மனிதன் இன்னும் தனது மூளையின் முழு ஆற்றலையும் பயன்படுத்தவில்லை. சாதாரண மனிதர்கள்
7 சதவீதமும் அறிஞர்கள் மற்றும்
சிந்தனையாளர்கள் 10 சதவீதமும் விஞ்ஞானிகள்
12 சதவீதமும்தான் மூளையைப் பயன்படுத்துகின்றனர்.
மூளையை இதுவரை கூடுதலாகப் பயன்படுத்தியவர் எல்பர்ட் ஐன்ஸ்டீன். இன்னும் மூளையில் 88 சதவீதமான அளவு பயன்படுத்தப்படாமல் அப்படியே இருக்கின்றது.
பயன்படுத்திய 12 சதவீதத்திற்கே இத்தனை
விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சிகளுமென்றால் மீதமாக உள்ள 88 சதவீதத்துடன் சேர்த்து முழு அளவில் மூளையைப் பயன்படுத்தினால்
என்னெ;ன கண்டு பிடிப்புகளெல்லாம்
வளர்ந்திருக்குமோ...?
அதேபோன்று இதன் மறுபக்கத்தையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இன்றைய விஞ்ஞான
தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளால் நேர்ந்துள்ள இயற்கையின் பல்பரிமாண அழிவுகளுக்கும்
மூளையின் இந்த 12 சதவீதமான பயன்பாடுதான்
காரணம். அப்படியிருக்க மிகுதி 88 சதவீதத்தையும் சேர்த்து
மொத்தமாகப் பயன்படுத்தினால் இப்பு பூமி தாங்குமா என்பதும் கேள்விக்குறிதான்.
பிற உயிர்களிடமில்லாத மனித மூளைக்கு மட்டும் உரித்தான பகுத்தறிவாற்றலின் விளைவுதான்
இன்று வளர்ச்சியடைந்திருக்கும் நவீன விஞ்ஞான, தொழில்நுட்ப, கலை, கலாசார காரணிகள். ஒரு காட்டில் விலங்குகள் சிலதை சில வருடங்களுக்கு விட்டுவைத்து
விட்டு போய் பார்த்தால் முன்பு எவ்வாறிருந்ததுவோ அவ்வாறேதான் அவ் வனாந்தரம் இருக்கும்.
ஆனால் அதே இடத்தில் சில மனிதர்கள் கூடினால் காலப்போக்கில் அவ்விடத்திலுள்ள காடுகள்
அழிக்கப்பட்டு மிருகங்கள் வேட்டையாடப்பட்டு இன்னும் கலை, கலாசார, விஞ்ஞான, தொழில்நுட்ப ரீதியாகவெல்லாம் வளர்ச்சி காணும். இதுதான்
மனிதனது பகுத்தறிவாற்றலின் விளைவு.
மனிதப் பகுத்தறிவின் பயன்பாட்டால் ஏற்படும் பல்வேறு சாதக பாதகங்களும் தவிர்க்க
முடியாதவை. 19ம் நுற்றாண்டின் கடைசிப்
பகுதியில் உருவான கைத்தொழில் புரட்சிதான் பிற்பட்ட காலங்களில் தோன்றிய சகலவிதமான தொழில்நுட்ப
வளர்ச்சிகளுக்கும் முன்னேற்றங்களுக்கும் காரணமாயமைந்தது. கைத்தொழில் புரட்சியின் வளர்ச்சியின்
ஒரு எதிர்மறை விளைவு இயற்கைக்குப் பொருந்தாத பல்வேறு உற்பத்திகள் தீவிரமாக தயாரிக்கப்பட்டன.
அதுமட்டுமன்றி உற்பத்தியின் அடிப்படைக் குறிக்கோள் சமூகத் தேவை என்பது மாறி இலாப நோக்கமே
அடிப்படையாகவும் தீர்மானிக்கும் சக்தியாகவும் மாறியது. இச்சிந்தனை இயற்கை பற்றி கவனமெடுக்கும்
மனோபாவத்தை இல்லாது செய்தது.
