"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

09 October 2013

விவேகமுள்ள எறும்புகள்

ஒரு தடவை சுலைமான் (அலை) அவர்கள் தமது படை பட்டாளத்துடன் ஒரு வழியால் வரும் தருனம் அங்கிருந்த சில எறும்புகள் பேசிக்கொண்ட செய்தியை அவர்கள் செவியுற்றார்கள் என்ற சம்பவத்தை பின்வரும் திருமறை வசனம் (27:16-19)  பேசுவதனூடாக எறும்புகள் பற்றிய மாபெரும் அறிவியல் அற்புதம் ஒன்றை அல்குர்ஆன் முன்வைக்க முனைகின்றது.

எறும்புகள் பற்றியும் அவற்றின் செயற்பாடுகள், நுணுக்கங்கள் பற்றியும் பல ஆய்வுகள் இன்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாய்வுகள் எறும்புகள் பற்றி நாம் அறியாத பல்வேறு அற்புதங்களையும் இறைவனின் வல்லமைகளையும் தெளிவுபடுத்துகின்றன. எறும்புகள் பற்றிய விஷேட கற்கைக்கு Myrmecology எனப் பெயர் வழங்கப்படுகின்றது.

எறும்புகளின் உடலமைப்பு

ஏனைய பூச்சிகளைப் போலவே எறும்புகளும், உடலுக்கு வெளியான எலும்புக்கூட்டையும் (external skeleton), மூன்று சோடி கால்களையும், துண்டுகளா உடலையும் (segmented body), தலைப் பகுதியில் எண்ணற்ற நுண்ணிய வில்லைகளால் ஆக்கப்பட்ட இரு பக்கக் கண்களையும் (compound eyes), தலையின் முன்பகுதியில் இரு உணர்கொம்புகளையும் (antennae) கொண்டிருக்கும். எறும்புகள் தமது உடல் எடையை விடவும் 50 மடங்கு சுமையினை சுமக்கும் வல்லமையைக் கொண்டுள்ளன.

அற்புதமான உணர்கொம்புகள்

நாம் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும்போதோ அல்லது நாம் கவனிக்காமலோ ஒரு சில உணவுத் துகள்கள் கீழே சிந்திவிட்டால், கொஞ்ச நேரத்தில் அங்கு ஒரு எறும்புக் கூட்டமே வந்து சேர்ந்து விடுவதைப் பார்த்திருக்கலாம். இது எப்படி நடக்கிறது? இதன் பின்னணியில் உள்ள மர்மம் என்ன? என்று சிந்தித்திருக்கிறீர்களா?

எறும்புகளுக்குக் கண்கள் தெளிவாகத் தெரியாது. ஆனால் மோப்ப உணர்வு அதிகம். இது மட்டுமில்லாமல் ஓரிடத்தில் உணவு இருப்பதைப் பார்க்கும் முதல் எறும்பு, அத்துகளின் அருகே சென்று தன் தலையில் உள்ள உணர் கொம்பினால் அதைத் தொட்டுப் பார்க்கிறது. அதன் பிறகு அங்கிருந்து திரும்பிச்செல்லும்போது உடலின் பின்பகுதியிலிருந்து ஃபெரமோன் என்ற வேதிப்பொருளைத் தரையில் கோடுபோல் இட்டுக்கொண்டே செல்கிறது. இந்தக்கோடு அதன் புற்று வரை நீண்டுசெல்லும். இதை மோப்பம் பிடிக்கும் மற்ற எறும்புகளும் அந்தத் தடத்தை பின்பற்றி உணவு இருக்கும் இடத்தை விரைவாகச் சென்றடைந்து விடுகின்றன. பின்பு அவ்வுணவுகளை புற்றை நோக்கி வரிசையாக மிக சுருசுருப்பாக எடுத்துச்செல்கின்றன.

எறும்புகளின் வாழ்க்கை முறை

எறும்புகள் உலகின் எல்லாப் பகுதிகளிலும் பரவலாகக் காணப்படுகிற. அண்மையில் இதுபற்றி ஆய்வு செய்த அறிவியலாளர்கள் உலகில் 11,880 வகையான எறும்பினங்கள் உள்ளதாகக் கண்டு பிடித்துள்ளனர். அமெரிக்க விஞ்ஞானி ஒருவர் இவை 90,00க்கும் அதிக இனத்தைக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார். இவற்றில் பெரும்பாலானவை வெப்பமுள்ள நாடுகளில் தான் வாழ்கின்றன. பொதுவாக பணிப் பிரதேசங்கள் தவிர்ந்த மற்ற அனைத்துப் பகுதிகளிலும் எறும்புகள் வாழ்கின்றன.

