"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

06 February 2012

திருட்டு CD, மென்பொருள் பாவனையைத் தவிர்த்தால் நாடு வளர்ச்சியடையும்; புதிய ஆய்வு

ஆரம்ப காலங்களில் மனிதனது படைப்பாக்கங்களும் வரலாற்று நிகழ்வுகளும் இன்னும் பல்வேறு அம்சங்களும் பரம்பரை பரம்பரையாக மனனமிடப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்துள்ளன. அதன்பின்னர் ஓலைகளிலும் கற்களிலும் தோல்களிலும் எளிய முறையில் எழுதிப் பாதுகாக்கப்பட்டு வந்தன. கி.பி. 800ஆம் ஆண்டில் சீனாவில் காகித உற்பத்தி அறிமுகமாகி அது பல நாடுகளுக்கும் கொண்டுசெல்லப்பட்டபோது எழுதிப் பாதுகாக்கும் வழிமுறை மிகவும் வளர்ச்சி கண்டது.

இன்றைய இந்த டிஜிடல் யுகத்தில் மனிதனது படைப்பாக்கங்கள் யாவும் இலத்திரணியல் வடிவில் பதிவுசெய்து பாதுகாக்கப்பட்டு வருகின்றன. பாரிய இடப்பரப்பை வேண்டிநிற்கும் தகவல் திரட்டுகளையும் மிகச் சிறியதொரு இடத்தில் சேமித்து வைக்கும் சாத்தியப்பாட்டை இந்த இலத்திரணியல் சாதனங்கள் உருவாக்கியுள்ளன. இது ஒரு அனுகூலமாக இருக்கும் அதே சமயம் இன்னொருபுறம் இதனால் பல அச்சுருத்தல்களும் ஏற்படுகின்றன. காலா காலமாக பெரிய அளவில் பாதுகாக்ககப்படும் புலமைச் சொத்துக்கள் குறுகிய காலத்தில் அழிந்துபோவதற்கான வாய்ப்புகளும் அதிகமாகவே உள்ளது.

ஒரு தனி மனிதனினதோ, நிறுவனமொன்றினதோ அல்லது ஒரு நாட்டினதோ இலத்திரணியல் வடிவில் பாதுகாக்கப்படும் புலமைச் சொத்துக்கள் இன்னொருவரால் திருடப்படவும் சூறையாடப்படவும் இலகுவாக அமைந்துள்ளமை இதன் மற்றுமொரு பிரதிகூலமாகும்.

பல நாட்கள், பல மனிதர்கள், பல இலட்சங்கள் முதலீடு செய்து தயாரரிக்கப்படும் இசை அல்பம்கள், பாடல்கள், திரைப்படங்கள் மற்றும் கணினி மென்பொருட்கள் போன்ற புலமைச் சொத்துக்கள் வெளிவந்த மாத்திரத்திலேயே அவை பலராலும் இலகுவான முறையில் பிரதிபண்ணப்பட்டு மிக மிகக் குறைந்த விலைகளில் அங்காடி விற்பனை நிலையங்களிலும் பாதையோரங்களிலும் தாராளமாக விற்கப்படுவதனைக் காணலாம். எமது நாட்டில்கூட எந்தவொரு நகரத்திற்குச் சென்று வந்தாலும் இடத்திற்கு இடம் இதுபோன்ற நிறையக் கடைகள் இருப்பதனை நிச்சயம் அவதானிக்க முடியும். அதுமட்டுமன்றி இன்னும் சிலர் பேரூந்துகளிலும் விற்பனை செய்வதற்காக CD, DVD இருவட்டுக்களை எடுத்துவந்து விளம்பரம் செய்து விற்பதனையும் காணலாம். அந்நதளவு ஒருசாராரது புலமைச் சொத்துக்கள் அவர்களது அனுமதியின்றி மிகக் குறைந்த விலைகளில் தாராளாமாக விற்கப்படுகின்றன. பயன்படுத்தப்படுகின்றன.

CD, 3½ Floppy Disc, DVD, Flash Drive என்பவற்றின் வருகையோடு புலமைச் சொத்துக்களின் சேமிப்பு முறையும் இத்தகைய இலத்திரணியல் சாதனங்களை நோக்கி நகர்த்தப்பட்டன. இதுவும் புலமைச்சொத்துக்கள் தாராளமாகப்  பிரதிபண்ணப்பட்டு பயன்படுத்தப்படுவதற்கு இலகுவாயமைந்தது.

