"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

09 November 2014

மழை பற்றி அல்குர்ஆனும் விஞ்ஞானமும்

உயிரின வாழ்க்கைக்கு நீர் இன்றியமையாத வொன்று என்பதால்தான் அல்லாஹ் பூமியில் பெரும்பகுதியை (71%) நீரால் அமைத்திருக்கின்றான். படைப்புகள் யாவும் நீரின்பால் தேவையுடையனவாக இருக்கின்ற காரணம் அவை நீரிலிருந்து படைக்கப்பட்டதாலே! அல்லஹ் கூறுகின்றான்: நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் நிராகரிப்பாளர்கள் பார்க்கவில்லையா?” (21:30,24:45)

அந்த நீரை பூமியின் தரைப் பகுதிகளில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் சுழற்சி முறையில் பெற்றுக்கொள்ள வேண்டுமென்பதற்காகவும் இன்னும் பல பயன்களுக்காகவும் மழையை ஏற்படுத்தித்தந்துள்ளான்.

நீர்ச் சுழற்சி – Water Cycle

சூரிய வெப்பத்தாலும் காற்று வேகத்தாலும் ஆறு, குளம், கடல் மற்றும் இதர பொருட்களிலிருந்து நீர் ஆவியாகி மேலே செல்கின்றது. பின்னர் அந்த நீர் ஆவிகள் மேகங்களாக ஒன்று திரண்டு பின்னர் அவை குளிர்ச்சியடைந்து மழையாக பெய்கின்றன. தரையில் மழையாகப் பொழிந்த அந்த மழை நீர் பூமிக்குள் ஊடுருவிச் சென்று நீர் ஊற்றுக்களாக ஓடி, அறுவிகாளகப் பாய்ந்து ஆறுகளுடன் கலந்து இறுதியில் கடலை வந்தடைகின்றன. மீண்டும் இது முடிவுறாது தொட்ந்து நடைபெறுகின்றது. இதனையே நான் நீர்ச் சுழற்சி Water Cycle என்கிறோம்.‘The Bible, The Qur’an and Science’ என்ற உலகப் புகழ்பெற்ற ஆய்வு நூலை எழுதிய பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த Dr. மொரிஸ் புகைல் நீர் பார்க்கவில்லையா? அல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கி, அதனை பூமியின் ஊற்றுகளில் ஓடச் செய்கிறான்…” (39:21) என்ற அல்குர்ஆனிய வசனத்தை மேற்கோள்காட்டி  சமீப ஆய்வுகள் கூறிய இந்த நீர்ச் சுழற்சி முறைகள் பற்றி 1400 வருடங்களுக்கு முன்பு அல்குர்ஆன் கூறியிருப்பது அது இறைவேதம் என்பதை நீரூபிக்கின்றது என்று தனது நூலில் பதிவுசெய்கின்றார். அந்த வசனத்தின் இறுதியில் நிச்சயமாக இதில் அறிவுடையோருக்குப் படிப்பினை இருக்கிறதுஎன்று குறிப்பிட்டிருப்பது முக்கியமானவொன்று.

மழை பொழிவதில் மேகங்களின் பங்கு

புமியில் இருந்து நீர் ஆவியாகி காற்றழுத்தத்தினால் மேலே செல்லும்போது காற்றினுள் இருக்கும் நீராவி குளிர்ச்சியடைகிறது. அதன் பின்பு வளிமண்டலத்திலுள்ள தூசு துணிக்கைகள், உப்பு ஆகியவற்றின் மீது அது படிந்து திரண்டு, பரவி திரவமாகவும், ஆவியாகவும் மிதக்கின்றது. இவ்வாறே நிறைய நீர்த்துளிகள் சேர்ந்து மேகம் உருவாகின்றது. இவை ஆங்காங்கு சிதறுண்டு துண்டு துண்டு மேகங்களாகக் காட்சியளிக்கும்.

