"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

24 October 2011

பாக். ஆக்கிரமிப்புக்காக USA இனால் கட்டமைக்கப்பட்டுள்ள ஹக்கானி பயங்கரவாதம்.

ஆப்கானை ஆக்கிரமிப்பதற்காக இரட்டைக் கோபுரத் தாக்குதலின் சூத்திரதாரிகளாக அமெரிக்காவினால் சித்தரிக்கப்பட்ட ஒரு அமைப்புதான் அல்கைதா. இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்கும் அல்கைதா அமைப்பினருக்கும் எந்தவிதத் தொடர்புமில்லை என அமெரிக்காவின் புத்திஜீவிகள் பின்னால் கண்டறிந்து கூறியும் அமைரிக்கா அதனைக் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை. ஆப்கானுக்கு அடுத்ததாகத் தற்போது பாக்கிஸ்தானை ஆக்கிரமிப்பதற்காக அமெரிக்காவினால் அமெரிக்காவின் மிக மோசமான எதிரி என்று ஊதிப் பெருப்பித்து வரும் ஒரு சொல்லாடல்தான் ஹக்கானி பயங்கரவாதம்

பாகிஸ்தானில் இயங்கிவரும் ஹக்கானி அமைப்பைப் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டுமென அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஹிலாரி கிளின்டன் வலியுருத்திக் கூறியுள்ளார். அமெரிக்க இராணுவத்தின் உயர் அதிகாரியான மைக் முல்லன்அமெரிக்காவின் மோசமான எதிரி America’s worst enemy” என ஹக்கானி அமைப்பை வர்ணித்துள்ளார். மற்றுமோர் அதிகாரியான லின்சி கிரஹம் மேற்படி அமைப்பினைப் பாக்கிஸ்தானிலிருந்து முழுவதுமாகத் துடைத்தெறிவதற்கு எல்லா ஏற்பாடுகளையும் ஒழுங்குபடுத்தி காங்கிரஸின் அங்கீகாரத்திற்காக அனுப்பியிருப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஹக்கானி இயக்கத்திற்கும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ISI இற்கும் நெருங்கிய உறவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு பாலுசிஸ்தான் பிரதேசத்தில் தாலிபானுடன் தெடர்புவைத்துள்ள இவ்வமைப்பே அண்மைய நாட்களில் ஆப்கானில் நடைபெறும் தாக்குதல்களுக்குக் காரணம். எனவே அவ்வமைப்பு உடனடியாக தடுத்து நிறுத்தப்படல் வேண்டுமென அமெரிக்கா அறிக்கை விடுத்துள்ளது.

ஆப்கானின் முன்னாள் ஜனாதிபதி புர்ஹானுத்தீன் ரப்பானி மீதான தாக்குதலுக்கும் இவ்வமைப்புக்கும் தொடர்பிருக்கவேண்டுமென கர்சாயி தரப்பினர் நம்புகின்றனர். அதற்கு இந்தியாவும் ஒத்தூதியுள்ளது. அண்மைக்காலமாக நேட்டோ படையினர் மீது இடம்பெறும் தாக்குதல்களுக்கு ஹக்கானி அமைப்பே காரணம் என்பது மேற்கு ஊடகங்களின் நிலைப்பாடாக உள்ளது.

அமெரிக்காவின் முன்னணிப் பத்திரிகையொன்றில் அண்மையில் பிரசுரமான ஒரு கட்டுரையில் 2008 ஜனவரி 14ம் திகதி காபுல் சரனா ஹோட்டல் முன்பாக நடாத்தப்பட்ட தாக்குதல், 2008 மார்ச் மாதம் பிரிட்டிஷ் பத்திரிகையாளர் சீன் லங்கான் கடத்தல் சம்பவம், 2008 ஏப்ரலில் ஜனாதிபதி ஹமீத் கர்சாயி படுகொலை முயற்சி, 2008 ஜுலை காபூலில் உள்ள இந்தியத் தூதுவர் ஆலயம் தாக்கப்பட்டமை, 2011 செப்டம்பர் காபூலில் உள்ள  நேட்டோ தளம், அமெரிக்க தூதுவராலயம் என்பன தாக்கப்பட்டமை போன்ற நிகழ்வுகளுக்குப் பின்னால் இந்த ஹக்கானி பயங்கரவாத அமைப்பினரே இருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தமது நாட்டுக்குள் இப்படியானதொரு பயங்கர அமைப்பு இருக்கின்றது என்பதே பாகிஸ்தான் அரசுக்கு அமெரிக்க ஊடகங்கள் வாயிலாகத்தான் தெரியவந்துள்ளது.

