபிடிக்கப்பட்டிராத அக்காலத்தில் 42 நாள் என்ற விடயம் நபியவர்களால் துல்லியமாகக் கூறப்பட்டுள்ளது.
நவீன விஞ்ஞானத்தை உண்மைப்படுத்தும் நபிகளாரது பொன்மொழி:
முஸ்தபா அப்துல் பாஸித் அஹ்மத் (b), அப்துல் மஜீத் ஸின்தானி(b) மற்றும் அமெரிக்காவின் முளையவியல் மற்றும் DNA துறைப் பேராசிரியருமான மேர்சல் ஜோன்ஸன் (Prof. E. Marshall Johnson)(c) என்போரது ஆய்வுகளின் பின்பு ரியாத், கைரோ, இஸ்லாமாபாத் போன்ற இடங்களில் அறிவியல் அற்புதங்கள் தொடர்பாக அவர்கள் விரிவுரையாற்றிய மாநாடுகளில் கூறியதாவது:
ஆறாம் வாரத்தின் இறுதியில் 42ஆம் நாளுக்கு முன்பு முளையம் தெளிவான முகத்தோற்றத்திலோ அல்லது மனித முகத்தை ஒத்த தோற்றத்திலோ காணப்படுவதில்லை. (படம்) 40ஆம் நாளிற்கு முன்பு கண்களும் காதும் பாலுறுப்புகளும் அவற்றின் ஆரம்ப வளர்ச்சிக்கட்டத்திலேயே இருக்கும். ஆனால் அவை இயங்கவோ மனித உறுப்புகளை ஒத்த தோற்றத்திலோ இருக்காது.
பேராசிரியர் T.V.N  பேர்ஸஉட் (T.V.N  Persaud) (d) 42 ஆம் நாளின் பின்புள்ள சிசு வளர்ச்சி நிலையின் முக்கிய கட்டங்களைப் பற்றி இவ்வாறு கூறுகின்றார். “7ஆம் வாரத்தின் ஆரம்ப வளர்ச்சிக் கட்டத்தில் அதாவது சுமார் 42ஆம் நாள் அளவில் உருவாகும் மென்மையான என்புகள்தாம் சிசுவிற்கு மனிதத் தோற்றத்தை வழங்குகின்றன. அத்தோடு வளைந்திருந்த அச்சிசுவை நேராகவும் தலைப்பகுதியை வளைந்த வடிவிலும் உருவாக்குகின்றது. மேலும் கழுத்தின் இருபக்கப் பகுதிகளிலிருந்தும் கண்களிரண்டும் முன்னால் நகர்கின்றன. மூக்கு மனித மூக்கின் வடிவத்தைப் பெறுகின்றது. 4ஆம் வார இறுதியில் சிறிய மொட்டு வடிவில் காணப்பட்ட கையிரண்டினதும் முன்பகுதி 42ஆம் நாளின் பின்பு முன்னோக்கி நீண்டு வளர்கின்றது. இதற்கு முன்பு காணப்படாத விரல்கள் இதன்போது உறுப்பெற்று தெளிவாகத் தோற்றம் பெருகின்றன. 42ஆம் நாளின் பின்பு தலைக்கும் முதுகுக்கும் இடையே இடைவெளியேற்பட்டு கழுத்து சீரான தோற்றத்தைப் பெறுகின்றது. சிசுவின் என்புகள் 42ஆம் நாளுக்கு முன்பு அதாவது 4ஆம் வாரத்தில் வளர்ச்சியுற ஆரம்பித்திருக்கும். எனினும் இவற்றை 6ஆம் வாரத்தில் (அதாவது 42ஆம் நாளின் பின்பு) தான் தெளிவாக இனங்கான முடியும். எனினும் வெளிப்படையாக ஆணின் பாலுறுப்பையும் பெண்ணின் பாலுறுப்பையும் 12ஆம் வாரத்தில்தான் இனங்கண்டு பிரித்தறிய முடியும்.
பேராசிரியர் தொடர்ந்தும் இவ்வாறு கூறுகின்றார். இங்கு நாம் குறிப்பிட்ட அத்தனை படித்தரங்களும் அவற்றின் கால அளவுகளும் முஸ்லிம் கிரந்தத்தில் பதிவாகியுள்ள ஹுதைபா (ரழி) அறிவிக்கின்ற நபியவர்களது பொன் மொழியில் தெளிவாகவே கூறப்பட்டுள்ளது. இந்த ஹதீஸ் கர்ப்பப்பையினுள் உள்ள ஒரு சிசுவின் வாழ்க்கையில் 42 ஆம் நாள் எந்தளவு முக்கியத்துவம் பெறுகின்றது என்பதை விளக்குகின்றது.என்றார்.
இதனையே நபி (ஸல்) அவர்கள் இந்த விஞ்ஞான அறிவுகளற்ற 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே பின்வருமாறு கூறிவிட்டார்கள்.
رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏"‏ إِذَا مَرَّ بِالنُّطْفَةِ ثِنْتَانِ وَأَرْبَعُونَ لَيْلَةً بَعَثَ اللَّهُ إِلَيْهَا مَلَكًا فَصَوَّرَهَا وَخَلَقَ سَمْعَهَا وَبَصَرَهَا وَجِلْدَهَا وَلَحْمَهَا وَعِظَامَهَا ثُمَّ ‏.‏ قَالَ يَا رَبِّ أَذَكَرٌ أَمْ أُنْثَى فَيَقْضِي رَبُّكَ مَا شَاءَ وَيَكْتُبُ الْمَلَكُ ثُمَّ يَقُولُ يَا رَبِّ أَجَلُهُ ‏.‏ فَيَقُولُ رَبُّكَ مَا شَاءَ وَيَكْتُبُ الْمَلَكُ ثُمَّ يَقُولُ يَا رَبِّ رِزْقُهُ ‏.‏ فَيَقْضِي رَبُّكَ مَا شَاءَ وَيَكْتُبُ الْمَلَكُ ثُمَّ يَخْرُجُ الْمَلَكُ بِالصَّحِيفَةِ فِي يَدِهِ فَلاَ يَزِيدُ عَلَى مَا أُمِرَ وَلاَ يَنْقُصُ ‏")  صحيح مسلم