அல்லாஹ்தான், காற்றுகளை அனுப்பி, (அவற்றால்) மேகத்தை ஓட்டி, பிறகு அதைத் தான் நாடியபடி, வானத்தில் பரத்தி, பல துண்டங்களாகவும் ஆக்கி விடுகிறான்” 30:48

அதன் பின் இத்துண்டு துண்டாக இருக்கும் மேகங்களெல்லாம் காற்றினால் உந்தப்பட்டு, இழுக்கப்பட்டு ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கடுக்காக ஒன்று திரள்கின்றன.“(நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் மேகங்களை மெதுவாக இழுத்து, பின்னர் அவற்றை ஒன்றாக இணையச்செய்து, அதன் பின் அதை (ஒன்றின் மீது ஒன்று சேர்த்து) அடுக்கடுக்காக அமைப்பதையும் நீர் பார்க்கவில்லையா?” (24:43)

இப்போது அடுக்கடுக்காக அமைக்கப்பட்டிருக்கும் இம்மேகங்கள் எமது பார்வைக்கு சிலபோது சாதாரணமாகத் தென்பட்டாலும் அவை மிகப் பிரம்மாண்டமானவையாக உயர்ந்த மலைகள் போன்று காட்சியளிக்கும். வானியல் வல்லுணர்களின் தகவல்படி இந்நிலையில் உள்ள மேகங்கள் சுமார் 25,000 அடி முதல் 30,000 அடிவரை உயர்ந்த மலைகளைப் போன்று வளரக்கூடியது என்கின்றனர்.

இன்னும் அவன் வானத்தில் மலைக(ளைப் போன்ற மேக கூட்டங்க)ளிலிருந்து பனிக்கட்டியையும் இறக்கி வைக்கின்றான்” (24:43)

சிறிய மேகக்கூட்டங்கள் ஒன்றோடொன்று இணைந்து உருவாகும் மலை மேகங்களுக்குள் மேல் நோக்கிய காற்று மின்னோட்டம் (updraft) அதிகரிக்கின்றது. இதன்போது மேகத்தின் மையப் பகுதியில் மற்ற ஓரப் பகுதிகளை விட காற்றின் மின்னோட்டம் வலிமையானதாக இருக்கும். இதனால் செங்குத்தாக உயரத் தொடங்கும் மேகம் குளிர்ச்சியடையத் தொடங்கும். இதன்போது வளிமண்டலத்தில் ஏற்படும் குளிர் காற்று எமக்கு மழை வரப்போவதை எதிர்வுகூறும் நட்செய்தியாக இருக்கிறது.

அவன் தான், தன்னுடைய அருள் (மாரிக்)கு முன், நற்செய்தியாக (குளிர்ந்த) காற்றுகளை அனுப்பிவைக்கிறான் அவை கனத்த மேகங்களைச் சுமக்கும்போது…” (7:57)

இந்தக்குளிர்ச்சி நிலையால் இம்மேகங்களில் நீர்த் துளிகளும் மற்றும் பணிக்கட்டிகளும் உருவாகி இன்னும் இன்னும் அதிகரிக்கத் தொடங்குகின்றன. இந்நிழையில் எங்கு மழை பொழிய வேண்டுமென்று அல்லாஹ் நாடுகின்றானோ அப்பகுதியை நோக்கி அம்மழை மேகங்களை இழுத்துச் செல்லப்பட்டு எப்போது இந்த நீர்த் துளிகளும் பணிக்கட்டிகளும் மேகத்தில் அதிகரித்து அதன் உச்சநிலையைத் தொடுகின்றனவோ  அப்போது  காற்றின் மின்னோட்டத்தின் உதவியால் மழை பொழிகின்றது.

அவை கனத்த மேகங்களைச் சுமக்கும்போது நாம் அவற்றை இறந்து கிடக்கும் (வரண்ட) பூமியின் பக்கம் ஓட்டிச் சென்று, அதிலிருந்து மழையைப் பொழியச் செய்கின்றோம்” (7:57)

அருளாகப் பொழியும் மழை

மழை அது அளவோடு பொழிந்தால் அருள். அதனால்தான் மழை பொழியும்போது அல்லாஹும்ம ஸய்யிபன் நாபிஃஅன் யா அல்லாஹ் பயனுள்ளதாக மழையைப் பொழிவிப்பாயாகஎன்று பிரார்த்திக்குமாறு நபிகளார் கூறினார்கள். வரண்டு கிடக்கும் புமியை அல்லாஹ் மழையைக் கொண்டு உயிர்ப்பிக்கின்றான். “(நபியே!) காய்ந்து விட்டதாக பூமியை நிச்சயமாக நீர் காண்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும். அதன் மீது நாம் நீரை இறக்கிவைத்தால்அது செழிப்படைந்து வளர்கின்றது.” (41:39)