கைத்தொழில்துறையின் வளர்ச்சியால் எரிபொருள் பாவனை அதிகரித்து, புதிய புதிய இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு,
பல்வேறு துறைகளிலும் ஆய்வு,
ஆராய்ச்சிப் பணிகளுக்கான முன்னெடுப்புகள்
மேற்கொள்ளப்பட்டு, நகரமயமாக்கல் மற்றும்
அபிவிருத்திப் பணிகளுக்காகவும் விவசாயம் மற்றும் பயிர்ச்செய்கைக்காகவும் காடழிப்பு
துரிதகதியில் மேற்கொள்ளப்பட்டது. இதனால் புவி வெப்பமடைதல், நச்சு வாயுக்கள் வெளியேற்றம், ஓசோன் படை தேய்வடைதல், பனி மலைகள் உருகுவதால் கடல் மட்டம் உயர்வiடைதல், புவியைச் சூழ விண் குப்பைகள் குவிக்கப்படல், வளி மாசடைதல், நீர் மாசடைதல் அதிலும் குறிப்பாக சமுத்திர மாசடைவுகள்,
உணவுப் பொருட்களில் அவசியமான
போசணைகள் இல்லாமை, இவற்றை உட்கொள்வதால்
ஏற்படும் நோய்கள், நோய்களைத் தவிர்க்கப்
பயன்படுத்தும் மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுகள் என இயற்கைக்கு நேர்ந்துள்ள அசூசைகளை
மூச்சுவிடாமல் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.
பசுமைப் புரட்சி என்ற பெயரில் பூர்வீகத் தானியங்கள், பயிரினங்களை விட்டுவிட்டு வீரிய இனங்களை உருவாக்கும்
தொழில்நுட்பத்தை சில பன்னாட்டுக் கம்பனிகள் கண்டறிந்து பூச்சிக் கொல்லி, களைக்கொல்லி மருந்துகளை உருவாக்கியுள்ளன. இதனால்
சிறந்த போசனையுள்ள உணவுகள், மரபுவழி வித்துக்கள்
அழிவடைந்து வருகின்றன.
சமூக நலக்காடுகளைப் பராமரித்தல் என்ற பெயரில் காடுகளை அழித்து தேக்கு, யூக்கலிப்டஸ் மற்றும் இலாபத்தை அதிகம் ஈட்டித்தரக்கூடிய
மரங்களை நாட்டி சந்தைப்படுத்தும் தொழில் உருவாகியது. விவசாயப் பயிர்ச்சைகைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இதனால் தாவரங்;களின் எண்ணிக்கையில்
வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. சில நாடுகளில் மழை வளம் குறைந்துள்ளது. நிலத்தடி நீர் குறைந்து
நிலச் சரிவுகள் ஏற்பட்டு வறட்சி தலைகாட்டி வருகின்றது.
நீர்த் தேக்கும் அணைத்திட்டத் தொழில்நுட்பம் அறிமுகப் படுத்தப்பட்டதும் பல்வேறு
நோய்கள் உருவாகின. உவர் நிலங்களில் வேளாண்மைகள் பாதிக்கப்பட்டன. இதனால் விவசாயிகள்
பல்வேறு கஷ்டங்களையும் எதிர்கொள்ள நேர்ந்தனர்.
அதிகளவிலான எரிபொருட் பாவனை ஓசோனில் தேய்வை ஏற்படுத்தியுள்ளது. பூமியில் வெப்பம்
அதிகரித்து, அமில மழை பொழிந்து,
அடிக்கடி பூகம்பங்கள் தோன்றும்
நிலை உருவாகியுள்ளது. அதனால் கடல் பெருக்கெடுக்கின்றது.
