"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

18 May 2011

ஊடகங்களை நெறிப்படுத்த இஸ்லாம் வழிகாட்டுகிறது

ஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்

தொலைத்தெடர்பு ஊடகம் அறிமுகக் குறிப்பு:
மூலை முடுக்குகளில் எல்லாம் தொடர்பறுந்து காணப்பட்ட மனித சமூகத்தை உலக மக்கள் என்ற உறவுமுறையில் கட்டிப்போட்டது இத்தொலைத்தொடர்பூடகங்கள்தாம். யாரும் யாருடனும் எங்கிருந்தும் கணப்பொழுதில் தொடர்பை ஏற்படுத்தி தகவல்களை அறியவும் கருத்துப் பறிமாறவும் அளவளாவவுமாகப் பல்வேறு வசதிவாய்ப்புகளைப் பல்பரிமாண ரீதியில் இத்தொடர்பூடகங்கள் அமைத்துத் தருகின்றன.

ஆதிக்கச் சக்தியாக தொடர்பூடகங்கள்:
இந்த இருபத்தியோராம் நூற்றண்டின் மாபெரும் தீர்மாணிக்கும் சக்தியாக (Decisive Factor) காணப்படுவது தொலைத்தொடர்பு ஊடகங்களாகும். 19ம் நூற்றாண்டில் எழுச்சியுறத் துவங்கிய அதிவேக தொலைத்தொடர்பு ஊடகங்களின் செயற்பாடுகள் 21ம் நூற்றாண்டில் பாரிய வீச்சுடன் முன்னேரிவருகின்றன. இம்முன்னேற்றத்திற்கு வித்திட்ட முக்கிய விடயம் தகவல் புரட்சியும் மனிதனின் பொழுதுபோக்கும் சிந்தனையுமாகும். எனவேதான் இது தகவல் வெள்ளம் பிரவாகிக்கும் ஒரு யுகம் - Era of information flood – என வர்ணிக்கப்படுகின்றது. பெஞ்சமின் பார்பர் எனும் சமூகவியலாளர் இந்நவீன தொலைத்தொடர்பூடகத்தினை “இன்போடைன்மன்ட் - Infomation + Entertainment = Infortainment – தகவல் மற்றும் பொழுதுபோக்குத் தொடர்பூடகம் என அழைக்கின்றார்.

தொடர்பூடகங்களின் ஆதிக்கம் இன்று சர்வதேச அளவில் விரிவடைந்துகொண்டே செல்கின்றது. நாடுகளின் எல்லைகளைத் தாண்டி, அரசியல், இன, மத, கலாசார அடையாளங்களையும் தாண்டி சர்வதேச அளவில் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் இடையே பிணைப்பை ஏற்படுத்தி மாபெரும் நாகரீகப் புரட்சியொன்றை இத்தொலைத்தொடர்பு ஊடகங்கள் மேற்கொண்டு வருகின்றன. இன்றைய இத்தொடர்பூடகங்களின் போக்கிற்கு இயைந்தாற்போல் தமது முன்னெடுப்புக்களை அமைத்துக்கொள்ளத்தவரும் கொள்கைகளும் கோட்பாடுகளும் மதங்களும் இனங்களும் தமது அடையாளங்களையும் மக்களையும் தொலைத்து இழந்துவிடுவதென்பது நிதர்சனமானவொன்று. ஏனெனில் தொடர்பூடகங்கள் உலகின் மூளை முடுக்குகளில் வாழ்பவர்களது உளவியலைக்கூட தீர்மானிக்கும் பயங்கரச் சக்தியாக மாறயுள்ளது.