உரிமையாளர்களது அனுமதியின்றி திருட்டுத்தனமாக செய்யப்படும் இச்செயற்பாடுகள் Piracy என அழைக்கப்படுகின்றன. இப் Piracy செயற்பாட்டினால் அதன் தயாரிப்பாளர்கள் பலகோடி நட்டங்களைச் சுமக்கவேண்டி ஏற்படுகின்றது.

இன்று சர்வதேச அளவில் இப் Piracy செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. எந்த நாடும் விதிவிலக்கல்ல என்ற அடிப்படையில் அனைத்து நாடுகளிலும் இதுபோன்ற திருட்டுத்தனமான, சட்டவிரோதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஆகக் கூடுதலான அளவில் புலமைச் சொத்துக்களைத் திருடும் நாடாக சீனா இனங்காணப்பட்டுள்ளது.

சீனாவில் திருட்டு CD மற்றும் DVDகள் மிகப் பிரம்மாண்டமான அளவில் விற்பனை செய்யப்பட்டுவருகின்றன. அமெரிக்காவில் பதிப்புரிமை செய்யப்பட்ட திரைப்படங்களும், இசை அல்பம்களும்,  கணினி மென்பொருட்களும் அதிகளவில் சீனாவில் பிரதியாக்கம் செய்யப்பட்டு விற்பனைசெய்யப்பட்டுவருவதாக அமெரிக்க அரசாங்கம் குற்றஞ்சாடிட்டுகின்றது. ஒவ்வொருவருடமும் இத்திருட்டு வியாபாரத்தினால் மாத்திரம் அமெரிக்கா பில்லியன் கணக்கான டொலர்களை இழந்துவருவதாகவும் கணிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உலக வர்த்தக அமைப்பில் சீனாவுக்கு எதிராகத் தாம் முறையிடப் போவதாக அமெரிக்க நீண்ட நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

திருட்டுத்தனமாக ஒருவரின் அல்;லது ஒரு நாட்டின் புலமைச் சொத்துக்களைப் பிரதிபண்ணுவதை நிறுத்தினால் எந்தவொரு நாடும் தொழிற்துறை ரீதியாக வளர்ச்சியடைய அதிகமானளவு வாய்ப்புள்ளதாக ஆய்வொன்று தகவல் வெளியிட்டுள்ளது.Business Software Alliance எனப்படும் ஆய்வு மையத்தால் செய்யப்பட்ட இவ் ஆய்வில் சட்டவிரோதமான மென்பொருள் பாவனையைத் தடைசெய்தால் புதிய தொழிற்துறைகள் இலட்சக்கணக்கில் தோன்ற வாய்ப்புள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இத்தகவலுக்கமைய (www.bsa.org/piracyimpact) சட்டவிரோதமான புலமைச் சொத்துக்கள் திருட்டை அதிலும் அதிகூடியளவில் திருட்டுத்தனமாகப் பிரதியாக்கம் செய்யப்படுகின்ற மென்பொருள் திருட்டை தற்போதிருப்பதைவிட 10 சதவீதத்தால் குறைத்தால் 2013 ஆம் ஆண்டாகும்போது ஐந்து இலட்சம் புதிய தொழில்நுட்ப வேலைவாய்ப்புக்கள் உருவாகும். இதனை ஒரே முறையில் செய்துவிடாது 2013 ஆம் ஆண்டு வரை சிறிது சிறிதாகக் குறைத்து இறுதியில் 10 சதவீதமாகக் குறைத்தால் மட்டுமே இது சாத்தியமாக அமையும்.

Business Software Alliance ஆய்வு நிறுவனம் சர்வதேச ரீதியில் 42 நாடுகளில் 2009ஆம் ஆண்டு முதல் மேற்கொண்டுவந்த ஆய்வுகளின் முடிவுகளாகவே இத்தகவலை வெளியிட்டுள்ளது.புலமைச் சொத்துக்களைத் திருடி சட்டவிரோதமாக விற்பனைசெய்யும் 93 சதவீதமான திருட்டு விற்பனை நிலையங்கள் பரவிக்காணப்படுவது இந்த 42 நாடுகளிலும்தான். BSA நிறுவனத்துடன் IDC என்ற ஆய்வாராய்ச்சி மையமும் ஆய்வில் ஈடுபட்டது. அதன் தகவல்படி பாவனையிலுள்ள அனைத்து 10 கணினிகளிலும் நான்கு கணினிகள் சட்டவிரோதமான மென்பொருட்களைப் பாவிப்பதாக சுட்டிக்காட்டுகின்றது.

