"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

23 March 2014

பிந்திய வயதுத் திருமணமும் அதனால் ஏற்படும் சீரழிவுகளும்

இன்று பல்வேறு காரணங்களை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம் சமூகத்தில் ஆண்களின் திருமண வயது பின்போடப்பட்டு வருகின்றது. எம்மில் இருந்து இரண்டு தலைமுறைகள் முன்னால் சென்று பார்த்தால் அவர்களில் ஆண்களும் பெண்களும் இருபது வயதிற்குள் திருமணம் முடித்து பத்து, பண்ணிரெண்டு குழந்தைகளையும் பெற்றெடுத்து சந்தோசமாக வாழ்ந்த வரலாற்றைக் காண முடியும். அப்போதெல்லாம் விவாகரத்துகளும் நிகழ்வது மிகக் குறைவு.

இன்று கல்வி, தொழில், பொருளாதாரம் என்ற காரணங்களை முன்வைத்து எமது சமூகத்தில் ஓர் ஆண், திருமணம் முடிக்க இருபத்தி எட்டு, முப்பது வயது வரை நாட்களைத் தள்ளிப்போடுகின்றான். இப்பிந்திய வயதுத் திருமணங்களால் எமது சமூகத்தில் இளைஞர்கள், யுவதிகளிடத்தில் பாரிய சீரழிவுகள் தலைதூக்கி வருவதனை வெளிப்படையாகவே காண முடிகின்றது.

இஸ்லாம் திருமணத்திற்கான வயது வரையறைகளைக் கூறவில்லை. என்றாலும் ஓர் ஆண் பருவ வயதை அடைந்தால் திருமணம் முடிக்க வேண்டும் என்றும் ஓர் பெண் பருவ வயதை அடைந்தால் திருமணம் முடித்துக்கொடுக்கப்படவேண்டுமெனவும் கூறுகின்றது. திருமணம் தொடர்பாக வருகின்ற அதிகமான ஹதீஸ்களில் நபியவர்கள் வாலிபர்கள், இளைஞர்கள்என்ற பதங்களைப் பிரயோகித்திருப்பதிலிருந்து இதனை விளங்கிக்கொள்ளலாம்.

பருவமடைதல் என்பது ஓர் ஆணிடத்திலும் பெண்னிடத்திலும் உடலியல், உளவியல் மற்றும் சமூகவியல் ரீதியிலான பல மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. உடல் பகுதிகள் விருத்தியடைதல், மயிர்கள் முளைத்தல், குரலில் வித்தியாசம் ஏற்படல் என பல மாற்றங்களை அவர்களது உடல் வெளிக்காட்டுகின்றது. அதேபோன்று ஆணில் என்ரஜன்என்றும் பெண்ணில் ஈஸ்ட்ரஜன்என்றும் உடலில் சுரக்கும் ஹோமோன்கள் அவர்களது உளவியலில் தாக்கம் செலுத்துகின்றன. இப்பருவத்தில் ஆண்கள் பெண்கள் இருபாலாரிலும் எதிர்பால் கவர்ச்சி உண்டாவதற்கு இவ் ஹோமோன்களே காரணம்.

அத்தோடு இன்றைய ஊடகங்கள் கூட இவ் எதிர்ப்பால் கவர்ச்சிக்கு இன்னும் உரமூட்டுகின்றன. திரையில் ஒளிபரப்பப்படுகின்ற சினிமாக்களும், சீரியல்களும், காதல் பாடல்களும் இவ் எதிர்பால் கவர்ச்சிக்குத் தீணிபோடுகின்றன. அவற்றில் உள்ள ஆபாசக்காட்சிகளும் வசனங்களும் இளம் தலைமுறையினரின் உள்ளங்களில் ஆபத்தான ஆசைகளை விதைக்கின்றன. இவை விபரீதமான ஆசைகளை உருவாக்கும் ஊக்கசக்திகளாக இருக்கின்றன.

ஊடகங்களில் பார்ப்பவற்றை நாமும் செய்துபார்க்க வேண்டும் என்ற மனநிலையை ஏற்படுத்தி இதனால் வாலிபப் பருவத்தில் பலர் காதல் வலைகளிலும் விபச்சார செயல்களிலும் ஈடுபடும் நிகழ்வுகளும் அன்றாடம் நடைபெறுகின்றன.