இன்று எமது வீடுகளில் அதிகமாகப் பயன்படுத்தப்படுவது குண்டு பல்புகள்தாம். 2 கோடியளவு குண்டு பல்புகள் ஒரு இரவில் பயன்படுத்தப்படும்போது
அதிலிருந்து 4.3 சதவீதம் வெப்பம்
அதிகரிக்கின்றது. இதன்காரணமாக 12 வருடங்களுக்கு ஒரு
முறை நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. தொலைக்காட்சிகளில் உள்ள Picture
Tube ஆயுளில் 22 ஆயிரம் மணி நேரம் எரிந்தால் 12 டிக்ரி வெப்பம் அதிகரிக்கின்றது. LCD,LED
மற்றும் Plasma தொலைக்காட்சிகள் 2 மணி நேரம் பயன்படுத்தினாலே அவற்றின் வெப்பம் காற்றில்
கலந்துவிடுகின்றது.
பெரும்பாலான அறுவைச் சிகிச்சைகள் இயந்திர மயப்பட்டதன் விளைவாக (பிரசவமும் கூட)
தேவைக்கதிகமான மருந்துப் பாவனைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதோடு அதனால் பல பக்கவிளைவுகளுக்கும் ஆளாகவேண்டிய நிலை
ஏற்பட்டுள்ளது.
அணு உலைகள், அனல் மின் நிலையங்களின்
தோற்றம் சுற்றுப் புறச் சூழலையும் சுற்றியிருப்பவர்களையும் வெளிப்படையாகப் பலமாகவே
பாதிக்கச் செய்துவிட்டன. பிரபலமான குடிபாண நிறுவனங்கள் நீர்த்தேவைக்காக தெற்காசியப்
பகுதிகளில் கம்பனிகளை நிருவி நீரை உறிஞ்சுவதால் நீர்ப் பற்றாக்குறையும் வறட்சியும்
ஏற்பட்டு வருகின்றது. இந்தியா போன்ற நாடுகிளல் இதற்கெதிராக மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு
ஆர்ப்பாட்டங்களையும் நாம் அறிந்திருப்போம்.
உயிர்த் தொழில் நுட்பத்தின் மூலம் எயிட்ஸ் அணுக்களை அமெரிக்கா உருவாக்கி அதனைக்
போர் ஆயுதமாகக் கையாண்டமையும் அதன் விளைவாக இன்று ஏற்பட்டுள்ள உலகளாவிய ஆபத்தும் இதற்குப்
போட்டியாக கால்நடைகளில் பரப்பிவிடப்பட்ட அந்த்ரக்ஸ் நுண்ணுயிர்களும் உயிரியல் தொழில்நுட்பத்தால்
இயற்கைக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை எடுத்துக் காட்டுகின்றன. இதன் விளைவாக மனித இனமே அழியக்
கூடிய அபாய நிலை உருவாகியுள்ளது.
சுற்றுச் சூழலில் சஞ்சரித்துக்கொண்டிருக்கும் வானொலி, தொலைக்காட்சி, தொலைபேசி போன்ற சாதனங்களின் வானலைகளால் மறைமுகமாக
உயிரினங்களின் ஆயுளில் தேய்வு ஏற்பட்டு வருகின்றது.
இவ்வாறாக இன்று இயற்கையை மாசுபடுத்தும் விதத்தில் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துபவர்களும்
அவற்றைக் கையாள்பவர்களும்தான் பசுமைச் சித்தாந்தத்தையும் அறிமுகம் செய்திருக்கிறார்கள்.
ஒரு விதத்தில் அவர்களது வியாபாரம் நட்டமடையாதிருக்க இவ்வாறு அறிமுகப்படுத்தியிருக்கலாம்.
அல்லது இதனையே வியாபாரமாகக் கொள்வது ஒரு திட்டமாக இருக்கலாம். இவர்களது இணைய தளங்களும்
பத்திரிகைகளும் வெளியீடுகளும் கூட பச்சை பச்iயாகக் காணப்படுகின்றன. “விடுகிற கார்பனையும் விட்டுவிட்டு இணையப் பக்கத்திற்கு
பச்சை நிறம் பூசி ஏமாற்றுவது ஒரு உளவியல் ஏமாற்று வேலை” என்று எழுதுகிறது ஒரு பத்திரிகை.