குழுவாக வாழும் அற்புதம்

எறும்புகள் குழுவாக வாழும் பூச்சியனமாகும்தேன் புச்சி, குளவி கரையான் என்பன போன்றே எறும்புகளும்புகளும் கூட்டம் கூட்டமாக வாழ்கின்றன. இவற்றின் கூட்டமைப்பும் ஒற்றுமையும் மனிதர்களைவிடவும் அற்புதமாக நடைபெறுகின்றன.

ஒவ்வொரு குழுவிலும் பொதுவாக ஒன்று அல்லது ஒரு சில இனம்பெருக்கும் திறன் கொண்ட அரசி (queen) னும் பெண் எறும்புகளும்  இனம்பெருக்கும் திறன் கொண்ட சில சோம்பேறிகள்'  (drones) னும் ஆண் எறும்புகளும் இறுக்கின்றன. இவை அல்லாது இனம்பெருக்கும் திறனற்ற பெரும் எண்ணிக்கையிலான 'வேலையாட்கள்' (workers), போராளிகள்' (soldiers) என ஆண், பெண் எறும்புகளும் வாழ்கின்றன. மது பணிகளை திட்டமிட்டு நிர்வகிக்கின்றன. மேலாளர்கள் (Managers), மேற்பார்வையாளர்கள் (Supervisors), தொழிலாளர்களை மேலாண்மை செய்பவர்கள் ( Foremen) உழைப்பாளர்கள் (Workers) என்று தனித்தனியாக துறைகளை (Departments) வகுத்துச் செயலாற்றுகின்றன.

இனம்பெருக்கும் திறனற்ற ஆண், பெண் எறும்புகளே எப்போதும் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பனவாகும். அரசியும், அரச எறும்புகளும் தமக்கென உள்ள புற்றின் அறைகளில் இருந்துகொண்டு இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு சந்ததியைப் பெருக்குவதில் மட்டும் பங்கெடுத்துக் கொண்டிருக்கும்.

இவற்றின் இனப்பெருக்க எண்ணிக்கைக்கு ஏற்ற வித்த்திலேயே அவற்றின் ஆயுளும் அமைந்துள்ளன. அதிகபட்சமாக ராணி எறும்பும், ஆண் ராஜா எறும்பும் 30 வருடம் வரை உயிர் வாழ்கின்றன. வேலையாட்களும் காவலாளிகளும் சில மாதங்கள் முதல் மூன்று வருடம் வரையும் உயிர்வாழ்கின்றன. பூச்சி இனங்களில் மிகவும் அதிக காலம் உயிர்வாழக்கூடிய இனமாக ராணி எறும்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

எறும்புப் புற்றின் அதிசயம்

தரைக்கு மேலால் பார்ப்பதற்கு சிறு புற்றாக எறும்புகளின் புற்றுகள் இருப்பினும் அவற்றின் ஆழமும் அகலமும் மிகவும் விசாலமானவை. ஒரு மனிதனையே தாட்டக் கூடிய ஆழத்திற்கு அவற்றின் புற்று இருக்கும். அதில் பல்வேறு அறைகள் காணப்படுகின்றன. இராணிக்குரிய அறை, கலஞ்சிய அறை, முட்டைகளுக்கென தனி அறை, கூட்டுப் புழுக்களுக்கென வேறு அறை என பல நூறு அறைகள் இருக்கும். புற்றைப் பராமறிக்கும் எறும்புகள் தொடருந்தும் புற்றை விசாலப்படுத்தி பாதுகாக்கும் பணியைச் செய்கின்றன.

எறும்புகள் நோய்கிருமிகளை தடுக்க ஒரு வகை திராவகம் போன்ற திரவப் பொருளை உற்பத்திச் செய்கின்றன. இந்த திரவப் பொருளை தங்களின் உடலில் பரவச் செய்வதுடன் மது புற்றுகளின் சுவர்களிலும் தடவுகின்றன. புற்றின் ஒவ்வொரு அறைக்கும் காற்று செல்வதற்கான ஏற்பாட்டையும் செய்கின்றன.