19ம் நூற்றாண்டின் இருதியிலும் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் எண்ணெய், போக்குவரத்து போன்ற தொழிட்துறைகளுக்கு இருந்ததுபோன்ற முக்கியத்தும் இந்த 21ம் நூற்றாண்டில் தொடர்பூடகங்களுக்கு வழங்கப்படுகின்றது. தகவல் தொழில்நுட்பத்தில் ஆதிக்கம்செலுத்தும் நாடோ அல்லது சமூகமோ அது தனது அரசியல், பொருளாதார, இராணுவ, மற்றும் கலாசார மேலாதிக்கத்தினை ஏனைய சமூகங்களின்மீது திணிக்கும் சக்தியைப் பெறுகின்றது. இதனால்தான் நவீன தொலைத்தொடர்பு மற்றும் மகவல்தொழில் நுட்பத்தின் எதிர்த்தாக்கங்கள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்ட அமெரிக்க சமூகவியலாளர் நோம்ஸொஸ்கி இதனை ஒரு தகவல் பயங்கரவாதம்; (Cyber Horrer), ஊடகப் பயங்கரவாதம் (Media terorism), தகவல் வன்முறை (Cyber Violence), தகவல் மாபியா(Cyber mafia) என்றெல்லாம் வர்ணிக்கன்றார்.

தொடர்பூடகங்களின் மறுபக்கம்:
தொலைத் தொடர்பூடகங்களின் மூலம் மனித சமூகம் அளவில்லாப் பயன்பாடுகளைப் பெற்றுவருகின்றது என்பதை மறுக்கமுடியாது என்றபோதிலும் இன்றைய நிலையை உற்று நோக்கினால் அதிகபடியான பயன்பாடுகளைப் பெறுவதைவிடவும் வெகுஜனம் பல பாதகமான விடயங்களைத்தான் அதலிருந்து பெறுகின்றது, பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றது.

ஏனெனில் தொலைத் தொடர்பூடகங்கள் இன்று வெறும் வியாபாரத்தையும் பிரபலத்தையும் நோக்காகக்கொண்டே உற்பத்திசெய்யப் படுகின்றது. அதில் சேவை நோக்கம் மிக மிக அறிது. அதுமட்டுமன்றி இதன் உற்பத்தியிலும் விளம்பரப் படுத்தலிலும் விற்பனையிலும் ஆதிக்கம் செலுத்தியிருப்பது முதலாளித்துவ, சடவாத, நாத்திகச் சிந்தனைகளாகும். தொலைத்தொடர்பு சாதனங்கள் மறைமுகமாக முதலாளித்துவ ஏகாதபத்திய சக்திகளின் கைகளிலேயே தங்கியுள்ளன. அதிலும் இத்துறையில் அமொக்காவின் கையே ஓங்கியிருப்பதாகப் புள்ளிவிபரங்கள் சுட்டுகின்றன.

முன்பு ஏகாதிபத்திய அரசுகள் இராணுவப் படையெடுப்பின் மூலம் பிற நாடுகளைக் காலனியாதிக்கம் செய்து தமது மதத்தையும் காலாசாரத்தையும் திணித்தன, வளங்களைச் சுரண்டின. ஆனால் இன்று இத்தொடர்பூடகப் படையெடுப்பின் மூலம் நாடுகளின் அங்கீகாரத்தினுடனே மதப் பிரசாரங்களும் காலசாரத் திணிப்புகளும் வளச்சுரண்டல்களும் தாராளமாக முன்னெடுக்கப்படுகின்றன. இதனை அந்நாடுகளே அறியாமலிருப்பதுதான் கவலைக்குரிய விடயம். இராணுவப் படையெடுப்பின் பயங்கரமான பாதிப்புகளை விட தொடர்பூடகங்களினால் சமூகக் கட்டமைப்பில் விளையும் பாதிப்பு மிகப் பயங்கரமானது. பிரான்ஸிய எழுத்தாளர் “ஜீன் போற்றிலாட்” இதுகுறித்து பின்வருமாறு குறிப்பிடுகின்றார். “வெகுசனத் தொடர்பு சாதனங்கள் ஏனைய தொழில்நுட்பங்களை விடவும் சக்திவாய்ந்ததும் பாரிய தாக்கங்களை விளைவிக்கக்கூடியதுமாகும்.” என்கிறார்

இணையம், தொலைக் காட்சி, வானொலி, செல்லிடத் தெலைபேசி, பத்திரிக்கைகள் என நாம் அதிகளவில் பயன்படுத்தும் தொடர்பூடகங்கள் அனைத்துமே வெறும் வியாபார நோக்கம்கொண்டனவாகவே செயற்படுகின்றன. இந்த அனைத்து சாதனங்களிலுமே பொதுப்படையாக பொய், மோசடி, விரசம், ஆபாசம் என்பன விரவிக்கிடப்பதைக் காண முடிகின்றது.