நீண்டநாள் மழை பொழியாதிருந்தால் தூசு துணிக்கைகளும் நுண் கிரிமிகளும் வளிமண்டலத்தில் வட்டமடிக்க ஆரம்பிக்கின்றன. மழை பொழியும்போது வளிமண்டளத்தில் மிதக்கும் இவை மழை நீர்களால் கலக்கப்பட்டு நிலத்திச் சேர்க்கப்படுகின்றன. பின்னர் நிலத்திலிருந்தும் அவை அடித்துச் செல்லப்படுகின்றன. புது மழையில் நனைந்தால் நோய் ஏற்படும் என்பது வளிமண்டலத்தில் உள்ள ஊற்றைகள் மழையுடன் கழந்து எமது தலையிலும் உடலிலும் பட்டால் அதனால் நோய் ஏற்படுவதால்தான்.மழையினால் ஏற்படும் இதர பயன்பாடுகள் பற்றி பின்வரும் அல்குர்ஆனிய வசனங்கள் விரிவாக விளக்குவதைப் பாருங்கள். அவனே வானத்திலிருந்து மழையை இறக்கினான். அதைக் கொண்டு எல்லா வகையான புற்பூண்டுகளையும் நாம் வெளிப்படுத்துகின்றோம். அதிலிருந்து நாம் வித்துக்களை அடர்த்தியான கதிர்களாக வெளிப்படுத்துகின்றோம். பேரிச்சை மரத்தின் பாளையிலிருந்து வளைந்து தொங்கும் பழக்குலைகளும் இருக்கின்றன. திராட்சைத் தோட்டங்களையும் (பார்வைக்கு) ஒன்று போலவும் (சுவைக்கு) வெவ்வேறாகவும் உள்ள மாதுளை, ஜைத்தூன் ஆகியவற்றையும் (நாம் வெளிப்படுத்தியிருக்கின்றோம்) அவை (பூத்துக்) காய்ப்பதையும் பின்னர் கனிந்து பழமாவதையும் நீங்கள் உற்று நோக்குவீர்களாக - ஈமான் கொள்ளும் மக்களுக்கு நிச்சயமாக இவற்றில் அத்தாட்சிகள் அமைந்துள்ளன” (6:99) (6:141) (13:04) (16:10) (27:60) (32:27) (39:21)

சோதனையாகும் மழை

அளவோடு பொழிந்தால் அருள் என்பதுபோன்றே அத்துமீறிப் பெய்ந்தால் அது சோதனையாக மாறிவிடும். நூஹ் நபியின் சமூகம் கொடூரமாக மழை பொழிந்து ஏற்பட்ட வெள்ளத்தின் மூலம்தான் அழிக்கப்பட்டார்கள். மழைவரும்போது நபியவர்களின் நிலை பற்றி ஆயிஷா (ரலி) கூறுவதை அவதானியுங்கள். மேகத்தையோ அல்லது (சூறாவளிக்) காற்றையோ கண்டால், நபி(ஸல்) அவர்களின் முகத்தில் (ஒருவிதமான கலக்கத்தின்) ரேகை தென்படும். (ஒருநாள்) நான், 'இறைத்தூதர் அவர்களே! மக்கள் மேகத்தைக் காணும்போது அது மழை மேகமாக இருக்கலாம் என்றெண்ணி மகிழ்ச்சியடைகின்றனர். ஆனால், தாங்கள் மேகத்தைக் காணும்போது ஒருவிதமான கலக்கம் தங்கள் முகத்தில் தென்படக் காண்கிறேனே (ஏன்)?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஆயிஷா! அதில் (அல்லாஹ்வின்) வேதனை இருக்கலாம் என்பதால் என்னால் கலக்கமடையாமல் இருக்க இயலவில்லை. ('ஆத்' எனும்) ஒரு சமூகத்தார் (சூறாவளிக்) காற்றினால் வேதனை செய்யப்பட்டனர். (அந்தச்) சமூகத்தார் (மேகமாக வந்த) அந்த வேதனையைப் பார்த்துவிட்டு, 'இது நமக்கு மழையைப் பொழிவிக்கும் மேகம்' என்றே கூறினர்' என பதிலளித்தார்கள்.” (புஹாரி)

 இதனால்தான் அதிகமாக மழை பெய்யும்போது எமக்குப் போதும் ஏனைய பகுதிகளுக்கு அதனைப் பொழியச்செய்வாயாகஎன்று கூறுமாறுதான் நபிகளார் அல்லாஹும்ம ஹவாலைய்னா, வல அலைனாஎன்ற துஆவைக் கற்றுத்தந்தார்கள்.

