The Island அருமையானதொரு விஞ்ஞனத் திரைப்படம். படம் ஆரம்பிக்கும்போதே அழகான கடல் வழியாக அழகானதொரு தீவொன்றை நோக்கி வீடியோ நகர்கின்றது. திடீரென பல்வேறு கட்டம் கட்டமான காட்சிகளின் பின்னர் படத்தின் கதாநாயகன் உறக்கத்திலிருந்து பதட்டத்துடன் விழிக்கின்றான். அதிலிருந்து படம் ஆரம்பிக்கின்றது.
திரைப்படத்தின் சுருக்கத்தை கூறுகின்றேன்:
ஒரு பாலைவனத்தின் நடுவில் நிலத்தின் கீழ் பாரியதொரு விஞ்ஞான ஆய்வுகூடம். நூற்றுக் கணக்கான மனிதர்கள் ஒரே வித யுனிபோம் வழங்கப்பட்டு இன்னும் சிலரால் கவனிக்கப்பட்டு பராமறிக்கப்பட்டு வருகிறார்கள். உயர்ந்த தொழிநுட்பத்தில் அவ் ஆய்வுகூடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அங்கு பராமறிப்புக்குட்பட்டு வரும் யாருக்கும் நாம் எங்கு இருக்கின்றோம் நாம் இங்கு என்ன செய்கின்றோம் என்றெல்லாம் ஒன்றும் தெரியாது. இதுபற்றி ஒருசிலர் யோசித்து கேள்விகளைக் கேட்டுக்கொண்டாலும் ”வேண்டாத வேளை” என்றுவிட்டு மீண்டும் தமது வேளையைப் பார்ப்பார்கள்.
ஆனால் ஒவ்வொரு நாளும் ஒரு பெண் தொலைக்காட்சியில் தோன்றி “இன்றைய சீட்டிழுப்பில் இன்னார் தீவிற்குச் செல்லயிருக்கின்றார்” என்ற செய்தியைக் கூறுவார். அங்குள்ள மனிதர்கள் எல்லோரும் அந்தத் தீவிற்குச் செல்வதைத்தான் எதிர்பார்த்திருக்கின்றார்கள்.தீவிற்குச் செல்லத் தெரிவுசெய்யப்பட்ட மனிதனின் முகத்தைப் பார்க்கவேண்டும் அப்படியொரு சந்தோசம். தெரிவுசெய்யப்பட்ட மனிதர் மிக்க மிகிழ்வுடன் அங்கிருந்த தான் பழகிய மற்ற நண்பர்களிடமிருந்து விடைபெற்றுச் செல்வார். உண்மையில் அவர் தீவிற்குச் செல்கிறாரா? அல்லது வேறு எங்கும் அனுப்பிவைக்கப்படுகிறாரா? என்பதுதான் பயங்கரமான விடயம்.
இதன் உண்மைத் தன்மையை கதானாயகன் Tom Lincoln கண்டுபிடிக்கிறார்.“தீவிற்கு அனுப்புவதென்பதெல்லாம் பச்சப் பொய். இந்த ஆய்வுகூடத்திற்கு வெளியில் வாழும் செல்வந்தர்கள், அரசியல் வாதிகள், பிரமுகர்கள் யாராவது ஒருவருக்கு ஏதும் நோய்கள் ஏற்பட்டால் அவரைப்போன்றே க்ளோனிங் முறையில் ஒருவரை இவ் ஆய்வுகூடத்தில் உருவாக்கி காலம் வரும்போது சீட்டிழுப்பு மூலம் அக் க்ளோனிங் மனிதனைத் தீவுக்கு அனுப்புவதாகக்கூறி அவனது உடல் உறுப்புகளை வெளியில் வாழும் ஒரிஜினல் மனிதனுக்கு விற்று க்ளோனிங் மனிதனைக் கொன்று எமலோகம் அனுப்புவதே அவ்வாய்வுகூடத்தின் தலைவர் Dr. Bernard Merrick இனதும் அங்கு பணிபுரியும் மற்றவர்களினதும் வேலை“
கதாநாயகி Sarah Jordan இன் தவனை வந்ததும் Tom Lincoln விடயத்தை Sarah Jordan இற்கு எடுத்துக்கூறி இருவரும் ஒருவழியாக அங்கிருந்து தப்பிச் செல்கின்றனர். வெளியே வந்துபார்த்தால் தான் உலகத்தைப் பற்றி அவர்கள் அறிந்துகொள்கிறார்கள். இருவரும் சேர்ந்து தமது ஒரிஜினல்களைக் கண்டுபிடித்து அவர்கள் மூலமாக அங்கு வாழும் நூற்றுக்கணக்கான க்ளோனிங் மனிதர்களது உயிரைக் காப்பாற்ற எண்ணுகிறார்கள்.
இதன் பிறகு என்ன நடக்கிறது என்பதை நீங்களே பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள். க்ளோனிங் பற்றிக்கூறும் அருமையான திரைப்படம்.
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...