உலகில் உள்ள அனைத்துக் கணினிகளிலும் 42 சதவீதமானவை திருட்டு மென்பொருட்களில்தான் இயங்குகின்றன.இந்த திருட்டு மென்பொருட்களின் பாவனையை அல்லது விற்பனையைக் குறைப்பதற்காக ஒவ்வொரு நாடும் முன்வந்தால் 2013 ஆண்டாகும்போது கிடைக்கும் உள்ளநாட்டு வரி இலாபம் மாத்திரம் 3200 கோடி டொலர் (32 பில்லியன்) களாக இருக்கும். 

இதன்மூலம் சட்ட ரீதியான வியாபாரம் மேற்கொள்ளப்படும்போது அதிலிருந்து கிடைக்கும் இலாபம் மாத்திரம் 14200 கோடி டொலர்களாக (142 பில்லியன்) இருக்கும். இவ்வாய்வு ஆரம்பிக்கப்பட்ட 2009 ஆம் ஆண்டில் மாத்திரம் இத்திருட்டு மென்பொருட்களினது விற்பனையினால் கிடைத்துள்ள வருமானம் 4500 கோடி டொலர்கள் மாத்திரம்தான். ஆனால் இதனால் குறித்த நாடுகள் அடைந்துள்ள நட்டமானது 11000 கோடி டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே ஒரு நாடு தனது நாட்டில் நடைபெரும் சட்டவிரோதமான புலமைச் சொத்துக்களின் விற்பனையைத் தடைசெய்தால் அந்நாடு சிறந்த முறையில் வளர்ச்சியடைய முடியுமென்பதே இவ்வாய்வுகளின் முடிவாக உள்ளது.

தமது பதிப்புகளைப் பாதுகாத்துக்கொள்வதற்காக இதுபோன்ற Piracy செயற்பாடுகளைத் தடுப்பதற்கு வெளியீட்டாளர்களும் நிறுவனங்களும் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். குறித்த புலமைச் சொத்தின் உரிமை நிறுவனம் திடீரென நிறுவனங்களுக்கும் விற்பனை நிலையங்களுக்கும் நுழைந்து அங்கிருக்கும் பொருட்களைப் பரீட்சித்து அவற்றில் தமது பதிப்புரிமைக்குட்பட்ட பொருட்கள் ஏதும் திருட்டுத்தனமாக, சட்டவிரோதமாக பயன்படுத்தப்படுகிறதா, விற்கப்;படுகிறதா என ஆராய்ந்து அவற்றுக்குரிய நடவடிக்கைகளை எடுக்கின்றனர். சிலவோது இலட்சம் ரூபாய்கள் தண்டப்பணம் விதிப்பததோடு அந்நிறுவனத்தையோ விற்பனை நிலையத்தையோ நீதிமன்ற உத்தரவுடன் மூடும் அதிகாரமும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஒவ்வொரு நிறுவனமாகத் தேடித்திரிவது சிறமசாத்தியமான காரியமென்பதால்; தமது வெளியீடுகளைப் பாதுகாத்துக்கொள்ளவென புதிய தொழில்நுட்ப உத்தியொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதுதான் DRM தொழில்நுட்பமாகும்.

DRM என்பதன் விரிவான விளக்கம் Digital Rights Management என்பதாகும். தமது சுயமான தயாரிப்பில் பல செலவீனங்களுடன் தயாரித்த உற்பத்தியை அதன் பதிப்புரிமையாளர்கள் பயனர்களின் பாவனைக்கு விடும்போது சில கட்டுப்பாடுகளை விதிப்பதை சாத்தியமாக்குவதே இந்த DRM இன் வேலை.

DRM என்பது ஒரு பாடலையோ அல்லது மென்பொருளையோ இருவட்டுக்களில் பதிவுசெய்யும்போது அல்லது இணையத்தில் தரவேற்றும்போது அவை எழுந்தமான முறையில் ஒழுகீனமாக அடுக்கப்பட்டு பதிவுசெய்யப்படும். அதிகாரமளிக்கப்பட்ட பயனர்களுக்கு மாத்திரம் அதனை Unlock செய்து ஒழுங்குபடுத்தி பயன்படுத்துவதற்கான Unlock Key உம் வழங்கப்படும். அத்தோடு இன்னும் சில DRM தொழில்நுட்பத்தால் பாதுகாக்கப்பட்ட இசை அல்பம்கள் அல்லது திரைப்படங்கள் அனுமதியளிக்கப்பட்ட கணினியில் அல்லது Music Players இல் மாத்திரம்தான் இயங்கும். எனவே இதன் மூலமும் தமது புலமைச் சொத்துக்கள் திருட்டுத்தனமாக பிரதிசெய்யப்படுவது தடுக்கப்படுகின்றது.