முளையத்தில் 42 இரவுகள் கடந்ததன் பின்னர் அதனிடம் அல்லாஹ் ஒரு வானவரை அனுப்புகின்றான். அவர் அதனை வடிவமைக்கின்றார். மேலும் காதுகள், கண்கள், தோல், தசைகள், என்புகள் ஆகியவற்றையும் உருவமைக்கின்றார். பின்பு என் இரட்சகனே! இது ஆணா அல்லது பெண்ணா? என்று வினவுகின்றார். பின் உங்கள் இரட்சகன், தான் விரும்பியதைத் தீர்மானிக்கின்றான். வானவர் அதனைப் பதிவு செய்கின்றார்.” (முஸ்லிம்)
ஏழவே நாம் அவதானித்த விஞ்ஞான ஆய்வுகளின் படி 42ஆம் நாளில்தான் உடல் அவயங்களும் பாலுறுப்புகளும் ஒன்று சேர்க்கப்படுகின்றன என்பது தெளிவாகிவிட்டது. இந்த நவீன கண்டுபடிப்பையே மேற்படி ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது. 42ஆம் நாளில் சிசுவின் உடல் அவயங்கள் ஒன்றுசேர்க்கப்பட்டு அச்சிசு மனிதத் தோற்றத்தைப் பெறும் அதேசமயம்தான் குறித்த வானவர் அச்சிசுவில் ரூஹையும் ஊதி இணைத்துவிடுகின்றார். இதனை ஸுரதுல் முஃமினூனில் வருகின்ற 12 முதல் 14 வரையிலான வசன ஒழுங்குகள் தெளிவுபடுத்துகின்றன. அது மாத்திரமன்றி ரூஹ் 42ஆம் நாளில்தான் ஊதப்படுகின்றது என்பதைத் தெளிவாகவே எடுத்துக்கூறும் பின்வருகின்ற ஹதீஸையும் எமக்கு விளக்கத்திற்காக எடுத்துக்கொள்ள முடியும்.
                عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ الصَّادِقُ الْمَصْدُوقُ ‏ ﴿‏اِنَّ اَحَدَكُمْ يُجْمَعُ خَلْقُهُ فِي بَطْنِ اُمِّهِ اَرْبَعِينَ يَوْمًا ثُمَّ يَكُونُ فِي ذَلِكَ عَلَقَةً مِثْلَ ذَلِكَ ثُمَّ يَكُونُ فِي ذَلِكَ مُضْغَةً مِثْلَ ذَلِكَ ثُمَّ يُرْسَلُ الْمَلَكُ فَيَنْفُخُ فِيهِ الرُّوحَ وَيُؤْمْر بِاَرْبَعِ كَلِمَاتٍ بِكَتْبِ رِزْقِهِ وَاَجَلِهِ وَعَمَلِهِ وَشَقِيٌّ اَوْ سَعِيدٌ﴾ صحيح مسلم 6893
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்கள் ஒவ்வொருவரினதும் சிருஷ்டி அவரது தாயின் கருவறையில் 40 நாட்களில் ஒன்று சேர்க்கப்படும். பின்னர் அதேபோன்று அதிலே அலகாவாகவும் அதேபோன்று முழ்காவாகவும் இருக்கும். பின்னர்; அதனிடம் ஒரு வானவர் அனுப்பப்படுகின்றார். அவர் அதிலே ருஹை ஊதுகின்றார். மேலும் அவ்வானவர் நான்கு விடயங்களைப் பதியுமாறு ஏவப்படுகின்றார். அச்சிசுவின் வாழ்வாதாரம், அதன் ஆயுற்காலம், செயல்பாடு மற்றும் அது சீதேவியானதா அல்லது அதற்கு மாற்றமானதா என்பன பற்றி பதியப்படும்.” (ஆதாரம் ஸஹீஹ் முஸ்லிம்)
இதனைப் பின்வருகின்ற அல்குர்ஆனிய வசனம் மேலும் உறுதிப்படுத்துகின்றது.
அவன் மனிதனைக் களிமண்ணிலிருந்து ஆரம்பித்தான். பின்னர் வடிகட்டி எடுக்கப்பட்ட அற்ப நீரில் (இந்திரியத்தில்) இருந்து அவனுடைய சந்ததியை உண்டாக்கினான். பின்னர் அதனைச் செவ்வைப் படுத்தி தனது ரூஹ் (ஆன்மா)விலிருந்து அதில் ஊதி (மனிதனை உண்டாக்கினான்.) இன்னும் உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வைப் (புலன்)களையும் இதயங்களையும் அவனே அமைத்தான். (இவ்வாறிருந்தும்) நீங்கள் மிகக்குறைவாகவே நன்றி செலுத்துகின்றீர்கள்.” (32:9)
42ஆம் நாளில்தான் ரூஹ் ஊதப்படுகின்றது என்ற நிரூபனமான முடிவு காணப்பட்டாலும் 120 நாளில் அதாவது 4 மாதங்களில்தான் ரூஹ் ஊதப்படுகின்றது என்ற மற்றுமொரு கருத்தும் பரவலாகவே நிலவி வருகின்றது. உண்மையில் இந்த விளக்கம் எவ்வாறு தோன்றியது? அதற்கான ஆதாரம் என்ன என்று சற்று ஆராயவேண்டிய ஒரு தேவையும் இருக்கின்றது.
ஹதீஸுக்கு வழங்கப்பட்ட பிழையான விளக்கம்:
ரூஹ் 4 மாதங்களில்தான் ஊதப்படுகின்றது என்ற வாதத்திற்கு முன்வைக்கும் ஆதாரம் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவிக்கும் பின்வரக்கூடிய நபி மொழியாகும். இந்த ஹதீஸிற்கு வழங்கப்பட்ட பிழையான விளக்கத்தினாலேயே ரூஹ் 4 ஆம் மாதத்தில் ஊதப்படுகின்றது என்ற கருத்து தோன்றியது.
                عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ الصَّادِقُ الْمَصْدُوقُ ‏ ﴿‏اِنَّ اَحَدَكُمْ يُجْمَعُ خَلْقُهُ فِي بَطْنِ اُمِّهِ اَرْبَعِينَ يَوْمًا ثُمَّ يَكُونُ فِي ذَلِكَ عَلَقَةً مِثْلَ ذَلِكَ ثُمَّ يَكُونُ فِي ذَلِكَ مُضْغَةً مِثْلَ ذَلِكَ ثُمَّ يُرْسَلُ الْمَلَكُ فَيَنْفُخُ فِيهِ الرُّوحَ وَيُؤْمْر بِاَرْبَعِ كَلِمَاتٍ بِكَتْبِ رِزْقِهِ وَاَجَلِهِ وَعَمَلِهِ وَشَقِيٌّ اَوْ سَعِيدٌ﴾) صحيح مسلم6893
இந்த ஹதீஸில் வரக்கூடிய مثل ذلك என்ற பிரயோகத்திற்கு வழங்கப்பட்ட பிழையான விளக்கமே ரூஹ் 4 மாதங்களில் ஊதப்படுகின்றது என்று கருத்துக்கொள்ளக் காரணம். مثل ذلك என்றால் அதேபோன்றுஎன்று பொருள். இங்கு مثل ذلك என்ற பதம் நாற்பது நாட்கள் (أربعين يوما) என்ற கால அளவை விளக்கும் வகையில் அதன்பால் மீட்டப்பட்டு அதேபோன்று நாட்பது நாட்கள், அதேபோன்று நாட்பது நாட்கள்என்று மூன்று முறை விளக்கமளிக்கப்படுகின்றது. இதனாலேயே 120 நாட்கள் அல்லது 4 மாதங்கள் என்ற கருத்துவருகின்றது. அதவது نطفة ஆக 40 நாட்கள், علقة ஆக 40 நாட்கள், مضغة ஆக 40 நாட்கள் என்று கணிக்கப்பட்டு 120 நாட்கள் என்ற கருத்துகொள்ளப்படுகின்றது. இது பிழையானதொரு விளக்கமாகும். சரியாக நோக்கினால் مثل ذلك என்ற பதம் அதேபோன்றுஎன்ற அர்த்தத்துடன் يجمع خلقه என்ற வாக்கியத்திற்கு விளக்கமாக மீட்டப்படல்வேண்டும். يجمع خلقه என்றால் உங்கள் சிருஷ்டி ஒன்று சேர்க்கப்படுகின்றதுஎன்று பொருள். அவ்வாறு விளக்கப்படும்போதுதான் அதேபோன்று, நாற்பது நாட்களில் நுத்பாவாகவும் அலகாவும் முழ்காவாகவும் ஒன்றுசேர்க்கப்படுகின்றதுஎன்ற சரியான கருத்தைப் பெறமுடியும். இவ்வாறு நோக்கும்போதுதான் இந்த ஹதீஸ் ஹ{தைபா (ரழி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸுடன் முரண்படாது வருகின்றது.
ஆனால் அல்குர்ஆன் விரிவுரையாளர்கள் பலரும் ஹதீஸ்துறை அறிஞர்களும்கூட இந்த ஹதீஸின் அடிப்படையில் சிசுவுக்கு ரூஹ் ஊதப்படுவது நான்கு மாதங்களில் அல்லது கடைசி, மூன்றாவது நாட்பதுகளில் அல்லது 120 நாட்களில்தான் என்று இதற்கு விளக்கம் கொடுக்கின்றனர். அவர்களது கால மறுத்துவ அறிவுடன் ஒப்பிடுகையில் இது நியாயமானதுதான். ஆனால் இன்று வளர்ச்சியடைந்துவரும் மறுத்துவத்தின் இம்முடிவை அல்குர்ஆன் மற்றும் ஹதீஸுடன் ஒப்பிட்டுப்பார்த்து அப்துல் மஜீத் ஸின்தானி, முஸ்தபா அஹ்மத் போன்ற சில சமகால இஸ்லாமிய அறிஞர்கள் 42 நாட்களில் ரூஹ் ஊதப்படுவதை ஏற்றுக்கொள்கின்றனர். நான்கு மாதம் தொடர்பான தகவல்களைப் பெற வேறு சில நூல்களைக் குறிப்பிடுகின்றேன்.
1              "تحفة  المودود باحكام المولود "  என்ற நூலின் ஆசிரியர் ஷம்சுத்தீன் முஹம்மத் பின் அபீ பக்கர் அவர்கள் ரூஹ் ஊதப்படுவது மூன்றாவது நாட்பதுகளில்தான் என்கின்றார். (பக்கம் : 470 – 478)
2              "خلق الانسان بين الطب والقرآن" என்ற நுலின் ஆசிரியர் கலாநிதி முஹம்மத் அலி அல்பார் அவர்களும் 4ஆம் மாதத்தின் இறுதியிலேயே ரூஹ் ஊதப்படுவதாக விளக்குகின்றார். (பக்கம் : 351 – 354)                                                                                               
3              "إرشاد السادي لشرح صحيح البخاري" இல் இமாம் அஹ்மத் இப்னு முஹம்மத் அல்அஸ்கலானி அவர்களும் (பாகம் 10, பக்கம் : 69 – 73)
4              "فتح الباري بشرح صحيح البخاري " இல் ஹாபிஸ் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி அவர்களும் (பாகம் : 11, பக்கம் : 494 – 495)