பிழையான மற்றும் பொய்யாக இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை இச்சாதனங்கள் தாராளமாகவே பிரச்சாரம் செய்கின்றன. இருதரப்பினருக்கிடையே கருத்து முரண்பாடுகளையும் சண்டைகளையும் மூட்டிவிடுவதெல்லாம் இங்கு சர்வசாதாரணம். கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் தனிநபர்களையும் நிறுவனங்களையும் பட்டை உரிப்பதோடு மதங்களைக் கொச்சைப்படுத்தி இழிவுபடுத்தும் செயல்களையும் தாரளமாகச் செய்துவருகின்றன. இன்று இஸ்லாம் பயங்கரவாதமாகவும் தீவிரவாதமாகவும் அடிப்படைவாதமாகவும் ஊடகங்களில் பரப்பப்டுகின்றது. நெதர்லாந்தில் நபியவர்கள் குறித்து வெளியிடப்பட்ட கேளிச்சித்தரங்கள், இஸ்லதாத்தைக் கொச்சைப்படுத்தி திரையிடப்படும் சினிமாக்கள் வெளியிடப்படும் நூல்கள் என அனைத்தும் நெறிபிறழ்ந்த ஓர் ஊடகக் கலாசாரத்தைக் கட்டியம் கூறுகின்றன.

தனிநபர் தொடர்பான இரகசியமான அந்தரங்க விடயங்களைக்கூட பால், வயது வேறுபாடின்றி அனைவருக்கும் கிடைக்கக்கூடிய விதத்தில் வழங்கும் அரட்டைச் சந்தையாகவே இச்சாதனங்கள் விழங்குகின்றன. ஒரு நாட்டின் அந்தரங்க விடயங்களில் கையைவைத்த Wikileaks இதற்குச் சிறந்த உதாரணமாகக் கூறமுடியும். பலர் இத்தளத்தை ஆதரித்தும் எதிர்த்தும் குரல்கொடுத்தாலும் இங்கு ஒரு குற்றச் செயல் நடைபெற்றிருப்பதை மறுக்கமுடியாது. இன்று தொலைக்காட்சி நாடகங்கள், திரைப்படங்கள், பாடல்கள், விளம்பரங்கள் என அனைத்திலும் ஆபாசம், அநாச்சாரம் கொட்டிக்கிடக்கின்றது. கையடக்கத் தொலைபேசிகளையும் அதிகமான இளைஞர்கள் வழிதவறிய முறையிலேயே பயன்படுத்துகிறார்கள். இணையத்தைப் பற்றி சொல்லவேண்டியதில்லை. எத்தனையோ பயன்தகு தளங்கள் இருந்தும் இன்று சர்வதேச அளவில் அதிகமாகத் தரிசிக்கப்படும் வலைதளங்களாக ஆபாச தளங்களே காணப்படுகின்றன.

இவ்வாறு தொடர்பூடகங்களின் மறுபக்க முகம் மிகவும் அபாயகரமாகவும் சமூகத்தில் சீரழிவுகளையும் குழப்பங்களையும் விளைவிக்கக் கூடியதாகவுமே காணப்படுகின்றது.

