"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

25 September 2016

வற்றாத நீரூற்று ஸம்ஸம்

இந்தக் கட்டுரையை வாசித்துக்கொண்டிருக்கின்ற நீங்கள் உங்கள் வாழ்நாளில் நிச்சயமாக ஒரு தடவையேனும் ஸம் ஸம் நீரை அருந்தாமல் இருந்திருக்க மாட்டீர்கள். ஹஜ், உம்ராக் கிரியைகளை நிறைவேற்றிவிட்டு நாட்டுக்கு வருகின்ற உறவுக்காரர்கள் யாராவது கொண்டுவந்து தந்த ஸம்ஸம் நீரை மருந்துபோன்று எமது வீடுகளில் போத்தலில் அடைத்து பத்திரமாக வைத்திருப்போம். உலகளவில் முஸ்லிம்களால் புனித நீராகக் கருதப்படும் ஸம்ஸம் நீர் ஏன் புனிதமாகக் கருதப்படுகின்றது? அதில் இருக்கின்ற அற்புதத் தன்மைகள் என்ன? என்பன பற்றி இத்தொடரில் பார்ப்போம்.

ஸம் ஸம் கிணற்றின் வரலாறு.

உலக வரலாற்றில் இப்பூமிப் பந்தில் இறைவனை வணங்குவதற்காக முதலாவது கட்டப்பட்ட இல்லம் புனித கஃபாவாகும். இற்றைக்கு சுமார் 5 ஆயிர் வருடங்களுக்கு முன்பு இப்றாஹீம் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் கட்டளையின் பிரகாரம் தமது மனைவி ஹாஜர் நாயகியையும் குழந்தை இஸ்மாயில் (அலை) அவர்களையும் மக்கா நகரப் பாலைவனப் பிரதேசத்தில் விட்டுவிட்டுச் சென்றார்கள். சில நாட்கள் செல்ல கைவசம் இருந்த நீர் தீர்ந்துபோகவே நீரின்றி ஸபா மர்வா மலைகளுக்கு மத்தியில் அழைந்த ஹாஜர் நாயகிக்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள் மூலமாக இஸ்மாயில் (அலை) அவர்களின் பாதத்தின் கீழ் நிலத்திலிருந்து வழிந்தோடச் செய்த நீர் தான் ஸம்ஸம்.

இப்றாஹீம் (அலை) அவர்கள் கேட்ட முக்கியமானதொரு துஆவின் விளைவாக அல்லாஹ் கொடுத்த மாபெரும் பரிசுதான் இது. (அல்குர்ஆன் 14:37) சிந்து நாகரீகம், நைல் நதி நாகரீகம் போன்று வரலாற்றில் தோன்றிய நாகரீகங்கள் எல்லாம் நீர் நிலைகளை அண்டியே தோற்றம் பெற்றன. ஆனால் பாலைவனத்தில் ஏது நதி? அங்கு, அந்த இடத்தில் ஒரு நாகரீகம் உருவாகவேண்டும் என்பதற்காக அல்லாஹ் கடல்போன்று வற்றாத ஒரு நீரூற்றையே உருவாக்கினான். அதுதான் ஸம்ஸம் நீரூற்று. இன்று அந்த நகரம் அருள் பொருந்திய ஒரு இடமாகவும் உலகிற்கு உண்ணத கலாச்சாரங்களைச் சொல்லிக்கொடுக்கும் நாகரீத்தின் தோற்ற இடமாகவும் இருக்கின்றது.

