"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

03 March 2018

மழைக்காலப் பாடகன் தவளை

அறிமுகம்

தவளைகள் நீரிலும் நிலத்திலும் வாழும் தகவமைப்பைப் பெற்ற இருவாழ்விகளாகும் (Amphibians). தவளை என்று கூறும்போது அதில் இரண்டு பிரிவுகள் இருக்கின்றன. ஒன்று தவளை, மற்றையது தேரை. உலகத்தில் 6,771 வகையான தவளை, தேரை வகைகள் உள்ளன. தவளைக்கும் தேரைக்கும் உள்ள அடிப்படை வித்தியாசம், தவளையின் தோல் காய்ந்து சொரசொரப்பாகக் காணப்படும். தேரையின் தோல் வழுவழுப்பாக இருக்கும். தவளைகள் கறுப்பு, சாம்பள் போன்ற மங்களான நிறங்களில் இருக்கும். ஆனால் தேரைகள் கண்கவர் அழகிய பிரகாசமான நிறங்களில் எல்லாம் இருக்கும். தவளைக்கு விஷ உறுப்பு கிடையாது. தேரைக்கு உண்டு. முக்கியமாக நீர், அதை ஒட்டியுள்ள நிலப்பகுதியில் தவளை வசிக்கும். தேரை நிலத்தில் மட்டுமே காணப்படும். முழுவளர்ச்சி அடந்த தவளைகள் நீண்ட பின்னங்கால்களையும் திரண்டு உருண்ட உடலையும் விரல்களுக்கு இடையே சதை இணைப்புள்ள மடிப்புகளையும் இரு புறமும் பிதுங்கிய இரு கண் முழிகளையும்கொண்ட வாலில்லா ஓர் விலங்குதான் தவளை.

வாழிடங்கள்

இவை பெரும்பாலும் வாழ்விடம், உணவு, இனப்பெருக்கம் போன்றவற்றுக்கு நீர்நிலைகளையே பெரிதும் நம்பியுள்ளன. நீர்நிலைகளற்ற வறண்ட பாலைவனப் பகுதிகளிலும், பனிப்பிரதேசங்களிலும்கூட சில தவளையினங்கள் உயிர் வாழ்கின்றன. பூமத்திய ரேகையை ( Equator ) ஒட்டியுள்ள வெப்பமண்டலப் பகுதிகளான ( Tropical regions ) தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்கா போன்ற பகுதிகளில்தான் உலகின் 80% தவளையினங்கள் வாழ்கின்றன. மீதமுள்ளவை வட அமெரிக்கா, ஐரோப்பா, வட மற்றும் மத்திய ஆசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற மிதமண்டலப் பகுதிகளில் ( Temperate regions ) வாழ்கின்றன.நீர்நிலைகளில், ஈரப்பதமிக்க இடங்களில், மண்ணுக்கடியில், தாவர இலைகளில், மரப்பட்டைகளில், மரப்பொந்துகளில், பாறைகளில், பாலைவனத்தில், பனிமலைகளில் என்று எண்ணற்ற வாழ்விடங்களில் தவளைகள் வாழ்கின்றன. யானை, புலி போல தவளைகளுக்கு பரந்துவிரிந்த பெரிய வாழ்விடங்கள் தேவையில்லை. தவளைகள் மிகச்சிறிய வாழ்விடங்களில் வாழ்பவை. ஒரேயொரு பாறையிலோ, ஒரு மரத்திலோ, ஒரு பொந்திலோ, ஒரு கிணற்றிலோ கூட ஒரு தவளை தன் மொத்த வாழ்நாளையும் வாழ்ந்து முடித்துவிடும். உலகிலுள்ள பெரும்பாலான தவளைகளின் வாழ்விடங்கள் மிகச்சிறிய இடங்களே.

வாழ்க்கை முறை.

தவளைகளின் வாழ்க்கை முறையும் இனப்பெருக்க முறையும் மிக வித்தியாசமானது. பாலூட்டிகளின் இனப்பெருக்கம் உள்கருவுறுதல் (Internal Fertilization) மூலம் நடைபெறுகிறது. ஆனால் தவளைகளின் இனப்பெருக்கம் வெளிக்கருவுறுதல் (External Fertilization) மூலம் நடக்கிறது.