5              "  صحيح  مسلم بشرح النووي " இலும் (பாகம்;: 15-16, பக்கம் : 189 - 192)
6              ஸுரதுல் முஃமினூன் இற்கு இமாம் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் வழங்கிய விரிவுரையிலும் "تفسير القرآن العظيم"            
7              அல்லாமா அப்தூரஹ்மான் பின் நாஸிர் அஸ்ஸஅதீ அவர்களின் " تيسير الكريم الرحمان في تفسير كلام المنان"  என்ற தப்ஸீரிலும் (பக்கம் : 636 – 637)
8              இமாம் ஜலாலுத்தீன் ஸ{யூதி (ரஹ்) அவர்களின் "الدرة المنثور في تفسير المأثور" என்ற தப்ஸீரிலும் (பாகம் : 6, பக்கம் : 90 – 94)
9              "تفسير ابن عباس" இலும் (பக்கம் : 284 – 285)
10           இமாம் பகவி அவர்களின் "معالم التنزيل في التفسير التأويل" இலும் (பாகம் : 4, பக்கம் : 141) ரூஹ் ஊதப்படுவது 4ஆம் மாதத்தில் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே கருத்தையே அலி (ரழி) அவர்களும் குறிப்பிடுகின்றார்கள்.
"إذا تمت النطفة اربعة اشهر بعث الله إليها ملكا فنفخ فيه الروح في ظلمات ثلاث"நுத்பாவில் 4 மாதங்கள் பூரணமானதும் அதனிடம் அல்லாஹ் ஒரு வானவரை அனுப்பி விடுகின்றான். ஆவர் அதிலே மூன்று இருள்களில் ரூஹை ஊதிவிடுகின்றார்.
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்களது கருத்தும் அவ்வாறே காணப்படுகின்றது.
"إن النطفة إذا وقعت في الرحم طارت في كل شهر وظفر فتمكث اربعين يوما ثم تعود في الرحم فتكون علقة"நுத்பா கருவறையிலே தரித்ததும் ஒவ்வொரு மாதமும் அது மாற்றமடைகின்றது. 40 நாட்கள் தங்கிவிட்டு பின்னர் கருவறையிலேயே அலகாவாக மாறுகின்றது.  (பார்க்க : "تفسير القرآن العظيم" {ரா அல்மு/மினூனிற்கான தப்ஸீர்)       
மேலே குறிப்பிட்ட இமாம்கள் யாவரும் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் வாயிலாக அறிவிக்கப்படும் ஹதீஸின் அடிப்படையில் முதல் நாட்பதில் نطفة ஆகவும் இரண்டாம் நாட்பதில் علقة ஆகவும் மூன்றாம் நாட்பதில் مضغة ஆகவும் இருந்து அதன் பின்பே 120 ஆம் நாளின் ஆரம்பத்தில் ரூஹ் ஊதப்படுவதாக விளக்குகின்றனர்.
نطفة, علقة, مضغة என்ற படித்தரங்கள் ஒவ்வொன்றும் தனித்தனியே நாட்பது நாட்பது நாட்பது என்று 120 நாட்களில் நிகழ்கின்றது என்பது பிழையான கருத்தாகும். அக்கட்டங்கள் யாவும் முதல் 42 நாட்களிலேயே நிகழ்ந்துவிடுகின்றன என்பதுதான் நிரூபனமான உண்மை. ஒரு வாதத்திற்காக 120 நாட்களில்தான் نطفة, علقة, مضغة என்ற படித்தரங்கள் நடைபெற்று ரூஹ{ம் ஊதப்படுகின்றது என்று எடுத்தால் ஹ{தைபா (ரழி) அவர்களின் அறிவிப்பான 42 நாட்களில் சிசுவின் அங்கங்கள் ஒன்று சேர்;க்கப்படுகின்றன என்ற தெளிவான ஹதீஸ{டன் இந்த ஹதீஸ் முரண்படுகின்றது. ஸஹீஹான இரண்டு ஹதீஸ்கள் முரண்பட முடியாது. அப்படியாயின் ஹதீஸிற்கு வழங்கப்பட்ட விளக்கம்தான் பிழையாக இருக்கவேண்டும். நான்கு மாதம் என்றோ அல்லது 120 நாட்கள் என்றோ நேரடியான ஹதீஸ் ஆதாரம் இருப்பதாக எங்கும் காணவில்லை. ஆனால் 42 நாட்கள்தான் என்பது பல அறிவிப்புகளுடாக உறுதியாகவே வந்துள்ளது.
அதேபோன்று ஏழவே நாம் அவதானித்ததன்படி ஸ{ரதுல் முஃமினூனில் கருவளர்ச்சி பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ள வசனங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள     ثم மற்றும் ف என்ற எழுத்துக்கள் குறிக்கும் கால அளவுகள் கூட மேற்கூறிய ஹதீஸுடனும் மருத்துவ ஆய்வுகளுடனும் ஒப்பிடுகையில் 42 நாட்களைக் குறிப்பதாகவே அமைகின்றது. எனவே ஒரு கருவின் அங்கங்கள் ஒன்று சேர்க்கப்படுவதும் அதன் அஜல், ரிஸ்க் என்பன எழுதப்படுவதும் ரூஹ் ஊதப்படுவதும் 42ஆம் நாளில்தான் என்பது தெளிவாகின்றது.