ஸம் ஸம் கிணற்றின் அமைவிடம்

சவுதி அரேபியாவின் மக்கா நகரில்தான் ஸம்ஸம் கிணறு அமைந்துள்ளது. கஃபாவிலிருந்து சில அடி தூரத்தில் உள்ள மகாமு இப்ராஹீமிற்குப் பின்புறத்தில் இக்கிணறு உள்ளது. கஃபாவை வலம் (தவாஃப்) வரக் கூடியவர்களுக்கு இடையூறின்றி, தரை மட்டத்திலிருந்து கீழே, இரும்புக் கம்பிகளாலும் பளிங்குக் கற்களாலும் வட்ட வடிவில் சுற்றி அடைக்கப்பட்டுள்ளது. அத்தோடு தூசு மாசுகளிலிருந்தும் பாதுகாக்கும் பொருட்டும் நவீனமயப்படுத்தப்பட்டுள்ளது. இக் கிணற்றின் நீர் சேகரிப்பு, சேமிப்பு, குளிர் பதனம், வினியோகம் ஆகியவை கணினி கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கிணறு வெறுமனே 18 அடி அகலத்தையும் 14 அடி நீளத்தையும் கொண்டதாகும்.

இந்தக் கிணற்றில் தண்ணீரின் ஆழம் எப்போதும் ஐந்து அடி எட்டு அங்குலம் உயரம்வரை இருந்துகொண்டே இருக்கும். அதனைத் தாண்டி உயர்வதுமில்லை, அதிலிருந்து குறைவதுமில்லை. சுப்ஹானல்லாஹ்!

வற்றாத நீரூற்று

ஸம்ஸம் என்றால் நில் நில் என்று அர்த்தம் என்பார்கள். தரையிலிருந்து நீர் பீரிட்டுக் கிழம்பியபோது அதனைக் கட்டுப்படுத்துவதற்காக ஹாஜர் நாயகி நில் நில் ஸம்ஸம்என்று கூறியதாக குறிப்பிடப்படுகின்றது. ஸம்ஸம் இற்கு அதிகமாக என்று மற்றுமோர் பொருளும் உண்டு. அதாவது இக்கிணனற்றில் உள்ள நீரின் அதிகத் தன்மையை இது குறிக்கின்றது.

இந்தக் கிணற்றில் இருந்து ஒவ்வொரு விநாடியும் தண்ணீர் இறைக்கப்பட்டுக் கொண்டே உள்ளது. வருடத்தின் எல்லா நாட்களிலும் மக்கள் அங்கே குழுமுகிறார்கள். ஹஜ் காலத்திலும் ரமலான் மாதத்திலும் சுமார் 20 லட்சம் மக்கள் அங்கே குழுமுகிறார்கள். அனைவருக்கும் இந்தக் கிணற்றில் இருந்துதான் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. ஐந்து அடிகள் மாத்திரமே உயரமுள்ள இக்கிணற்று நீர் அப்போதும் குறைந்தபாடில்லை.

சென்ற நூற்றாண்டில், ஒரு முறை ஜரோப்பிய மருத்துவர்கள், சுகாதாரத்திற்காக இந்தகிணற்றினை சுத்தப்படுத்த வேண்டும் என்று சவுதி அரசுக்கு ஆலோசனை கூறினர். இதை ஏற்றுக்கொண்ட சவுதி அரசு 8 அதி நவீன இராட்சத நீர் பம்பிகளைக்கொண்டு தொடர்ந்து இரவும் பகலுமாக 15 நாட்கள் இந்த நீரை இறைத்தது. ஆனால் நீரின் அளவு குறையவில்லை. மாறாக நீரின் மட்டம் ஒரு அங்குலம் உயர்ந்தே இருந்தது. ஒரு வினாடிக்கு சுமார் 8000 லிட்டர் என்ற அளவில், தினமும் 691.2 மில்லியன் லிட்டர் தண்ணீர் இடவேளையின்றி இக் கிணற்றிலிருந்து இராட்சத நீர் பம்பிகள் மூலம் உறிஞ்சப்பட்டுக்கொண்டே இருக்கின்றது.

