"ஒரு நந்தவனத்தின் அழகே அங்கே படபடத்துக் கொண்டிருக்கும் பட்டாம்பூச்சிகள்தான்"
என்கிறார் கவிஞர் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்.
வண்ணத்துப் பூச்சிகளின் அழகு பார்ப்போரை மெய்சிலிர்க்க
வைக்கின்றன. விதம் விதமான வடிவங்களில் பல்வேறு நிறங்களில் வண்ணமயமாய்க் காட்சியளிப்பவைதான்
வண்ணத்துப் பூச்சிகள் (Butterflies).
இவை பட்டாம்பூச்சி என்றும் அழைக்கப்படுகின்றன. வண்ணத்துப்
பூச்சிகளில் 15,000 முதல் 20,000 வகையான பல்வேறு வகை இனங்கள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள்
கூறுகின்றனர்.
பொதுவாக அனைத்து பூச்சிகளைப் போன்றும்
வண்ணத்துப் பூச்சிகளுக்கும் 6 கால்கள் உள்ளன. அதோடு
உடல் மூன்று பகுதிகளாக தலை, நெஞ்சுப் பகுதி மற்றும் வயிற்றுப்
பகுதி என்பவற்றையும் இரண்டு உணர்கொம்புகளையும் மிகச் சிறிய இரு கண்களையும் உடலைவிடவும்
பெரிய அழகான வண்ணங்களைக்கொண்ட இரு பக்கமும் சமாந்திரமான இரு சிறகுகளையும் கொண்டுள்ளன.
வண்ணத்துப் பூச்சிகளின் உடல் மிகச் சிறிய நுண்ணிய மயிர்களால் சூழப்பட்டுள்ளது.
ஆட்டிக் அண்டாட்டிக் பகுதிகளைத்தவிர்ந்த
உலகின் எல்லாப் பாகங்களிலும் வண்ணத்துப் பூச்சிகள் வாழ்கின்றன. ஒவ்வொரு
சூழலுக்கும் ஏற்றவித்த்தில் அவற்றின் ஆயுள் காலம், உடலமைப்பின்
தன்மை என்பன வேறுபடுகின்றன.
வண்ணத்துப் பூச்சிகளின் வாழ்க்கை வட்டம்-
பொதுவாக வண்ணத்திப் பூச்சிகளின்
வாழ்க்கை வட்டம் நான்
கு கட்டங்களைக் கொண்டமைந்துள்ளது. அவை ஒவ்வொன்றிலும்
பல்வேறு அற்புதங்கள் இருப்பதை உண்ணிப்பாக அவதானிக்கும் போது கண்டுகொள்ள முடியும்.
முதற் கட்டம் முட்டை (Egg) என்ற நிலையிலும் இரண்டாம்
கட்டம் கம்பளிப்பூச்சி (caterpillar) என்ற நிலையிலும் மூன்றாம் கட்டம்
அது கூட்டுப் புழுவாகவும் (Pupa or chrysalis) இறுதிக் கட்டமாக முழுமையான வண்ணத்துப் பூச்சியாகவும்
(Butterfly) அது பல்வேறு கட்டங்களைக் கடந்து
வளரச்சியடைகின்றது. ஒவ்வொரு கட்டத்தையும் சற்று விளக்கமாகப் பார்ப்போம்.
முதற் கட்டம் – முட்டை (Egg)
முட்டையிடத் தயாரான நிலையில் உள்ள
பெண் வண்ணத்துப் பூச்சி முதலில் பாதுகாப்பான ஒரு இடத்தைத் தெரிவுசெய்கின்றது. பின்னர்
ஒரு தாவரத்தின் இலைகளின் அடிப்பாகத்திலோ அல்லது தண்டுப்பகுதியிலோ முட்டைகளை இடுகின்றது.
அதிகமான சந்தர்ப்பங்களில் இலையின் தண்டுப்பகுதியில் இடக் காரணம் அம்முட்டைகளுக்கு
வெயிலிலும் மழையிலும் இலை குடையாக இருப்பதற்காகவும் சிலபோது இலை சேதத்திற்குள்ளானாலும்
தண்டு உறுதியாக இருப்பதால் அதிலிருந்து முட்டைகள் வளர்ச்சியடைய முடியும் என்பதாலுமாகும்.
எவ்வளவு நுணுக்கமாக செயற்படும் திறனை அல்லாஹ் அவற்றுக்கு வழங்கியுள்ளான்
என்று பாருங்கள்.
ஒரு பெண் வண்ணத்துப் பூச்சி ஒரு
தடவையில் நூற்றுக்கணக்கான முட்டைகளை இடுகின்றது. சில வண்ணத்துப்
பூச்சிகளின் முட்டைகள் எமது வெற்றுக் கண்களால் காண முடியாதளவு மிகச் சிரியதாகவும் அனேகமானவற்றின்
முட்டைகள் 2.5 மில்லி மீட்டர் வரையிலும் பல்வேறு நிறங்களிலில்
காணப்படும்.
