"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

07 November 2013

தாகம் தீர்க்கும் தண்ணீர்

இன்று பூமியில் 700 கோடிப் பேரையும் தாண்டி சனத்தொகை அதிகரித்துக்கொண்டு செல்கின்றதுஅத்தோடு கோடிக்கணக்கான ஜீவராசிகள் இப்பூமியில் வாழ்கின்றனஇன்னும் எண்ணிலடங்காத தாவர வகைகளும் புற்பூண்டுகளும் காணப்படுகின்றனஇவை அனைத்துமே இந்த அற்புத அருளான நீரைப் பயன்படுத்தியே உயிர் வாழ்கின்றனநீர் இல்லாவிடின் இப்புவியில் உயிர் வாழ்க்கையே சாத்தியமற்றுப் போகும் 
பூமியில் நீர் வளம்.

எமது பூமிப்பந்தின் மேற்பரப்பு 71 வீத நீரால் நிரம்பப்பட்டுள்ளதுமீதமுள்ள 29 வீதம்தான் நிலம்நீரின் பயன்பாடு அனைத்து ஜீவராசிகளுக்கும் மிக அவசியம் எனக் கருதித்தான் இறைவன் இத்தகைய அதி கூடிய வீதாசாரத்தில் நீரை எமக்கு அளித்துள்ளான் போலும்.

உலக நீர்ப்பரப்பில் 97.5 சதவீதம் உப்புநீராகவும், 2.5 சதவீதம் நன்னீராகவும் உள்ளது. நன்னீர்ப் பரப்பிலும் 69 சதவீதம் பனிக்கட்டியால் மூடப்பட்ட பிரதேசமாகும். 30 வீதம் நிலக்கீழ் நீராகவும் வீதம் நன்னீர் ஏரிகளும்நதிகளும் எஞ்சிய பகுதி ஈரழிப்பு தரைப் பிரதேசங்களுமாகும்.  ஆற்று நீர் மற்றும் நிலத்தடி நீர் என்பன பூமியின் மொத்த நீர் அளவில் 0.26 வீதம்தான்மொத்தமாகப் பார்க்கும்போது பூமியில் உள்ள நன்னீர் முழுவதிலும் வெறுமனே 0.007 வீதம் மட்டுமே பயன்படுத்த முடியுமான நீராக உள்ளது.

கடலில் உப்பு நீர் இறுப்பதுபோன்றே மனிதன் பருக முடியுமான விதத்தில் மதுரமான நீரையும் வல்ல நாயனே தந்தருளியுள்ளான். நீர் மட்டும் வற்றி இல்லாது போனால் அல்லது பருக முடியாது உப்பு நீராகிவிட்டால் ஜீவராசிகளின் கதி என்னவாகிப் போகும்? இதனைத் திருமறை கூறுகின்றது.

(நீங்கள் பருகுகின்றீர்களே அந்த நீரைப் பார்த்தீர்களாஅதனை மேகத்திலிருந்து நீங்கள் இறக்குகின்றீர்களாஅல்லது நாம்  இறக்குகின்றோமாநாம் நாடினால் அதனை (நீங்கள் பருக முடியாத) உப்பு நீராக மாற்றியிருப்போம்.” (56:68-70) ஸுரா அல்முல்கின் இறுதி வசனத்தில் அல்லாஹ் வினவுகின்றான். “(நபியே!) நீர் கூறும்: உங்களின் தண்ணீர் பூமியினுள் (உறிஞ்சப்பட்டுப்) போய்விட்டால்அப்பொழுது ஓடும் நீரை உங்களுக்குக் கொண்டு வருபவன் யார்என்பதை கவனித்தீர்களா?” [67:30]

நீர் எனும் இவ்வருட்கொடையை நாம் பெற்றிருந்தாலும் எமது நடவடிக்கைகளாலேயே அதனை நாம் மாசுபடுத்தி வருகின்றோம். அதனால்தான் உலக சனத்தொகையின் ஒவ்வொரு நான்கு பேரிலும் மூவர் அருந்துவதற்கு தூய நீரின்றி அவதிப்படுகின்றனர். எமது நாட்டிலும்கூட 25 மாவட்டங்களுள் 14 மாவட்டங்களில் வாழும் மொத்த சனத்தொகையின் 33 சதவீதமானவர்களுக்கு தூய குடிநீரைப் பெற்றுக்கொள்ள முடியாதநிலை ஏற்பட்டுள்ளது.