நல்ல நீர் வளம் உள்ள ஒரு பெரிய கிணற்றில், ஒரு வருடம் முழுதும் எடுக்கும் அளவு நீரை, ஒரே நாளில் ஸம்ஸம் கிணற்றிலிருந்து எடுக்கப்படுவது மிகப்பெரிய அதிசயம், அதை விட அதிசயம் 691.2 மில்லியன் நீரை தினமும் எடுத்தபோதும் இதன் அளவு குறைவதுமில்லை. சுவையும் மாறுவதில்லை. குறைந்த ஆழம் உள்ள இந்தக்கிணறு, பாலைவனத்தில் அமைந்துள்ளது, அருகில் ஏரிகளோ, கண்வாய்களோ, குளம், குட்டைகளோ இல்லாத அந்தக்

கிணற்றில் இருந்து எப்படி இலட்சோப இலட்சம் மக்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது என்பது முதலாவது அற்புதம். எந்த ஊற்றாக இருந்தாலும் சில, பல வருடங்களில் வற்றி வரண்டு போய்விடும். ஆனால் இந்த ஊற்று பல ஆயிரம் ஆண்டுகளாக வற்றாமல் இருப்பது இரண்டாவது அற்புதம்.

சுகாதாரத்திற்கு சுத்தமான நீர்

பூமிப் பரப்பில் உள்ள நீர் வளங்களில் எல்லாம் மிகவும் பரிசுத்தமான நீர் ஸம்ஸம் நீர்தான். அப்படியிருக்க 1971 ல் எகிப்து நாட்டைச் சேர்ந்த ஒரு ஆய்வாளர் ஐரோப்பிய ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் ஸம்ஸம் தண்ணீர் குடிப்பதற்கு உகந்ததல்ல என்றும்  ஸம்ஸம் கிணறு ஒரு பள்ளத்தாக்கில் இருப்பதால் மக்கா நகரில் உள்ள கழிவு நீர்கள் பள்ளத்தாக்கில் தேங்கி பூமிக்குள் சென்று ஸம்ஸம் கிணற்று நீரோடு கலந்து விடுகிறது என்றும் எனவே அது அசுத்தமான நீர் என்றும் வெறும் யூகத்தின் அடிப்படையில் குறிப்பிட்டிருந்தார்.

இது இஸ்லாத்தின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியில் வெறும் யூகத்தினை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்ட கட்டுரை என்பதால் ஸம்ஸம் நீர் தூய்மையான நீர் என்பதை அறிவியல் பூர்வமாக நிறுவவேண்டுமென முடிவெடுத்த அப்போதைய சவூதி மன்னர் ஃபைசல் அவர்கள் Ministry of Agriculture and Water Resources அமைச்சகத்துக்கு ஸம்ஸம் தண்ணீரை ஆய்வுக்கு உட்படுத்துமாறு பணித்தார்.

அதன்படி ஸம்ஸம் தண்ணீர் ஐரோப்பாவிலுள்ள (European laboratories) ஆய்வு நிலையத்திற்கும் ஜித்தாவிலுள்ள கடல் தண்ணீரை குடி நீராக மாற்றும் சுத்தகரிப்பு நிலைய ஆய்வு மையத்திற்கும் (Jeddah Power and Desalination Plants) அனுப்பி வைக்கப்பட்டது. இறுதியில் இரண்டு ஆய்வு மையங்களினதும் முடிவுகளின்படி ஸம்ஸம் நீர் மிக உகந்த சுத்தமான நீர் என்பது நிரூபனமானது.

மருத்துவக் குணம் மிக்க நீர்

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஸம்ஸம் நீர் எதற்காக குடிக்கப்படுகிறதோ அது அதற்கே உரியதாகும்." (அஹ்மத்:357, இப்னு மாஜா:3062) இதன் பொருள் ஸம்ஸம் நீர் குடிக்கும் போது ஒருவர் மனதில் என்ன எண்ணத்தோடு அதனை குடிக்கின்றாரோ அதனை அல்லாஹ்விடமிருந்து பெற்றுக் கொள்வார் என்பதாகும்.அப்படியானதொரு பரகத் இந்த நீருக்கு உண்டு. மட்டுமன்றி நோய்களுக்கான நிவாரினியாகவும் இந்த நீர் விளங்குகின்றது.