தொடர்பூடகங்கள் நெறிப்படுத்தப்படல் வேண்டும்:
இவற்றை முழுமையாக எடுத்து நோக்கும்போது இன்றைய நவீன தொலைத்தொடர்பூடகங்கள் குறுகிய கண்ணோட்டத்தில் இலாபத்தை மாத்திரம் குறியாகவைத்துச் செயற்படுவதைக் காணமுடிம். இந்த சுயநலம்மிக்க செயற்பாட்டினால் பல்வேறு பாதக விளைவுகளே அன்றாடம் அங்கங்கே நிகழ்ந்துகொண்டிருப்பதையும் மறுக்கமுடியாது. வரைமுறையின்றி மடை உடைந்து பாயும் இத் தொடர்பூடகப் பாவனையையும் அதனால் விளையும் பாதக விளைவுகளையும் எல்லைகடந்த குற்றச் செயற்பாடுகளின் அதிகரிப்பையும் கட்டுப்படுத்த முடியாமல் இன்று சர்வதேச உலகம் விழிபிதுங்கி நிற்கின்றது. சர்வதேச ரீதியில் ஊடக நெறிமுறைகளாக (Ethics of media) அங்கீகரிக்கப்பட்டுள்ளவற்றைக்கூட இன்றைய தொடர்பூடகங்கள் கடைபிடிக்கத் தவறியுள்ளன. எழுதப்படும் ஒழுக்கக் கோவைகளை அவர்களே கிழித்துப்போடுவதும் மீண்டும் திருத்துவதும், எழுதுவதுமாகவே காலம் கழிகின்றது.

முஸ்லிம்களும் நவீன தொடர்பூடகங்களும்:
முஸ்லிம் சமூகம் தொடர்பூடகம் தொடர்பான கருத்தில் இருதுருவத் தீவிரநிலையைக் கடைபிடிக்கின்றது. ஒருசாரார் “நவீன தொலைத்தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்துவது கூடாது, அது மேற்குலகின் கண்டுபடிப்புகள், மனிதனை வழிகெடுக்கும் சைத்தானியத்தே இச்சாதனங்கள்” என இவற்றை விட்டும் தூர விலகி நிற்கின்றனர். மற்றுமொருசாரார் மேற்கின் தொடர்பு ஊடகங்களில் கட்டுண்டு சிறைப்பட்டுக் கிடக்கின்றனர். அனைத்துக் குப்பைகளையும் ஏற்றுக்கொள்கின்றனர். இஸ்லாத்தைப் பொருத்தவரை இவ்விரண்டு நிலைப்பாடுகளும் தவறானதாகும். இரண்டிலும் நடுநிலையானதையே இஸ்லாம் விரும்புகின்றது. அல்லாஹ் கூறுகின்றான் “(விசுவாசிகளே!) நீங்கள் (பிற) மனிதர்களுக்கு சான்று பகர்வதற்காகவும் (நமது தூதர்)  உங்களுக்கு சான்றாக இருப்பதற்காகவும் நடுநிலையான சமூகத்தினராக நாம் உங்களை ஆக்கினோம்.” (2:143)
இன்று உலகளவில் மறைமுகமான விதத்தில் ஊடக யுத்தம் ஒன்று நடந்தேரிக் கொண்டிருக்கின்றது. ஆனால் துரதிஷ்டவசமாக, சான்று பகரவேண்டிய முஸ்லிம் சமூகத்திடமோ இந்த யுத்தத்தை எதிர்கொண்டு அதற்கு ஏக தீர்வாக உள்ள இஸ்லாமியப் பதிலீடுகளை வழங்குவதற்கான ஆயுதங்களோ, வளங்களோ (Resource) எதனையும் கையில் பெறாதிருக்கின்றது. ஆனால் அல்லாஹ் தமக்குத் தேவையான பலத்தையும் வளங்களையும் இயன்றளவு திரட்டிக்கொள்ளுமாறு அல்குர்ஆனில் கட்டளையிடுகின்றன்.