தவளைகளில் ஆணைவிட பெண்ணே அளவில் பெரியதாக இருக்கும். பெண் தவளையின் உடலில் முட்டைகள் முழு வளர்ச்சியடைந்ததும், அது முட்டையிடுவதற்கான ஒரு பாதுகாப்பான இடத்தைத் தேர்வு செய்யும். பிறகு, அந்த இடத்தில் இருந்துகொண்டு இனச்சேர்க்கைக்காக ஆண் தவளையை அழைக்கும். தவளைகளின் இனப்பெருக்கம் பெரும்பாலும் மழைக்காலங்களில்தான் நடைபெறும். அப்பொழுதுதான் முட்டைகளிலிருந்து வெளிவரும் தலைப்பிரட்டைகளுக்கு போதிய உணவும், வாழ்விடமும் கிடைக்கும். மழைக்காலங்களில் நாம் கேட்கும் தவளைகளின் சத்தம் பெரும்பாலும் இனச்சேர்க்கைக்காக அவை எழுப்பும் ஓசைகளே.பெண் தவளையின் ஓசையால் கவரப்பட்ட ஆண் தவளை, அந்தப் பெண் இருக்கும் இடத்துக்கு வந்து, அதனுடன் சேர்ந்துகொள்ளும். இந்த நிகழ்வுக்குப்பின் பெண் தவளை நூற்றுக்கணக்கான முட்டைகளை இடும். முட்டைகள் வெளிவந்ததும், ஆண் தவளை அந்த முட்டைகளின்மேல் தன் விந்தணுக்களை வெளிவிடும். இதன்மூலம் வெளிக்கருவுறுதல் நடைபெறும். அதற்குப்பின் ஆண் பிரிந்து சென்றுவிடும். பின்னர் பெண் தவளை முட்டைகளுக்குப் பாதுகாப்பாக அதன் அருகிலேயே இருக்கும். கருவுற்ற முட்டைகளிலிருந்து வளர்ந்து, வெளிவரும் தலைப்பிரட்டைகள் அல்லது பேத்தைகள் எனும் சிறு தவளைக் குஞ்சுகள் அருகிலுள்ள நீர்நிலைகளைச் சென்றடையும். நீர்நிலைகளில் இருக்கும் நுண்ணுயிர்களையும், நுண்தாவரங்களையும், நுளம்புகளின் முட்டைப்புழுக்களையும் ( Mosquito Larvae ) உண்டு வளரும் பேத்தைகள், முழுத் தவளையாக உருமாற்றம் பெற்றதும் நீர்நிலையை விட்டு வெளிவரும். அவற்றின் வாழ்க்கை இந்த வாட்டத்தில் சுழன்றுகொண்டு இருக்கும். அண்ணளவாக ஒரு தவளை பத்து ஆண்டுகள் வரை உயிர்வாழும்.

வித்தியாசமான சுவாச முறை.தவளைகளின் மற்றுமொரு தனிச்சிறப்பு அவற்றின் சுவாசமுறை. நான்கு வகையான சுவாசமுறைகளைக் கொண்டிருக்கின்றன தவளைகள். நீரில் வாழும் பேத்தைக் குஞ்சுகள், மீன்களைப் போல் செவுள்கள் ( Gills ) மூலம் சுவாசிக்கின்றன. முழு வளர்ச்சியடைந்தவை தோல்களின் மூலமும், மூக்கு மற்றும் வாய் மூலமும் சுவாசிக்கின்றன. தோல்களின் மூலம் சுவாசிப்பதே தவளைகளின் பிரதான சுவாசமுறை. நீரிலும், காற்றிலும் இருக்கும் பிராணவாயுவை (Oxygen ) தோல்களின் மூலம் உறிஞ்சி உள்ளிழுத்துக் கொள்கின்றன.

சூழலை சமநிலைப்படுத்தும் தவளைகள்.