மனிதனின் இத்தகைய தொழில்நுட்பக் கண்டுபிடிப்புக்கள் இயற்கையைக் கருத்திற்கொள்ளாத
முறையில் அமைந்துள்ளமையால் உலகில் ஏற்பட்டு வரும் திடீர் காலநிலை மாற்றங்கள் மனித இனத்திற்கே
பேராபத்தை விளைவித்து வருகின்றன. இயற்கைக்கு நிகழ்ந்த ஒவ்வாமையின் விபரீதத்திற்கு சிறந்த
உதாரணமாக ஐ.நா. ஹெய்ட்டியை அடையாளப்படுத்துகிறது.
ஹெய்ட்டி இன்றுபோல் என்றும் வறுமையில் சிக்கித் தவித்த ஒரு நாடல்ல. அது ஒரு காலத்தில்
செல்வச் செலிப்புடனும் புகழுடனும் இருந்த நாடு. ஆனால் இன்று வறுமையின் கோரப் பிடிக்குள்
அகப்பட்டிருக்கின்றது. இதற்கு மிகப் பிரதானமான காரணம் இயற்கையைக் கருத்திற்கொள்ளாது
மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்தாம். அத்தோடு நாட்டில் உருவாகிய இஸ்திரமற்ற நிலையும்
ஆதிக்க நாடுகள் தமது மூக்கை அங்கு நுழைத்ததோடு வியாபார நோக்கத்திற்காக அதனைப் பயன்படுத்தியமையும்
தான்.
கரீபிய நாடுகளுள் ஒன்றான ஹெய்ட்டியின் சனத்தொகையில் 80 சதவீதத்தினர் வறுமையில் வாழ்கின்றனர். ஹெய்ட்டியின்
தரைப் பகுதியில்கூட பெரும்பான்மை நிலப்பகுதி மலைப்பாங்கான அடர் காடுகளாகும். அங்கிருந்த
காடுகள் வகை தொகையின்றி அழிக்கப்பட்டமையே வறுமைக்கான மிகப் பிரதானமான காரணம். காடுகள்
அழிக்கப்பட நாட்டின் பிரதான தேவைகளான சக்தியும் விவசாயமும் கேள்விக்குறியானது. மலைப்பகுதியில்
மேற்கொள்ளப்பட்ட காடழிப்பு நடவடிக்கைகளால் மண்சரிவுகளும் மண்ணரிப்புகளும் அதிகரித்தன.
விவசாயம் பாழ்பட்டது. மக்களது எரிபொருள் தேவைக்குப் பயன்பட்ட விரகு, நிலக்கரி என்பன கூட அரிதாயின.
பெருந்தோட்டத் தொழிலுக்காகக் கொண்டுவரப்பட்ட தொழிலாளர் சமூகத்தால் சனத்தொகையும்
பெருகியது. இன்னும் வளங்கள் பற்றாக்குறையாகின. வறுமை கொஞ்சம் கொஞ்சமாக நுழைய ஆரம்பித்தது.
அதிகமானவர்கள் நாட்டைவிட்டுப் புலம்பெயர ஆரம்பித்தனர். நிதி உதவிகள் கூட கிடைப்பது
தடைப்பட்டது. பொதுமக்களும் நீண்டகாலத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் மரங்கை வெட்டி வீழ்த்தி
உடனடித் தேவையைப் பூர்த்திசெய்யும் விவசாயத்தைத் தெரிவுசெய்துகொண்டிருந்தனர். பொருளாதாரமும்
வீழ்ச்சியடைந்தது. 2006 ஆம் ஆண்டின் தரவுப்படி
ஹெய்ட்டியில் 10 சதவீதமான மக்களே
மன்சாரத்தை உபயோகித்தனர்.