நீரின் மீது இருந்த அர்ஷ்

இப்பிரபஞ்சத்தை அதாவது அல்குர்ஆனின் பாணியில் வானம் மற்றும் பூமியைப் படைப்பதற்கு முன்னதாக அல்லாஹ்வின் சிம்மாசனம் கூட நீரின் மீது இருந்த்தாக திருமறை கூறுவதைப் பாருங்கள். “மேலும்அவன்தான் வானங்களையும்பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். அவனுடைய அர்ஷு நீரின் மேல் இருந்தது. [11:7] ஆக நீர் என்பது இவ்வானம் பூமி என்பன படைக்கப்பட முன்பிருந்தே உள்ள ஒரு விடயம் என்பதை விளங்க முடியும்.

ஜீவராசிகள் யாவும் நீரிலிருந்தே படைக்கப்பட்டுள்ளன.

உயிருள்ள ஒவ்வொன்றினதும் ஆரம்பமே நீரிலிருந்துதான் என்பதாக அல்லாஹ் திருமறையில் பல இடங்களில் கூறுகின்றான்.  ”உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதை காஃபிர்கள் பார்க்கவில்லையா?” [21:30] மற்றுமோர் இடத்தில்

நிச்சயமாக வானங்களும்பூமியும் (முதலில்) இணைந்திருந்
தன என்பதையும்இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும்உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லையா?” (21:30) (24:45) (25:54) என்று அல்லாஹ் வினவுகின்றான்.

இந்தத் திருமறை வசனங்களைச் சற்று ஆழ்ந்து சிந்தித்து பாருங்கள். நமது உடலிலுள்ள உயிரணுவின் (Cell) உள்ளீடாய் விளங்கும் Cytoplasm 80% சதவிகிதம் தண்ணீரையே அடிப்படையாய் கொண்டுள்ளது. மேலும் பெரும்பாலான உயிரினங்கள் 50% முதல் 90% சதவிகிதம் வரை தண்ணீரையே அடிப்படையாய் கொண்டுள்ளன என்பது நவீன விஞ்ஞானத்தின் தரவுகள். இத்தரவுகள் நம்மை அடைய முன்பே இவ்வசனங்கள் அதன் யதார்த்த்த்தை எவ்வளவு அழகாகச் சொல்லிக்கொண்டிருக்கின்றன.

மேலும்எல்லா உயிர்ப்பிராணிகளையும் அல்லாஹ் நீரிலிருந்து படைத்துள்ளான்அவற்றில் தன் வயிற்றின் மீது நடப்பவையும் உண்டு. அவற்றில் இரு கால்களால் நடப்பவையும் உண்டுஅவற்றில் நான்கு (கால்)களை கொண்டு நடப்பவையும் உண்டுதான் நாடியதை அல்லாஹ் படைக்கிறான்நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான். 24:45

அற்புதமான ஸம்ஸம் நீர்

புனித மக்கா நகரில் உள்ள ஸம்ஸம் கிணற்று நீர் நீர்களிலெல்லாம் மிக அற்புதமானது. ஸம் ஸம் கிணறு வெறும் 18 அடி அகலமும் 14 அடி நீளமும் கொண்டதாகும். இதில் உள்ள தண்ணீரின் ஆம் எப்போதும் சுமார் ஐந்து அடி மட்டுமே. இந்தக் கிணற்றில் இருந்து ஒவ்வொரு விநாடியும் தண்ணீர் இறைக்கப்பட்டுக் கொண்டே உள்ளது. வருடத்தின் எல்லா நாட்களிலும் மக்கள் அங்கே குழுமுகிறார்கள். ஹஜ் காலத்திலும் ரமலான் மாதத்திலும் சுமார் 20 லட்சம் மக்கள் அங்கே குழுமுகிறார்கள். அனைவருக்கும் இந்தக் கிணற்றில் இருந்து தான் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. ஒவ்வொருவரும் 20 லிட்டருக்குக் குறையாமல் அந்தத் தண்ணீரைத் தமது நாட்டுக்கு எடுத்துச் செல்கிறார்கள்.