நாம் வாழும் சூழலின் சமநிலையைப் பேனுவதில் தவளைகள் பெரும் பங்காற்றி வருகின்றன.  தவளைகள், தேரைகள் இல்லையென்றால் சுற்றுச்சூழல் சமநிலை கடுமையாகப் பாதிக்கப்படும். தவளைகளன் பிரதான உணவு சிறு பூச்சிகளும் நுளம்புகளுமாகும். வாட்பேத்தைகள் நீரில் இருக்கும்போதே அங்குள்ள நுளம்புகளின் முட்டைகளையும் நுளம்புக் குடம்பிப் புழுக்களையும் உண்டுவிடும், நுளம்புகளையும், நுளம்பால் ஏற்படும் நோய்களையும் தவளைகள் கட்டுப்படுத்துகின்றன. தவளைகள் அழிந்தால் நுளம்புகளின் எண்ணிக்கை அதிகரித்து கட்டுக்கடங்காமல் சென்று விடும். பார்த்தீர்களா அல்லாஹ் எவ்வாறு ஒவ்வொன்றையும் சமநிலைப்படுத்தியிருக்கின்றான்.சில தவளை வகைகள் பூகம்பம் வருவதை முன்கூட்டியே அறியும் ஆற்றல் பெற்றவை. மனிதர்களிடையே நோயைப் பரப்பும், பயிர்களை நாசம் செய்யும். பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் தவளை, தேரைகள் முக்கிய இரை கொல்லிகளாக உள்ளன. ஒரு தேரை மூன்று மாதங்களில் சுமார் 10,000 பூச்சிகளைச் சாப்பிடும். இவ்வாறு சூழல் சமநிலை பேனுவதில் தவளைகளும் தேரைகளும் பெரும் பங்காற்றுகின்றன.

அழிவுக்குள்ளாகும் தவளைகள்.

இன்றைக்கு பத்து, பதின் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தினசரி மழை வருவதற்கு முன் அதைப் பாட்டுப் பாடி வரவேற்ற, மழையின் வருகையை முன்கூட்டியே அறிவித்துக்கொண்டிருந்த தவளைகளின் பாடல் சப்தங்களை இன்று எம்மால் எங்கேயாவது கேட்க முடிகிறதா? பெரும்பாலான உயிரினங்களைப் போல மனிதர்களுக்குப் பல்வேறு வகைகளில் உதவி வரும், உலகில் மூன்றில் ஒரு பங்கு தவளை இனங்கள் அழியும் தறுவாயில் உள்ளதாகக் விலங்கியல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். கடந்த 30 ஆண்டுகளில் சுமார் 200 வகையான தவளை, தேரை வகைகள் முற்றிலும் அற்றுப் போய்விட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தற்போது மூன்றில் ஒரு பங்கு தவளை, தேரை வகைகள் அழிந்து போகக்கூடிய ஆபத்தான நிலையில் உள்ளனஎன்று எச்சரிக்கிறார் இந்திய ஆய்வாளர் வெங்கடேஷ். நகர்ப்புறங்களில் சிறிய வகை பிளாஸ்டிக் பைகளில் வந்த ஷாம்புக்கள், வாசனை சோப்புகள், குளியலறை, கழிவறை கழுவ பயன்படும் ஆசிட், பெனாயில், ரசாயனங்கள், பாத்திரம் கழுவ பயன்படும் ரசாயன திரவங்களால் தவளை இனம் நகர்ப்புறங்களில் அழிந்து விட்டது.தவளைகள் உயிர்வாழ நீர்நிலைகளையே பெரிதும் நம்பியிருக்கின்றன. ஆனால் மனிதர்களாகிய நாமோ வளர்ச்சி என்ற பெயரில் முதலில் சூறையாடுவது அந்த நீர்நிலைகளைத்தான். அவற்றின் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டு மூடப்படுவதால், அவையும் அங்கிருந்து அழிந்துவிடுகின்றன. அத்தோடு அன்றாடம் நீர்நிலைகளில் கலக்கும் தொழிற்சாலைக் கழிவுகளாலும் இவ் அழிவு ஏற்படுகின்றது. இப்படி ஓடைகள், ஆறுகள், கால்வாய்கள், ஏரிகள், குளங்கள், குட்டைகள் என அனைத்தையும் பாழாக்கிவிட்டோம். நீர்நிலைகளின் இயற்கைச்சூழல் கெட்டு, மிகவும் ஆரோக்கியமற்ற நிலையில் அவை இருப்பதற்கான ஓர் வெளிப்பாடுதான் தவளைகளின் அழிவு. தவளைகளின் அழிவுக்கு முதன்மையான காரணம் மனித செயல்பாடுகள்தான். தவளைகள் உணவுச்சங்கிலியில் மிக முக்கிய இடத்தில் இருப்பதால், அவை ஒரு இடத்திலிருந்து முற்றிலும் அழிந்துபோனால் ஒட்டுமொத்த இயற்கைச் சூழலமைப்பும் பாதிப்புக்குள்ளாகும். அது மனிதர்களையும் பாதிக்கும். எனவேதான் அழிவுற்றுவரும் தவளைகளைப் பாதுகாக்க ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி சர்வதேச தவளைகள் தினம் கொண்டாடப்படுகின்றது.

