"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

07 November 2013

வானவர்களின் மேற்பார்வையில் மனிதன்

அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களைப் படைத்ததன் பின் அவரது சந்ததிகளின் ரூஹ்களை (ஆன்மா) படைத்து ஆலமுல் அர்வாஹிலே தங்கவைத்துவிட்டான். அங்கிருந்து காலத்துக்குக் காலம் இறை நியதிப்படி ஆன்மாக்கள் பூமியை வந்தடைகின்றன. இவ்வாறு ஐந்து கட்டங்களைக் கடந்து எமது ரூஹ் ஆறாவது கட்டமாகிய நித்திய வாழ்வை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கின்றது. படத்தைப் பார்க்கவும்.

இந்த ஒவ்வொரு கட்டத்திலும் நாம் தனிமையில் விடப்பட்டவர்கள் அல்லர் என்பதுதான் யதார்த்தமான உண்மை. நாம் தொடர்ந்தும் இறைவனின் தூதுவர்களான வானவர்களால் கண்கானிக்கபட்டு வருகின்றோம். அவர்களது மேற்பார்வையின் கீழ்தான் இறுக்கின்றோம். ஆனால் நாம் பல சந்தர்ப்பங்களிலும் அதனை அறிவதில்லை. வானவர்களான அவர்கள் சதாவும் எம்மைப்பற்றிய அறிக்கைகளை (Reports) அல்லாஹ்விடம் சமர்பித்துக்கொண்டிருக்கின்றார்கள். இத்தொடரில் அவற்றை சற்று விரிவாக நோக்குவோம்.

1. முதலில் எம்மை அல்லாஹ் ஆன்மாக்களாகப் படைத்து ஆலமுல் அர்வாஹில் தங்கவைத்த சம்பவத்தை பின்வரும் வசனத்தில் கூறுகின்றான். உம்  இறைவன் ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவர்களுடைய சந்ததிகளை வெளியாக்கி, அவர்களைத் தங்களுக்கே சாட்சியாக வைத்து "நான் உங்களுடைய இறைவன் அல்லவா?" என்று கேட்டதற்கு, அவர்கள் "மெய் தான்  நாங்கள் சாட்சி கூறுகிறோம்" என்று கூறியதை (அவர்களுக்கு) நினைவூட்டுவீராக” (7:172) ஆலமுல் அர்வாஹில் நாம் வானவர்களின் மேற்பார்வையில் இருந்தோம்.

2. ஆலமுல் அர்வாஹிலிருந்து இரண்டாம் கட்டமாக தாயின் கருவறையை எமது ரூஹ் வந்தடைகின்றது. அங்கு கூட நாம் நினைத்தவாறு வந்து சேற முடியாது. அப்போதும் ஒரு வானவர்தான் எமது ரூஹை சுமந்து வந்து தாயின் கருவறையில் சேர்க்கின்றார். அல்லாஹ் நாடியிருப்பது போன்று எமது தோற்றத்தை வடிவமைக்கின்றார். இங்கும் வானவரின் கண்கானிப்புக்;கு உற்படுகின்றோம். இதனை நபியர்களின் பொன்மொழி தெளிவுபடுத்துகின்றது.

உங்கள் ஒவ்வொருவரினதும் சிருஷ்டி அவரது தாயின் கருவறையில் 40 நாட்களில் ஒன்று சேர்க்கப்படும். பின்னர் அதேபோன்று அதிலே அலகாவாகவும் அதேபோன்று முழ்காவாகவும் இருக்கும். பின்னர் அதனிடம் ஒரு வானவர் அனுப்பப்படுகின்றார். அவர் அதிலே ருஹை ஊதுகின்றார். மேலும் அவ்வானவர் நான்கு விடயங்களைப் பதியுமாறு ஏவப்படுகின்றார். அச்சிசுவின் வாழ்வாதாரம், அதன் ஆயற்காலம், செயல்பாடு மற்றும் அது சீதேவியானதா அல்லது அதற்கு மாற்றமானதா என்பன பற்றி பதியப்படும்.” (முஸ்லிம்)