கட்டிளம் பருவத்திலேயே பிள்ளைகளின் கல்விக்காகவென்று ஆண் பிள்ளைகளுக்கும் பெண் பிள்ளைகளுக்கும் Computer,  Laptop,  Smart Phone, Tab என பலதையும் பெற்றோர் வாங்கிக்கொடுகின்றனர். வாங்கி அவர்களது அறைகளிலேயே வைத்துவிடுகின்றனர். இவற்றை எதற்காகப் பயன்படுத்துகின்றனர்? அவற்றில் எதைப் பார்க்கின்றார்கள்? அவற்றில் என்ன இருக்கின்றது? என்பதை ஒரு முறையேனும் தேடிப் பார்ப்பதுமில்லை, பல பெற்றோருக்கு அவற்றைப் பயன்படுத்துவது பற்றிய அறிவும் இல்லை. இவையாவும் வாலிபப் பருவ உள எழுச்சிகளுக்கு வடிகாலமைக்கின்றன.

பொதுவாக வாலிபப் பருவம் என்பது திருமண ஆசைகள் பொங்கிப் பிரவாகிக்கும் வயது. உடல் உணர்ச்சிகள் பெருக்கெடுக்கின்ற வயது. தமது இயற்கையான உடல் இச்சைகளை தனித்துக்கொள்ள முடியாமல், வழி தெரியாமல் தடுமாறுகின்ற வயது. தவறான நடவடிக்கைகளுக்குச் செல்ல முற்படுகின்ற வயது. இங்குதான் இஸ்லாம் இவ்வுடல் இச்சைகளை ஹலாலான முறையில் தீர்த்துக்கொள்ள வழிகாட்டுகின்றது. அதற்கு திருமணத்தைக் கட்டாயப்படுத்துகின்றது. அதன் மூலம் சமூகச் சீரழிவுகளுக்கு அணைபோடுகின்றது.

உடல் உணர்ச்சிகள், ஆசைகள், இச்சைகள் எல்லாம் பொங்கிப் பிரவாகிக்கும் இவ்வாலிபப் பருவத்தில் திருணம் செய்யப்படால் அவ்வாழ்வு எவ்வளவு இன்பகரமாதாக இருக்கும். காதலர்கள் தமக்குள் பரஸ்பரம் செய்துகொள்ளும் அர்ப்பணிப்புகள் இத்திருமண வாழ்வுக்குள் எவ்வளவு அர்த்தமுள்ளதாகவும் உணர்வுபூர்வமானதாகவும் இருக்கும். இவை எல்லாம் சேரும் போதுதான் வதூத் - தம்பதியர் மத்தியில் ஆழமான அன்பும், வலூத் - ஆழமான அன்பின் மூலம் நிறையக் குழந்தைகளையும் பெற்றெடுக்க முடிகின்றது. எமக்கு முன்னேய பரம்பறையினர் கூடுதலான பிள்ளைகளைப் பெற்றெடுத்தமைக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

வாலிபப் பருவத்தை அடைந்த உங்கள் பிள்ளைகளிடம் கேட்டுப் பாருங்கள் அவர்களது உள்ளங்களில் திருமண ஆசை இல்லாமலா இருக்கும்? ஆசைகள் இருக்கின்றன. ஆனால் அதனை உங்களிடம் எப்படி அவர்கள் வாய் திறந்து சொல்வார்கள்? அவர்களது உணர்வுகளை பெற்றோர்தான் புரிந்து செயற்பட வேண்டும். ஆனால் வாலிப வயதில் ஆணும், பெண்ணும் திருமண ஆசைகளை மனதில் அடக்கி புதைத்துவைத்துக்கொண்டு வெளியே இயல்பாக நடந்துகொள்கின்றனர். 28, 30 வயதுகளில் ஓர் ஆண் திருமணம் முடிக்கும்போது வாலிபப் பருவத்தில் இருந்த உணர்ச்சிகள், ஆசைகள், இச்சகைள், எல்லாம் வாடி, வதங்கி, மங்கி, மறைந்து போயிருக்கும். இப்போது திருமணம் இனிக்காது. இரண்டு, மூன்று பிள்ளைகளுடன் வாழ்க்கை போரடிக்கும். இதனால் மனைவியை திருப்திப்படுத்த முடியாத நிலை மற்றும் விவாகரத்துகளும் நடக்கும்.