தவளைகளின் பயன்கள்.

உணவுச்சங்கிலியில் தவளைகளையும், அவற்றின் வாட்பேத்தைகளையும் உண்ணும் எண்ணற்ற உயிரினங்கள் இருக்கின்றன. நீரில் வாழும் பேத்தைகளை மீன்குஞ்சுகளும், மீன்களும் உணவாக உட்கொள்கின்றன. கொக்கு, நாரை, வாத்து, மீன்கொத்தி போன்ற நீர்ப்பறவைகளுக்கும், கழுகு, பருந்து, ஆந்தை போன்ற வேட்டையாடி உண்ணும் ஊனுண்ணிப் பறவைகளுக்கும், பாம்பு, எலி, வவ்வால் போன்ற ஊர்வன மற்றும் பாலூட்டி விலங்குகளுக்கும் தவளைகள் உணவாகின்றன. இப்படி பூச்சியினங்களின் எண்ணிக்கையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுடன், பல உயிரினங்களுக்கு உணவாகவும் இருக்கின்றன இத் தவளைகள்.பல்வேறு நோய்க்கிறுமிகளை அழித்தொழிக்க தவளைகளிலிருந்து எடுக்கப்படுகின்ற வேதிப்பொருட்கள் பெரும் பயனளிக்கின்றன. உலகம் முழுவதையும் அச்சுறுத்தும் எய்ட்ஸ், புற்றுநோய், சிகா வைரஸ், காலரா, மலேரியா போன்ற உயிர்க்கொல்லி நோய்களுக்கான மருந்து தவளைகளில் இருக்கலாம் என ஆய்வுகள் நடைபெற்றுவருகின்றன. இப்படிப்பட்ட பல மருத்துவக் குணங்கள் இருக்கும் தவளைகள் அழிந்தால் அது வெறும் தவளைகளின் அழிவு மட்டுமல்ல. தவளைகளின் அழிவு நமது அழிவின் ஆரம்பம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இங்கிலாந்தில் மில்டன் கெய்னஸ் பல்கலைக்கழக உயிரியல் விஞ்ஞானி ராஜெல் கிரான்ட் தவளைகள் நடவடிக்கை பற்றி ஆராய்ச்சி செய்து வருகின்றார்.இவர் பூகம்பம் ஏற்பட போவது தவளைக்கு முன் கூட்டியே தெரிந்து விடுவதாக கண்டுபிடித்துள்ளார். தவளைகளின் தோலில் சேமித்து வைக்கப்படும் சில வேதிப்பொருட்கள் மூலம் எய்ட்ஸைக் குணப்படுத்தும் மருந்துகள் தொடர்பாக ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றனர்.
தவளைகள் இந்த அளவு முக்கியமானவை என்பதால்தான் நபி (ஸல்) அவர்கள்  தவளைகளைக் கொல்வதைத் தடை செய்தார்கள். (நூல் தாரமீ – 1914)

அஷ்.எம்.என்.ஆலிப் அலி (இஸ்லாஹி) B.A
Dip. In psychological Counseling
Al-Quran & Science Researcher

உங்கள் கருத்து:

1 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...