ஆப்கான் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டது முதலே மறைமுகமானதொரு நிழல் யுத்தம் பாகிஸ்தான் மீது திணிக்கப்பட்டு வந்துள்ளது. அதனமைவாகத்தான் பாகிஸ்தான் - ஆப்கான் எல்லைகளில் அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் பல தாக்குதல்களை நடாத்திவருகின்றது. அத்தோடு உஸாமா பின் லேடன் பாகிஸ்தானில் மறைந்திருந்ததாகவும் இராணுப் பாதுகாப்போடு இராணுவ முகாமிற்கு அருகமையிலிருந்தாகவும் கூறியதெல்லாம் இதன் பின்னணியில்தான்.

கடந்த மாதம் பிரவ்ன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து www.costsofwar.org என்ற இணையதளம் மேற்கொண்ட ஆய்வில் 2001 முதல் 2010 ஆண்டு வரையான காலப் பகுதியில் நேட்டோ தாக்குதல்கள் காரணமாக சுமார் 35,000 பாகிஸ்தானியர் கொல்லப்பட்டுள்ளதோடு 40,000 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் 3 இலட்சம் மக்கள் உள்நாட்டிலேயே அகதிகளாயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பாகிஸ்தானை இராணுவ மயப்படுத்துவதற்காக அமெரிக்கா 2001 ஆம் ஆண்டு முதல் பாரிய அளவில் இராணுவ உதவிகளைச் செய்திருக்கின்றது. ஏவுகணைகள் நவீன ரக ஹெலிகள், யுத்த விமானங்கள் என்பவற்றை அமெரிக்கா பாகிஸ்தானுக்கு வழங்கியுள்ளது. கடந்த ஒரு தசாப்த காலத்திற்குள் அமெரிக்கா பாகிஸ்தானுக்கு 13,314 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இராணுவ உதவிகளை வழங்கியுள்ளது.

எனினும் அமெரிக்கா உட்பட மேற்கு ஊடகங்கள் குற்றம் சாட்டும் அளவுக்கு இந்த ஹக்கானியா அமைப்பு பாரிய வலையமைப்பினைக் கொண்ட போராட்டக் குழுவல்ல என்பதுதான் உண்மை. ஆப்கானைத் தொடர்ந்து பாகிஸ்தானில் தமது சர்வ அதிகாரங்களையும் விஸ்தரிப்பதற்கான முஸ்தீபுகள்தான் இவை.

அமெரிக்க இரட்டைக் கோபுரத்தின் மீதான தாக்குதலின் பின்னர் அல்கைதா அமைப்பினைப் பற்றி அறியாதவர்கள் உலகில் இருக்க முடியாது. ஆனால் ஹக்கானி அமைப்பு அவ்வாறு பிரபல்யமானதல்ல. எனினும் இப்போது அமெரிக்கா பாகிஸ்தானின் மீது மேற்கொள்ள இருக்கும் இராணுவ ஆக்கிரமிப்பை நியாயப்படுத்துவதற்கென புதிதாகக் கட்டமைத்திருப்பதே இந்த ஹக்கான விவகாரமாகும் (அமெரிக்கப் பத்திரிகையாளர் Paul Craig Roberts)
குறிப்பு :- ஒக்டேபர் 15 – 31 2011 எங்கள் தேசம் பத்திரிகையில் பிரசுரமான ஒரு ஆக்கத்தைத் தழுவி எழுதப்பட்டது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

1 comments:

earn money online free said...

great site thanks for sharing the post with us it was very useful to me

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...