குறைந்த ஆளம் உள்ள இந்தக் கிணறுபாலைவனத்தில் அமந்
துள்ள இந்தக் கிணறுஅருகில் ஏரிகளோ பள்ளத்தாக்குகளோ குளம் குட்டைகளோ இல்லாத அந்தக் கிணற்றில் இருந்து எப்படி லட்சோப லட்சம் மக்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது என்பது அற்புதம்தான். எந்த ஒரு நீர் நிலையாக இருந்தாலும் குறுகிய காலத்தில் பாசி படிந்துகிருமிகள் உற்பத்தியவது இயற்கை. ஆனால் ஸம்ஸம் தண்ணீரில் அது உற்பத்தியான காலம் முதல் இன்று வரை எந்த கிருமிகளோ, பாசிகளோ இன்றி தூய்மையாகவே உள்ளது. கால்ஷியம் மற்றும் மேக்னீஷியம் எனும் உப்பு மற்ற வகை தண்ணீரை விட ஸம்ஸம் தண்ணீரில் அதிகமாக உள்ளது. இந்த உப்புக்கள் புத்துணர்ச்சியைக் கொடுக்கக் கூடியவை. மேலும் இந்தத் தண்ணீரில் ஃபுளோரைடு உள்ளது. இது கிருமிகளை அழிக்க வல்லது.

நீரை ஒரு அருளாகத் தந்து அதிலும் ஸம்ஸம் நீரை அருள்களிலெல்லாம் அருளாகவும் இஸ்லாத்தின் ஒரு அத்தாட்சியாகவும் அல்லாஹ் அருளியுள்ளான்.  அல்ஹம்துலில்லாஹ்.

இறுதி நாளில் வற்றிப் போகும் தண்ணீர்

இறைவன் அருளாகத் தந்திருக்கும் நீர் மறுமை நாள் நிகழும் தருவாயில் வற்றிவிடும். கடல் பொங்கி, இருகடல்களுக்கு மத்தியில் அல்லாஹ் இட்டிருக்கும் “பர்ஸக்” எனும் அணைகள் உடைந்து இறுதியில் கடல் தீ முட்டப்பட்டு வற்றி விடுவதாக திருமறை பகர்கிறது. கடல்கள் தீ மூட்டப்படும்போது [81:6] அதாவது நீர் தீப்பற்றி எறிவதாக அல்லாஹ் இவ்வசனத்தில் கூறுகிறான். அது எப்படி பற்றி எறியும்? என்று சிந்தித்தால் அதில் இருக்கும் விஞ்ஞான அற்புதத்தை எம்மால் விளங்க முடியும்.

நீர் என்பது இரண்டு ஒட்சிசன் அணுக்களினதும் (O2) ஒரு ஐதரசன் அணுவினதும் (H) சேர்க்கையாகும். ஐதரசன் என்பது பற்றி எறியும் தன்மைகொண்டது. அதற்கு ஒட்சிசனும் சேர்ந்தால் இன்னும் இன்னும் பற்றி எறியும். மறுமைநாள் நிகழும்போது அல்லாஹ் நீரின் இரண்டு மூலக் கூறுகளையும் பிரிக்கின்றான். அப்போது ஐதரசன் எறிய அதனுடன் ஒட்சிசனும் சேர்ந்து எறிந்து இறுதியில் புவியில் உள்ள நீர் யாவும் முழுமையா வற்றி விடும்.

இறைவனின் அருளான நீரை வீண்விரயம் செய்யாது சிறந்த முறையில் பயன்படுத்துவோம்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

2 comments:

Nowfi said...

அருமையான பதிவு

Nowfi said...

அருமையான பதிவு

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...