"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

09 September 2009

சிந்துக்கரையில் முஹம்மத் இப்னு காஸிம்

.....ஆலிப் அலி.....

பஞ்ஜாப் பிரதேசத்திலிருந்து தனித்தனியாக ஓடிவரும் ஐந்து நதிகள் ஒன்று சேர்ந்தே சிந்துநதி எனப்பெயர் பெறுகின்றது. இதனையண்டித் தோற்றம்பெற்ற பெரும் நாகரிகம்தான் சிந்து நாகரிகம். அன்று சிந்து நாட்டின் பல்வேறு பகுதிகளையும் பல சிற்றரசர்கள் ஆண்டுவந்தனர். சிந்து மன்னனான உதயவீரன் அங்கு பெரும் கொடுங்கோலாட்சியையே புரிந்துவந்தான்.
அவனை அரேபியர் ‘தாஹிர்’ என்றழைத்தனர். அவனது ஆட்சிக்குட்பட்டு வாழ்ந்த மக்கள் மிருகங்கைளவிடவும் கேவலமாகவே நடாத்தப்பட்டனர். பல்வேறு இன்னல்களுக்கும் அட்டூளியங்களுக்கும் முகங்கொடுத்து வாழ்க்கைப்பட்டனர். இதனால் அவர்கள் தம்மன்னனின்மீது தீரா வெறுப்புக் கொண்டிருந்தனர்.

அதுமட்டுமன்றி சிந்துமன்னன் உதயவீரன் தன் நாட்டின் கடற்கரையோரம் செல்லும் முஸ்லிம் வர்த்தகர்களின் கப்பல்களைக் கொள்ளையிடவும் அவர்களைக் கைதுசெய்து சிறைப்படுத்தவும் செய்தான். மேலும் பேராசைபிடித்த அவன் அண்டியிருந்த நாடுகளுக்கெல்லாம் படையெடுத்துச்சென்று நாடுபிடிக்கும் வேலையையும் செய்துவந்தான். இவ்வாறு இஸ்லாமிய ஆட்சிப் பிரதேசத்திற்குட்பட்டிருந்த “முக்ரான்” பகுதி எல்லையில் அவனது படைகள் அடிக்கடி அத்துமீறி தொல்லைகொடுத்து வந்தன. எனவே முக்ரானின் கவர்னர் ஹாரூன் சிந்து நாட்டில் கோலோச்சும் மனித ஆட்சியின் அவலங்களை எடுத்துக்கூறி அதனை ஒடுக்கி இஸ்லாமிய

ஆட்சியை ஓங்கச்செய்ய சிந்துநோக்கிப் படை நகர்த்த அனுமதிகோரி கலீபா வலீதிப்னு அப்துல் மலிக்கிற்கு நிருபமொன்று வரைந்தார்.

இச்சந்தர்ப்பத்தில்தான் கவர்னர் மூஸா பின் நுஸைர் ஸ்பைனை வெற்றிகொள்வதற்காக தாரிக் பின் ஸியாதின் தலைமையில் பெரும் படையொன்றை வழியனுப்பியிருந்தார். பரந்து விரிந்த சிந்துப்பிரதேசத்தைக் கைப்பற்ற அனுப்பப்படும் படைவீரர்களுக்குத் தலைமைதாங்க இணையில்லாத ஒரு வீரனின்தேவை அப்போதுதான் உணரப்பட்டது.

அவ்வகையில் கலீபா வலீத் அவர்கள் உன்னதமான, அபூர்வமான வீரனொருவனை சேனைத் தளபதியாகத் தெரிவுசெய்தார்.

கிழக்கே மத்திய ஆசியாவில் சேனாதிபதி குதைபாவின் சேனாப்படையின் முன்னணித்தலைவனாய் நின்று Bபல்கு, ஸமர்க்கந்து முதலிய கோட்டைகளைத் தகர்த்தெறிந்த வீரனவன். சமர்க்களங்களிலே சாகசச் செயல்கள் பல புரிந்து கலீபாவினால் இமாதுத் தீன் (சன்மார்க்கத் தூண்) எனப் பெயர் வாங்கிய சூரனவன். ஆம் அவன்தான் வெறும் பதினேழு வயதை மாத்திரமே எட்டிப்பிடித்திருந்த இளம் இளைஞன் முஹம்மதிப்னு காஸிம். ஸகபீ கோத்திரத்தவன். கலீபா வலீதின் வலக்கரமாகவும் கிழக்குப்பகுதிக்கு கவர்ணராயுமிருந்த ஹஜ்ஜாஜ் இப்னு யூஸபின் காலம்சென்ற சகோதரன் காஸிமின் வீர புத்திரன்தான் இந்த முஹம்மத்.

