"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

13 February 2012

சூரியன் மேற்கில் உதிக்கும் நாள் உலகம் அழியும்

நாம் வாழும் இப்பூமி உற்பட முழுப் பிரபஞ்சமுமே அழிந்து மீண்டும் ஒரு மிக மிக மிகப் பிரம்மாண்டமான பிரபஞ்சத்தை (மஹ்ஷர்) அல்லாஹ் உருவாக்கி மனிதனை வாழவைப்பான் என்பது இஸ்லாத்தின் கொள்கை.எமது நம்பிக்கையும் கூட.

இப்பிரபஞ்ம் அழிவது எப்போது என்பது திட்டவட்டமாகத் தெரியாவிடினும் அது நடைபெறுவதற்கு முன்பு சில அடையாளங்கள் நிகழும் என்பதனையும் அவை எவை என்பதனையும் இஸ்லாம் குறிப்பிட்டுள்ளது. அதில் மிக முக்கியமானவொன்றுதான் கிழக்கிலிருந்து உதித்துவரும் சூரியன் மேற்கிலிருந்து உதிப்பதாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் – “சூரியன் மேற்கிலிருந்து உதிக்காமல் மறுமைநாள் ஏற்படாது.அதைக் கண்டதும் மக்கள் இறைவனை நம்புவார்கள். ஆனால் ஏழவே இறைவனை நம்பாதிருந்தவரது நம்பிகை்கை எப்பயனுமளிக்காது” அறிவிப்பவர் அபூஹுரைரா (ரழி) நூல் – புகாரி 6506

இது எவ்வாறு நடைபெறும்?
பூமி செக்கனுக்கு 18 மைல் வேகத்தில் சூரியனைச் சுற்றிவருகின்றது. அத்தோடு அது தன்னைத்தானேயும் கிழக்கு மேற்காகச் சுற்றிவருகின்றது. இதன்போதே சூரியன் கிழக்கில் உதிப்பதாக நாம் காண்கின்றோம்.

மணிக்கு 90Km வேகத்தில் பிரயாணித்துக்கொண்டிருக்கும் ஒரு பேருந்து ஒரேயடியாக நிறுத்தப்பட்டு மீண்டும் அதேவேகத்தில் பின்னோக்கிச் சென்றால் அதனுள் இருக்கும் பிரயாணிகளின் நிலை என்னவாக இருக்கும். இதேபோன்றுதான் இப்பூமியும் தற்போது சுழலும் அதுவேகத்தில் மேற்கு கிழக்காகச் சுழன்றாலும். இதனால் பூமியின் தட்டுகள் குழுங்கி, மலைகள் இடம்பெயர்ந்து, பூகம்பங்கள் தோன்றி பலத்த சேதங்கள்தான் விளையும்.

வியாழன் கிரகம் பூமியை அண்மித்து வருவதாகவும் அவ்வாறு அது அருகில் வந்தால் வியாழன் கிரகத்தின் ஈர்ப்புவிசைக்குட்படும் பூமி மறுதிசையில் சுற்றுவதற்கான வாய்ப்புள்ளதாகவும் சமீப ஆய்வுகள் கூறுகின்றன. அனைத்துக் கிரகங்களிலும் கிழக்கில் தோன்றி மேற்கில் மறையும் சூரியன் வெள்ளிக் கிரகத்தில் மட்டும் மேற்கில் தோன்றி கிழக்கில் மறைவதாக நாஸா விஞ்ஞனிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

3 comments:

Anonymous said...

ithu unmayil islamil kurupiddapattulatha

Anonymous said...

hh

Anonymous said...

maasha allah...

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...