இன்னும் சில அறிஞர்கள் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்களது அறிவிப்பையும் ஹுதையபா (ரழி) அவர்களது அறிவிப்பையும் இணைத்து வேறு விதமாக விளக்கம் தருகின்றனர். ஹுதைபா (ரழி) அறிவிக்கும் ஹதீஸின்படி ஒரு வானவர் 42 நாட்களிலே அந்த சிசுவிடம் வந்துவிடுவதாகவும் அப்போது அவர் அச்சிசுவை ஒருங்கிணைத்துவிட்டுச் செல்வதாகவும் பின்பு மீண்டும் 120 நாட்களில் வந்து ரூஹையும் இன்னும் அஜல், ரிஸ்க், பால் வேற்றுமை என்பவற்றை இணைத்துவிடுவதாகவும் கூறுகின்றனர்.
இக்கருத்தை சற்று மீள அவதானிக்கவேண்டியிருக்கின்றது. ஏனெனில் ஹுதைபா (ரழி) அறிவிக்கும் ஹதீஸ் அதாவது 42 நாட்கள் என்று வருகின்ற அனைத்து ஹதீஸ்களிலும் அஜல், ரிஸ்க், அமல், ஸஈத் அல்லது சகீஃ என்பன குறிப்பிடப்பட்டுள்ளன. அவ்வாறே இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் (120 நாட்கள் என்று கருத்துக்கொள்ளப்படும் ஹதீஸ்) இலும் இவை குறிப்பிடப்பட்டுள்ளன. அப்படியாயின் 42 நாளிலும் 120 நாளிலுமாக இரண்டு முறை ஒரே விடயம் பதியப்படுகின்றதா? என்ற கேள்வி எழுகின்றது. ஆனால் அவ்வாறு இருமுறைகளில் பதியப்படுவதற்கான அவசியமும் இல்லை அவ்வாறு பதியப்படுவதும் இல்லை என்பது இதிலிருந்து புலனாகின்றது.
வானவர் இருமுறை வருகிறார் என்பதற்கு எடுத்துவைக்கப்படும் மற்றுமொரு ஆதாரத்தையும் இங்கு நோக்கவேண்டும். {தைபா (ரழி) அவர்களின் அறிவிப்பின்படி نطفة ஆக, علقة ஆக, مضغة ஆக 42 நாட்களில் கரு வளர்ச்சியுற்ற பின்னர் வானவர் அனுப்பப்படுவதனை அல்லாஹ் ثم என்ற பதத்தினைப் பிரயோகித்து (ثم يرسل الملك) சற்று தாமதித்து அவர் அனுப்பப்படுவதாகக் குறிப்பிடுகின்றான். சூரதுல் முஃமினூனிலும் இதே போன்று ثم أنشاناه خلقا آخر என்று பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இங்கு இரண்டு விடயங்கள் தெளிவாகின்றன. ஒன்று 42ஆம் நாளின் பின் உருவமைப்பதற்காக வந்த வானவர் மீண்டும் ஒரு முறை  120 ஆம் நாளிலும் ரூஹ் ஊதுவதற்காக வருகின்றார்என்பதாகும்.
இங்குகூட இவ்விரு ஹதீஸ்களும் விளங்கப்பட்ட விதம் பிழையானதாகும். வானவர் 42 ஆம் நாளிலும் 120 ஆம் நாளிலுமாக இருமுறை அனுப்பப்படுகிறார் என்று கருத்துக்கொள்ள முடியாது. அவ்வாறு இந்த ஹதீஸ்களில் குறிப்பிடப்படவும் இல்லை. இங்கு கவனிக்க வேண்டிய விடயம், முளையத்தை نطفة ஆக, علقة ஆக, مضغة ஆக மாற்றுவதற்கு வானவர் அனுப்பப்படுவதில்லை. அது இயற்கையாகவே இப்படித்தரங்களைக் கடந்து செல்கின்றது. இறுதியில் 42 ஆம் நாள் ஆகும்போதுதான் அல்லாஹ் வானவரை அனுப்புகின்றான். இதனைத்தான்  "ثم يبعث الله ملكا" " ثم يرسل الملك" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். "ثم أنشاناه خلقا آخر" என்று அல்குர்ஆன் குறிப்பிடுவதும் இதனையே.
ஆக 42ஆம் நாளின் இறுதியில் அல்லாஹ் வானவரை அனுப்பி அம்முளையத்தின் அங்க அவயங்களை ஒன்று சேர்த்து செவ்வைப்படுத்தி அஜல், அமல், ரிஸ்க் என்பவற்றையெல்லாம் பதிந்தபின்னர் ரூஹையும் ஊதிவிடுகின்றான். நாம் ஆரம்பம் முதற்கொண்டு அல்குர்ஆனினதும் ஹதீஸினதும் ஆதாரங்களுடனும் நவீன மறுத்துவ விஞ்ஞானத்தின் துணையுடனும் கட்டம் கட்டமாக அவதானித்ததற்கமைய 42 நாட்களின் பின்புதான் ரூஹ் ஊதப்படுகின்றது என்பது தெளிவாகின்றது.
முடிவுரை
சிசு கருவறையில் உருவாகி 42ஆம் நாளில் ரூஹ் ஊதப்படுகின்றது. அத்தோடு அச்சிசுவின் கண்கள், காதுகள், மூக்கு, வாய், தோல், என்பு என அனைத்தும் ஒழுங்கமைக்கப்பட்டு அது மனிதத் தோற்றத்தையும் பெறுகின்றது. இவ்வாறு அல்லாஹ் மனிதனைத் தாயின் கருவறையில் மிகவும் திட்டமிட்ட அடிப்படையில் படைக்கின்றான். ஆனால் மனிதனோ இறைவனைப் பற்றித் தர்க்கிப்பவனாக அவனை நிராகரிப்பவனாக இருக்கின்றான் என்பதை அல்குர்ஆனில் அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்.
