"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

15 April 2014

PROMETHUS கடவுளைத் தேடி ஒரு பயணம்

திரைப்படம் ஆரம்பிக்கும் போது ஒரு புதிர், புற் பூண்டு இல்லாத பூமியில், ஒரு விண்ணுலக மனிதன் வந்து இறங்கி, ஏதோ ஒரு பாணத்தை அருந்திவிட்டு அவனது DNAக்களை ஒரு நீர்வீழ்ச்சியொன்றில் கலக்கவிட்டு, ஒரு செல் உயிரினத்தை உருவாக்குகின்றான்.

மொசபடோமியா, கிரேக்கம், மாயன்கள் மற்றும் எகிப்து போன்ற பண்டைய கால மத, கலாச்சார ஓவியங்களில் வரையப்பட்டிருக்கும் நட்சத்திரங்களையும் கோள்களையும் ஒரு ஆராய்ச்சிக் குழு பூமியில் இருந்துகொண்டு தீர்க்கமாக ஆராய்கின்றது.

இந்த ஓவியங்கள் சிலவற்றில், சில மனிதர்கள் வானில் ஒரு குறிப்பிட்ட வடிவத்திலும் எண்ணிக்கையிலும் அமைந்த நட்சத்திரங்களைக் காட்டுவதுபோல இருக்கும் ஒற்றுமையை வைத்து, அந்த இடம் தொலைவில் உள்ள ஒரு பால்வீதியில் இருப்பதாகவும், அந்தப் பால்வீதியில் ஒரு சூரியன் இருப்பதாகவும், அங்கே பூமியைப் போன்ற ஒரு கிரகம் இருப்பதாகவும், அந்த கிரகத்தில் உள்ள மனிதர்கள்தான் நமது பூமியில் உள்ள உயிர்களைப் படைத்திருப்பதாகவும் அவ் ஆராய்ச்சிக்குழு நம்புகின்றது. அவர்களை “என்ஜினியர்கள்”  என்று அழைக்கின்றனர்.

அந்த என்ஜினியர்களை, அதாவது கடவுளைக் கண்டறியும் நோக்குடன் இவ் ஆராய்ச்சிக் குழு பெரும் செல்வந்தரான பீட்டர் வெய்லான்ட் என்பவரின் அணுசரனையில் ஒரு விண்வெளிப் பிரயாணத்தில் பங்கேற்கின்னர். பயணிக்கும் வருடம் 2089 ம் ஆண்டு.

ஆராய்ச்சிக் குழுவின் தலைவரான அந்த ஆண், பெண் இருவரிடமும் இருக்கும் பிரதாணமான கேள்வி “நாம் எங்கிருந்து வந்தோம்? எம்மைப் படைத்த்த யார்? எம்மை உருவாக்கியதன் நோக்கம் என்ன? உருவாக்கியவர்களை பார்க்க முடியாதா?” இந்தக் கேள்விகளுக்கு விடை காணும்நோக்குடன் இன்னும் பல உதவி ஆட்களையும் சேர்த்துக்கொண்டு புரப்படுகின்றது ஒரு விண்களம். இந்த விண்கலத்தின் பெயர்தான் “ப்ராமிதியஸ்இவர்களோடு இவர்களுக்கு சேவகம் செய்வதற்காக ஒரு ரோபோவும் செல்கின்றது அதன் பெயர், டேவிட்.

புதிய கிரகத்தில் கோயிரங்கிய இவர்கள் அங்கிருப்பது மனிதனைப் படைத்தவர்களல்ல அவை கொரூரமான ஜந்துக்கள் என்பதை புரிந்துகொள்கிறார்கள். ஜாடிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் க்லடியேடர் செல்களுடன் பூமிப் பந்தை அளிப்பதற்காக தயாரிக்கப்பட்டிருக்கும் ஒரு ஏலியன் விண்வெளி வாகனம்தான் அது என்பதை புரிந்துகொள்ளும் கதாநாயகியும், ப்ராமிதியஸ் விண்கலத்தில் இருக்கும் மற்றவாகளும் சேர்ந்து அவ் ஏலியன் விண்கலத்தை அளிக்கிறார்கள்.
 கதாநாயகி மட்டும் உயிர் பிழைக்க, டேவிட் ரெபோவுடன் மீண்டும் கடவுளைத் தேடிய பயணத்தை ஆரம்பிக்கிறாள் திரைப்படத்தின் கதாநாயகி.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...