இரண்டாம் கட்டம் – கம்பளிப்புழு
(Caterpillar)
தாய் முட்டையை இட்டுவிட்டுச் சென்றதும்
அதிலிருந்து கம்பளிப் புழுக்கள் வெளிவருகின்றன. வெளிவரும் கம்பளிப்புழு தனது முட்டையின் மீதி செல்களை
உண்டுவிட்டு தனது வாழ்வைத் துவங்குகின்றது. பின்னர் அது அருகில்
உள்ள இலைகளையும் உண்ண ஆரம்பிக்கின்றது. கம்பளிப் புழுவாக இருக்கும்போது
ஒரு நாளில் தனது உடல் எடையைவிடவும் அதிகமான உணவுகளை உட்கொண்டு துரிதமாக வளர்ச்சியடைகின்றது.
கம்பளிப்புழு நிலையில் குளவி, குறுவி,
ஓனான் என பலவற்றுக்கும் இவை இறையாவதால் பிற உயிரிணங்களிடமிருந்து தம்மைப்
பாதுகாத்துக்கொள்ள அல்லாஹ் இவற்றின் உடல் நிறத்தை அவை வாழும் சூழலின் நிறத்திற்கு ஏற்ப
இசைவுபடுத்திக்கொடுத்துள்ளான். எனவே இவை அனேகமாக பச்சை,
பழுப்பு, கருப்பு போன்ற நிறங்களில் இருக்கும்.
அத்தோடு அவற்றின் உடலில் அழகழகான நிற வலயங்கள் 9 முதல் 15 வரை தோன்றும். இன்னும்
சில வற்றின் உடலில் மயிர்கள் காணப்படும். இவை உடலில் பட்டால்
கடுமையாக அலட்சியை ஏற்படுத்தும். இவைதான் மயிர்கொட்டி என அழைக்கப்படுகின்றன.
மயிர்கொட்டியாக இருக்கும்போது நாம் யாரும் அதனை நெருங்க மாட்டோம்.
அதுவே அழகிய வண்ணாத்தியாக மாறினால் எமது கைகளில் வைத்துக் கொஞ்ச ஆசைப்படுவோம்.
இந்நிலையில்
அவை மூன்று ஜோடி முன்னங்கால்களையும்
ஐந்து ஜோடி பின்னங்கால்களையும்
தலை வயிறு என அனைத்து உறுப்புகளையும் கொண்டவையாக இருக்கும். மூன்று வாரங்களில்
அதிகமாக உணவு உட்கொண்டு 2700 மடங்கு அதன் உடல் எடையை அதிகரித்து கொள்ளும்.
அப்போதுதான் அடுத்த
கட்டத்தில் உணவின்றி இருக்க முடியும்.
மூன்றாம் கட்டம் – கூட்டுப்புழு (Pupa)
இந்தக் கட்டத்தில் கம்பளிப்புழு
பாதுகாப்பானதொரு இடத்தில் ஒதுங்கி ஒரு மரக்கிளையிலோ, அல்லது ஒரு கல்லிலோ தனது பின்னங்கால்கள் மூலம் தலைகீழாக J வடிவில் தொங்கிக்கொள்கின்றது. இச்சமயம் உணவுட்கொள்வதும்
இல்லை. இதுதான் முக்கியமான கட்டம். கம்பளிப்
புழு வண்ணாத்துப் பூச்சியாக மாறுவதற்கான வளர்ச்சிக்கட்டங்கள் அனைத்தும் இங்குதான் நிகழ்கின்றன.
கூட்டுக்குள் அடங்கி 12 மணி
நேரங்களுக்குப் பின், செயற்பாடுகள் ஆரம்பிக்கும். வண்ணத்து பூச்சிக்கு தேவையான வளர்ச்சியுடன் வயிற்று பகுதிக்கு
மேல் 24 தங்க நிற வண்ணம் உடைய வளையமும், 12 தங்க நிற வளையம் வயிற்று பகுதிக்கு கீழும் தெரிய
ஆரம்பிக்கும். இந்த நிலையில் அவற்றுக்கு கண்கள் தெரியாது,
இந்த கூட்டு புழுவின் உள்ளே
முதல் பதினாரு மணி நேரத்தில் ஒரு பச்சை நிறத்திலான திரவம் உருவாகி அதன் உட்
பாகங்கள் உருவாகும், அதன் வெளிப்புறத்தில் உள்ள செல் அடுக்குகளே இறுதியில் வண்ணத்து
பூச்சியின் இறகுகளாக உருமாறும். இந்த
நிலையிலும் கூட அவைகளுக்கு வண்ணத்து பூச்சு என்ற தோற்றம் கூட இருக்காது.