இன்று எமது நாட்டிலும் பல பகுதிகளில் அடர்ந்த மழை பெய்து வெள்ளப் பெருக்காலும், மின்னல் தாக்கியும், மண் சரிவு ஏற்பட்டும் பலர் மரணித்துள்ளனர். பல நகரங்களும் கிராமங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. சொத்துகள் அழிந்துள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட பாதிக்கப்படாத இரு தரப்பு மக்களும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடிக்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள், நிவாரணப் பொருட்களை பிற பகுதிவாழ் மக்கள் செய்துகொடுக்க வேண்டும்.

மழையில்லாமையும் ஒரு சோதனை

அளவுக்கு மீறி மழை பொழிந்தால் எப்படி சோதனையோ அதேபோன்று மழை பொழியாமலே இருந்தாலும் சோதனைதான். நாட்டின் இன்னொரு பகுதி மக்கள் மழை நீரின்றி பெரும் அல்லல்பட்டுக்கொண்டிருக்கின்றனர். அன்றாடத் தேவைகள் போக, குடிப்பதற்குக் கூட நீர் வசதியின்றி தவிக்கின்றனர். விவசாயத்திற்கு முழு முதல் மூலதனமான மழை நீர் இன்றி இன்னொருவகையில் மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் என்ன செய்வது? இஸ்லாம் வழிகாட்டுகின்றது. ஒரு திடலில் மக்கள் அனைவரும் ஒன்று கூடி, கிப்லாவை முன்னோக்கி, தம் மோலாடையை புறம் மாற்றிப் போட்டு, இரண்டு ரக்ஆத்துகள் தொழுது, மழைவேண்டிப் பிறார்த்திக்கவேண்டும். (புஹாரி-1012, 565)ஒரு சமூகத்தில் பாவம் செய்வது அதிகரித்தால் அல்லாஹ் மழை பொழிவிப்பதை நிறுத்தி அவர்களை சோதிப்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். என்றாலும் கருனையுள்ள ரஹ்மான் அங்கு வாழும் கால்நடைகளுக்காக மழையைப் பொழியவைக்கின்றான்.

மீள் உயிர்ப்பித்தலில் மழை

மஹ்ஷரிலும் ஒரு மழை பெய்யும். அது எம்மை மீள் உயிர்ப்பிப்பதற்காகப் பெய்யும் மழை. இவ்வுலகில் நாம் மரணித்து மக்கி மண்ணோடு மண்ணாகிப் போனாலும் எமது உடலில் உள்ள அஜ்புஸ்ஸனப்’ ‘குத எலும்பு’ (Coccyx) எனும் முதுகந்தண்டின் நுணிப்பகுதி அழிவதில்லை. அவை மஹ்ஷரில் புமியின் அடிப்பாகத்திலிருந்து வெளியில் கொண்டு வரப்படும். பின்னர் அல்லாஹ் ஒரு மழையைப் பெய்யவைப்பான். அம்மழைத்துளிகள் அந்த குத எழும்பில் பட்டதும் நாம் உயிர் பெற்று எழுந்துவிடுவோம். நபியவர்கள் கூறும் செய்தியைப் பாருங்கள்.ஆதமின் மகனின் (உடலிலுள்ள) அனைத்துப் பகுதிகளையும் மண் தின்றுவிடும். மனிதனின் (முதுகுத்தண்டின் வேர்ப்பகுதியிலிருக்கும்) குத எலும்பின் நுணியைத்தவிர. அதனைக்கொண்டே அவன் (தன் தாயின் கருவறையில் முதன்முதலாகப்) படைக்கப்பட்டான். அதிலிருந்தே அவன் (மீண்டும் மறுமை மறுமை நாளில்) படைக்கப்படுவான்என்று கூறினார்கள். (முஸ்லிம்)

மஹ்ஷர் மைதானம் உருவாக்கப்பட்ட பின்பு… “பின்பு அல்லாஹ் வானத்திலிருந்து ஒரு நீரைப் பொழியவைப்பான். உடனே இ(றந்துபோன)வர்கள் பச்சைப் புற்பூண்டுகள் முளைப்பதைப் போன்று எழுவார்கள். மனிதனின் எல்லா உறுப்புகளும் (மண்ணுக்குள்) மக்கிப் போய்விடும். ஒரே ஒரு எலும்பைத்தவிர! அது குத எலும்பின் (அணுவளவு) நுணியாகும். அதைவைத்தே படைப்பினங்கள் (மீண்டும் மறுமையில்) படைக்க்படும்.என்றார்கள் (முஸ்லிம்)

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

1 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...