மற்றைய தண்ணீர் வகைகளில் உள்ளதைவிடவும்  ஸம்ஸம் தண்ணீரில் கல்சியதம், மெக்னீசியம், ஃபுளோரைட் என்பவற்றின் அளவு அதிகமாகும். கால்சியம் சத்து அதிகமிருப்பதால் ஹஜ் கிரியைகளில் ஈடுபவோரின் களைப்பை அது நீக்கி விரைவில் புத்துணர்ச்சி ஏற்பட வழி செய்கிறது. ஃபுளோரைட், மெக்னீசியம் அதிகமிருப்பதால் தண்ணீரில் கிருமிகள் சேராமல் தடுக்கப்படுகிறது.

பொதுவாக நீரூற்றுக்கள், கிணறுகளின் அருகே பாசித் தாவரங்கள் வளர்வது சாதாரணம். ஆனால் ஸம்ஸம் கிணற்றின் அருகே எந்த தாவரமும் வளர்வதுமில்லை. பாசி படிவதும் இல்லை. கிருமிகள் உற்பத்தியாவதும் இல்லை. எமது வீட்டுக் கிணறுகளை இவற்றிலிருந்து பாதுகாக்க காலத்திற்குக் காலம் குளோரின் போன்ற மருந்துகள் கலக்கின்றோம். ஆனால் ஸம்ஸம் கிணறு உருவாகிய காலம் முதல் இன்று வரை அதில் எந்த மருந்தும் கலக்கப்படாமல் சுத்தமாகவே இருக்கின்றது. இது மாபெரும் அற்புதம். மருந்துகளால் பாதுகாக்கப்படாத தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றதல்ல என்பது அறிவியலின் முடிவாகும். ஆனால் அம்முடிவிலிருந்து ஸம்ஸம் நீர் விதிவிலக்குப் பெற்றுள்ளது.

தெளிவான அத்தாட்சி

அதில் (மக்காவில்) தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (உதாரணமாக, இப்ராஹீம் நின்ற இடம்) மகாமு இப்ராஹீம் ஆகும். (3:97) இந்த அல்குர்ஆனிய வசனம் தொடர்ந்து மக்காவில் தெளிவான பல அத்தாட்சிகள் உள்ளன என்பதை விளக்குகின்றது. அதில் ஒன்றாக மகாமு இப்றாஹீமையும், மக்காவில் நுழைந்தால் யாத்திரீகர்கள் உளப்பூர்வமாக உணவும் மன அமைதியையும் இங்கு குறிப்பிட்டுள்ளது. இவை அல்லாமல் இப்போதைக்கு எம்மால் கூற முடியுமான மிகத் தெளிவான அத்தாட்சி இந்த ஸம்ஸம் கிணறுதான். இதுவரை இந்த ஆக்கத்தை வாசித்த நீங்கள் இத் தெளிவான அத்தாட்சியின் மகிமையை விளங்கியிருப்பீர்கள். இனிவரும் காலங்களில் இன்னும் பல அத்தாட்சிகளை அல்லாஹ் இம்மண்ணில் எமக்குக் காட்டப் போதுமானவன். இந்த நீரூற்று உதித்தோடக் காரணமாக இருந்த அன்னை ஹாஜர் அவர்களை அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக!

அல்லாஹ் தனது முழுமையான அருளை அன்னை ஹாஜரா மீது பொழிவானாக ! அவர்கள் இவ்வற்றாத ஊற்றிலிருந்து (ஸம்ஸம்) நீரை வழிந்தோடும் படிச் செய்வதற்குக் காரணமாக அமைந்தார்கள்.என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்ததாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (அஹ்மத்)
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...