இரண்டு வாரங்களுக்கு பிறகு அதன் வயிற்றில் இருக்கும் திரவத்தை இறக்கைப்
பகுதிக்கு அழுத்த (Pump) அடுத்த பதினைந்து நிமிடங்களில் அது பறக்க தயாராகி கூட்டுப்
புழுவில் இருந்து மெதுவாக வெளியேறிவிடும், என்றாலும் உடனே பறக்க முடியாது.
இரண்டு மணிநேரத்துக்குள் அதன்
இறக்கைகளை உளற வைத்துக்கொள்ள வேண்டும். இதன்பின்னர்தான் முழு வண்ணத்து பூச்சியாக உருவெடுக்கும்,
நான்காம் கட்டம் – வண்ணாத்துப் பூச்சி
(Butterfly)
அழகிய வண்ணத்துப்பூச்சி. தற்போது
அதற்கு ஆறு கால்களும் நான்கு இறக்கைகளும் இருக்கும். உயர்ந்த உணர் திறன் கொண்ட
அதன் இரண்டு கண்களில் 6000 கண்ணாடி
வில்லைகள் (Lenses)
காணப்படும்.
புற ஊதா உட்பட அனைத்து வண்ணங்களையும் பார்க்க கூடியதாக
இருக்கும். அதன் கண்களிலிருந்து மூளைக்கு வரும் 72000 மின்துடிப்புகள் (Electrical pulses) பார்க்கும் பொருட்களை அர்த்தம்
உள்ள உருவமாக மாற்றிக்கொடுக்கும்.
இனி அவை புக்களில் தேனருந்தப் பறந்து விடுகின்றன. இப்பருவத்தில் தனக்கான துணையையும் தேடிக்கொள்கின்றன. அயல்மகரந்தச் சேர்க்கைக்கும் உதவுகின்றன.
பிறந்த்து முதல் அதிகமானவை 3 வாரங்களே உயிர்வாழ்கின்றன. ஆனால் மொனார்ச் (Monarch) வகை வண்ணத்திகள்
வருடக்கணக்கில் உயிர்வாழ்வதோடு 3000 இற்கும் அதிகமான மைல்கள்
கடந்து கண்டம் விட்டு கண்டம் பறந்து செல்லும் திறன்கொண்டவையாகவும் உள்ளன.
மிகப் பெரிய வண்ணத்துப்பூச்சி
வாழும் நாட்களில் பிற உயிர்களிடமிருந்து
தப்பி வாழ அவை தமது இறக்கைகளில் பெற்றிருக்கும் வண்ணம்தான் காரணம் என அறிவியல் உலகம்
கண்டறிந்துள்ளது. குறிப்பாக “ஹெலிகோனியஸ் நுமட்டா” (Heliconius
numata) வண்ணத்திகள் தேவைக்கு ஏற்றாற்போல சூழலுக்கு ஏற்ப தம் வர்ணத்தை
மாற்றிக்கொள்வதும் பின் இயல்புநிலைக்குத் திரும்புவதும் இங்கிலாந்து மற்றும் பாரிஸ்
பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் கண்டுகொள்ளப்பட்டுள்ளது. இன்னும் சில
வகை வண்ணங்களை மாற்றாது துர்நாற்றத்தை தமது மலக்குழாய் வழியாகப் பீய்ச்சியடித்து எதிரிகளை
நிலைகுலையச் செய்கின்றன. விஷத்தைக் கக்கி எதிரிகளைக் கொலை செய்யும்
கொடுமையான வண்ணத்திகளும் உண்டு. அதேபோன்று தமது சிறகுகளில் உள்ள
சித்திரங்களைக் காட்டி எதிரிகளைப் பயமுறுத்திவிட்டுத் தப்பிக்கும் வண்ணத்திகளும் உள்ளன.
இடத்திற்கு ஏற்ப நிறம் மாற்றும் அமைப்பு
வண்ணத்திப் புச்சிகளை அல்லாஹ் நான்கு கட்டங்களாக அவ்வாறு
படைக்கிறான் என்பதையும் அவனது படைப்பாற்றலின் மகிமையையும் விளங்கியிருப்பீர்கள். அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.
“பூமியில் நீங்கள் சுற்றித்திரிந்து படைப்பபை எவ்வாறு அல்லாஹ் (ஆரம்பமாகத்) துவங்கி,
பின்பு மற்றொரு உற்பத்தியை (எவ்வாறு) உண்டு பண்ணுகிறான் என்பதைப்
பாருங்;கள். நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருள்மீதும் ஆற்றலுடையவன் என்று (நபியே) கூறுவீராக.”
(அல்அன்ஆம் : 20)
1 comments:
மிகப் பெரிய வண்ணத்துப்பூச்சி வியப்பு...!
ரசித்தேன்... விளக்கத்திற்கு நன்றி...
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...