சிந்து நாட்டை வெற்றிகொள்ள அனுப்பவிருக்கும் படைக்கு முஹம்மத் சேனாதிபதியாக நியமிக்கப்பட்டான். தனக்கு வழங்கப்பெற்ற உன்னதமான பொறுப்பை சரிவர நிறைவேற்றவேண்டுமென்ற பொறுப்புணர்வில் அதிகமதிகம் இறைவனைப் பிரார்த்தித்துக்கொண்டிருந்தான். ஒரு நாள் நள்ளிரவு வேளையில் இரண்டாம் உமர் என வர்ணிக்கப்படும் உமர் இப்னு அப்துல் அஸீஸ் அவர்கள் முஹம்மதைச் சந்தித்து அரிய பல போதனைகளைக் கூறினார்.

எதிரி நாட்டவரை அநியாயமாய்க் கொலைசெய்யக் கூடாதென்றும் போர்க்களத்தில் மட்டுமே வாளைப் பயன்படுத்துமாறும் இதர நேரங்களில் இஸ்லாமிய விழுமியங்களை நடத்தையில் காட்டி மக்கள் மனதை வெற்றிகொள்ளுமாறும் உபதேசித்தார். மேலும் வெற்றியின் தினவெடுக்கால் எதிரிகள்மீது அத்துமீறாதிருக்க வேண்டுமென்றும் வரம்புமீறுவோரை இறைவன் ஒருபோதும் நேசிக்கமாட்டான் என்றும் போதித்தார். “நீங்கள் யாவரும் செல்வது நாடு பிடிக்கும் நோக்கிலல்ல மாறாக ஆத்மீக வெற்றிபெற்று அறநெறியைப் பரப்புதற்கே!” என்றும் ஞாபகமூட்டினார்.

போருக்குச் செல்லும் குறித்த நாளில் முஹம்மதிப்னு காஸிமின் தலைமையில் ஆறாயிரம் குதிரைப்படைகள் திமிஷ்கிலிருந்து புறப்பட்டன. இடையே பஸராவிலிருந்து மூவாயிரம் ஒட்டகைப்படையொன்றும் முஹம்மதின் படையோடு இணைந்துகொண்டது. பின்பு ஷீராஜ், முக்ரான் பிரதேசங்களிலிருந்து மேலும் மூவாயிரம் படைகளும் சேர்ந்து, மொத்தமாக பன்னீராயிரம் வீரர்கள் சிந்துநோக்கிப் புயற்காற்றாய்ச் சுழன்று நகர்ந்தனர்.

போருக்குத் தேவையான மேலதிக வாட்கள், மஞ்சனிக்குகள், புறவிகள், உணவுப் பண்டங்கள் என்பனவற்றை கவர்ணர் ஹஜ்ஜாஜ் அனுப்பிவைத்தார். சிந்து எல்லையை அடையுமுன்பே உதயவீரனின் கீழ் ஆட்சிக்குட்பட்டிருந்த சீசம் கோட்டை, தேபல் கோட்டை, நீரூன் சிற்றரசு, பரூச் கோட்டை, விதேக நாடு போன்ற கோட்டைகளும் சிற்றரசுகளும் வலுவான எதிர்ப்புகள் ஏதுமின்றி முஹம்மதிப்னு காஸிமின் முன் மண்டியிட்டன.

இடைவழியில் முஸ்லிம் சேனைக்கு முன்பாகப் பெரும் பாம்பென வளைந்து நெளிந்து உருண்டோடியது சிந்து ஆறு. முஹம்மதின் அற்புதமான திட்டத்திற்கமைய முஸ்லிம் வீரர்கள் சிந்துநதியை வெகு சாமர்த்தியமாகக் கடந்துசென்று முஸ்லிம் படையின் வருகையை எதிர்பார்த்துப் பதுங்கியிருந்த உதய மன்னனின் கூலிப்படையைத் தாக்கி விரண்டோடச் செய்தனர்.

பிராமண புரிக்கோட்டையில் வீற்றிருந்த உதயவீரன் சிந்து எல்லைப்போரின் தோல்விகேட்டு வெகுண்டான். முஹம்மதின் தலைமையில் முஸ்லிம் சேனை முன்னேறும் சேதிகேட்டு சிங்கமெனக்கர்ச்சித்தான். தாமதியாது பலநூறு யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை என்ற படைவெள்ளத்துடன் அது அரபியரைத் தாக்கித் துவம்சிக்கப்போகிறது என்ற இறுமாப்புடன் உதய வீர அரசன் யானைமீதமர்ந்து வந்துகொண்டிருந்தான். அவனது ஐம்பதுநாயிரம் படைவீரர்கள் பன்னீராயிரம் முஸ்லிம் வீரர்களைச் சன்னம் (நாசம்) செய்யப் போகிறார்களென மமதைகொண்டிருந்தான்.