“(காபிரான) மனிதன் சபிக்கப்பட்டுவிட்டான். (நன்றிகெட்ட) அவனை நிராகரிக்கின்றவனாக இருக்கச்செய்தது எது? எப்பொருளிலிருந்து அவனை (அல்லாஹ்வாகிய) அவன் படைத்தான் (என்று சிந்;தித்தானா?) ஒரு துளி இந்திரியத்திலிருந்து அவனை (அல்லாஹ்) படைத்தான். பின்னர் அவனுக்குரியவற்றை நிர்ணயித்தான்.” (80:17-19)
ஆனால் அல்லாஹ்வின் வல்லமையையும் இது இறைவேதம் முஹம்மத் அவர்கள் இறைதூதர் என்பதற்கும் இவை சிறுஆதாரங்களே!. அல்குர்ஆன் 1400 வருடங்களுக்கு முன்பு அருளப்பட்டதெனினும் அதனை மீண்டும் மீண்டும் படிக்கும்போதெல்லாம் பல்வேறு புதுமைகளைக் காணமுடியுமாக உள்ளது. மிக அண்மையில் கண்டறியப்பட்ட முளையவியல் தொடர்பான பல்வேறு உண்மைகளை அல்குர்ஆனும் ஹதீஸ{ம் மிக அற்புதமாகவும் தெளிவாகவும் சொற்சுருக்கத்துடன் கூறி எம்மை ஆச்சரியமுறச் செய்கின்றன. இதுவே இஸ்லாம் ஓர் இறை மார்க்கம் என்பதற்கும் அது எக்காலத்திற்கும் எவ்விடத்துக்கும் ஏற்றமானது என்பதற்கும் சிறந்ததொரு சிறிய உதாரணமாகும்.
உசாத்துணைகள்:
1.            "تحفة  المودود باحكام المولود " - ஆசிரியர் ஷம்சுத்தீன் முஹம்மத் பின் அபீ பக்கர்.
2.            "بينات الرسول (ص) و معجزاته" - அப்துல் மஜீத் ஸின்தானி.
3.            "خلق الانسان بين الطب والقرآن" - ஆசிரியர் கலாநிதி முஹம்மத் அலி அல்பார்.
4.            "إرشاد الساري لشرح صحيح البخاري" - இமாம் அஹ்மத் இப்னு முஹம்மத் அல்அஸ்கலானி.
5.            "فتح الباري بشرح صحيح البخاري " - ஹாபிஸ் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி.
6.              صحيح  مسلم بشرح النووي          
7.            تفسير القرآن العظيم - இமாம் இப்னு கஸீர் ஸ{ரதுல் மு/மினூனிற்கான விரிவுரை.
8.            " تيسير الكريم الرحمان في تفسير كلام المنان"  அல்லாமா அப்தூரஹ்மான் பின் நாஸிர் அஸ்ஸஅதீ.
9.            "الدر المنثور في تفسير المأثور" இமாம் ஜலாலுத்தீன் ஸ{யூதி (ரஹ்).
10.          "تفسير ابن عباس"
11.          "معالم التنزيل في التفسير التأويل" - இமாம் Bபகவி
12.          علم الأجنة- அப்துல் மஜீத் ஸின்தானி.
13.          Islamic Medicine Online ( Dr.Sharif Kaf Al-Ghazal)   http://www.islamicmedicine.org
14.               மனிதப் படைப்பின் அற்புதம் - Documentery Film of Harunyahya
15.      http//www.youtube.com
(a)   Professor Emeritus Keith Moore, Professor of Anatomy and Cell Biology and the former Associate Dean of Basic Sciences at the Faculty of Medicine at the University of Toronto, Canada.
(b)   Human Development as Described in the Qur'an and Sunnah, By : Keith L. Moore ; E. Marshall Johnson ; T.V.N  Persaud, ; Gerald C. Goeringer ;  Abdul-Majeed  Zindani, ; and Mustafa A Ahmed , 1992, ISBN 0-9627236-1-4.  Collection of papers that were originally presented  in the First International   Conference on Scientific Signs of the Qur'an and Sunnah, held in Islamabad, Pakistan, 1987.
(c)    Prof. E. Marshall Johnson,  Chairman of the Department of Anatomy and Developmental Biology, and Director of the Daniel Baugh Institute, Thomas Jefferson University, Philadelphia, Pennsylvania, USA 
(d)   Dr. T.V.N. Persaud, Professor of Anatomy and Reproductive Sciences at the University of Manitoba, Winnipeg, ManitobaCanada.   