அவர்களுக்கெதிராக (ஆயுத) பலத்தையும் (பலமான) குதிரைகளைக் கட்டிவைப்பதையும் நீங்கள் (எந்நேரமும்) தயாராக வைத்திருங்கள். இதனால் அல்லஹ்வுடைய எதிரியையும் உங்களது எதிரியையும் இவர்களல்லாத பிறறையும் அச்சமடையச் செய்யமுடியும். அவர்களை நீங்கள் அறியமாட்டீர்கள். அல்லாஹ்வே அவர்களை அறிகின்றான்.” (8:60)
அன்றைய யுத்த முறைக்கு ஆயுதங்களும் குதிரைகளும் அவசியப்பட்டன. அவற்றைத் திரட்டுவது வாஜிபாக இருந்தது. ஆனால் இன்று நடைபெறும் ஊடக யுத்தத்திற்கு அவசியமான கட்டுச்சாதனங்களைத் திரட்டவேண்டியது முஸ்லிம்கள்மீது பர்ளு கிபாயாவான ஒரு கடமையாகும்.

மேற்குலகின் கண்டுபிடிப்புகளையும் தயாரிப்புகளையும் முஸ்லிம்கள் பயன்படுத்தக்கூடாது என்பது உண்மையில் ஒரு மடமைத்தனமான கருத்து. இதனால் எமது சமூகம் இன்னும் பின்தள்ளப்படுகின்றதே அன்றி வேறு ஒன்றும் நடக்கப்போவதில்லை. ஆனால் மேற்குலகின் தயாரிப்புகளைக்கூட இஸ்லாமிய மயப்படுத்தி, இஸ்லாத்தின் வரையறைகளைப்பேணி அவற்றைப் பயனப்படுத்த முடியும் என்பதையே நபி (ஸல்) அவர்களது பின்வரும் நிகழ்வொன்று சுட்டிக்காட்டுகின்றது.

ஜாஹிலிய்காக் கால மக்கத்து மக்கள் ஏதாவது முக்கியமானதொரு செய்தியையோ அல்லாது அபாய அறிவிப்பையோ அறிவிக்க நாடினால் உயரமான குன்றொன்றின்மீது ஏறி தமது ஆடைகளைக் களைந்துவிட்டு உரக்கக்கத்தி அப்பகுதி மக்களை அழைத்து விடையத்தைக் கூறுவார்கள். நபியவர்களுக்கு அல்குர்ஆனின் 26:214ஆம் வசனம் இறக்கப்பட்டதும் அவர்கள் சபா மலைமீது ஏறி நின்று மக்களை உரக்க அழைத்தார். ஆனால் நபிகளார் தமது ஆடைகளைக் களையவில்லை அதற்கு மாற்றீடாக தமது தோல்துண்டை மட்டும் அசைத்துக் காட்டினார்கள். இது பிற அணுகுமுறைகளையும் இஸ்லாமிய மயப்படுத்தி எமக்குச் சார்பாக அவற்றைப் பயன்படுத்த முடியும் என்பதைக் காட்டுகின்றது.

இக்கருத்தினை கலாநிதி யூசுப் அல்கர்ழாவி அவர்கள் பின்வருமாறு விளக்குகின்றார்கள். உலகமயமாக்கலின் இராட்சத சாதனங்களிலிருந்து முஸ்லிம்களாகிய நாமும் பயனடையவேண்டும். செயற்கைக் கோள்கள், இணையம், தொலைக்காட்சி, வானொலி என அனைத்து சாதனங்களையும் நாம் பயன்படுத்தவேண்டும். எமது சர்வதேசத் தூதை அதன் தூய ஊற்றிலிருந்து பெற்று எவ்வித களங்கமுமற்ற தூய முறையில் கூடுதல் குறைதலின்றி உலகுக்கு முன்வைக்க வேண்டும்.”

இதன்படி தொலைத்தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்துகையில் இஸ்லாத்தின் எல்லையினுள் இருந்து அது வகுத்துத்தந்த ஒழுக்கக் கோவைகளின் அடிப்படையில் செயற்படல்வேண்டும். எனவே சர்வதேச ரீதியல் இந்நவீன தொலைத்தொடர்பு சாதனங்கள் நெறிப்படுத்தப்பட அவை இஸ்லாமிய மயப்படுத்தப்பட வேண்டிய தேவையுள்ளது. அவற்றிலுள்ள மோசமான, பிழையான அம்சங்களைக் களைந்துவிட்டு இஸ்லாம் வகுத்துத்தரும் பொருத்தமான ஒழுக்கக் கோவைகள் இயற்றப்பட்டு அவை அமுல்படுத்தப்படல் வேண்டும். இஸ்லாமிய மாற்றீடுகளை (Alternativs) வழங்கவேண்டும்.