3. அடுத்து மூன்றாம் கட்டமாக நாம் இப்புவியை வந்தடைகின்றோம். இங்கு பல கட்டங்களிலும் எம்மைக் கவனிப்பதற்காக அல்லாஹ் பல வானவர்களைத் தனியாகவும் குழுவாகவும் நியமித்திருக்கின்றான். உதாரணமாக தாயின் வயிற்றிலிருந்து வெளிப்படும் போதே ஒரு வானவரை அல்லாஹ் எம்முடன் சேர்த்துவிடுகின்றான். அவர் நாம் மரணிக்கும் வரை நம்மோடு இருந்துகொண்டு நன்மையின்பால் நம்மை வழிகாட்டுகின்றார். அதுபோன்று நாம் செய்யும் நன்மையான, தீமையான செயல்களை சதாவும் பதிவுசெய்துகொண்டே (Record) இருக்க கிராமுன் காதீபீன் எனும் இரு வானவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எமது நாளாந்த நடவடிக்கைகளை அல்லாஹ்விடம் முன்வைப்பதற்காகவும் சில வானவர்கள் உள்ளனர். இவர்கள் அதிகாலை பஜ்ர் தொழுகையிலும் மாலை அஸர் தொழுகையிலும் சந்தித்துக்கொள்கின்றனர். ஒரு குழு பஜ்ர் உடைய நேரத்தில் பூமிக்கு இறங்கிவர மறு குழு அஸர் நேரத்தில் மேலே செல்கின்றார்கள். அவர்களிடம் அல்லாஹ் அறிந்துகொண்டே கேட்பான் எனதடியார்களை எந்த நிலையில் விட்டுவந்தீர்கள்?” என்று. நாம் தூக்கத்தில், தொழுகையில் என எந்தநிலையில் இருந்தோமோ அதுபற்றி அவ்வானவர்கள் அல்லாஹ்விடம் முறையிடுவர்.

நாளாந்தம் போன்றே வாராந்தம் நமது பதிவுகளை இறைவனிடம் கொண்டுசேர்க்கும் பொறுப்பையும் சில வானவர்கள் செய்கின்றனர். இவர்கள் திங்கள், மற்றும் வியாழன் தினங்களில் சிப்ட் (Shift) ஆகுகின்றனர். இன்னும் எங்கெல்லாம் அல்லாஹ் பற்றி ஞாபகிக்கப்படுகின்றதோ அங்கெல்லாம் சில மலக்குகள் வந்து சேர்கின்றனர். மழைக்கும், மலைகளுக்கும் மரங்களுக்கும் செடி, கொடி என்பவற்றுக்கும் பொறுப்பாளர்களை நியமிதத்துள்ளான். இவ்வாறு பூமியில் பெரும்பாலும் எமது அனைத்து செயற்பாடுகளும் மலக்குமார்களின் கண்கானிப்புடன் அவர்களது மேற்பார்வையின் கீழ் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

4. இப்பூவுலகில் இருந்து நான்காவது கட்டமாக ஆலமுல் பர்ஸகிற்கு நாம் செல்லும்போது கூட, நினைத்தவாறு செல்லமுடியாது. அதுவும் வானவர்கள்தான் எம்மை அழைத்துச் செல்கின்றனர். மரணத் தருவாயில் மரணிக்க இருப்பவரின் கண்ணெட்டும் தூரம் வரை வானவர்கள் வந்து அமர்ந்துகொள்கின்றனர். அதன் பின் மலக்குல் மௌத் ரூஹைக் கொண்டுசெல்ல இறங்கி வருகின்றார். பின்பு ரூஹை விண்ணை நோக்கி எடுத்துச் செல்கின்றார். இறுதியில் ஆலமுல் பர்ஸகில் கொண்டுபோய் சேர்க்கின்றார். இங்கும் நாம் வானவர்களது மேற்பார்வையில் தான் இருக்கவேண்டும். விசாரணை செய்யவும் தண்டனை தரவும் முன்கர், நகீர் என இரு வானவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தமது பணிகளை மேற்கொண்டவண்ணமிருப்பர்.