உங்கள் கருத்து:

11 comments:

ஆலிப் அலி said...

இவ்வாய்வுக் கட்டுரைக்கான மற்றுக்கருத்துக்கள் ஏதும் உங்களிடம் இருந்தால் இங்கே அவற்றைக் குறிக்கவும். ஆவளுடன் எதிர்பார்க்கின்றேன்.

Himma said...

அஸ்ஸ‌லாமு அலைக்கும்.

ப‌ர‌வ‌லாக‌ நாளா, மாத‌மா என்ற குழ‌ப்ப‌ம் இருந்து வ‌ருவ‌துண்மை. இவ்வ‌ள‌வு அழ‌காக‌ தெளிவாக‌, ஆழ‌மாக‌, ஆதார‌ங்க‌ளுட‌ன் நீங்க‌ள் விள‌க்கிய‌தை வாசித்த‌த‌ன் பின் யாருக்கும் குழ‌ப்பங்க‌ள் தொட‌ராது என்று ந‌ம்புகின்றேன்.
ஜ‌ஸாக்க‌ல்ல‌ஹு ஹைர‌ன். அருமையான‌ அக்க‌ம். ம‌னித‌ன் மாய்ந்து மாய்ந்து க‌ண்டு பிடிப்ப‌தெல்லாம் குர்ஆனின் முன்னால் எம்மாத்திர‌ம் என்ப‌தை அழ‌காக‌ப் புரிந்து கொள்ளாலாம்.

ஜ‌ஸாக்க‌ல்ல‌ஹு ஹைர‌ன்.

Ameera said...

wooooooooooooow br just fabulous!!! Mashaallah...I donno wt 2say...U R JUST BRILLIENT...really as i said 2u b4 i like ur articles so much especially if it s related to the holy quran and science. But for the 1st time i have realized that there are many mistakes in our understandings of hadees also...amazing!!!please write more and open our eyes...May allah always bless u...Barakallahu feek...:)

Anonymous said...

very good argument. masha allah. agree totally. can i use this material on my radio program? i can say this is form your site. Dr. mareena Reffai

Anonymous said...