இஸ்லாம் கூறும் ஒழுக்கக் கோவை:
முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் அதற்கு முன்வந்த நபிமார்களுக்கும் அல்லாஹ் வஹி அறிவித்ததனூடாக எப்போதோ இத் தொலைத் தொடர்பாடற் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது புமிக்கும் ஏழு வானங்களுக்கும் இடையிலான தொடர்பாடல். இதற்கான ஊடகமாக அல்லாஹ் ஒளி (ஜிப்ரீல் (அலை)) ஐப் பயன்படுத்தியுள்ளான். அதன் பின்னர் நபி (ஸல்) அவர்கள் அல்குர்ஆனை ஊடகமாகக் கொண்டு மனித சமூகத்துக்குப் பல்வேறு வழிகாட்டல்களை வழங்கிச் சென்றார்கள். இவ்விரண்டு மூல ஆதாரங்களிலிருந்தும் இன்றைய தொடர்பூடகங்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய அநேக ஒழுக்க நெறிமுறைகள் காணப்படுகின்றன.

தொடர்பூடகங்களுக்கான கச்சிதமான ஒழுக்கக்கோவை 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே இஸ்லாத்தினால் வகுத்து வழங்கப்பட்டுவிட்டது. அதனை நபியவர்கள் சிறந்த முறையில் எமக்கு நடைமுறைப் படுத்தியும் காட்டினார்கள். எனவே இன்று முஸ்லிம்கள் மாத்திரமன்றி முழு உலகமும் தொடர்பூடகங்களை இஸ்லாம் கூறும் அடிப்படையில் நெறிப்படுத்திப் பயன்படுத்துவதோடு பிற சமூகத்துக்கும் இஸ்லாம் கூறும் ஒழுக்கக்கோவைகளைச் சான்றுபவர்களாகவும் இருக்கவேண்டும். அல்லாஹ் கூறுகின்றான். நபியே! நிச்சயமாக நாம் உம்மை (மனிதர்களுக்குச்) சான்று பகரக்கூடியவராகவும் நன்மாராயம் கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பிவைத்தோம்” (33:45)

எனவே இஸ்லாம் வகுத்துத்தரும் சில அடிப்படையான ஒழுங்குகளை இங்கு சற்று அவதானிப்போம்.

1.       கருத்துச் சுதந்திரம்:
இஸ்லாம் மனிதனுக்குக் கருத்துச் சுதந்திரத்தினை வழங்குகின்றது. ஈமான் கொண்டவர்களே நீங்கள் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். நீங்கள் கூறுவதைத் தெளிவாகவே கூறுங்கள்.” (33:70) ஒரு முறை நபியவர்களிடம் மிகச் சிறந்த ஜிஹாத் எது என்று வினவப்பட்டபோது “தீய ஆட்சியாளனின் முன்னிலையில் சத்தியத்தை உறைப்பதாகும்” என்றார்கள்.

மனிதனுக்குப் பேசுவதில் சுதந்திரத்தை வழங்கிய இஸ்லாம் அதற்கு சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. கருத்து வெளிப்படுத்துகையில் பிறர் மனம் புண்படாத வண்ணம் கவனம் செலுத்தவேண்டும். மென்மையையும் நளினமான போக்கையும் கையாளவேண்டும். அல்லாஹ் கூறுகின்றான் : “நீங்கள் அவர்களுடன் மிகவும் அழகிய வழிமுறையிலேயே விவாதம் புரியுங்கள்” (16:125)

கொடுங்கோளன் பிர்அவ்னிடம் சென்ற மூஸா, ஹாரூன் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் கருத்துப் பரிமாரும் ஒழுங்கைக் கற்றுக்கொடுத்தர்ன். “அவனிடம் நீங்கள் இருவரும் மிக இதமான வார்த்தையையே கூறுங்கள்” (தாஹா:44) மேலும் பேச்சுச் சுதந்திரத்திற்கான வரையறைகளை அல்லாஹ் ஸுரதுல் ஹுஜ்ராத்திலே மிகவும் அழகாகக் கூறுகின்றான்.

