கிரிக்கட் போட்டிகளில் மிக நுணுக்கமான கட்டங்களைப் படமெடுப்பதற்காகப் பயன்படுத்தப்படுவது Ultra Slow motion கேமெராக்கள் தான். இந்த வகை கமெராக்கள் ஒரு வினாடிக்கு 1000 ஷொட் வரை எடுக்க கூடியவை. இதுவரை வினாடிக்கு 1 மில்லியன் ஷொட்களை எடுக்கக்கூடிய கமெராக்கள் தான் அதிகளவில் பயன்படுத்தப்பட்டுவந்தன. இந்த கமெரா மூலம் ஒரு துப்பாக்கியில் இருந்து வெளிவரும் குண்டு ஒரு பொருளைத் துளைத்துக்கொண்டு செல்வதை கூட மிகத் துல்லியமாக, எளிதாக படம் பிடிக்க முடியும். ஆனால் இதையெல்லாம் மீறி மிக மிக மிகத் துல்லியமான முறையில் வினாடிக்கு 1 ட்ரில்லியன் ப்ரேம்களைப் படம்பிடிக்கக்கூடிய புதிய கமெராவை இந்திய MIT நிறுவனத்தின் ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்துள்ளனர்.
இந்த புதிய கமெராவினால் ஒரு லீட்டர் போட்டிலினூடாக ஒளி(light) செல்லும் வேகத்தைக் கூட எளிதாகப் படம் பிடிக்க முடியும். அதாவது செக்கனுக்கு 300,000 கி.மீ. வேகத்தில் செல்லும் ஒளியையும் slow motion ஆக காட்ட முடியும். இந்த கமெராவை MIT விஞ்ஞானி ரமேஷ் ரஷ்கர் கண்டுபிடித்துள்ளார்.
1 comments:
amazing....ippadiyana vinjanigal nam naatilum valara uokkamalikkapadavendum
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...