காடுகள் அழிக்கப்பட அப்போதைக்குப் பெய்யும் மழை காரணமாக மண் சரிவுகள் ஏற்பட்டு
ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் நோர்ந்தன. புயல் காற்று, பூகம்பம் என்பன அதிகரித்துவிட்டன. சமீப செய்மதிப்
படங்களின்படி ஹெய்ட்டியின் நிலப்பரப்பில் இன்னும் ஒரு சதவீத காடுகள் மாத்திரம் மீதமிருக்கின்றன.
உலகிலேயே இயற்கை மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளுள் ஒன்றாக ஹெயிட்டியை ஐ.நா. குறிப்பிடுகிறது.
அத்தோடு அமெரிக்கா தனது போர் ஆயுதங்களைப் பரீட்சித்துப் பார்க்கும் நிலமாகவும்
ஹெய்ட்டியைப் பயன்படுத்தியுள்ளது. அண்மையில் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கும் விதத்தில்
ஹெய்ட்டியில் நடந்த இலட்சக்கணக்கான உயிர்களைப் பலிகொண்ட பூகம்பமானது இயற்கையாக நடந்ததொரு
நிகழ்வல்ல. அது அமெரிக்க கடற்படையின் High
Frequency Active Auroral Research Program (HAARP) எனப்படும் நவீன தொழில்நுட்பமொன்றைப் பரீட்சித்துப்
பார்த்ததனால் ஏற்பட்ட பேரழிவு என வெனிசூலாவின் Vive தெலைக்காட்சி செய்தி
வெளியிட்டிருந்தது.
1972ம் ஆண்டில் சுவீடனின் தலைநகர் Stockholm இல் நடைபெற்ற “மனித குடியிருப்பும் சுற்றாடலும்” என்ற தலைப்பிலான மாநாட்டில் உலக சுற்றுச் சூழலின்
முக்கியத்துவம், இயற்கை வளங்கள்,
அதனைப் பாதுகாப்பதற்கா ஏற்பாடுகள்
போன்றன பற்றி கலந்துரையாடப்பட்டன. இது தொடர்பாக மக்களை வழிப்புணர்வூட்டுவதற்காக ஜுன்
மாதம் ஐந்தாம் திகதி உலக சுற்றுச் சூழல் தினம் (World Environment Day)
ஆக அறிமுகப்படுத்தப்பட்டது.
அத்தோடு இம்மாதம் ஏப்ரல் 22 ஆம் திகதி சர்வதேச
புவி தினமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுபற்றியும் மக்களுக்கு அறிவூட்டவேண்டும்.
மக்களை என்னதான் வழிப்புணர்வூட்டினாலும் மாநாடுகளைக் கூட்டும் மா நாடுகள்தான் சுற்றுக்
சூழலையும் இயற்கையையும் பால்படுத்தும் காரியங்களைச் செய்கின்றன.
எனவே இன்று உலகிற்கு வேண்டப்படுபவை எல்லாம் இவைதான். மனிதனது முழு வளர்ச்சியையும்
இலக்காகக் கொண்ட வியாபார நோக்கமற்ற தெழில்நுட்பம் வேண்டும். இயற்கையை, சுற்றுக் சூழலை மாசுபடுத்தாக அதற்குத் தீங்குவிiளைவிக்காத தொழில்நுட்பம் வேண்டும். இயற்கையுடன்
இயைந்த தொழில்நுட்பம் வேண்டும். தொழில்நுட்பத்தை யுத்தத்திற்காகப் பயன்படுத்தாது அமைதிக்காகவே
உருவாக்கும் தொழில்நுட்பம் வேண்டும். குறைந்த செலவில் கூடிய பயனைத் தரும் தொழில்நுட்பம்
வேண்டும். இவை அனைத்துக்கும் முதலில் மனிதன் மனிதனாகவேண்டும்.
“கடைசி
மரமும் வெட்டுண்டு,
கடைசி நதியும் விஷமேறி,
கடைசி மீனும் பிடிபட,
அப்போதுதான் உறைக்கும்
பணத்தைச் சாப்பிட முடியாதென்று!”
1 comments:
Superrrtr
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...