எறும்புகளின் புற்றின் முகப்பில் சில காவலாளி எறும்புகள் இருக்கின்றன. அங்கே வரும் ஒவ்வொரு எறும்பையும் அவை முகர்ந்து பார்த்துவிட்டு, அது தது குழுவைச் சார்ந்தனவா என்று உறுதி செய்த பிறகே, உள்ளே செல்ல அனுமதிக்கின்றன. எறும்புகள் வரிசையாக நகர்ந்து செல்லும்போதும் தமது உணர்கொம்பை மற்றொரு எறும்பின் தலையில் வைத்து, தங்கள் கூட்டத்தைச் சேர்ந்தது தானா என்று பரிசோதிப்பதையும் நீங்கள் பார்த்திருக்கலாம்.

எறும்புகள் எவ்வளவு பிரம்மாண்டமாக அவற்றின் புற்றுகளை அமைத்துக்கொள்கின்றன என்பதை சில விஞ்ஞானிகள் ஆய்வு செய்துள்ளனர். இந்த லிங்கைக் க்ளிக் செய்து இந்த வீடியோவைப் பாருங்கள். 

மனித வாழ்வோடு நெருங்கிய எறும்புகளின் வாழ்வு

விலங்குகள் பூச்சிகள் ஆகியவற்றின் வாழ்க்கை முறைகளை ஆய்வு செய்தோர் 'எறும்புகளின் வாழ்கைப் போக்கு மனிதனின் வாழ்க்கை போக்கோடு மிகவும் நெருங்கிய தொடர்புடையவை எனக் கண்டுள்ளனர்.  மனிதர்களைப் போன்றே எறும்புகள் இறந்த உடல்களை மண்ணில் புதைத்து விடுகின்றன. நிர்வாகங்களைத் திட்டமிட்டு மேற்கொள்கின்றன. அவ்வப்போது ஒன்று கூடி தங்களிடையே (Chatting) அளவளாவிக் கொள்கின்றன. தங்களுக்கிடையே மிகவும் நுட்பமான முறையில் தகவல் பரிமாற்றங்கள் செய்கின்றன.  வெய்யில் காலத்திலேயே மழைகாலத்திற்குரிய நீண்ட நாள் தேவைக்கான தானிய மணிகளை சேமித்து வைக்கின்றன.   தானிய மணிகள் முளைவிட்டு வளரும் போது அவற்றின் அடிவேர்களை அறுத்துவிடுகின்றன. அவ்வாறு அறுக்காது விட்டுவிடின் அவை அழுகிப்போகும் என்பதைத் தெரிந்து வைத்துள்ளன.

சேமித்து வைத்திருக்கும் தானியக்களஞ்சியம் மாரிகாலத்தில் ஈரப்பசை மிக்கதாய் மாறிவிடும்போது, அவற்றை வெளியே கொண்டு வந்து சூரிய கதிர் ஒளியில் காயவைக்கின்றன. வை சூரிய ஒளியில் காய்ந்ததும் உடனே உள்ளே கொண்டு சென்று களஞ்சிய சாலையில் பாதுகாக்கின்றன. ஈரப்பசையால் வேர்விட்டு அழுகிப்போய்விடும் என்ற வேளாண்மை அறிவைப் பெற்றிருப்பது விந்தையிலும் விந்தையல்லவா?

“அந் நம்ல் - எறும்பு” என்ற பெயரில் அல்லாஹ் ஒரு அத்தியாயத்தையே இறக்கி, எறும்பு பற்றி ஒரு சம்பவத்தையும் அதில் எறும்புகளும் பேசுகின்றன, அவற்றுக்கென்றும் ஒரு மொழி உள்ளது என்றும் பல வியத்தகு செய்திகளைக் கூறுகின்றான். நபியவர்களதும் சஹாபாக்களதும் வாழ்விலும் எறும்புடன் தொடர்புபட்ட பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளதை நாம் அறிகின்றோம். இவ்வாறு சிறு படைப்புகள் மூலமும் பல படிப்பினைகளைப் புகட்டும் அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். அல்ஹம்துலில்லாஹ்!

ஆலிப் அலி (இஸ்லாஹி) 

உங்கள் கருத்து:

2 comments:

Abu Nadeem said...

your blog is very good. keep it up...if you need code for your website. please visit this link

என் வலைப்பூவில் பயன்படுத்தியுள்ள CODE - களை உங்கள் இணையதளத்திற்கு தேவைப்பட்டால். நீங்கள் இதனை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.

http://ungalblog.blogspot.com/p/codes.html

Unknown said...

Very nice

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...