இரண்டு படைகளும் ராவல் என்ற கோட்டைக்கு அருகிலிருந்த பரந்து விரிந்த மைதானத்திலே களமிறங்கின. போர் மூண்டு உக்கிரமமடைந்தது. எண்ணிக்கையில் முஸ்லிம்சேனை உதயமன்னனின் சேனையிலும் குறைவாயிருந்தாலும் முஸ்லிம்களின் வாள் வலிமைக்கும் நெஞ்சுறுதிக்கும் அதனையும் தாண்டிய அவர்களது ஈமானியப் பலத்துக்கும் முன்னால் யாதும் பயனற்றுப்போயின. கொடுங்கோலாட்சியை ஒடுக்கி இறையாட்சியை நிறுவத் தினவுற்றுக் கிடந்த முஹம்மதின் வீரர்கள் போர்க்களத்தினிலே பல வீரங்கள் புரிந்து சாகசங்கள் காட்டி வெற்றிக் கிரீடத்தைச் சூடிக்கொண்டனர். மன்னன் உதயவீரனோ வெட்டுண்டு கொலையானான்.

மீண்டும் முஸ்லிம் சேனைகள் முன்னேறிச்சென்று பலம்பொருந்திய பிராமணபுரிக் கோட்டையையும் அல்வர் கோட்டையையும் கடும் சமருக்குப்பின் கைப்பற்றினர். அல்வர் பாதாளச் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பல நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் விடுதலைபெற்றனர். அவர்கள் யாவரும் உதயவீரனால் கொள்ளையிடப்பட்டு கைதுசெய்யப்பட்டவர்கள். முஹம்மத் இப்னு காஸிம் அல்வர்கோட்டையைக் கைக்கொண்டதும் சிந்து நாட்டின் பெரும்பகுதி முஸ்லிம்கள்வசமானது.

போரிற்குப் புறப்படுமுன்னமே உமர் இப்னு அப்துல் அஸீஸ் அவர்கள் கூறியதுபோன்று சிந்துமக்களிடம் முஸ்லிம் வீரர்கள் நடந்துகொண்ட விதம் அவர்களுக்கு முஸ்லிம்கள்மீதும் இஸ்லாத்தின்மீதும் நல்லபிப்பிராயத்தை ஏற்படுத்திவிட்டது. தமது நாட்டு அரசப்படைகளாலே கிடைக்காத கண்ணியம் பிறநாட்டவர்களிடமிருந்து கிடைக்கக் கண்டு ஆச்சிரியத்திலாழ்ந்தனர். பல சிந்தியர்கள் இஸ்லாத்தைத் தழுவி முஸ்லிம் படையுடன் இணைந்துகொண்டனர். சிந்தியருக்கும் முஸ்லிம்களுக்குமிடையே நடந்த போர்களில் விதவைகளான பல பெண்கள் இஸ்லாத்தை ஏற்று அரேபிய வீரர்களைக் கணவர்களாகப் பொருந்தி வாழ்வுபெற்றனர்.

சிந்துப் பிரதேசங்களின் ஆட்சி முஹம்மதிப்னு காஸிமிடம் வந்ததும் நாட்டிலே பல சீர்திருத்தங்களையும் முன்னேற்றங்களையும் செய்தான். பிறப்பினால் நிழவிவந்த உயர்வு தாழ்வு என்ற பேதத்தை நீக்கி இஸ்லாமிய சமூக சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் பரப்பினான். யுத்தத்தின் பீதியினால் வீடுகளைத் துறந்துசென்றோருக்கு மீண்டும் தம் வீடுகளில் வந்து வாழ அனுமதியளித்தான். விவசாய விருத்தி, நீர்ப்பாசனம், பாலம் கட்டுதல், குடிநீர்க் கிணறுகள் அமைத்தல், பாடசாலைகள்,வைத்தியசாலைகளை நிர்மாணித்தல், பிரயாணிகள் தங்கிச்செல்ல சத்திரங்களை நிறுவுதல், புதுப்புது சாலைகளை அமைத்தல் மற்றும் காவற்படை, நீதிமன்றம் எனப் பல்வேறு அபிவிருத்திகளையும் செய்து சிந்து நாட்டின் பொருளாதார நாகரிகத் துறைகளில் பெரும் மறுமலர்ச்சியை உண்டுபண்ணினான்.