மாஷா அல்லாஹ்.
இது மிகவும் சிறந்த கட்டுறை. நான் அதிகமான புதிய தகவல்களை பெற்றுக்கொண்டேன்.

சிறந்த முயற்சி .நான் எப்பொழுதும் உங்கட கட்டுறைகளை விரும்பி வாசிப்பவன். உண்மையில் சிறந்த ஒரு கட்டுறையை எழுதுவது எவ்வாறு கடினம் என்பதை நான் அறிவன். தொடர்ந்தும் இந்த முயற்சியில் இருக்க வேண்டும். எப்பொழுதும் எமது பிரார்த்தனைகள் உங்களுக்கு இருக்கும்.

by.Y.J. Malik (Islahi)

Mahees said...

இவ்வளவு காலமும் 4 மாதங்களில் என்றுதான் நினைத்திருந்தேன். தெளிவுபடுத்தியமைக்கு மிக்க நன்றிகள். இதுபோன்று இன்னும் எழுத எனது பிறார்த்தனைகளும் வாழ்த்துக்களும்.
...மஹீஸ்...

Anonymous said...

fathima
wonderful article.... ungalukulla ivvalavu aatral irukandu namba mudiyalla.... all the best....
and search more and more ...... and giv for us... jasakallahu khair...

Anonymous said...

fathima
hatheesuku koorappatta pilaiyana vilakkam enru thalaippittu arbi il oru hathees kurippittulleerhal athan tamil moli vilakkathai pooranmaha tharumaru vinayamaha venduhiren....

bursun said...

கணவன் மரணித்த பெண்ணுடைய இத்தா நான்கு மாதம் பத்து நாட்கள் என்று அல்லா குர்ஆனில் kurippidukiraan . அதற்கு உலமாக்கள் சொல்லும் கருத்து التبرية ஒரு பெண் கருவுற்று இருக்கிறாளா என்பதை விளங்கிக்கொள்ள இந்த கால எல்லை தீவை படுகிறது என்று சொல்கிறார்கள் அவள் இதற்கு முன்பு திருமணம் முடித்தாள் அது முன்னாள் கணவனுடைய பிள்ளையா அல்லது இரண்டாமவருடய்யதா என்ற சந்தேkankalum நிவர்த்தி செய்யப்படுவதற்கு தான் இந்த காலம் . இதை சற்று விளக்கமாக சொல்ல முடியுமா ?

Aalif Ali said...

சிறந்ததொரு கேள்வி...

முதலில் நாம் கருத்திற்கொள்ள வேண்டிய விடயம் அல்குர்ஆன் ஓர் கட்டளையை இடுகின்றதென்றால் அதற்கான காரண காரியங்களை தேடிக்கொண்டிருக்காது உடனே அதற்கு அடிபணிந்துவிட வேண்டும். இதுவே ஒரு உ்ண்மை முஸ்லிமின் அடையாளம்.

கணவன் மரணித்தால் இத்தா அனுஷ்டிப்பதன் ஒரு நோக்கம் அந்த துக்கத்தை மனைவி அனுஷ்டிப்பதாகும். பொதுவாக மனைவியல்லாத அனைவரும் மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் அனுஷ்டித்தல் கூடாது. ஆனால் கணவனை இழந்ததற்காக ஒரு பெண் 4 மாதங்கள் வரை இத்தாவிருக்க வேண்டும் என்பதே அல்குர்ஆனியப் போதனை.

4 மாதங்கள் இத்தா இருப்பது கருவுற்றுள்ளாளா என்பதைப் பார்ப்பதற்குத்தான் என்று கூறினால் உண்மையில் இன்று நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் 4 மாதங்களுக்கு முன்பே கருவுற்றுள்ளாளா? இல்லையா என்பதை அறியலாம். இதன் விளக்கம் அப்பெண் வேறு எந்த அஜ்னபிய்யான ஆண் தொடர்பும் இன்றி இருக்கும்போதுதான் இவள் இறந்த கணவனின் மூலம் கருவுற்றிருக்கின்றாள் என்பதை உருதி செய்யமுடியும். இத்தா இன்றி பலருடன் பலகி வரும்போது நிஜமாகவே இறந்த கணவானால் கருவுற்றிருந்தாலும் சமூகத்தின் மத்தியல் வீணான சந்தேகங்களே எழும். இதனைத் தவிர்ப்பதும் இத்தாவின் ஒரு அம்ஷமாகும்.

அண்மையில் 4 மாதங்கள் இத்தா இருப்பது தொடர்பான ஓர் ஆய்வொன்றை மேற்கொண்ட ஒரு யுத அறிஞர் இஸ்லாத்தை ஏற்ற சம்பவத்தை கேள்விப்பட்டிருப்பீர்கள். இ்ந்த லிங்கில் அவ் ஆக்கத்தை வாசியுங்கள். பயணுள்ளதாக இருக்கும்.
http://ungalblog.blogspot.com/2012/11/blog-post_16.html

Azeem Srilanki said...

மாஷா அல்லாஹ்.

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...