பனூமுஸ்தல் கோத்திரத்திடம் ஸகாத் திரட்டிவருமாறு நபி (ஸல்) அவர்ள் ஒருவரை அனுப்பியபோது அவர் அவர்களிடம் செல்வதை அஞ்சி இடைவழியே திரும்பி வந்து நபயவர்ளிடம் அக்கூட்டத்தினர் மதம்மாறிவிட்டதாக அறிவித்தார். இதனல் சினமுற்ற நபியவர்கள் அக்கோத்திரத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முற்பட்டபோது பின்வரும் வசனம் இறங்கியது.

“உங்களிடம் ஒரு பாவி ஒரு தகவலைக் எடுத்துவந்தால் (அதனை) தீர்க்கமாக விசாரித்துத் தெளிவு பெற்றுக்கொள்ளுங்கள். இல்லாவிடின் பின்னர் அதற்காக நீங்கள் கைசேதப்படுவீர்கள்…(49:14)

1.       நடுநிலை பேணுதல், நீதமாக நடத்தல்:
“எந்த சமூகத்தவரின் விரோதமும் உங்களை நீதமாக நடந்துகொள்ளாதிருக்கத் தூண்டிவிட வேண்டாம். (எவ்வளவு விரோதமாக இருந்தபோதிலும்) நீங்கள் நீதி செலுத்துங்கள். அதுதான் பயபக்திக்கு மிக நெருக்கமானது.” (5:8)

4. மானக்கேடான விடயங்களைப் பரப்புவதைத் தவிர்ந்துகொள்ளல்:
இன்று தொடர்பூடகங்களென்றாலே ஆபாசமும் அனாச்சாரமும்தான் கொட்டிக்கிடக்கின்றன. ஆனால் இவை தவிர்க்கப்படனும். “விசுவாசிகளுக்கு மத்தியில் மானக்கேடான செயல்களை பரவவேண்டுமென யார் விரும்புகின்றாரோ. அவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நோவினைதரும் வேதனையுண்டு.” (24:19)

5.  உண்மையைக் கடைபிடித்தல்:
இஸ்லாம் முழு வாழ்க்கைக்குமான வழிகாட்டி என்றவகையில் தொடர்பு ஊடகத்துறைக்கான சிறந்ததொரு வழிகாட்டலை வழங்குகின்றது. நவீன தொலைத்தொடர்பு சாதனங்களால் இன்று சமூகத்தில் பல்கிப்பெருகிவரும் தீங்குகளைக் கட்டுப்படுத்த முடியாது சர்வதேச உலகம் தடுமாறிக்கொண்டிருக்கும் வேளை இஸ்லாம் சிறந்ததொரு தீர்வுத் திட்டத்தை முன்வைக்கின்றது. தொடர்பூடகங்களுக்கான நெறிமுறைகளையும் (Ethics of media) ஒழுக்கக்கோவைகளையும் அல்ர்குஆன் அஸ்சுன்னா மற்றும் இஜ்திஹாத் அடிப்படையில் வழங்கமுடியும். ஊடகங்களை இஸ்லாமிய மயப்படுத்தி அவறுற்றுக்கான சிறந்த இஸ்லமிய மாற்றீடுகளை (Islamic Alternatives) வழங்க ஆவனசெய்வோம். ஊடகத் துறையை சிறந்த முறையில் பயன்படுத்துவோம்.

ஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்)

1.       கிடைக்கும் தகவல்களை உறுதிப்படுத்திக்கொள்ளல்:

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...