5. ஐந்தாவது கட்டமாகிய மஹ்ஷர் இப்பிரபஞ்சம் முழுமையாக அழிந்த பின்னர் உருவாகின்றது. அங்கு நாம் எழுப்பப்பட்டதும் வானவர்கள் எம்மை வழிநடாத்துவார்கள். எம்மை இடதுசாரியினராகவும் வலதுசாரியினராகவும் முன்னால் நிற்கும் அணியினராகவும் மூன்று குழுக்களாக வரிசைப்படுத்துகின்றனர். வானவர்கள் புடைசூழ நாம் அல்லாஹ்வின் சந்நிதானத்தின்பால் அணியணியாகக் கொண்டுசெல்லப்படுவோம். அன்று எமது காலடி ஓசைகளைத்தவிர வேறு எந்த ஓசையும் கேட்காதவிதத்தில் நாம் அழைத்துச் செல்லப்படுவோம். இவ்வாறு மஹ்ஷரிலும் நாம் வானவர்களின் மேற்பார்வையின் கீழ் வழிநடாத்தப்படுகின்றோம்.

6. இறுதிக்கட்டமாகிய ஆறாம் கட்டத்திலும் இவ்வாறுதான். சுவனவாசிகளை இரக்கசுபாவமுள்ள மலக்குகள், கூட்டம் கூட்டமாக அழைத்துச் செல்வார்கள். அவர்களை அழகான முறையில் ஸலாமுன், ஸலாமுன்என்று கூறி  வரவேற்பார்கள். சுவனத்தில் நுழையும் எம்மை உபசாரம் செய்து தங்கவைப்பார்கள்.

நரகிலும் அவ்வாறுதான். நரகம் செல்லக்கூடியவர்கள் தப்பித்துத் தலைதெறிக்க ஓட முயற்சிக்கும்போது அவர்களை வன்மனம் கொண்ட மலக்குகள் விரட்டிப்பிடிப்பார்கள். 70 முழ சங்கிளிகளால் கட்டுவார்கள். நிலத்தில் முகம்குப்புற தர தரவென இழுத்துவந்து நரகில் தள்ளுவார்கள். அங்கே நரகிலும் அவர்கள் வானவர்களால் வேதனை செய்யப்படுவார்கள். அதற்கு 19 வாயிற்காவளர்கள் இறுப்பார்கள். அதன் தலைவர் மாலிக் (அலை) அவர்கள். இரக்கசுபாவமே அற்றவர்கள்.

இவ்வாறு ஆலமுல் அர்வாஹ் முதல் இறுதி இடம் சுவனம் அல்லது நரகம் செல்லும் வரை நாம் அனைவரும் தனித்துச் செயற்படவிடாது வானவர்களால் மேற்பார்வை செய்யப்பட்டுக்கொண்டு கண்கானிக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றோம். அல்லாஹ் எம்மை நல்லறங்கள் செய்வதற்காகப் படைத்துவிட்டு எமக்குப் புலப்படாத விதத்தில் மறைமுகமாக உதவி செய்யும் வானவர்களையும் நியமித்துள்ளான். எம்மைப் பற்றிய தகவல்கள் (அல்லாஹ் அறிந்த நிலையிலும்) அவனைச் சென்றுகொண்டே இறுக்கின்றன. இதனைத்தான் பின்வரும் வசனம் கூறுகின்றது.

வானம் முதல் பூமி வரையிலுமுள்ள விடயங்களை அவனே ஒழுங்குபடுத்தி நிர்வகிக்கின்றான். (ஒவ்வொரு விடயமும்) அவனிடம் மேலேறிச் செல்லும் ஒரு நாள் நீங்கள் கணக்கிடக்கூடிய ஆயிரம் ஆண்டுகளாகும்.” (32:5)

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...