பிரதியாக்கத்தைத் தவிர்க்கும் விதத்தில் வணிக ரீதியாக இந்த DRM தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகின்றது. திரைப்படங்களை உருவாக்கும் நிறுவனங்களே முதலில் DRM தொழில்நுட்பத்தின் மூலம் தமது வெளியீடுகளைப் பாதுகாக்கும் உத்தியை ஆரம்பித்தனர்.அதனைத்  தொடர்ந்து இசை வெளியீட்டாளர்களும் DRM தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினர். காலப்போக்கில் அது பரவலாகப் பயன்பாட்டுக்கு வந்தது.

இது இப்படியிருக்க DRM பாதுகாப்பரணைக்கூட சில துருவிகள் (Hackers) உடைத்து பிரதிபண்ணும் வேலையைச் செய்கின்றனர். துருவிகள் DRM அரணை உடைப்பதும் அதற்கு Patch மென்பொருட்களை மென்பொருள் கம்பனிகள் உருவாக்குவதும் மீண்டும் DRM அரண்களை துருவிகள் உடைப்பதுமாக இக்கதை தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றது. DRM பிரதியாகத்தைத் தடுக்கக் கையாளப்பட்ட Content Scrambling System இனை Lech Johanses எனும் 15 வயதுடைய சிறுவன்தான் முதலில் தகர்த்தெறிந்துள்ளான் என்பதும் ஆச்சரியமானதே!.

மெய்யான ஆவனங்களைப் பல பிரதிகள் எடுத்து விற்பனை செய்பவர்கள் போலிப் பிரதிகளையும் உண்மையானதுபோன்று (Original) விளம்பரம் செய்து விற்பதால் நுகர்வோர் அதனை உண்மையானது என நம்பி வாங்கிச் செல்கின்றனர். சிலபோது நுகர்வோரும் எதுவாக இருந்தால் நமக்கு என்ன? நமது தேவை நிறைவேறினால் சரிதானே என்ற நோக்கிலும் வாங்கிச் செல்கின்றனர். அங்காடிகளில் காணப்படுகின்ற சில திரைப்பட இருவட்டுக்கள் திரைப்படங்கள் திரையரங்குகளில் திரையிடப்பட்டதும் அதனைத் திருட்டுத்தனமாக ஒளிப்பதிவு (வீடீயோ) செய்து அப்படியே அதனை இருவட்டுக்களில் பதிவு செய்து விற்பனை செய்கின்றனர். நுகர்வோரும் இவ் இருவட்டுக்களின் மேலுரைகளின் (CD Cover Design) கவர்ச்சியைப் பார்த்து ஒரிஜினல் CD தான் என நினைத்து விலைக்கு வாங்கிவிடுகின்றனர். இதனை Theater Copy ஊழில என அழைப்பர்.

வெளியீட்டாளர்கள் தமது இலத்திரணியல் வெளியீடுகளைப் பாதுகாத்துக்கொள்வதற்கு இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுத்தாலும் இன்றைய நவீன கலை இலக்கியங்கள் (இசை, திரைப்படம், பாடல்கள் போன்றன) டிஜிடல் வடிவில் அதிகளவு வெளியிடப்படுவதால் அவற்றைப் பரவலாகப் பாவிப்பதில் தடைகள் விதிப்பது பொருத்தமற்றதென சிலர் வாதிடுகின்றனர்.

இதுபோன்ற சட்டவிரோத விற்பனை நிலையங்களைத் தடைசெய்வதென்பது சட்டத்தினால் மாத்திரம் முடியுமானதொரு காரியமல்ல என BSA நிறுவனம் அறிவித்துள்ளது. பொதுமக்களும் இதுகுறித்து சிந்தித்து அறிவுபெருவதுடன் தாம் மெய்யான பொருளை விலைகொடுத்து வாங்குவதானது வெளியீட்டாலர்களது வளர்ச்சிக்கும் சொந்த நாட்டின் அபிவிருத்திக்கும் வழியமைப்பதாயிருக்குமென அந்நிருவனம் குறிப்பிட்டுள்ளது.

குறிப்பு : ஜனவரி – 2012 எங்கள்தேசம் பத்திரிகையில் பிரசுரமான எனது கட்டுரை.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...