இப்பிந்திய வயதுத் திருமணத்தினால் மற்றுமொரு பாரிய பிரச்சினையும் களத்தில் உள்ளது. பொதுவாக 28, 30 வயதானதன் பின் ஆண்கள் திருமணம் முடிக்க முற்படும்போது அவர்கள் தேடும் துணை 22 வயதுக்குக் குறைவாக இருக்க வேண்டுமென்றே எதிர்பார்க்கின்றனர். என்ன நியாயம் இது?

இத்தகைய வயது வித்தியாசம் எதிர்காலத்தில் பிரச்சினைகளை ஏற்படுத்தும். அதுமட்டுமன்றி இவ்வாறு 30 வயது மணமகன்கள் எல்லாம் இருபது வயது குமரிகளைத் தேடும்போது இதற்கிடையில் இருக்கும் முதிர் கண்ணிகளை யார் திருமணம் செய்வது? அவர்களது நிலை என்ன?

பெற்றோர்களே! உங்களது புதல்வியரும் சகோதரர்களே! உங்களது சகோதரிகளும் இன்னும் வீடுகளில் இருக்க நீங்களும் ஒரு வகையில் காரண கர்த்தாக்கள்தாம். உங்கள் ஆண் பிள்ளைகளுக்கு அவர்களது உணர்வுகளைப் புரிந்துகொண்டு 25 வயதுக்குள் திருமணம்செய்து வைத்தால் அவர்கள் மணம் செய்யவேண்டியது 20, 21 வயது பெண்களைத்தான். இது தொடராக நடக்கும்போது முதிர் கண்ணிகள் எம் சமூகத்தில் இல்லாமல் போவார்கள். ஆரோக்கியமான ஒரு சமூகம் உருவாகும். இளவயது உணர்ச்சி உந்தல்களால் ஏற்படும் தீங்குகள் குறைந்து செல்லும். இன்ஷா அல்லாஹ்!

ஆனால் இங்கு கவனிக்கவேண்டிய மிக முக்கிய விடயம் ஆண் பிள்ளைகளையும் பெண் பிள்ளைகளையும் குடும்பப்  பொறுப்புக்களை ஊட்டி முறைப்படியான தயார்படுத்தல்களுடன் வளர்க்காது இவ்வயதில் திருமணம் செய்துகொடுப்பதென்பதும் விபரீதங்களை ஏற்படுத்தும். எனவே சிறுவயது முதலே அவர்களது வளர்ப்பு முறையில் பொறுப்புணர்ச்சியை ஏற்படுத்தி அறிவூட்டி வளர்க்க வேண்டும்.

(நகைச்சுவை) இரண்டு மூன்று தடவைகள் மகன் தனது திருமண வயதை தந்தைக்கு ஞாபகப்படுத்தி அடையாள அட்டையை தந்தையின் முன்னாள் போடுவான். தந்தைக்கு அந்த ஞாபகம் எல்லாம் வராது. அட்டையை எடுத்து மகனின் கையில் எங்கும் தொலைத்து விடாதே! பத்திரமாக வைத்துக்கோஎன்று கொடுத்துவிடுவார். மீண்டும் மீண்டும் மகன் இந்த வேலையை செய்யும் போது தந்தை பாவம் மகனுக்கு அதுதேவைப்பட்டிருக்கும் அதுதான் அடையாள அட்டையை என் முன்னால் வீசுகிறான், எப்படி என்னிடம் வாயைத் திறந்து கேட்பான்?” என்று எண்ணி அடையாள அட்டையை வாங்கி  வைத்துவிட்டு பாஸ்போர்ட்ஐத் தயாரித்து மகனிடம் கொடுப்பார் வெளிநாடு செல்ல.

ஆலிப் அலி (இஸ்லாஹி) B.A.

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...