மக்களின் தேவைகளைக் கேட்டு உதவிசெய்தான். இதனால் குறுகிய காலத்திலே மக்கள் மனங்கவர்ந்த மாமன்னனாக மாறிவிட்டான். முஹம்மதின்மீது அவர்கள் கொண்ட பேரன்பின் விளைவாக அவனை மனதில் மாத்திரமன்றி நிஜத்திலும் சிலையாக வடித்துவிட்டனர் அம்மக்கள். சிலர் அதனை வணங்கவும் தலைப்பட்டனர். இதனையறிந்த முஹம்மதிப்னு காஸிம் நிலைகுலைந்து “நான் இறைவனின் சாதாரண அடியான் மாத்திரமே! அவனோடு என்னை நிகராக்காதீர்கள். வணங்கவும்வழிபடவும் ஏற்றமானவன் அவனன்றி வேறுயாருமிலர்” என்று உறுதியாக எடுத்துரைத்து தன்கையாலே அச்சிலையை உடைத்து நொறுக்கிவிட்டு மீண்டும் இவ்வாறான செயல்கள் புரியக்கூடாதெனக் கடுமையாக எச்சரித்தான்.

இவ்வாறு காலங்கள் உருண்டோடவே திமிஷ்கிலிந்து தூதுவனொருவன் அவசர நிருபமொன்றைத் தாங்கி முஹம்மதிடம் வந்துசேர்ந்தான். அதிலே அவனுக்கு அடிக்கடி உதவிகளையும் ஆலோசனைகளையும் வழங்கிவந்த ஹஜ்ஜாஜ் இப்னு யூஸப் அவர்களின் மரணச்செய்தி குறிப்பிடப்பட்டிருந்தது. அதிலிருந்து சில காலங்களின் பின்பு கலீபா வலீதின் மரணச்செய்தியும் அவனுக்குக் கிடைக்கவே மிகுந்த மனவேதனையடைந்தான். தனக்குப் பக்கபலமாயிருந்த இவ்விருவரினதும் இழப்பு ஈடுசெய்ய முடியாதவொன்றாகவே இருந்தது. அடுத்த புதிய கலீபாவாக வலீதவர்களின் தம்பியும் அப்துல்மலிக்கின் புதல்வருமான சுலைமான் பதவியேற்றார். கலீபா சுலைமானிடமிருந்து முஹம்மதிப்னு காஸிமுக்கு ஒரு நிருபம் வந்தது. யாருமே எதிர்பார்க்காத ஒரு மாற்றம் அதிலே காணக்கிடைத்தது. ஆம் அதிலே முஹம்மத் பதவிவிலக வேண்டுமெனவும் அவ்விடத்தில், வந்த தூதுவர்களில் ஒருவரான யஸீத் இப்னு அபீ ஹம்ஷா பதவிவகிக்க வேண்டுமெனவும் கூடிய கதியில் முஹம்மத் திமிஷ்க் வந்து கலீபா முன் ஆஜராகவேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆரம்பத்தில் முஹம்மத் சற்றே கலக்கமடைந்தாலும் பின்பு தான் ஒரு முஸ்லிம் தளபதி என்றவகையில் தலைமைத்துவத்துக்குக் கட்டுப்படவேண்டியவன் என்பதன் முக்கியத்தை உணர்ந்து கலீபாவின் முடிவுக்கு உடன்பட்டு அதனை மக்களிடமும் தெரிவித்தான். மக்களோ அவன்மீது கொண்ட உயரிய அன்பின் காரணத்தால் அம்முடிவில் அதிருப்திகொண்டு அவனை திமிஷ்க் செல்லவேண்டாமெனக் கோரினர். எனினும் முஹம்மத் அதனை உறுதியாகவே மறுத்துவிட்டு மறுநாளே திமிஷ்க் பயணமானான். அங்கு சென்ற அவ்வுத்தம வீரன் கி.பி.715ல் உயிர் நீத்தான்.

மரணம் என்பது இறை நியதியாயிற்றே. அதனை யாராலும் தவிர்க்கமுடியுமா? எனினும் சிலர் மரணித்தும் உயிர் வாழும் பேற்றைப் பெறுகிறார்களே அவர்கள் உயிர்வாழும்போது செய்த நற்காரியங்கள் தான் அவர்கள் குறித்து வரலாறு முழுவதும் சீர்தூக்கிப்பேசும்படி செய்கின்றன. அவ்வாறுதான் முஹம்மதிப்னு காஸிமும் சிறு வயதில் இஸ்லாத்திற்காகப் பெரும்பங்காற்றி உயிர் நீத்தவர். அவ்வுத்தமர் மறைந்தாலும் வரலாற்றுப் பக்கங்களில் மட்டுமன்றி எம்முள்ளங்களிலும் அன்னாரது சரித்திரத்தைப் பொன்னெழுத்துக்களால் பொறித்துவிட்டுச் சென்றுள்ளார். அல்லாஹ் அவருக்கு நற்கூலி வழங்குவானாக...!

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...